உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 2/8 பக். 6-8
  • பெற்றோர் கடத்தும்போது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெற்றோர் கடத்தும்போது
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “மனதோடு சம்பந்தப்பட்ட வன்முறை”
  • மற்ற காரணங்கள்
  • பிள்ளை பராமரிப்பு—சமநிலையான கருத்து
    விழித்தெழு!—1997
  • பிள்ளை பராமரிப்பு—மதமும் சட்டமும்
    விழித்தெழு!—1997
  • உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது எப்படி?
    விழித்தெழு!—2007
  • குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்
    குடும்ப வாழ்க்கை
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 2/8 பக். 6-8

பெற்றோர் கடத்தும்போது

தன் கணவனின் கைகளில் வருடக்கணக்கில் கொடூரமாக அடியையும் உதையையும், கடுமையான உணர்ச்சி சம்பந்தமான துர்ப்பிரயோகத்தையும் அனுபவித்துவிட்டு, இறுதியில் வேறொரு பெண்ணுக்காக கைவிடப்பட்ட ஷெரல், மணவிலக்கு வேண்டி விண்ணப்பித்தாள். a தன்னுடைய பிள்ளைகளை வளர்ப்பதற்கான முழு பொறுப்பை நீதிமன்றம் அவளுக்கு அளித்தது. சிதறிப்போன தனது வாழ்க்கையை அவள் ஒன்று சேர்த்து சாதாரண நிலைக்குக் கொண்டுவரத் தொடங்குகையில், மெல்லமெல்ல அமைதி நிலவியது. திடீரென ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது அவளுடைய முன்னாள் கணவனுடையதுதான். அவன் சொன்னான்: “மறுபடியும் உன் பிள்ளங்கள நீ பாக்க விரும்பினா, மீண்டும் என்னை கல்யாணம் செய்துகொள்ள நீ சம்மதிக்கணும்”! ஒருமாத விடுப்பில் அப்பாவுடைய சொந்த நாட்டிற்குச் சென்ற பிள்ளைகள் தங்களுடைய அம்மாவிடம் திரும்பிப் போகாதபடி தடைசெய்யப்பட்டு, ஷெரலின் பிள்ளைகள் கடத்தப்பட்டனர்.

மனக்கலக்கமடைந்த ஷெரல், வெளிநாட்டில் உள்ள தன்னுடைய பிள்ளைகளைத் திரும்பப் பெறுவதற்காக, ஐ.மா. வெளிநாட்டுத் துறைக்கு விண்ணப்பித்தாள். ஆனால் சட்டப்படி அதற்கு எந்தவொரு வழியும் இல்லாமல் போயிற்று. வருடக்கணக்காக அடி உதை வாங்கிக்கொண்டிருந்த அனுபவத்தின்போது இருந்த, முழுநம்பிக்கையையும் இழந்த அந்த உணர்ச்சிகள் அவளுக்குத் திரும்பவந்தன. “இது அநேகமாக பழைய நிலைமையேதான்,” அவள் விவரிக்கிறாள். “இதை எப்படி நிறுத்துவது என்று உங்களுக்குத் தெரியவில்லை.”

“மனதோடு சம்பந்தப்பட்ட வன்முறை”

பெற்றோரால் கடத்திச் செல்லப்படுவது, பெற்றோர் ஒருவருக்கும் ஒரு பிள்ளைக்கும் எதிராக செய்யப்பட்ட, “மனதோடு சம்பந்தப்பட்ட வன்முறையின் ஒரு உச்சக்கட்டமான செயல்” என்பதாக அழைக்கப்படுகிறது. “இவ்வாறு கடத்திச் செல்கிற அநேக பெற்றோர் பழிவாங்குகின்றனர், முடிந்தளவு மகா மோசமான வழியிலும், பழிவாங்க எளிதில் ஆளாக்கும் விஷயத்திலும் அவர்கள் பழிவாங்குகின்றனர். [பிள்ளைகளை வளர்க்கும் சட்டப்படியான பொறுப்பைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு] அதுதான்—அவர்களுடைய நகைகள் அவர்களுடைய பிள்ளைகள்தான்—மிகவும் நெருங்கிய விஷயம். . . . பிள்ளையைப்பற்றி அவர்கள் யோசிப்பதேயில்லை, தங்களைப் பற்றியும்—பழிவாங்குதல்—பழிவாங்குவதைப் பற்றியும்தான் சிந்தனையெல்லாம்,” என்று அத்தகைய கடத்தல்காரர்களைப்பற்றி, சைல்ட் ஃபைன்ட் ஆஃப் அமெரிக்கா, இங்க்., என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநராக இருக்கும் கேரலின் ஸாக் சொன்னார்.

