உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 4/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இருதய நோய்க்கு பலியாதல்
  • சகிப்புத்தன்மையற்ற அயலகத்தார்
  • புலிகளின் எண்ணிக்கை குறையும் நிலையில்
  • புகைபிடித்தலும் முறிந்த எலும்புகளும்
  • அழுக்கான கைகள்
  • ஆபத்திற்குள்ளாக்கப்பட்ட பறவைகள்
  • குழந்தையின் தசைகளைத் தேய்த்துவிடுவதன் பயன்கள்
  • மூச்சுத்திணறடிக்கும் ஏரி
  • மூளை பயிற்சி
  • குறைந்துவரும் பல்வகை
  • மிக அதிக சாவுக்கேதுவான அடிமையாக்குகிற வஸ்து
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • தலைமறைவில் தலைவிரித்தாடும்—தற்கொலை
    விழித்தெழு!—2000
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1987
  • உலக சுகாதார நிலை—அதிகரித்துவரும் இடைவெளி
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 4/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

இருதய நோய்க்கு பலியாதல்

இருதய மற்றும் இரத்த நாளங்களின் நோய்கள் (CVD) மனிதஇனத்தின் மிகப்பெரிய கொலையாளிகளாக இருக்கின்றன. உலகமுழுவதிலுமாக எல்லா மரணங்களில் ஏறக்குறைய ஒரு காற்பங்கு மரணத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. இவ்விதமாக உலகச் சுகாதார நிறுவனம் (WHO) 1992-ல் பிரசுரித்த 1991 உலகச் சுகாதார புள்ளிவிவரங்கள் ஆண்டுமலர் (1991 World Health Statistics Annual) குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ஐக்கிய மாகாணங்கள் போன்ற முன்னேற்றமடைந்த நாடுகளில், எல்லா மரணங்களிலும் சுமார் பாதியளவு மரணத்தை CVD உண்டுபண்ணுகிறது. 1980-கள் குறிப்பிடத்தக்க குறைவைக் கண்டபோதிலும் இது இவ்வாறு இருக்கிறது. வளரும் நாடுகளில், எல்லா மரணங்களிலும் 16 சதவீதம் மட்டுமே CVD-ன் காரணமாகும். இருப்பினும், உலகச் சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறபடி, “கிளம்பிவருகின்ற ஒரு கொள்ளைநோய்க்கான அறிகுறிகள் இருக்கின்றன . . . வளர்ந்துவருகிற உலகத்தின் எல்லா பாகங்களிலும் CVD அதிகாரித்துக்கொண்டிருக்கின்றன.”

சகிப்புத்தன்மையற்ற அயலகத்தார்

அடுத்த வீட்டில் வசிப்பதற்கு யாரைக் கொண்டிருக்க மிகக் குறைவாக நீங்கள் விரும்புவீர்கள்? பொதுவான பயங்களையும் தப்பெண்ணங்களையும் கண்டுபிடிக்கும் ஒரு முயற்சியில், 14 நாடுகளில் 20,000 ஆட்களிடம் இந்தக் கேள்வியை ஐரோப்பிய மதிப்பீட்டு அமைப்புமுறைகள் ஆராய்ச்சித் தொகுதி எழுப்பியது. “மிக அதிகளவில் சகிப்புத்தன்மையுள்ள நாடு டென்மார்க்,” என்பதாக தி யூரோப்பியன் குறிப்பிடுகிறது. மாறாக, மிகக்குறைவான சகிப்புத்தன்மையுடைய நாடு போர்த்துகல் என்று அறிக்கைசெய்யப்படுகிறது. எய்ட்ஸ் உள்ள அயலகத்தார் சம்பந்தமாக, இத்தாலி, ஸ்பெய்ன் அயர்லாந்து போன்ற அநேக கத்தோலிக்கர் இருக்கும் நாடுகளிலுள்ள மக்கள் மிக அதிகமான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மாறாக, பெல்ஜியர்கள் அதிக இன மற்றும் மதசம்பந்தமான சகிப்பற்றத்தன்மையை வெளிக்காட்டினார்கள். அரசியல் தீவிரவாதிகளை அயலகத்தாராகக் கொண்டிருக்க ஜெர்மானியர் விரும்பவில்லை. சகிப்பற்றத்தன்மையைக் குறித்ததில் ஆண்களும் பெண்களும் அதிக வித்தியாசத்தைக் காட்டவில்லை. ஆனால் ஒரு காரணி எல்லா நாடுகளிலுள்ள சகிப்பற்றத்தன்மையுடன் தொடர்புடையதாகத் தோன்றியது—வயது. வயதானவர்கள் பொதுவாக யாரைத் தங்களுடைய அயலகத்தாராகக் கொண்டிருக்கவேண்டும் என்பதில் அளவுக்குமீறி கவனமுள்ளவர்களாய் இருந்தனர்.

