உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 3/8 பக். 27-28
  • ‘நம்முடைய அனுதின அப்பம்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘நம்முடைய அனுதின அப்பம்’
  • விழித்தெழு!—1993
  • இதே தகவல்
  • “வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பம்”
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • இயேசு​​—⁠“வாழ்வு தரும் உணவு”
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இயேசு—“வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பம்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • படையல் ரொட்டி
    சொல் பட்டியல்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 3/8 பக். 27-28

‘நம்முடைய அனுதின அப்பம்’

‘எங்களுடைய அனுதின அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும்.’ இந்த வார்த்தைகள் இதுவரை செய்யப்பட்ட ஜெபங்களிலேயே நன்கு அறியப்பட்டிருக்கும், கர்த்தருடைய ஜெபம் என்றழைக்கப்படும் ஜெபத்தின் பாகம் என்று அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. (மத்தேயு 6:9, 11) இயேசுவின் நாட்களில், இஸ்ரவேல் தேசத்திலே அப்பம் அடிப்படை உணவாக இருந்தது. எனவே அப்பம் பொருத்தமாகவே உணவின் ஒரு சின்னமாக இருந்திருக்கமுடியும்.

இன்று, உலகின் பெரும்பாலான பகுதிகளில், அப்பம் ஒரு காலத்திலிருந்ததுபோல உணவு வகை பட்டியலில் இனியும் முதன்மையாயிருப்பதில்லை. இன்று சொல்லர்த்தமான நம்முடைய அனுதின அப்பம் அல்லது ரொட்டி அடிக்கடி ஓர் உணவோடு சேர்த்துக்கொள்ளும் ஒரு வெறும் பதார்த்தமாகவே இருக்கிறது. எனினும், அப்பம் உலகமுழுவதும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கைத் தொடர்ந்து வகித்துவருகிறது.

மெக்ஸிகோவில் வீட்டுப்பெண்கள் டார்ட்டில்லாஸ் என்றழைக்கப்படும் மெல்லிய அப்பத்துண்டுகளை உண்டாக்குகின்றனர். எதியோபியாவில் பெண்கள் குழம்புபோன்ற ஒரு திரவத்தைச் சூடாக்கப்பட்ட ஓர் இரும்புக்கல்லில் வட்ட வடிவில் ஊற்றி ஒரு சாதாரண அப்பத்தைச் சுடுகின்றனர். மேலை நாடுகளில் அப்பமானது ஆச்சரியப்படச் செய்யும் பல வடிவங்களிலும் அளவுகளிலும் பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகிறது. அந்த நாடுகளில் வீட்டுப்பெண்கள் அநேகர், வீட்டில் தயாரிக்கப்படும் வகைகளினால் தங்கள் குடும்பத்தினரைத் திளைக்கச் செய்கின்றனர்.

சூட்டுக்கலத்திலிருந்து அப்பம் சூடாக எடுக்கப்படும்போது அதன் நறுமணச்சுவையினால் யார்தான் கவர்ந்திழுக்கப்படமாட்டார்கள்? அது வழிபோக்கர்களை ஓர் அப்பக் கடையினுள் இழுக்கக்கூடும். அநேகருக்கு அது வீட்டைப்பற்றிய அனலான நினைவுகளையும் குழந்தை பருவத்தின் பாதுகாப்பையும் மனதிற்குக் கொண்டுவருகிறது.

அப்பம் சுடும் கலையைக் கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. ஆதியாகமம் 3:19-ல், முதல் மனித பாவிகள் இவ்வாறு சொல்லப்பட்டனர்: “நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் (அப்பம், NW) புசிப்பாய்.” தெளிவாகவே, “அப்பம்” என்ற வார்த்தை வெறுமனே பொதுவான உணவைக்குறிக்கும் ஒரு சின்னமாக மட்டுமே இங்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஆதியாகமம் 14:18, 19-ல் ஆசாரியன் மெல்கிசேதேக்கு கோத்திரப்பிதா ஆபிரகாமை ஆசீர்வதிப்பதற்கு வந்தபோது “அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்”ததாக வாசிக்கிறோம். சந்தேகமின்றி இது பூர்வகால மக்களுக்கு அடிப்படை உணவாக பயன்பட்ட ஒரு வகை அப்பத்தையே குறிப்பிட்டது. மத்திய கிழக்கின் சில பகுதிகளில், அப்பம் எப்பொழுதும்போலவே இருந்துவருகிறது.

