உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 12/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • புதிய மற்றும் மீண்டும் வெளிப்பட்டுத் தோன்றும் நோய்கள்
  • போதிய சுண்ணாம்புச் சத்து இல்லை
  • புகைபிடித்தலை ஊக்குவிக்கும் பந்தயங்கள்
  • ஏராளமான பீர்—போதிய உணவு இல்லை
  • நெதர்லாந்து சர்ச்சின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது
  • ஐரோப்பாவில் பாலைவனங்கள்
  • கண்ணில் புகை
  • பைபிள் அறிவில்லாமை அதிகரித்துவருகிறது
  • எவரெஸ்ட் மலையின் மேல் முழுநிறைவான துப்புரவுப் பணி
  • பிரசங்கிப்பதற்கு போப்பின் அழைப்பு
  • சுவாசிக்க உதவும் கருவியோடு நீரில் மூழ்கும்போது ஏற்படும் விபத்துக்கள்
  • நூலகத்தில் திருடர்கள்
  • லட்சக்கணக்கான உயிர்கள் புகையோடு போகின்றன
    விழித்தெழு!—1995
  • மக்கள் ஏன் புகை பிடிக்கிறார்கள், ஏன் அவர்கள் புகை பிடிக்கக்கூடாது?
    விழித்தெழு!—1987
  • உங்கள் நாடு ஒரு குறியிலக்காக உள்ளதா?
    விழித்தெழு!—1990
  • சிகரெட்டுகள்—நீங்கள் அவற்றை மறுக்கிறீர்களா?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 12/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

புதிய மற்றும் மீண்டும் வெளிப்பட்டுத் தோன்றும் நோய்கள்

புதிய நோய்கள் உட்பட நோய்களின் அதிகரிப்பு லட்சக்கணக்கான ஆட்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்கிறது. இதற்கு அதிக தெளிவான உதாரணம் பத்து வருடங்களுக்கு முன்பாக உண்மையில் அறியப்பட்டில்லாத ஒரு நச்சுக்கிருமியினால் உண்டாகும் எய்ட்ஸ் நோயாகும். மற்றொரு நோய் தென்மேற்கு ஐக்கிய மாகாணங்களில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நுரையீரல் கோளாறாகிய ஹான்டாவைரஸ் என்பதாகும். முற்றிலும் புதிய வகையான காலரா ஆசியாவில் தோன்றியிருக்கிறது. தென் அமெரிக்காவில் இரத்தம் வடிதலோடுகூடிய இரண்டு வகையான காய்ச்சல் வந்திருக்கின்றன, இரண்டுமே சாவுக்கேதுவானவையாகும். லத்தீன் அமெரிக்காவில் காலராவும், கென்யாவில் மஞ்சள் தொத்துக் காய்ச்சலும், கோஸ்டா ரிகாவில் கணுதோறும் கடுநோவு உண்டுபண்ணும் கொள்ளைக் காய்ச்சலும், ரஷ்யாவில் அடைப்பான் நோயும், 1993-ல் திடீரென்று அதிகரித்திருக்கும் நன்கு அறியப்பட்டுள்ள தொற்று நோய்களுள் அடங்கும். புதிய மற்றும் மீண்டும் வெளிப்பட்டுத் தோன்றும் நோய்களை அடையாளங்கண்டு சமாளிப்பதற்காக உலகமுழுவதிலுமுள்ள மையங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதாக உலக சுகாதார நிறுவனம் அழைப்புவிடுக்கிறது.

போதிய சுண்ணாம்புச் சத்து இல்லை

“அமெரிக்காவில் வயதுவந்தவர்களில் பாதிப்பேர் போதுமான சுண்ணாம்புச் சத்தைப் பெறாமல் இருப்பதாகவும் அது ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர் மருத்துவ செலவை உட்படுத்துகிற சுலபமாக உடையக்கூடிய எலும்புகள் மற்றும் எலும்புமுறிவுகளின் கொள்ளை நோய்க்குக் காரணமாயிருப்பதாகவும்,” ஐக்கிய மாகாணங்களிலுள்ள தேசிய சுகாதார நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அண்மையில் முடிவுசெய்திருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. 2.5 கோடிக்கும் மேலான ஆட்கள் ஐக்கிய மாகாணங்களில் எலும்பு சம்பந்தப்பட்ட நோயினால் அவதிப்படுவதாகச் சொல்லப்படுகிறது. நாளொன்றுக்குத் தற்போது பரிந்துரை செய்யப்படும் சுண்ணாம்புச் சத்தின் அளவு போதுமானதாக இல்லை என்பதாக குழு தன் அறிக்கையில் விளக்கியிருந்தது. உணவில் மிகச் சிறந்த சுண்ணாம்புச் சத்து, “முக்கியமாக பால் பொருட்களிலும் பச்சைக் காய்கறிகளிலும்,” கிடைப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டார்கள். என்றபோதிலும், “பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் உணவோடுகூட சுண்ணாம்புச் சத்து மாத்திரைகளை அல்லது சுண்ணாம்புச் சத்து மிகுதியாய் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களைச் சாப்பிடுவது அவசியம்,” என்பதாக அவர்கள் மேலுமாகச் சொன்னார்கள்.