புலிகளின் எண்ணிக்கை குறையும் நிலையில்

இந்தியாவின் மிகச்சிறந்த சரணாலயம் அதனுடைய அபூர்வ பெங்கால் புலிகளை இழந்துகொண்டிருக்கிறது என்று புதிய விஞ்ஞானி (New Scientist) பத்திரிகை குறிப்பிடுகிறது. ரான்தம்பார் சரணாலயம் 15 புலிகளை மட்டுமே கொண்டிருக்கிறது—மூன்றே ஆண்டுகளுக்கு முன்பு 44-ஆக இருந்தது குறைந்துவிட்டது—என்று ஒரு சமீபக் கணக்கெடுப்பு காண்பித்தது. பிரச்னை வேட்டையாடுதலாக இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த நாட்களில் வேட்டையாடுபவர்கள் அழகிய தோல்களைப் பார்க்கிலும் அதிகத்தை நாடுகிறார்கள். புலிகளின் எலும்புகள் “புலி எலும்பு மது” தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன, சில ஆசிய நாடுகளில் ஒரு சத்துமருந்தாக இது பிரபலமாக இருக்கிறது. வேட்டையாடுபவர்கள் வழக்கமாக விஷமூட்டப்பட்ட இரையின் மூலமாக புலிகளைக் கொல்கிறார்கள், சிலசமயங்களில் தாய்ப்புலிகளோடு குட்டிகளைக் கொலை செய்கிறர்கள். ஆரம்பத்தில் ரான்தம்பார் சரணாலயம் புலிகளைப் பாதுகாக்கும் திட்டத்துக்கு எடுத்துக்காட்டாக—பெங்கால் புலி மறைந்துபோவதிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்புத் திட்டமாக—இருந்தது வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறப்பட்டிருக்கிறது. மொத்தத்தில், இந்த நேர்த்தியான விலங்குகள் 6,000 முதல் 9,000 வரை கணக்கிடப்பட்டவை மட்டுமே இந்த உலகத்தில் இருக்கின்றன.

புகைபிடித்தலும் முறிந்த எலும்புகளும்

“எலும்பியல் நிபுணர்களுங்கூட தங்களுடைய நோயாளிகள் புகைப்பதை நிறுத்தும்படிக்குக் கட்டளையிடும் நாள் வந்துவிட்டது,” என்று பிரேஸிலியன் செய்தித்தாள் ஃபோல்யா டி S. பாலோ அறிவிக்கிறது. புகையிலை புகையிலிருந்து வரக்கூடிய நிக்கோட்டின், தொடர்ந்து புகைப்பவர்களின் இரத்த நாளங்களை அதிக விறைப்புள்ளதாகச் செய்தது என்று எலும்பு முறிவுகளுள்ள 29 ஆட்களை வைத்து நடத்திய ஓர் ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. மாறாக, புகைக்காதவர்கள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவாகப் புகைத்திருந்தவர்களின் இரத்த நாளங்கள் சிறந்த விதத்தில் சுருங்குவதாகவும் விரிவடைவதாகவும் இருந்தது, எலும்புமுறிவுகள் வேகமாக குணமாவதற்கு இது உதவுகிறது. சராசரியாக, நீண்டகாலம் புகைப்பவர்களைவிட புகைக்காதவர்களின் எலும்புமுறிவுகள் 28 சதவீதம் வேகமாக குணமடைந்தது. மேலும், புகைக்கையில் கார்பன் மோனாக்ஸைடை உள்இழுப்பது ஆக்ஸிஜன் தடைபடாது செல்வதைக் குறைக்கிறது, இவ்விதமாக முறிந்த எலும்பு குறைவான ஊட்டச்சத்தைப் பெறுகிறது.