பிள்ளை ஒன்று கடத்தப்படுவதானது, அதன் பெற்றோரை சீற்றம், இழப்பு, நம்பிக்கையின்மை, கவலை போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக்குவது மட்டுமல்லாமல், அநேகமாக எப்பொழுதும் அந்தப் பிள்ளையின் மனநலத்தை ஓரளவு சேதப்படுத்துகிறது. சில கடத்தல்களில் ஒரு பிள்ளை தனது நெருங்கிய உறவினர்களுக்கு ஒளிந்தோடி, எப்பொழுதுமே சுற்றித் திரிந்துகொண்டே வாழவேண்டி இருக்கலாம். மேலும் அது அடுத்த பெற்றோரைப்பற்றி திரித்துக்கூறப்படும் கட்டுக்கதைகளையும் பொய்களையும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். அந்த அனுபவம், தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், தூக்கமின்மை, விடாது ஒட்டிக்கொள்ளும் பழக்கம், ஜன்னல்களையும் கதவுகளையும் பார்த்து பயப்படுதல், மட்டுக்குமீறி பயப்படுதல் போன்ற அடுத்தடுத்த கோளாறுகளை ஏற்படுத்தலாம். அது வளர்ந்த பிள்ளைகளுக்கும்கூட துக்கத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

ஐக்கிய மாகாணங்களில், பெற்றோர் ஒருவர் பொறுப்பு ஆணையை மீறி பிள்ளையை எடுத்துக்கொள்ளும் அல்லது அனுமதித்த காலவரம்புக்குள் பிள்ளையைத் திரும்ப ஒப்படைக்க மறுக்கும், 3,50,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் 1,00,000-க்கும் அதிகமானவற்றில், அவனையோ அவளையோ மற்ற பெற்றோரிலிருந்து நிரந்தரமாக ஒளித்துவைக்கும் நோக்கோடு குடும்ப அங்கத்தினர் ஒருவர் மறைத்து வைத்தார். சிலர் மாநிலத்தைவிட்டு அல்லது நாட்டைவிட்டே கடத்திச் செல்லப்பட்டனர்.

மற்ற காரணங்கள்

சமரசம் செய்துகொள்வதற்கான ஆசை அல்லது பழிவாங்கும் மனநிலைதான் எப்பொழுதும் தங்களுடைய பிள்ளைகளைக் கடத்திக்கொண்டு செல்லும்படி பெற்றோரைத் தூண்டிவிடுகிறதா? தாங்கள் எங்கு பிள்ளை வளர்க்கும் பொறுப்பு வழக்கில் தோற்றுவிடுவார்களோ என்று பயந்து, அந்தப் “பயத்தினால் முந்தியடித்துக்கொண்டு கடத்திச்செல்கின்றனர்,” என்று சைல்ட் ஃபைன்டைச் சேர்ந்த மைக்கேல் நிப்ஃபிங் விவரிக்கிறார். அல்லது பொறுப்பு யாருக்கு என்பது தீர்மானிக்கப்பட்டு, பெற்றோர் ஒருவர் பிள்ளைகளை வந்து பார்ப்பதற்கான மற்றொரு பெற்றோரின் உரிமைகளை மறுத்துக் கொண்டிருக்கும்போது பெருத்த ஏமாற்றம் ஏற்படுகிறது. நிப்ஃபிங் விவரிக்கிறார்: “உங்களுடைய பிள்ளையை நீங்கள் நேசிக்கிறீர்கள், ஆனால் பிள்ளையைப் பார்ப்பதற்கு நீங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியானால் பிள்ளையைத் திருட்டுத்தனமாக தூக்கிக்கொண்டு ஓடுவதைத் தவிர வேறு வழியேயில்லை என்றுதான் உங்களுக்கு நினைக்கத் தோன்றும்.”

‘ஒரு பிள்ளையைக் கடத்திக்கொண்டு போவதன் பின்விளைவுகளைப் பற்றி பெரும்பாலான ஆட்கள் நினைத்துப் பார்ப்பதேயில்லை. அவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை வரும் என்பதை அவர்கள் யோசிப்பது கிடையாது. அவர்களைக் கைது செய்வதற்கு பிடிவாரண்டு அனுப்பப்படுகிறது. பிரச்சினை தங்களுக்கும் அந்த மற்ற பெற்றோருக்கும் இடையில் மட்டும்தான் என்று அவர்கள் நினைக்கின்றனர். போலீஸ் அதில் தலையிடும் என்று அவர்கள் நினைப்பதில்லை. இப்போது அவர்கள் சமாளிக்கவேண்டிய ஒரு குற்றச்செயல் வழக்கும், பிள்ளையின் பொறுப்பு யாருக்குக் கிடைக்கும் என்பதில் உரிமையியல் பிரச்சினையும் இருப்பதால் அவர்கள் ஒரு வக்கீலுக்கு பதிலாக இரண்டு வக்கீல்களை வைக்கவேண்டும்,’ என்றெல்லாம் அவர் மேலும் கூறுகிறார்.

