இளைஞர் கேட்கின்றனர்
என் பெற்றோர் ஏன் என்னில் அதிக அக்கறை காட்டுகிறதில்லை?
“நான் எப்பொழுதெல்லாம் என் தாயாரிடம் எனக்காக தனது நேரத்திலிருந்து ஐந்து நிமிடங்கள் ஒதுக்கும்படி கேட்கிறேனோ,” ஒரு பருவ வயது பெண் புலம்பினாள், “அவள் எப்பொழுதும் அதிக வேலையாயிருக்கிறாள்.”
கிறிஸ்டினா 16 வயதுள்ளவள்—திருமணமாகாதவள், கர்ப்பவதியாயிருந்தாள். தன்னுடைய சிக்கலான நிலைமையைக் குறித்து மனம் வருந்தினாலும், அவள் கசந்து கொண்டாள். “என் தாயார் இந்தக் காரியங்களை எனக்கு விளக்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை,” அவள் விம்மியழுதாள். “நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பதில் அக்கறை காட்ட எப்பொழுதுமே அவளுக்கு நேரம் இருந்ததில்லை.”
நீங்களும் இதேபோல்தான்—உங்கள் பெற்றோர் உங்களில் அக்கறையே கொள்வதில்லை என்பதாக சிலவேளைகளில் உணருகிறீர்களா? உங்களுடைய ஏமாற்றத்தை ஒருவேளை கிறிஸ்டினாவைப்போல வெளிக்காட்டும் மனச்சாய்வு உங்களுக்கில்லாமல் இருக்கலாம். மேலும் கவனமற்ற பெற்றோரைக் கொண்டிருப்பதுதானே தவறான நடத்தைக்கு ஒரு சாக்குப்போக்கு அல்ல என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இருப்பினும், அவர்கள் உங்களைப் புறக்கணித்தால் நீங்கள் மிக அதிகம் புண்படுத்தப்படலாம். நீங்கள் முழுவளர்ச்சிப் பருவத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோதிலும், இன்னும் பெற்றோரின் அன்புக்கும் ஆதரவுக்குமுள்ள அதிக தேவையை நீங்கள் உணரலாம். உங்களுடைய பெற்றோரால் அசட்டை செய்யப்படுவது நீங்கள் உதறித்தள்ளப்பட்டதாக உங்களை உணரச்செய்யக்கூடும். “நான் எப்பொழுதெல்லாம் என் தாயாரிடம் எனக்காக தனது நேரத்திலிருந்து ஐந்து நிமிடங்கள் ஒதுக்கும்படி கேட்கிறேனோ,” ஒரு பருவ வயது பெண் புலம்பினாள், “அவள் எப்பொழுதும் அதிக வேலையாயிருக்கிறாள்.”
ஒரு சுற்றாய்வின்படி, 25 சதவீதம் இளைஞர் “தங்களுடைய பெற்றோரோடு போதுமான நேரம் செலவுசெய்வதில்லை என்பதாக உணருகிறார்கள்,” என்றால் அது ஆச்சரியமல்ல. ஓர் இளைஞர் சொன்னார்: “நான் என் பெற்றோரிடத்தில் நெருங்கிவந்து மிகவும் மனம் திறந்து பேசியிருக்கலாம் என்று விரும்புகிறேன்.” இளைஞரும் பெற்றோரும் சரீரப்பிரகாரமாக ஒருமித்திருந்தாலும்கூட, உணர்ச்சி சம்பந்தமாக அவர்கள் பிரிந்திருக்கலாம். குறிப்பிடத்தக்க பேச்சுத்தொடர்பு இல்லாமலிருக்கலாம்.