அழுக்கான கைகள்

ஐக்கிய மாகாணங்களிலுள்ள சுகாதாரக்காப்பு பணியாளர்களில் பெரும்பான்மையினர் தங்களுடைய நோயாளிகளைப் பரிசோதிப்பதற்கு முன்பாக தங்களுடைய கைகளைக் கழுவுவதை அசட்டை செய்கிறார்கள் என்று ஒரு சமீப ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. மேலும், தி வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறபடி, “மருத்துவர்கள் தங்களுடைய கையுறைகளை மாற்றவேண்டியபோது மாற்றுவதில்லை என்று மற்ற ஆராய்ச்சிகள் சுட்டிக்காண்பிக்கின்றன.” சந்தேகமில்லாமல் இந்தப் பிரச்னை நோய் பரவுவதற்கு உதவியிருந்திருக்கிறது. நியூ இங்கிலாந்து மருத்துவ வெளியீட்டின்படி (The New England Journal of Medicine), மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் கழுவப்படாத கைகள், “குணமாவதற்கு ஓர் ஆண்டுக்கு 1,000 கோடி டாலர்கள் செலவாகக்கூடிய தொற்றுநோய்கள் மருத்துவமனை நோயாளிகளுக்கு ஏன் வருகிறது என்று விளக்குவதற்கு உதவலாம்” என்று போஸ்ட் அறிவிக்கிறது.

ஆபத்திற்குள்ளாக்கப்பட்ட பறவைகள்

ஜெர்மனியில் இனப்பெருக்கம் செய்யும் 273 பறவை இனங்களில் 166 ஆபத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன என்று ஜெர்மன் பாதுகாப்புச் சங்கம் அறிவிக்கிறது. சாலைகள், தொழிற்சாலை, தீவிரமான வேளாண்மை, சுற்றுலாத்திட்டம் ஆகியவை நிலத்தின்மீது அத்துமீறுவது காரணங்களாக சொல்லப்படுகின்றன. அநேக ஏரிகள், ஆற்றுப்பாதைகள், மற்றும் ஜெர்மனியின் நஞ்சைநிலங்கள் பாதுகாக்கப்பட்டப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டபோதிலுங்கூட, பிளாக் டெர்ன், சிறிய நாரையினப் பறவை, வெள்ளை வாலுள்ள கடற்கழுகு ஆகிய இத்தகைய இனங்களுக்கு உதவுவதற்கு இவை போதுமான நடவடிக்கைகளாக இல்லை என்று ஃபிராங்க்ஃபர்டர் ஆல்கேமீனே ஷீடங் செய்தித்தாள் அறிவிக்கிறது. ஆப்பிரிக்காவிலுள்ளதுபோல் பறவைகளின் குளிர்காலப் புகலிடப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டால் தவிர, இனப்பெருக்கம் செய்யும் நிலப்பரப்புகளின் பாதுகாப்பு அதிகத்தைச் சாதிப்பதில்லை. இவ்விதமாக, அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது: “அநேகச் சமயங்களில், சர்வதேச ஒத்துழைப்பைத் தொடர்ந்து மட்டுமே பாதுகாப்புச் செயல் பலன்களைக் கொண்டுவரக்கூடும்.”