புகைபிடித்தலை ஊக்குவிக்கும் பந்தயங்கள்

வழக்கமாக, ஐரோப்பிய தேசங்களே பிரபலமான கார் பந்தயங்களை ஏற்பாடு செய்து நடத்திவந்திருக்கின்றன. என்றபோதிலும் இப்பொழுது இந்த நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஆசிய தேசங்களில் நடத்துவதை விரும்புகிறார்கள். ஏன்? புகையிலை விளம்பரங்கள் மீது ஐரோப்பாவின் கண்டிப்பான விதிமுறைகளே இதற்குக் காரணமாகும். பந்தயங்களுக்கு ஆகும் செலவை ஏற்று அதனுள் விளம்பரம் செய்பவர்கள் முக்கியமாக புகையிலை கம்பெனிகளாகும், ஆகவே பந்தயத்தில் பங்குகொள்ளும் கார்கள் புகையிலை விளம்பரங்களை எடுப்பாக கொண்டிருக்கின்றன. ஜப்பானின் அசாகி ஈவ்னிங் நியூஸ்-ன்படி, ஒரு புகையிலை கம்பெனி, “இரண்டு அணியினருக்கும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிடுகிறது.” ஐரோப்பாவில் பந்தயக் கார்களில் விளம்பரங்கள் அழிக்கப்பட வேண்டும் அல்லது பந்தயத்தின்போது மறைக்கப்பட வேண்டும். சமீபத்தில் பிரான்ஸில் நடைபெறவிருந்த பந்தயம் சிகரெட் புகைப்பதன் பேரில் விளம்பரம் தடைசெய்யப்பட்ட காரணத்துக்காக ரத்துசெய்யப்பட்டது. வயது வந்தவர்களில் சுமார் 60 சதவீதத்தினர் புகைபிடிக்கும் ஆசிய தேசங்கள், பந்தயக் கார்களில் சிகரெட் விளம்பரங்கள் செய்வதற்கு மேம்பட்ட இடங்களாக இப்பொழுது கருதப்படுகின்றன.

ஏராளமான பீர்—போதிய உணவு இல்லை

வெனிசுவேலாவின் செய்தித்தாளாகிய எல் யூனிவர்சல்-படி வெனிசுவேலாவில் ஆறு வயதும் அதற்குக் கீழுமுள்ள 7,26,000 பிள்ளைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக அவர்களுடைய வயதிற்கேற்ற உயரம் இல்லாதிருக்கிறார்கள். அந்த வயது பிள்ளைகளில் அது திடுக்கிடும் 23.8 சதவீதமாக, ஏறக்குறைய 4 பேரில் ஒருவர் என்பதாக உள்ளது. பிள்ளைகளைப் போஷிப்பதற்கு போதிய சத்துள்ள உணவு இல்லாவிட்டாலும், தேசத்தில் ஏராளமான பீர் இருப்பதாக தோன்றுகிறது. லத்தீன் அமெரிக்க தேசங்களில், பீர் நுகர்வில் வெனிசுவேலா முதலிடத்தில் இருப்பதாக எல் யூனிவர்சல் அறிக்கைச் செய்கிறது. 1991-ல் வெனிசுவேலாவில் ஒரு நபர் சராசரியாக 75 லிட்டர் குடித்திருக்கிறார்.