அவர்கள் உங்களை அசட்டைசெய்வதாக ஏன் தோன்றுகிறது
கற்பனைசெய்து பாருங்கள்: உங்கள் தாயாரிடம் ஏதோ பிரச்னையைக் குறித்துப் பேச நாள் முழுவதும் காத்திருந்தீர்கள். ஆனால் அவள் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனே, ஒரு நாற்காலியில் சாய்ந்துகொண்டு தொலைக்காட்சியின் மாலை செய்திகள் கேட்பதில் தன்னை இழந்துவிடுகிறாள். அவளோடு உரையாடலைத் தொடங்க முயற்சி செய்யும்போது, அவள் எரிச்சலுடன் “நான் ஓய்வெடுக்க முயன்றுகொண்டிருப்பதை உன்னால் காணமுடியவில்லையா?” என்று கூறி உங்களைப் புறக்கணிக்கிறாள்.
ஓர் அனலற்ற, அன்பில்லா பெற்றோரா? இல்லை, பெற்றோர் ஒருபோதும் பிள்ளைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதில்லை. ஆனால் நாம் எல்லாரும் ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்ந்துகொண்டிருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-3) உங்களுடைய பெற்றோர் தங்களை என்றும் இருந்ததைவிட அதிக அழுத்தங்களின்கீழ் காணலாம். அவர்கள் அதிக கவலைக்கிடமான நிலையில், முழுவதும் சோர்வுற்று அல்லது முற்றிலும் களைப்புற்றிருக்கலாம். எனவே அவர்கள் உங்களோடு நல்ல பலன்தரக்கூடிய சமயங்களைக் கொண்டிருக்க சக்தியில்லாமல் இருக்கலாம். நீங்கள் ஓர் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் வாழ்வீர்களென்றால் அது அதிக உண்மையாயிருக்கலாம். எனவே உங்கள் பெற்றோர் உங்களிடத்திலிருந்து குறைகளைக் கேட்கும்வரை, வெறுமனே காரியங்களெல்லாம் நல்லவிதமாகவே இருக்கின்றன என்று அவர்கள் கருதலாம்.
பெற்றோர் மற்ற அக்கறைகளிலும்கூட ஈடுபட்டிருக்கக்கூடும். உங்களுடைய தகப்பன் ஒரு சுறுசுறுப்பான கிறிஸ்தவராக இருந்தால், அவர் சபையில் ஓர் அதிக பாரமான பொறுப்புகளைச் சுமந்துகொண்டிருக்கலாம். (2 கொரிந்தியர் 11:28, 29-ஐ ஒப்பிடவும்.) உங்களுடைய தாயார் அதிகரித்துக்கொண்டிருக்கும் உடல்நிலைப் பிரச்னைகளைப்பற்றி ஒருவேளை அபூர்வமாகவே பேசினாலும், அதனால் அவளுடைய கவனம் சிதறடிக்கப்பட்டிருக்கலாம். உங்களுக்குச் சகோதர சகோதரிகள் இருக்கின்றனரா? அப்படியென்றால் உங்களுடைய பெற்றோர் அவர்களுடைய தேவைகளைக் கவனிப்பதிலும் அதிக வேலையாயிருக்கலாம்.
ஏற்றுக்கொள்ளப்படும் வகையில், சில பெற்றோர் குடிவெறி போன்ற வினைமையான பிரச்னைகளுக்கெதிராக போராடிக்கொண்டிருக்கின்றனர். எனவே தங்களுடைய பிள்ளைகளின் தேவைகளுக்குப் பிரதிபலிக்கமுடிவதில்லை. இன்னும் சிலருக்குத் தங்களுடைய பிள்ளைகளுக்கு எவ்வாறு அக்கறை காட்டுவதென்று தெரியாமலிருக்கலாம். எப்படியிருந்தாலும் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்தல்லவா அன்பைக் கற்றுக்கொள்கிறார்கள். (1 யோவான் 4:19-ஐ ஒப்பிடவும்.) ஒருவேளை உங்கள் பெற்றோர் அவர்கள்மீது அக்கறை காட்ட தவறின பெற்றோரால் வளர்க்கப்பட்டிருக்கலாம்.