கிரீஸ், ரோம் போன்ற பின்பு வந்த நாடுகளைப்போலவே பூர்வீக எகிப்தும்கூட வர்த்தக அப்பக் கடைகளைக்கொண்டிருந்தன. தொழிற் புரட்சி 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அதன் செயல்திற உச்சநிலையில் இருந்தது. அப்பம் சுடுதல் வீடுகளிலிருந்து பேரளவு உற்பத்திக்காக தொழிற்சாலைகளுக்கு இடம்பெயர்ந்தது. இந்த உற்பத்தி தேவைகளை அநேக புதிய கண்டுபிடிப்புகள் பூர்த்திசெய்தன. கலக்கும் இயந்திரங்கள், தொடர்பொருட்கடத்திகள் (Chain Conveyors), தானாக இயங்கும் சூட்டுக்கலங்கள், துண்டாக்கும் மற்றும் பொதியும் இயந்திரங்கள் போன்றவை இப்புதிய கண்டுபிடிப்புகளாகும். அப்பம் தயாரித்தல் வீட்டுச் சமையல்கலையிலிருந்து வணிக அறிவியலாக வளர்ந்துவிட்டது.

தொழில் வளர்ச்சியடைந்த தேசங்களில் இன்று உட்கொள்ளும் அப்பம், அனைத்தும் இல்லையென்றாலும், அதில் பெரும்பகுதியாவது வாணிக அளவில் தயாரிக்கப்பட்டதாகும். பல பண்பாடுகளிலும் அது சமையல் பாணியின் (Cuisine) ஒரு முக்கிய பாகமாக தொடர்ந்திருக்கிறது. கடின மேற்பகுதியுள்ள இத்தாலிய அப்பம் (Crusty Italian Bread) இல்லாமல் ஸ்பகட்டி (Spaghetti) உணவு என்னவாக இருக்கும்? அல்லது கருத்த நிறமுடைய மென்று தின்கிற பம்பர்நிக்கலின் (Pumpernickel) சுவையின்றி பசியார்வத்தோடு உண்ணும் சவர்க்ரட் (Sauerkraut) என்ற ஒரு ஜெர்மன் உணவைக் கற்பனை செய்து பாருங்கள்! ஒரு குளிர்கால காலைவேளையிலே பணியாரங்களை (Pancakes) யார் உண்ண விரும்பமாட்டார்? பணியாரங்கள் மக்காச்சோளம், முழுகோதுமையின் மாவு, அல்லது வேறு கோதுமையின் மாவு ஆகியவற்றைக் கொண்டு துரிதமாக வறுத்தெடுத்த அப்பத்தைவிட அதிகமொன்றுமில்லை.

மேலைநாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு வகை அப்பம் இத்தாலிய பிஸ்ஸாவில் (Italian Pizza) பயன்படுத்தியுள்ள அப்பமாகும். அதன் தயாரிப்புமுறை அதிகம் கண்டுமகிழக்கூடிய ஒன்றாகும்; பிஸ்ஸா சுடுபவன் ஒருவன் சர்க்கஸ்காரனைப்போல தன் தொழில்நுட்பத் திறமையுடன் வட்ட வடிவிலிருக்கும் பிசைந்த மாவைத் தன் தலைக்குமேல் சுற்றி சுழற்றும்போது அந்த அதிசயத்தை வயதுவந்தவர்கள்கூட சிறுபிள்ளைகளைப் போல நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

அது எல்லாருக்குமே உரிய ஒன்றா? ஆம், உண்மையிலேயே! ஆனால் அப்பத்தை அனுபவிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, நீங்களே சொந்தமாக சுடுவதற்கு முயற்சி செய்வதாகும். உங்கள் முயற்சியின் அனுபவத்திலிருந்து பெறும் திருப்தியைக் கண்டு ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு வீட்டுப் பெண்மணிக்கு இது புதிதாக படைக்கும் திறனைப் பெற்ற ஓர் உணர்ச்சியைத் தரும். இதே உணர்ச்சி சலவை அறையிலோ வாளியைத் தேய்த்துக் கழுவுவதிலிருந்தோ பெறமுடியாத ஒன்றாகும்.