குழந்தையின் தசைகளைத் தேய்த்துவிடுவதன் பயன்கள்

“உடல் ஸ்பரிசம் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று உள்ளுணர்வும் தனிப்பட்ட அனுபவமும் நமக்குச் சொல்கின்றன,” என்று ஸ்ட்ரெஸ் அன்ட் ஹெல்த் ரிப்போர்ட் குறிப்பிடுகிறது. உரிய காலத்துக்கு முன்பே பிறந்த குழந்தைகளுடைய ஒரு தொகுதியின் பராமரிப்புக்கு இந்த நியமம் பிரயோகிக்கப்பட்டது. கலிபோர்னியாவிலுள்ள என்லோ மருத்துவமனையினால் பிரசுரிக்கப்பட்ட செய்திமடல் இத்தகைய 40 மகவுகளின் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கோள் காட்டுகிறது. அவர்களில் இருபதுபேருக்கு ஒரு நாளைக்கு மூன்று மென்மையான, 15-நிமிட தசைத்தேய்ப்புகள் கொடுக்கப்பட்டன. உரிய காலத்துக்கு முன்பே பிறந்த மற்ற இருபது மகவுகள் இயல்பான கவனிப்பைப் பெற்றார்கள். தசைத்தேய்ப்பு செய்யப்பட்ட 20 பேர், மற்ற 20 பேர்களைவிட அநேக விதங்களில் மிகச்சிறந்து விளங்கினார்கள். அவர்களுடைய அன்றாட எடை சராசரியாக 47 சதவீதம் அதிகரிப்பைப் பெற்றது, நடத்தைமுறை பரிசோதனைகள் பேரிலான அவர்களுடைய மதிப்பெண் உயர்வாக இருந்தன, மற்றும் அவர்கள் அதிக சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் காணப்பட்டனர். ஸ்ட்ரெஸ் அன்ட் ஹெல்த் ரிப்போர்ட் இவ்விதமாக முடிக்கிறது: “மிகச்சிறிய குழந்தைகளுக்கு நன்மையாக இருப்பது நம் அனைவருக்கும் நன்மையாக இருக்கக்கூடும்.”

மூச்சுத்திணறடிக்கும் ஏரி

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியாகிய ஆப்பிரிக்காவின் கண்கவர் விக்டோரியா ஏரி, போதுமான ஆக்ஸிஜன் பற்றாக்குறைவினால் அச்சுறுத்துகிற உயிரற்ற ஒரு நிலையை எதிர்ப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சில விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பாசிகள் ஏரியின் அடியில் செழித்துக்கொண்டு நீரிலுள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. காரணம்? ஒரு வார்த்தையில் சொல்லப்போனால், காடுகளை அழித்தல், வேளாண்மை செய்தல், மற்றும் அதிகமான ஜனத்தொகை மூலம் மனிதன்தான் காரணமாயிருக்கிறான். அதிக அளவாக ஊட்டச்சத்து அளிப்பவை மண்ணிலிருந்து போய்விட்டன, சாக்கடை நீர், மரப்புகை பாசிகளுக்குப் போஷாப்பை அளிக்கின்றன. மேலும், நைல் பெர்ச் என்ற மீன்வகையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மீன்வள தொழில்துறையை அழியாது காப்பதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மீன்வள அதிகாரிகள் தீர்மானித்தனர். இந்தப் புதிய மீன்கள் செழித்தோங்கின, திட்டமிட்டதுபோல மீன்வளர்ப்புத் தொழில் விரைவில் வளர்ச்சி கண்டது. இருப்பினும், பாசிகளை உட்கொள்வதன் மூலம் நீண்டகாலமாக சமநிலையைக் காத்துவந்திருந்த சிறிய மீன்களை நைல் பெர்ச் விழுங்கியது. இப்படிப்பட்ட மீன்களின் பாதிக்குமேலான இனங்கள் மறைந்துவிட்டன. இப்பொழுது, அதிகமான மீன்பிடித்தல் மற்றும் ஆக்ஸிஜன் குறைவுபடுவதன் காரணமாக, பெர்ச்சுங்கூட ஆபத்திற்குட்படுத்தப்படலாம். சுமார் 3 கோடி மக்கள் விக்டோரியா ஏரியின் மீன்பிடிப்புத் தொழில்மீது சார்ந்திருக்கின்றனர்.