மேலும் சில பண்பாடுகள் இளைஞரின் தேவைகளை நடைமுறையில் அசட்டைசெய்கின்றன என்ற உண்மையும் இருக்கிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், உணவுவேளைகளில் தகப்பன்மார்கள், தாய்மார்கள், மற்றும் பிள்ளைகள் தனித்தனியாகத்தான் சாப்பிடவேண்டும் என்று பழக்கவழக்கம் வற்புறுத்துகிறது. என்ன விளைவோடு? ஒரு 14 வயது ஆப்பிரிக்க இளைஞன், காளின் நினைவுபடுத்திப் பார்க்கிறான்: “உணர்ச்சி சம்பந்தமாக என் பெற்றோருடன் நெருக்கமாக உணர்வது கடினமாக இருந்தது. நான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தனியாகவே சமாளித்துக்கொண்டிருந்ததாக உணர்ந்தேன்.”
தவிர்க்கவேண்டிய ஆபத்துகள்
எந்தக் காரணத்திற்காக உங்கள் பெற்றோர் உங்களை அசட்டை செய்தாலும், அது உங்களைப் புண்படுத்தி கோபப்படும்படி செய்யும். சில இளைஞர்கள் ஒத்துழைக்காமலோ அல்லது கீழ்ப்படியாமலோ பிரதிபலிக்கிறார்கள். சிலர் தங்களின் இக்கட்டான நிலைக்குக் கவனத்தை ஈர்க்கும் ஒரே வழி எதிர்ப்பதுதான் என்பதாக தீர்மானிக்கின்றனர். ஆனால் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட கிறிஸ்டினாவைப்போல, எதிர்க்கும் இளைஞர் இந்தப் போக்கில் தங்களைப் புண்படுத்திக்கொள்வதைவிட சிறிது அதிகத்தையே செய்கிறார்கள். “பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும்,” என்று நீதிமொழிகள் 1:32 எச்சரிக்கிறது.
மறுபட்சத்தில், நிலைமையை—முக்கியமாக உங்களை ஆழமாக புண்படுத்தும் நிலைமையை—வெறுமனே அசட்டை செய்வது அதிகத்தை நிறைவேற்றாது. ‘ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோகிறாயா?’ என நீதிமொழிகள் 24:10 கேட்கிறது. அப்படியென்றால் ‘உங்கள் பெலன் குன்றுகிறது.’ உணர்ச்சி சம்பந்தப்பட்ட காயங்கள் சரீரத்தில் உண்டாகும் காயங்களைவிட உண்மையாகவும், அதிக வேதனை தருவதாகவும் இருக்கும். (நீதிமொழிகள் 18:14) அவற்றை ஆற்றாமலே விட்டுவிட்டால், அவை தொடர்ந்து முழுவளர்ச்சி பருவத்தில் வேதனையை உண்டாக்கக்கூடும். யோஹான் என்ற இளைஞனைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள். “நான் வளர்ந்துகொண்டிருக்கும்போது,” யோஹான் நினைவுபடுத்திப்பார்க்கிறான், “என் தந்தையின் கவனம் எனக்கு அதிகம் தேவைப்படும்போது, குடிவெறியுள்ள அவர் ஒருபோதும் எனக்கிருந்ததில்லை.” அவன் மேலும் கூறுகிறான்: “எனக்குக் கவனம் செலுத்தமுடியாதவகையில் தன்னுடைய சொந்த பிரச்னைகளில் அதிகம் மூழ்கியிருந்தார்.” வயதுவந்த ஒருவனாக, யோஹான் நீண்ட காலமாக சோர்வினாலும் குற்ற உணர்ச்சியாலும் துன்பப்பட்டான்.
சில நல்ல நண்பர்களின் உதவியால் யோஹான் தன்னுடைய தன்மதிப்பைத் திரும்பக் கட்டத் தொடங்க முடிந்தது. எனினும், அவனுடைய அனுபவம் வீட்டில் நீங்கள் எதிர்படும் நிலைமையைக் கையாளுவதற்கு நேர்நிலையான வழிகளைக் காணமுயற்சிப்பதன் மதிப்பை அழுத்திக்காட்டுகிறது.
