காற்றுப் பண்ணையமைத்தல்
லண்டனின் தி இன்டிப்பென்டன்ட் சொல்லுகிறபடி விசைச்சக்கரத்தை (turbine) நாட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்ட பாரந்தூக்கிகளில் (cranes) ஒன்று ஒரு புயலால் பறந்து சென்றபோது பிரிட்டனின் முதல் வர்த்தக காற்றாலைப் பண்ணையை (wind farm) அமைத்தல் தற்காலிகமாக பின்னடைந்தது. இருந்தபோதிலும், காற்றைப் பயன்படுத்திக் கொள்ளுதல் மின்சக்தி உற்பத்தி முறைகளிலேயே மிகத் துரிதமான செலவுபிடிக்காத ஒன்றாக வலியுறுத்தப்படுகிறது. இன்னும் அதிக கவர்ச்சியான அம்சம் என்னவென்றால், நிலக்கரி போன்ற புதைப்படிவ எரிபொருட்களை எரிப்பதால் வரும் ரசாயன மாசுபடுத்துதல் ஒன்றையும் அது ஏற்படுத்துவது கிடையாது.
கலிபோர்னியாவோடு சேர்ந்து—டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற—ஐரோப்பிய நாடுகள் பல காற்றாலைப் பண்ணைகள் புதுப்பிக்கப்படக்கூடிய சக்தியின் மூலங்களாக இருப்பதை ஆதரித்தபோதிலும், சுற்றுச்சூழலைப்பற்றி அக்கறையாயிருக்கும் தேசங்கள் அனைத்தும் இதை விரும்பவில்லை. சிலர் அந்த விசைச்சக்கரக் கத்திப்பற்களின் (blades) சுழற்சி ஏற்படுத்தும் இரைச்சலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்; மற்றவர்கள் அதன் அலங்கோலமான தோற்றத்தை, முக்கியமாக அந்த இயந்திரங்கள் இயற்கை அழகுமிகுந்த இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும்போது விரும்புவதில்லை.
இருப்பினும், ஐரோப்பாவின் காற்று நிறைந்த நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், அரசாங்க ஆலோசகர்கள் கடற்கரை காற்று சக்தியை ‘குறுகிய காலப்பகுதியில் அதிக நம்பிக்கையூட்டும் சக்தியின் ஒரே ஊற்றுமூலமாக’ வரவேற்கின்றனர் என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. மறுபட்சத்தில், அதிக செலவுகளை உட்படுத்துவதாக இருந்தாலும், கடற்கரை அமைவைப்பற்றி திறனாய்வு செய்பவர்கள் இந்த விசைச்சக்கரங்களை ஆழ்கடலில் நாட்டுவதை சிபாரிசு செய்கின்றனர். இதில் கனமான இயந்திரத்தை தூக்க பாரந்தூக்கிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக—பலமான கடற்காற்றை அனுகூலப்படுத்தி விசேஷ பாரமெழுப்பிகளை (winches) பயன்படுத்தலாம் என்கின்றனர். (g93 12/8)