மூளை பயிற்சி

“நல்ல மூளைகள்.” மூளையை உபயோகப்படுத்துவதை அழுத்திக்காட்டுகிற ஒரு ஃபின்னிஷ் பிரச்சாரத்தின் பெயராக அது இருக்கிறது. முகப்புரை எளிமையாக இருக்கிறது. எந்தளவுக்கு நாம் நம்முடைய மூளையை உபயோகப்படுத்துகிறோமோ—தீர எண்ணிப்பார்த்தல், திட்டமிடுதல், புதிய காரியங்களைக் கற்றுக்கொள்ளுதல்—அந்தளவுக்கு அது சிறப்பாக செயற்படுகிறது. “பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான முடிவற்ற ஓர் உள்ளூர ஆற்றலை மூளையில் நாம் கொண்டிருக்கிறோம், ஆனால் துரதிஷ்டவசமாக, சராசரியாக மூளையின் ஆற்றலில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே மனிதன் பயன்படுத்துகிறான்,” என்று இந்தப் பிரச்சாரத்தில் ஒரு திட்ட மேலாளராக செயற்படும் மூளை ஆராய்ச்சியாளரும் மருத்துவமனை நிர்வாகியுமான யுஹானி யுன்ட்டுனென் வலியுறுத்துகிறார். “உங்களுடைய மூளையை நல்ல நிலைக்குக் கொண்டுவாருங்கள், புதிய காரியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள், உங்களிடம் அதிகமான ஆற்றலை நீங்கள் கொண்டிருப்பீர்கள்,” என்று அவர் தூண்டுகிறார். பெரும்பாலானவர்கள் இளைஞரை உயர்த்திப் போற்றுவதையும், வயது முதிர்ந்தவர்களின் மூளை திறனைக் குறைவாக மதிப்பிடுவதையும் கண்டு அவர் எரிச்சலடைகிறார். ஏனெனில், வயதான மூளைகள் இளைஞருடையதைப் பார்க்கிலும் சில விதங்களில் நன்றாகச் செயற்பட முடிகிறது என்று அவர் நம்புகிறார். “முதியோர்களினால் உயர் பதவிகள் வகிக்கப்படுவது தற்செயல் நிகழ்வல்ல,” என்று யுன்ட்டுனென் கருத்துத் தெரிவிக்கிறார். “சீர்கேடடைந்துவருகிற ஒரு கருவியாக மூளை இருக்கலாம், ஆனால் இளைஞரைவிட முதியோர்களே அதை அதிகத் திறமையாக உபயோகப்படுத்துகின்றனர்.”

குறைந்துவரும் பல்வகை

பிரேஸிலியன் பத்திரிகை சூப்பரின்டிரெஸ்சாண்ட்டி கூறுகிறபடி, ஸ்பெய்னிலுள்ள அநேக வகையான முலாம்பழங்களும் மத்திய ஆசியாவிலுள்ள பல்வகையான வெங்காயங்களும் மறைந்துபோய் கொண்டிருக்கின்றன, பிரேஸிலில் கரும்பு இனங்களும் மக்காச்சோளமும் ஏற்கெனவே மறைந்துவிட்டன. “தொழில்துறையிடத்திலும் நுகர்வோர்களிடத்திலும் குறை இருக்கிறது, இவர்கள் எப்பொழுதும் அதே விளைபொருட்களையே தெரிவுசெய்கின்றனர்” என்று ஐ.நா.-வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இயக்குநர் தலைவர் ஆட்வர் செளமா சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பத்திரிகை தொடர்ந்து சொல்கிறது: “சந்தையை திருப்திப்படுத்துவதற்கு விவசாயிகள் முயற்சி செய்வதன் காரணமாக, இனங்களின் வீழ்ச்சி ஒவ்வொரு நாளும் அதிக கவலைக்குரியதாகிக் கொண்டிருக்கிறது.” இத்தகைய தரப்படுத்துதலின் காரணமாக, வருகின்ற பத்தாண்டுகளில் மனிதவர்க்கம் 40,000 வகைகள் காய்கறிகளை இழக்கக்கூடும் என்று செளமா எச்சரிக்கிறார். உயிரியல் சம்பந்தமான பல்வகைமை இல்லாமை, அறுவடைகள் கொள்ளைநோய்களுக்கு அதிகமாக பாதிக்கப்படக்கூடியதாகும் என்று விஞ்ஞானிகள் பயப்படுகின்றனர்.