உங்கள்மீதான அவர்களுடைய அக்கறையை வளருங்கள்
தந்தையோ அல்லது தாயோ உங்களிடம் ஓர் உரையாடலை ஒருபோதும் தொடங்கவில்லையென்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் சிறிது அக்கறை காட்டுவதன் மூலம் அந்தத் தர்மசங்கடமான அமைதியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும். (மத்தேயு 7:12; பிலிப்பியர் 2:4) அவர்கள் ஏதாவது வாங்குவதற்காக வெளியே போவார்களானால் அவர்களுடன் சேர்ந்து செல்லுங்கள். ஒருவேளை ஒரு முறை உணவு தயாரிப்பதன் மூலமோ அல்லது சுத்தம் செய்வதன் மூலமோ, ஏதோ ஒரு வழியில் நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்யமுடியுமா என்று கேளுங்கள். தகுந்த சமயத்தில் பள்ளியில் என்ன நடைபெறுகிறது என்பதைப் போன்ற உங்களுடைய அக்கறைகளை நீங்கள் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கக்கூடும்.
சில சமயங்களில், அவர்களிடம் கலந்தாலோசிக்க சில வினைமையான பிரச்னைகளை நீங்கள் கொண்டிருக்கலாம். உங்கள் தகப்பன் வேலையில் நாள் முழுவதும் கடின உழைப்பிற்குப் பிறகு ஸோஃபாவில் சாய்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது, அவரை அணுகினால் அது உங்களுக்குப் பலன் தரக்கூடியதாயிருக்காது. “சரியான நேர”த்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து—அவர் ஓரளவு ஓய்வெடுத்துவிட்டு மகிழ்ச்சியாய் இருக்கும்போது—காரியங்களைக் கலந்தாலோசியுங்கள். (நீதிமொழிகள் 15:23) அவர் உங்களுடைய பிரச்னைகளில் அக்கறை எடுத்துக்கொள்ள அவருக்கு ஒருவேளை அதிக வாய்ப்புகள் இருக்கும்.
எனினும், நீங்கள் உங்களால் முடிந்தவரை முயற்சி செய்தும் உங்கள் பெற்றோர் பிரதிபலிக்க தவறினால் என்ன?a “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்,” என்று நீதிமொழிகள் 15:22 நமக்கு நினைவுப்படுத்துகிறது. ஆம், அவர்கள் உங்களில் போதுமான அக்கறை காட்டவில்லை, அது உங்களைப் புண்படச்செய்து நேசிக்கப்படாதவனாக உணரச்செய்கிறது என்று உங்கள் பெற்றோரிடம் (கனிவான மற்றும் சாதுரியமான வழியில்) சொல்லவேண்டிய தேவை இருக்கலாம். வெறுமனே எப்பொழுதாவது சில பாராட்டுகளை விரும்புகிறீர்கள் என்றோ அல்லது உங்கள் வீட்டுவேலைகளில் சில உதவியை நீங்கள் போற்றுவீர்கள் என்றோ சொல்லலாம்.
நீங்கள் இவ்வாறு உணருகிறீர்கள் என்றறிவதில் ஒருவேளை உங்கள் பெற்றோர் ஆச்சரியப்படலாம். உடனடியாக அவர்களுடைய அன்பு உங்களுக்குக் கிடைப்பதைப்பற்றி நம்பிக்கையளிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு இவ்வாறு தவறான அபிப்பிராயம் கொடுத்ததற்காக வருத்தம் தெரிவிக்கலாம். ஒரு பிரச்னை பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டால் பெரும்பாலும் அவர்கள் மாறுவதற்கு உண்மையான முயற்சியை எடுப்பர்.
மறுபட்சத்தில், உங்களுடைய கலந்தாலோசிப்பு ஒருவேளை உங்களுடைய பாகத்தில் சில தவறான புரிந்துகொள்ளுதல் இருப்பதை வெளிப்படுத்தும். பல வழிகளிலும் அவர்கள் உங்களில் காட்டிய அக்கறைகளில் சிலவற்றை வெறுமனே நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும், காரியங்களை நேரில் பேசித் தீர்ப்பது வீட்டில் காரியங்களை முன்னேற்றுவிப்பதற்கான ஒரு முக்கிய படியாகும்.