தங்களுடைய பிள்ளை மற்ற பெற்றோரால் கொடுமைப்படுத்தப்படுகிறது என்று சில பெற்றோர் சந்தேகிக்கலாம். சட்டம் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால், என்ன செய்வதென்றே புரியாமலிருக்கும் பெற்றோர் ஒருவர் பின்விளைவுகளையும் பொருட்படுத்தாமல் செயல்படலாம். ஹிலரி மார்கன் என்ற ஐந்து வயது சிறுமியின் விஷயத்தில் இதுதான் தெரியவந்தது. மோசமாக நடத்தப்படுவதற்கான தடயம் “தெளிவாகவும் நம்பகரமானதாகவும்,” இருப்பதாகச் சுட்டிக்காட்டி, ஹிலரியை அவளுடைய அப்பா வந்து பார்ப்பதை நிறுத்தவேண்டும் என்பதாக குழந்தை மனநோய் மருத்துவர் ஒருவர் ஆலோசனை கூறினார். இருந்தபோதிலும், மோசமாக நடத்தப்பட்டது என்பது ஒன்றும் நிச்சயமில்லை என்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்து, மேற்பார்வை இல்லாத சந்திப்புகளை சிபாரிசு செய்தது. ஹிலரியின் அம்மா, டாக்டர் எலிசபெத் மார்கன், நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தனது மகளை ஒளித்துவைத்துவிட்டார். கடத்திக்கொண்டு பாதுகாப்புக்காக ஓடிவிடும் அப்படிப்பட்ட பெற்றோர் ஒருவர்மீது பொதுமக்களின் அனுதாபம் அதிகம் தூண்டிவிடப்படுகிறது.

எலிசபெத் மார்கனின் விஷயத்தில், தனது மருத்துவத் தொழிலை இழந்தார், இரண்டு வருடங்களைச் சிறையில் கழித்தார். மேலும் மருத்துவத்திற்கும் கோர்ட்டுக்கும் செலவு செய்ததில், மொத்தம் 15 லட்சம் டாலருக்கும் அதிகமான கடன் சேர்ந்துவிட்டது. “மோசமாக நடத்தப்படுவதை நான் நிறுத்தாமல் விட்டுவிட்டிருந்தால் இப்போது என் மகளுக்கு நிரந்தரமாக பைத்தியம் பிடித்திருக்கும் என்று நிபுணர்கள் என்னிடம் சொல்கிறார்கள். . . . நீதிமன்றம் செய்ய மறுத்த வேலையை—என் பிள்ளையைக் காப்பாற்றுவதை—நான் செய்ய வேண்டியதாயிற்று,” என்று யு.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகையிடம் அவர் விவரித்தார்.

பெற்றோரால் கடத்தப்படுவதைப்பற்றி க்ரைஃப் மற்றும் ஹீகர் என்ற ஆராய்ச்சியாளர்கள் பின்வருமாறு குறிப்பிட்டது உண்மையேதான்: “இவை கடும் சிக்கலான சம்பவங்களாக இருக்கின்றன. ஆழமான குளத்திலுள்ள தண்ணீரைப்போல, கோணத்தைப்பொருத்து சற்று வித்தியாசமாகக் காணப்படுகின்றன. ஒருவர் தண்ணீருக்குள் உற்று நோக்கும் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதியதாக ஒன்று தென்படுகிறது.”—பெற்றோர் கடத்தும்போது—தலைப்புச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குடும்பங்கள் (ஆங்கிலம்).

பெற்றோர் ஒருவராலோ அல்லது அந்நியராலோ கடத்தப்படும் பிள்ளைகள் மட்டுமல்லாமல், உலக முழுவதிலும் மற்றபடி காணாமல்போகும் லட்சக்கணக்கான பிள்ளைகளுள்—வேண்டாத பிள்ளைகளும் (throwaways) ஓடிப்போகிற பிள்ளைகளும் (runaways)—இருக்கின்றனர். அவர்கள் யார், அவர்களுக்கு என்ன நேரிடுகிறது?

[அடிக்குறிப்புகள்]

a பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

காணாமல்போகும் அநேக பிள்ளைகள் பெற்றோர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்