மிக அதிக சாவுக்கேதுவான அடிமையாக்குகிற வஸ்து

சிகரெட்டுகள் மிக அதிகமாக அடிமைப்படுத்துகிற போதைப்பொருள்கள் துர்ப்பிரயோகத்தின் மத்தியில் மட்டுமல்லாமல், “பெரிய அளவில் மிக அதிகமாக சாவுக்கேதுவான”தாகவும் இருக்கிறது என்று புகைபிடித்தல் நடத்தை மற்றும் கொள்கையின் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் தாமஸ் C. ஷெல்லிங் குறிப்பிடுகிறார். புகைப்பதை நிறுத்திவிடுவது கடினமாக இருக்கிறது, என்று விஞ்ஞானம் (Science) பத்திரிகையின் ஜனவரி 24, 1992 வெளியீட்டில் அவர் சொல்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு அதிகமாக புகைப்பதை நிறுத்திவிடுவதற்கு வெற்றியின் அளவு 5 முயற்சிக்கு 1-ஆக இருக்கிறது. புகைப்பதை நிறுத்துவது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? ஷெல்லிங் இந்தக் காரணங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்: சிகரெட்டுகள் மலிவாகவும், விரைவில் கிடைக்கக்கூடியவையாகவும், கையடக்கமாகவும், சேமித்து வைக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன; எந்த அறிவுத்திறனையும் சேதப்படுத்துவதில்லை; புகைத்தல் எந்தச் சாதனத்தையும் தேவைப்படுத்துவதில்லை. “தீங்கு வந்துசேர்வதில் மெதுவாக இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார். “புகைபிடிப்பதினால் புற்றுநோய், நுரையீரல் மற்றும் இருதய நோயினால் துன்பப்படுகிற மக்கள், அதே மாதிரியான அறிகுறிகள் தோன்றுவதற்கு மூன்று பத்தாண்டுகள் அல்லது அதற்கு முன்பாக இருந்தே புகைபிடித்திருக்கின்றனர்.” சிகரெட் புகையில் நிக்கோட்டின் முக்கியமான அடிமைப்படுத்துகிற வஸ்துவாக இருந்தபோதிலும், புகையிலை புகையின் சுவையும் புகைபிடித்தலின் மூலம் உண்டுபண்ணப்படுகிற மனநிலைக் கட்டுப்பாடும் பழக்கத்தை அதிகப்படுத்துவதாக இருக்கலாம் என்று ஷெல்லிங் சந்தேகிக்கவும் செய்கிறார். மீண்டும் புகைக்க ஆரம்பிப்பது ஏன் அவ்வளவு சாதாரணமாக இருக்கிறது? “புகைப்பதை நிறுத்திவிட்டிருக்கிற பெரும்பாலான புகைப்பவர்கள் அருகிலுள்ள சிகரெட்டிலிருந்து 5 நிமிடங்களுக்கு மேலான தூரத்தில் இருப்பது அபூர்வமானதாயிருக்கிறது, புகைப்பதற்கான தூண்டுதலை நிறைவேற்றுவதற்கு மிகக்குறுகிய கட்டுப்பாட்டு இழப்பு மட்டுமே தேவையாயிருக்கிறது” என்று அவர் சொல்கிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்