அந்தப் புதிய உலகில் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளுங்கள்
தெளிவாகவே, இந்த ஈடிணையற்ற சிறிய இரத்தினக் கோளைப் படைப்பதில் கடவுள் ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தார். அதில் மனிதகுலம் ஒரு முக்கியப் பங்கை வகிக்க அவர் முன்கூட்டியே தீர்மானித்தார். (ஏசாயா 45:18) நம் பூமி பயங்கரமான நிலைமைக்குள் வீழ்ந்துவிட்டிருக்க, அது கடவுளுக்கு மகிமையைக் கொண்டுவருவதில்லை. ஆனால் இந்த நிலைமையைத் தொடர்ந்திருக்க அவர் அனுமதிப்பார் என்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாகவே இல்லை!
ஒரு புதிய உலகிற்கான மனிதனின் ஏக்கம், உண்மையில் மனிதவர்க்கம் ஒரு காலத்தில் கொண்டிருந்த ஏதோ ஒன்றுக்கான வாஞ்சையின் பிரதிபலிப்பே. அது ஓர் உண்மையான, அனுபவித்துணரக்கூடிய பூமிக்குரிய பரதீஸாக இருந்தது. முதல் மனித ஜோடி அப்படிப்பட்ட ஒரு வீட்டில் குடியேற்றப்பட்டனர். மேலும் மனிதஇனம் பூமியில் அந்தப் பரதீஸில் என்றென்றுமாக அனுபவித்து மகிழவேண்டும் என்பது சிருஷ்டிகரின் ஆதி நோக்கமாயிருந்தது.—ஆதியாகமம் 1:28.
யெகோவா தேவன் அவருடைய புதிய உலகில் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை இப்பொழுது உங்களுக்குத் தருகிறார். அதில் உண்மையாயுள்ள மக்களை அவர்களுடைய இருதயங்களின் வாஞ்சை நிறைவேற ஆசீர்வதிப்பார். (சங்கீதம் 10:17; 27:4) நீங்கள் அங்கே வாழ்வதற்குத் தெரிந்துகொள்வீர்களா?
நீங்கள் ஒரு தெரிவைக் கொண்டிருக்கிறீர்கள்
மோசேயுடைய பிரியாவிடைப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த இஸ்ரவேலர் இதேபோன்ற ஒரு தீர்மானத்தைச் செய்யவேண்டியிருந்தது. அவர்கள் கடவுளுடைய ஆட்சியையோ அல்லது அப்போதிருந்த தேசங்களின் ஆட்சியையோ தெரிவுசெய்ய வேண்டியவர்களாய் இருந்தனர். மோசேயின் அறிவுரை இவ்வாறு இருந்தது: “நான் ஜீவனையும் மரணத்தையும், . . . உனக்குமுன் வைத்தேன் . . . நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, . . . உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக.” (உபாகமம் 30:19, 20) ஆம், உங்கள் தெரிவும்கூட உங்களுக்கு ஜீவனை அல்லது மரணத்தைக் குறிக்கும் காரியமாயிருக்கிறது.
இதன் காரணமாகத்தான் கடவுளுடைய புதிய உலகத்தின் பேரிலான இக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கான மனிதரின் வீண் வாக்குறுதிகளின்மீது நீங்கள் நம்பிக்கை வைப்பதைவிட இதைத் தெரிந்தெடுக்கும்படி உங்கள் இருதயத்தைத் தொடுவதற்காகத்தான். கடவுளின் புதிய உலகைப்பற்றி நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அநேக அதிசயமான காரியங்கள் உள்ளன.
உதாரணமாக, இந்தப் புதிய உலகம் அண்மையிலுள்ளது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இது பூமியின் எல்லா அரசாங்கங்களையும் எவ்வாறு மாற்றீடு செய்யும்? என்ன நிகழ்ச்சிகள் இதற்கு வழிநடத்தும்? பைபிள் வாக்களிக்கும் காரியங்கள் நிறைவேறும் என்று நாம் எவ்வாறு உறுதியாய் இருக்கமுடியும்?