இதோடு இணைக்கப்பட்டிருக்கும் செய்முறை குறிப்பு, ஈஸ்ட் உபயோகித்து உண்டாக்கும், மேலைநாடுகளில் பிரபலமாயிருக்கும் ஒரு வகை அப்பத்தைச் சுட உங்களுக்கு உதவும். தேவையான மூலப்பொருட்களை அளந்து கலப்பது கேளிக்கையாக இருக்கும். மாவைப் பிசைவது ஏற்படும் எல்லா ஏமாற்றங்களையும் வெளியேற்றுவதற்கான ஓர் ஆரோக்கியமான வழியாகும்! அப்பம் பொங்கிவருவதைப் பார்ப்பது அப்பம் சுடுதலின் மற்றொரு கிளர்ச்சியூட்டும் அம்சமாகும். பொங்குவது நொதித்தலின் விளைவாக ஏற்படுகிறது. பிசைந்த மாவில் சேர்க்கும்போது, ஈஸ்ட் கரியமில வாயுவின் குமிழிகளை உண்டாக்கி மாவை நுண்துளைகளுடையதாக செய்கிறது. இப்பொழுது இந்த மாவு அடிக்கப்பட்டு, துண்டுகளாக வடிவமைத்து, சுடுவதற்குமுன் அப்பத்தட்டுகளில் அவை மீண்டும் பொங்குவதற்காக வைக்கப்படுகின்றன. இத்துண்டுகள் சூட்டுக்கலத்துக்குள் செல்லுகின்றன—உங்களுடைய வீட்டை என்னே ஒரு நறுமணச்சுவை நிரப்புகிறது! எல்லாவற்றையும்விட மிகச்சிறந்தது அதை ருசித்துப் பார்ப்பதாகும். மீண்டும் கடையில் வாங்கும் அப்பத்தைச் சாப்பிடுவதை மிகக் கடினமாகக் காண்பீர்கள். அப்பம் சுடும் முறையைக் கற்றுக்கொண்டீர்களென்றால், கோதுமை, பார்லி, கம்பு, மக்காச்சோளம், அரிசி, உருளைக்கிழங்கு, அல்லது சோயா மொச்சை போன்றவற்றின் மாவுகளைக் கொண்டு அப்பம் செய்து பார்க்க உந்துவிக்கப்படுவீர்கள்.

வெறுமனே வாணிப முறையில் செய்யப்பட்ட விதவிதமான அப்பங்களில் சிலவற்றை வாங்குவது உங்களுக்கு அதிக வசதியாக இருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் உங்களுடைய சந்தோஷம் அதைச் சுடுவதிலோ சாப்பிடுவதிலோ, அது உங்களுடைய உணவின் ஒரு முக்கிய பாகமோ வெறுமனே உணவோடு சேர்க்கப்படும் ஒரு பதார்த்தமோ, அப்பத்தை அலட்சியப்படுத்தாதிருக்க முயற்சி செய்யுங்கள். ‘நம்முடைய அனுதின அப்பத்தைத்’ தருவது கடவுளேயாகும்! (g92 12/8)

[பக்கம் 28 பெட்டி/படம்]

அப்பம் செய்முறை குறிப்பு

ஓர் ஈஸ்ட் கட்டியை (அல்லது 3 பேக்கட்டுகள் உலர்ந்த ஈஸ்ட்) 4 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கரையுங்கள்

ஐந்து கப் மாவை (முழு அல்லது வெள்ளை கோதுமை) கலக்குங்கள்

வெதுவெதுப்பான ஓர் இடத்தில் அதன் அளவில் இருமடங்காக பொங்கும்படி வையுங்கள்

உப்பு 2 தேநீர்கரண்டியும் அரை கப் சர்க்கரையும் அரை கப் தாவர எண்ணெயும் சேர்த்துக் கொள்ளுங்கள்

நன்கு கலக்குங்கள்

பிசைந்த மாவைக் கட்டியாக்குவதற்கு இன்னும் சுமார் 4 கப் மாவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்

சேர்க்கப்பட்ட மாவை 15 நிமிடங்கள் பிசையுங்கள்

எண்ணெய்ப் பூசப்பட்ட பாத்திரத்தில் அது இரண்டு மடங்கு பொங்கும்படி வையுங்கள்

சிறிது பிசைந்து, நான்கு துண்டுகளாக வடிவமையுங்கள்

எண்ணெய்ப் பூசப்பட்ட அப்பத்தட்டுகளில் ஒருசில நிமிடங்கள் பொங்கும்படி வையுங்கள்

ஒரு மணிநேரம் 325 டிகிரி பாரன்ஹீட்டில் சுடுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்