இடைவெளியை நிரப்புதல்
உங்களுடைய பெற்றோரிடமிருந்து இன்னும் சாதகமான பிரதிபலிப்பைப் பெறவில்லையென்றால் என்ன? புரிந்துகொள்ளக்கூடியவிதமாகவே, இது அதிக வேதனையைத் தருவதாக இருக்கும். எனினும், நீங்கள் தெரிந்தெடுக்கக்கூடிய வேறு வழிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, கவனமற்ற உங்களுடைய பெற்றோரால் ஏற்படுத்தப்பட்ட இடைவெளியை நிரப்ப தகுதியுள்ள யாரையாவது ஒருவரை—உங்களைவிட வயதில் மூத்தவரை—கண்டுபிடியுங்கள். “இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என்று நீதிமொழிகள் சொல்கிறதுபோல, ஒரு நண்பன் இருப்பான். (நீதிமொழிகள் 17:17) அதைப்போன்ற நண்பனைத் தேடுங்கள். ஆனால் எவ்வகையான அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதைத் தெரிந்தெடுக்கும் பாங்குள்ளவராயிருங்கள். அவை உங்கள் சிறந்த அக்கறைகளுக்கும் கடவுளுடைய வார்த்தைக்கும் இசைவாக இருக்கின்றனவா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
உதவியும் ஆதரவும் பெறுவதற்கான இன்னொரு மூலம் யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் சபையாகும். அங்கு உங்களில் உண்மையான அக்கறை காட்டக்கூடிய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளையும் தாய்தகப்பன்மாரையும் நீங்கள் காணமுடியும். நீங்கள் ஆவிக்குரிய விதத்திலும் உணர்ச்சிசம்பந்தமாயும் முன்னேற அவர்கள் உதவுவார்கள். (மாற்கு 10:30) தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட ஆப்பிரிக்க இளைஞன் காளின், அப்படிப்பட்ட நண்பர்களைக் கண்டடைந்தான். வழிநடத்துதலுக்கான தேவையை உணர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு ஆஜராயிருந்தான். அவன் அன்புக்குரியவன் தேவைப்படுகிறவன் என்று உணர வைத்த சபை அங்கத்தினர்களால் விரைவிலேயே நண்பனாக்கிக்கொள்ளப்பட்டான். காலப்போக்கில் அவனுடைய பெற்றோரும் உடன்பிறந்தோரும்கூட கூட்டங்களுக்கு ஆஜரானார்கள்.
உங்கள் பெற்றோர் உண்மையிலேயே உங்களில் அக்கறையுள்ளவர்களாய் இருக்க அதிக வாய்ப்புண்டு, ஆனால் வெறுமனே அவர்கள் உங்களுடைய தேவைகளை அதிகம் அறிந்திருக்கவேண்டும். அந்தத் தேவைகள் என்ன என்று அவர்கள் அறிந்துகொள்ளும்படி நீங்களே சொல்லுங்கள்! யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர்கள் நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக உங்களில் அக்கறையாய் இருக்கிறார்கள் என்பதைக் காண்பீர்கள். (g92 11/8)
[அடிக்குறிப்புகள்]
a போதைப்பொருள் அல்லது மது போன்றவற்றிற்கு அடிமைகளாக இருந்து அவற்றிற்கு எதிரே போராடும் பெற்றோராக இருந்தால், அவர்கள் பிள்ளைகளின் தேவைகளை உணர்ந்து செயல்படுவதற்கு முன் அவர்களுக்கு நிபுணர்களின் உதவி தேவைப்படும்.
[பக்கம் 24-ன் படம்]
இன்றைய பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளுவதற்கு தாங்கள் அதிக அழுத்தங்களின்கீழும் அதிக களைப்பாகவும் இருப்பதாய் அடிக்கடி உணருகிறார்கள்