எமது வாசகரிடமிருந்து
மோசமான நடத்தைகள் எனக்கு நினைவிருக்கும்வரை, நான் மோசமான நடத்தையைக் காண்பித்திருக்கிறேன். “உங்களுக்கு நன்றி,” “தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்,” மற்றும் “நான் வருந்துகிறேன்,” போன்ற மரியாதையும் கரிசனையுமுள்ள வார்த்தைகளைச் சொல்ல தவறியதற்காக நான் பெருமையாக இருந்த சமயங்களும்கூட இருந்திருக்கின்றன. பின்னர் “நன்னடத்தைகள் சீரழிவு” கட்டுரையையும் அதில் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள பைபிள் பகுதிகளையும் வாசித்தேன். (ஜூலை 22, 1994) தமக்குக் கீழிருக்கும் ஆட்களோடு செயல்தொடர்பு கொள்ளும்போது கடவுள் எப்போதும் நன்னடத்தை உடையவராக தம்முடைய வேண்டுகோளுடன் “தயவுசெய்து” என்பதை சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நான் கற்றறிந்தேன். இதை பைபிளில் கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். கடவுளைப் போலிருக்க முயற்சிசெய்வதற்கு இது என்னை தூண்டியிருக்கிறது. உங்களுக்குக் கோடான கோடி நன்றி.
எம். ஈ. ஜே., நைஜீரியா
கட்டுரையை நான் உண்மையில் போற்றினேன். மற்றவர்களின் உரிமைக்கும் சொத்துக்கும் மதிப்புக்காண்பிப்பது நன்னடத்தையோடு நெருக்கமாக தொடர்புடையதாகும். சில சமயங்களில் உங்கள் நண்பர்களை வீட்டுக்கு அழைக்கும்போது, அவர்களுடைய பிள்ளைகள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் செய்யலாம் என்று நினைத்து—பல்வேறு அறைகளுக்குள் சென்று, மேசை இழுப்பறைகளையும் குளிர்ப்பதனப் பெட்டிகள் போன்றவற்றையும் துருவி ஆராய்கிறார்கள்.
ஜி. டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்
கட்டுரையிலிருந்த ஒவ்வொரு வாக்கியமும் முக்கியமாக இருந்தது. என்னுடைய இரண்டு பருவ வயது பையன்களுக்கும் கற்பிப்பதற்கு எனக்குத் தேவையாக இருந்தது சரியாக இதுவே. நான் என்னுடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்காத நன்னடத்தைப் பற்றிய அநேக விவரங்கள் இருப்பதைக் கற்றுக்கொண்டேன். இப்பொழுது எனக்கு இந்த அழகான விவரங்களும் அவற்றை எப்படி பொருத்துவது என்பதும் தெரியும்.
பி. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
மாஸ்கோவின் சுரங்கப்பாதைகள் அண்மையில் “மாஸ்கோவின் பளபளப்பான நிலத்தடி அரண்மனைகள்,” கட்டுரையை வாசித்தேன். (ஜூன் 22, 1994) வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய நான் எப்பொழுதும் விரும்பியிருக்கிறேன், இப்படிப்பட்ட கட்டுரைகளை வாசிப்பது, நான் அங்கிருப்பதைப் போன்றே என்னை உணரச்செய்வதைக் காண்கிறேன்.
ஜே. ஹெச்., நியூ ஜீலாந்து
அண்மையில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டுக்குச் செல்வதற்கு நான் மாஸ்கோ சென்றிருந்தேன். மெட்ரோவில் பயணம்செய்வதில் அதிக நேரத்தைச் செலவிட்டேன். அந்தச் சமயத்தில் உலகிலேயே மிக அழகானதும் முக்கியமானதுமான ஒரு சுரங்கப்பாதையை நான் பார்த்துக்கொண்டிருப்பதை உணரவில்லை. ஆகவே நான் உண்மையில் கட்டுரையை அனுபவித்து வாசித்தேன்.