நெதர்லாந்து சர்ச்சின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது

நெதர்லாந்தில் சர்ச் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் குறைந்திருப்பதை அண்மைக்கால சுற்றாய்வு ஒன்று காண்பிக்கிறது. 1950-ல், 4 டச்சுக்காரர்களில் 3 பேர் சர்ச் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பதாக இக்குமினிக்கல் பிரஸ் சர்வீஸ் (EPS) அறிவிப்பு செய்கிறது. 1991-ல் அந்தச் சராசரி 4 பேருக்கு 2-க்கும் குறைவு என்பதாக குறைந்துவிட்டது. வெகு சீக்கிரத்தில் ஒவ்வொரு 4 டச்சுக்காரர்களில் ஒருவர் மாத்திரமே சர்ச் உறுப்பினராக இருப்பார் என்று ஆய்வாளர்கள் முன்னுரைக்கின்றனர். டச்சு மொழி செய்தித்தாளான டிராவ்-ன்படி “சுற்றாய்வு செய்யப்பட்ட 15 தேசங்களில், முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் மட்டுமே சர்ச் உறுப்பினர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையுடையோரின் எண்ணிக்கை நெதர்லாந்தைவிட குறைவாக இருந்தது,” என்பதாக EPS குறிப்பிடுகிறது. என்றபோதிலும், குறைந்துவரும் உறுப்பினர் மத்தியிலும், டச்சுக்காரர்களில் 75 சதவீதத்தினர் இன்னும் கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பதையும் சுற்றாய்வு காண்பித்தது.

ஐரோப்பாவில் பாலைவனங்கள்

பாலைவனமயமாதல், வளமான விவசாய நிலம் பாலைவனமாக மாறுவது “மிகவும் கவலைக்கிடமான உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றாகும்,” என்பதாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் உறுதியாக கூறுகிறது. பொதுவாக இது ஆப்பிரிக்காவோடு சம்பந்தப்பட்டதாக இருப்பினும், பாலைவனமயமாதல் இப்பொழுது ஐரோப்பாவின் 10 சதவீத வேளாண்மை நிலத்தைப் பாதிப்பதாக தி யூரோப்பியன் அறிவிப்பு செய்கிறது. ஸ்பெய்ன் தானே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தேசமாகும். அளவுக்கு அதிகமாக புல்மேய்தலும் தண்ணீர் விரயமும் சேர்ந்து நிலத்தின் வறட்சிக்கும் அரிப்புக்கும் காரணமாக இருந்து விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 150 கோடி அமெரிக்க டாலர் பணச் செலவை உட்படுத்துகிறது என்பதாக அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள். மக்கள் நகரத்துக்குக் குடிபெயர்ந்து செல்வதும், இது ஜனநெரிசலுக்கும் உள்நாட்டில் கலகத்துக்கும் வழிநடத்துவதும் கவலைக்கிடமான விளைவுகளாகும். தெற்கு ஐரோப்பாவுக்கு மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறையை வானிலை ஆய்வு நிபுணர்கள் முன்னறிவிக்கின்றனர்.

கண்ணில் புகை

ஆஸ்திரேலியாவின் தேசிய பார்வை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ராபர்ட் ஆக்ஸ்டின், சிகரெட் புகையிலிருந்து வரும் வேதிப்பொருட்கள் கண்படலங்களை உண்டுபண்ணுகிறது என்பதற்கு மறுக்கமுடியாத அத்தாட்சி இருப்பதாக தெரிவிக்கிறார். புகைபிடிக்காதவர்களைவிட புகைபிடிப்பவர்களுக்குக் கண்படலம் உருவாவதற்கான வாய்ப்பு இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமிருப்பதை ஓர் ஆய்வு காட்டுகிறது. சிகரெட் புகையிலிருந்து வரும் வேதிப்பொருட்கள் முதலில் உடலுக்குள் உறிஞ்சிக்கொள்ளப்பட்டு, பின்னர் அவை கண்ணிலிருந்து தேவைக்கு அதிகமான உப்பையும் நீரையும் வடித்துவிடும் “பம்புகளை” அழித்துவிடுவதற்காக கண்களை நோக்கிச் செல்கின்றன. இதன் விளைவாக கண் செல்களில் ஏற்படும் வீக்கமும் வெடிப்பும் கண்படலங்களை உண்டுபண்ணுகின்றன. “நான் முழுவதுமாக உறுதியாக இருக்கிறேன். சிகரெட் புகையிலுள்ள ஏதோவொன்று பம்புகள் லென்சில் வேலைசெய்வதைத் தடைசெய்கின்றன என்பதைப் பற்றியதில் எந்தச் சந்தேகமுமில்லை,” என்பதாக பேராசிரியர் ஆக்ஸ்டின் விளக்குகிறார்.