இந்தக் கேள்விகளுக்கும் இன்னுமநேகக் கேள்விகளுக்கும் பதில்கள் இருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் உங்களுடைய சொந்த பைபிள் பிரதியிலிருந்து வசனங்களைக் காட்டுவதற்கு சந்தோஷமடைவார்கள். உங்களுடைய பைபிள் கடவுளுடைய புதிய உலகின் ஆசீர்வாதங்களை விவரிப்பதுமட்டுமல்லாமல், எப்பொழுது மற்றும் எவ்வாறு கடவுளுடைய ராஜ்யம் தன்னுடைய ஆட்சியைத் துவக்கி, இறுதியில் முழு பூமியையும் ஆளுகை செய்ய விஸ்தரிக்கிறது என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
அப்போஸ்தலன் பவுலுக்குச் செவிகொடுத்த முதல் நூற்றாண்டு பெரோயா பட்டணத்தாரைப்போல பிரதிபலிக்க நீங்கள் துரிதப்படுத்தப்படுகிறீர்கள். “காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை [கவனமாக, NW] ஆராய்ந்துபார்”ப்பதற்கு, அவர்கள் நேரத்தைச் செலவழித்தனர். (அப்போஸ்தலர் 17:11) ஞானமாக, நீங்களும் அதையே செய்யவேண்டும். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திளைக்கவைக்கும் எதிர்காலத்தின்பேரிலான வாக்குறுதிகளைப்பற்றி அறியும்போது, யெகோவாவின் சாட்சிகளிடம் நீங்கள் கொண்டிருக்கும் கலந்தாலோசிப்புகள் உங்களுக்கு மிகுந்த ஆவிக்குரிய திருப்தியைக் கொண்டுவரும் என்பதில் நிச்சயமாய் இருங்கள்.
நீங்கள் ஒரு தெரிவுசெய்ய எடுக்கவேண்டியவர்களாய் இருக்கிறீர்கள்—கடவுளையும் அவருடைய ராஜ்ய அரசாங்க அக்கறைகளையும் சேவிப்பதா அல்லது தங்களையே ஆண்டுகொள்ள எடுக்கும் மனித முயற்சிகளில் உங்கள் நம்பிக்கையை வைப்பதா. உங்களுடைய தீர்மானம் நன்கு தெரிந்தெடுக்கப்பட்ட ஒன்றாக இருக்க, கடவுளுடைய வாக்குறுதிகளைப்பற்றி முடிந்தளவுக்கு அதிகம் கற்றுக்கொள்ளும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். பைபிள் அறிவைப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்திற்கான உங்கள் நம்பிக்கையை உயிருள்ளதாக ஆக்குவதோடுகூட, மனித ஆட்சியின் இறுதி நாட்களினூடே உங்களை ஆவிக்குரிய வகையிலே உயிருள்ளவர்களாக வைக்கும்.—2 தீமோத்தேயு 1:13.
பல வருடங்களாக இருந்த ஒரு புதிய உலகுக்கான மனிதனின் ஏக்கம் பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது. நீங்கள் அந்தப் புதிய உலகில் பிரவேசிக்கும் அனுமதிபெற்று, என்றென்றுமாக வாழ்க்கையை அனுபவித்து மகிழவேண்டுமென்று யெகோவாவின் சாட்சிகள் விரும்புகின்றனர். கடவுள் விரும்புவதும் அதுவே. நீங்கள் கடவுளுடைய புதிய உலகத்தைத் தெரிந்தெடுப்பீர்களென உண்மையிலேயே நம்புகிறோம். அவ்வாறு செய்வீர்களேயானால், புதிய உலகத்திற்கான மனிதஇனத்தின் ஏக்கம் ஒருபோதும் வீண்போகவில்லை என்பதைக் காண்பீர்கள். (g92 10/22)