பி. எம்., பின்லாந்து
தொலைவிலிருந்து பதுங்கி சுடுவதா? “ஓர் இராணுவ வரலாற்று ஆசிரியனாக எனது பிரதிபலிப்புகள்,” கட்டுரையில் இரண்டாம் உலகப் போருக்கு முடிவில் பாரிஸ் விடுதலை பெற்றதைத் தொடர்ந்து அதற்குள் பிரவேசித்ததாக எழுத்தாளர் விவரிக்கிறார். (ஆகஸ்ட் 8, 1993) தொலைவிலிருந்து பதுங்கிக்கொண்டு சுடும் ஜெர்மானியரால் அவர் சுடப்பட்டதாகவும் மறைவிடம் தேடி அவர் பலமுறை தன்னுடைய ஜீப்பை விட்டுச்சென்றதாகவும் குறிப்பிடுகிறார்—அதுவும் பாரிஸிலுள்ள மிகப் பிரபலமான ஒரு தெருவில்! பாரீஸ் ஒருபோதும் “விடுதலை”யடையவில்லை, ஆனால் ஆணைக்கு எதிராக செயல்பட்ட ஜெர்மன் சேனைத் தலைவர் ஃபான் கோல்டிட்ஸ் என்பவரால் சண்டையில்லாமல் சரணடைந்தது.
எ. டபிள்யூ., இத்தாலி
எழுத்தாளர் தன் சொந்த தனிப்பட்ட அனுபவத்தை எடுத்துரைத்திருக்கிறார், இவை நேரில் கண்ட மற்ற சாட்சிகளாலும் சரித்திராசிரியர்களாலும் உறுதிசெய்யப்பட்ட பழைய நினைவுகள். உதாரணமாக, இராணுவ சரித்திராசிரியர் மார்டின் ப்ளுமென்சன் எழுதிய “விடுதலை” (ஆங்கிலம்) புத்தகம், பாரிஸை தரைமட்டமாக்கிப் போடும்படியாக ஹிட்லர் பிறப்பித்த உத்தரவுகளை ஃபான் கோல்டிட்ஸ் எதிர்த்தபோதிலும், அவர் சரணடைவதற்கு முன்னிருந்த நாட்களில் ஜெர்மானிய போர்வீரர்களுக்கும் படையெடுத்துவந்த பிரெஞ்சு மற்றும் ஐ.மா. இராணுவ படைகளுக்கும் இடையே கடுமையாக போர் நடந்தது என்பதாக ஒப்புக்கொள்கிறது. ஷான்சலீஸா—“பாரிஸிலுள்ள மிகப் பிரபலமான ஒரு தெருவில்”—போரைப் பற்றிய விஷயமும்கூட மற்ற சரித்திராசிரியர்களால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஜான் கீகன் எழுதிய “சிக்ஸ் ஆர்மீஸ் இன் நார்மண்டி—ஃபிரம் டி-டே டு தி லிபரேஷன் ஆஃப் பாரிஸ்” என்பதைப் பார்க்கவும்.—ED.
மருத்துவ சர்ச்சை எனக்கு 12 வயதாகிறது. “மந்திரவாதிகளாலுமல்ல கடவுட்களாலுமல்ல,” கட்டுரையை நான் வாசித்தேன். (மே 8, 1994) உண்மையில் என்னைப்போல இளம் பெண்ணாக இருக்கும் ஒருத்தி மருத்துவமனை மருத்துவர்களையும் அறுவை மருத்துவர்களையும் தைரியமாக எதிர்ப்பட்டு ‘இரத்தத்துக்கு விலகியிருந்ததைக்’ கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.—அப்போஸ்தலர் 15:20.
பி. எம். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு 19 வயதாகிறது. மெர்சி யூவாசியின் அனுபவத்தை வாசிப்பதன் மூலம் என்னுடைய விசுவாசம் எவ்வளவு பலப்பட்டிருக்கிறது! அது யெகோவாவுக்கு உண்மை தவறாதிருப்பது ஒருவருடைய வயதை அல்ல, அனால் அவரிடமாக உள்ள ஆழமான அன்பையே பொருத்திருக்கிறது என்ற உண்மையை உணரும்படிச்செய்தது. யெகோவாவிடமாக என்னுடைய உண்மை தவறாமையைக் காத்துக்கொள்ள முன்னொருபோதும் இருந்ததைவிட அதிக திடதீர்மானமுள்ளவளாக என்னை ஆக்கியிருக்கிறது.
எஸ். எம்., தென் ஆப்பிரிக்கா