பைபிள் அறிவில்லாமை அதிகரித்துவருகிறது

“மேற்கத்திய சமுதாயத்தின் எல்லா பகுதிகளிலும் பைபிள் அறிவில்லாமை அச்சுறுத்தும்விதமாகவும் அதிகரித்தும் வருகிறது,” என்பதாக சர்ச்சுகளின் உலக குழுவின் இக்குமினிக்கல் பிரஸ் சர்வீஸ் அறிவிப்பு செய்கிறது. மேற்கத்திய கிறிஸ்தவர்களில் 85 சதவீதத்தினர் ஒருபோதும் முழு பைபிளை வாசித்தது கிடையாது என்பதாக பைபிள் சொஸையிட்டிகள் மதிப்பிடுகின்றன, ஐக்கிய மாகாணங்களில் வாக்கெடுப்பு ஒன்று சர்ச்சுக்குச் செல்பவர்களில் 12 சதவீதத்தினர் மாத்திரமே பைபிளை ஒழுங்காக வாசிப்பதைக் காட்டுகிறது. இன்றைய பல்கலைக்கழக மாணவர்கள், “பைபிளில் வரும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் இயேசுவின் அப்போஸ்தலருடைய பெயர்களோடு பழக்கப்பட்டவர்களாக இல்லாத காரணத்தால் ஐரோப்பிய இலக்கியத்தின் பண்டைய நூல்களின் பொருளைக் கிரகித்துக்கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர்,” என்பதாக ஸ்காத்லாந்தின் தேசிய பைபிள் சொஸையிட்டியின் பொதுச்செயலர் ஃபெர்கஸ் மேக்டொனால்ட் சொல்கிறார்.

எவரெஸ்ட் மலையின் மேல் முழுநிறைவான துப்புரவுப் பணி

யுனெஸ்கோ மூலங்கள் (ஆங்கிலம்) பத்திரிகையின்படி உலகின் மிக உயரமான சிகரமாக இருப்பதைத் தவிர, எவரெஸ்ட் மலை இப்பொழுது உலகின் “மிக உயரமான குப்பைக்கூளவெளி” என்பதாகவும் அறியப்பட்டிருக்கிறது. கடந்த 40 வருடங்களில், மலையேறுபவர்கள் சுமார் 20 டன் ஆக்ஸிஜன் புட்டிகள், கூடாரங்கள், துயிற்பைகள் மற்றும் உணவுப் பொட்டல உறைகள் ஆகியவற்றை எவரெஸ்டில் எல்லா இடங்களிலும் எறிந்திருக்கிறார்கள். மெல்லிய காகிதப் பேப்பர்கள் பறந்துகொண்டிருக்கும் கீழ்ப்பகுதிகளின் சரிவுகளில், எவரெஸ்ட் அடிவார முகாமுக்குப் போகிற வழி இப்பொழுது “டாய்லெட் பேப்பர் தடம் என்று அறியப்படுகிறது.” மலையின் உயரத்தில் மேலே குப்பைக்கூளங்களின் அளவு தடுமாற வைக்கிறது. “மனிதன் குந்தகம் செய்வதற்கு அப்பாற்பட்ட தூய்மையான வனாந்தரம் என்று எவரெஸ்டைப் பற்றி கற்பனை செய்துகொண்டிருப்பவர்களுக்கு இந்தக் காட்சிகளின் புகைப்படங்கள் அதிர்ச்சியாக இருக்கின்றன,” என்பதாக யுனெஸ்கோ மூலங்கள் எழுதுகிறது. மலையை இந்தக் கண்றாவியிலிருந்து சுத்தம்செய்ய நேப்பாள அரசாங்கம் இந்த ஆண்டு பல்வேறு “முழு நிறைவான துப்புரவு” பணிக்குழுக்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

