ஒருவரும் விரும்பாத அந்த மீன்
சுறா உங்களுடைய பிரியமான மீனா? பெரும்பாலும் அவ்வாறு இருக்காது. சுறா மீன் சிலருக்கு அவர்களுடைய பிரியமான உணவு, அவர்களுடைய பிரியமான வகையான தோல், அல்லது ஒருவேளை விளையாட்டில் கொல்வதற்கு பயன்படுத்தும் அவர்களுடைய பிரியமான உயிரினம் ஆகியவற்றைக் கொடுத்தாலும், அநேக ஜனங்களுக்கு சுறா மீன் பிரியமான ஒன்றல்ல. இப்படிப்பட்ட காரணங்களுக்காக அதிகமதிகமான சுறா மீன்கள் கொல்லப்பட்டுவருகின்றன. மெக்ஸிக்கோ வளைகுடா, கரிபியன், மற்றும் ஐ.மா. கிழக்குக் கரையோரங்களில் சுறா மீனின் வருடாந்தர பிடிப்பு கடந்த பத்தாண்டுகளில், ஆயிரம் சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது என்பதாக ஐ.மா. செய்திகள் மற்றும் உலக அறிக்கை (U.S.News & World Report) குறிப்பிடுகிறது!
சுறா மீனைப் பாதுகாப்பதற்கான கூக்குரலை நீங்கள் கேட்கவில்லையென்றால் அது ஆச்சரியப்படவேண்டிய ஒன்றல்ல. என்னதான் இருந்தாலும் அநேகர் சுறா மீனை, அதனுடைய தாடை எலும்புகளை மனிதனுக்குள் செலுத்த ஆவலாயிருக்கும் குறைந்த அறிவுடைய ஒரு திருப்திப்படுத்தப்பட முடியாத உண்ணும் இயந்திரமாகவும், ஓர் அச்சுறுத்தும் உயிரினமாகவும் கற்பனைசெய்கிறார்கள். ஆனால் சுறா மீனின் தாக்குதல்கள் நடந்தாலும், பயங்கரமான திரைப்படங்களில் உக்கிராணக்காரர் வருவதாக நாம் எதிர்பார்த்து இருப்பதைவிட மிக அரிதாகவே இவை இருக்கிறது.
ஐ.நா. செய்திகள் மற்றும் உலக அறிக்கை சொல்கிறபிரகாரம், “உலகில் ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் குறைவான [சுறா மீன் தாக்குதல்களே] அறிக்கைசெய்யப்பட்டிருக்கிறது, மேலும் பல மரணத்திற்குரியதாக இல்லை.” அன்றியும் எல்லா சுறா மீன்களும் தாக்கும் வகையைச் சேர்ந்ததாக இல்லை. இந்த வகைகள் 10 சென்ட்டிமீட்டரிலிருந்து 18 சென்டிமீட்டர் வரை நீளமும், 28 கிராம்களுக்கு கீழிருந்து 14,000 கிலோகிராம் வரை உள்ள எடையையும் அளவெல்லையாக கொண்டிருக்கின்றன! 300 வகைகளில் சுமார் 90 சதவீதம் (மிகமிகப் பெரிய வகையையும் உட்படுத்தியது) மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலைத் தருகிறதில்லை.
மேலும் சுறா மீன்கள் பெருமதிப்புடையவை. கடல் அடிவாரத்தின் மாசு அகற்றும் கருவிகளைப்போல, இறந்துபோன உயிரினங்களையும், கழிவுகளையும் விழுங்குவதன் மூலம், கடலில் மிக முக்கியமான சுத்தம் செய்யும் பங்கைச் செய்கின்றன. சுறா மீன்கள் புற்றுநோய் அல்லது பெரும்படியான நச்சுக்களால் பாதிக்கப்படாதவையாக இருப்பதாய்த் தோன்றுவதால் விஞ்ஞானிகள் இவற்றின் தற்காப்பு அமைப்பை ஆர்வத்தோடு ஆராய்கிறார்கள். எனினும், சுறா மீன்கள் தாக்கப்படமுடியாதவையாக இல்லை. இவை மெதுவாக இனப்பெருக்கமடைகின்றன, (ஒரு வருடத்திற்கு மிகவும் குறைந்த இரண்டே குழந்தைகளை, அல்லது குட்டிகளைப் பிறப்பிக்கின்றன), ஆகவே இவை அழிக்கப்பட்டால் மறுபடியும் விரைவில் பெருகாமல் இருக்கலாம்.
நல்லவேளை, சுறா மீன்கள் இறுதியில் இப்பொழுது சில நண்பர்களைக் காண்கிறது. ஐ.நா. தேசீய கடல் மீன்வளத்துறை, மனிதகுலம் எத்தனை சுறா மீன்களை மட்டும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதின்பேரில் கட்டுப்பாடுகளை உண்டாக்கி மீனைக் காப்பாற்றுவதற்கு, ஒரு 100-பக்க திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. எதிர்பார்த்தவிதமாகவே, எத்தனை மனிதர்களை சுறா மீன்கள் எடுத்துக்கொள்ளலாம் என்ற கட்டுப்பாட்டை யாரும் இதுவரைக் கொடுக்கவில்லை; ஆனால் மனிதனையும் சுறா மீனையும் படைத்த சிருஷ்டிகர் தன்னுடைய மனித பிள்ளைகள் இந்தப் பூமியில் எதற்கும் பயப்படாமல் வாழும் ஒரு காலத்தை வாக்களிக்கிறார்.—ஏசாயா 11:6-9. (g91 11⁄8)