பிரசங்கிப்பதற்கு போப்பின் அழைப்பு

இந்த ஆண்டின் ஆரம்பத்தில், போப் ஜான் பால் II, இத்தாலியிலிருந்த கத்தோலிக்கரின் ஒரு தொகுதியிடம், மக்களிடத்தில் நேரடியாக சுவிசேஷத்தைக் கொண்டுசெல்வதற்கு நேரம் வந்துவிட்டது என்பதாக சொன்னார். ஆஸ்திரேலியாவிலுள்ள கத்தோலிக்கர்கள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்? “கத்தோலிக்கர்கள் பிரசங்கிக்கும்படியான போப்பின் அழைப்புக்குச் செவிகொடுக்க மாட்டார்கள்,” என்பது ஆஸ்திரேலிய செய்தித்தாளாகிய இலவாரா மெர்குரியின் தலைப்புச் செய்தியாக இருந்தது. அந்தத் தேசத்திலுள்ள கத்தோலிக்கர்கள் “தங்களுடைய விசுவாசத்துக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய அணுகுமுறையை ஏற்க ஆர்வமுள்ளவர்களாக இல்லை,” என்பதாக அது குறிப்பிட்டது. பிரசங்கிக்கும்படியான போப்பின் அழைப்பு எல்லா கத்தோலிக்கர்களுக்குமா அல்லது இத்தாலியிலுள்ளவர்களுக்கு மட்டுமா விடுக்கப்பட்டது என்பதைக் குறித்து தனக்கு நிச்சயமாக தெரியவில்லை என்பதாக உள்ளூர் கத்தோலிக்க குரு ஷான் கெல்லன் சொன்னார். “தங்களுக்குத் தெரிந்திருக்கும் சுவிசேஷத்தை சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்படியாக நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். அது வீடு வீடாகச் செல்வதை அர்த்தப்படுத்துமா என்பதைக் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.” உள்ளூர் நகர சட்ட மன்ற உறுப்பினர் சற்று குறைவாக மழுப்புகிற ஒரு பதிலைக் கொடுத்தார். அவர் சொன்னார்: சுவிசேஷ வேலை “கத்தோலிக்க மனநிலையின் ஒரு பாகமாக இல்லை.”

சுவாசிக்க உதவும் கருவியோடு நீரில் மூழ்கும்போது ஏற்படும் விபத்துக்கள்

ஐக்கிய மாகாணங்களில் “சுவாசிக்க உதவும் கருவியோடு தண்ணீரில் மூழ்கும்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 பேர் உயிரிழக்கிறார்கள்,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிவிப்பு செய்கிறது. உயரத்திலிருந்து குதிப்பது, விமானங்கள் ஓட்டுவது போன்ற ஆபத்தான மற்ற நடவடிக்கைகளுக்கு இருப்பது போல சுவாசிக்க உதவும் கருவியோடு நீரில் மூழ்கும் தொழிலைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இல்லை என்பதாக அரசாங்க அதிகாரிகள் ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே 30 முதல் 50 லட்சம் வரையாக சான்றனுமதி பெற்ற மூழ்கிகள் இருக்கின்றனர். சுவாசிக்க உதவும் கருவியைச் செய்யும் கடைகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,00,000-லிருந்து 4,00,000 பேருக்குச் சான்றனுமதிகளை வழங்குகின்றன. “மூழ்கிகள் விதிமுறைகளை எப்போதும் பின்பற்றாமல் இருப்பதே” பிரச்சினையாக இருக்கிறது என்பதாக ஒரு கடைக்காரர் விளக்குகிறார். மூழ்குவதற்குக் கற்றுக்கொடுக்கும் தேர்ச்சிப்பெற்ற போதனையாளர்களின் சங்கத்தைச் சேர்ந்த அல் ஹார்ன்ஸ்பி மூழ்குபவர்கள் உட்பட்ட விபத்துக்கள் உண்மையில் குறைந்துவருவதாக சொல்கிறார். டைம்ஸ் அறிவிக்கிறது: “1970-களின் மத்திபத்தில், நீரில் மூழ்கும் ஒவ்வொரு 1,00,000 பேருக்கும் 12 பேர் மரித்தனர், இப்பொழுது ஒவ்வொரு 1,00,000 பேருக்கு 2-க்கும் சற்று அதிகமானோரே மரிக்கின்றனர்.”

நூலகத்தில் திருடர்கள்

சமீபத்தில் அனைத்து நூலகங்களும் ரோமின் கலாச்சார நிறுவனங்களின் சுவடிக் காப்பவர்களின் கூட்டிணைவும் சேர்ந்து ஓர் ஆய்வை நடத்தின. ஆய்வாளர்களின்படி, இத்தாலியிலுள்ள வெகு சில நூலகங்கள் மாத்திரமே தற்போது திருட்டுக்கு எதிரான திறமைவாய்ந்த எலக்ட்ரானிக் அமைப்புகளால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இத்தாலிய செய்தித்தாளாகிய லா ரிப்பப்ளிக்காவின்படி இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 புத்தகங்கள் சீர்செய்யமுடியாதபடி சேதப்படுத்தப்படுகின்றன அல்லது திருடப்படுகின்றன. இனிமேலும் சந்தையில் பெறமுடியாத புத்தகங்களைத் திருடுவது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களும் குற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்