தூங்கிவழியும் டிரைவரே விழிப்பாயிருங்கள்
அது ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய மாகாணங்களில் 6,00,000 விபத்துக்களையும் 12,000 நெடுஞ்சாலை சாவுகளையும் உண்டாக்குகிறது. அது, சமீப வருடங்களில் நியூ யார்க் மாநிலத்தின் விரைவுச் சாலையில் ஏற்பட்ட 40 சதவீத சாவுக்கேதுவான மோதல்களுக்கு காரணமாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த எல்லா சேதமும், ஓட்டும்போது போதைப்பொருட்கள் அல்லது மதுபான செல்வாக்கின்கீழ் இருந்ததால் அல்ல, ஆனால் தூங்கிவழிந்ததினால் ஏற்பட்டதாகும். இந்தப் பிரச்சினை மூச்சின்மை (apnea), தூக்கமின்மை (insomnia) போன்ற தூக்க கோளாறுகளில் அல்ல, ஆனால் 1990-களின் வாழ்க்கை பாணியில்தான் வேரூன்றியிருக்கிறது என்பதாக சில நிபுணர்கள் கருதுகிறார்கள். “அமெரிக்கர்கள் ஒருசில வருடங்களுக்கு முன்பாக இருந்ததைவிட அதிகளவில் தூக்கமிழந்தவர்களாக இருக்கிறார்கள்,” என்பதாக சொல்கிறார் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக தூக்க ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் டிமென்ட். அமெரிக்கன் ஆட்டோமொபைல் அசோஸியேஷனின் போக்குவரத்து பாதுகாப்பு செயற்குழு இயக்குநர் டேவ் வில்லிஸ் இவ்வாறு கூறுகிறார்: “மக்கள் மெழுகுவர்த்தியின் இரண்டுபக்கத்தையும் எரிக்கிறார்கள்.”
தூங்கிவழியும் அநேக டிரைவர்கள் தங்களுக்கு அறியாமலேயே மாறிமாறி தூங்கிவிழிக்கின்றனர் என்ற உண்மையே விசேஷமாக தடுமாறவைப்பதாக இருக்கிறது. “நுண்தூக்கம்” (microsleep) என்பதாக நிபுணர்கள் அழைக்கிற தூக்கம், சில வினாடிகளுக்குத்தான் இருக்கக்கூடும், ஆனால் சேர்ந்துகொண்டே வருகிற விளைவுகள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கக்கூடும். “விரைவுச் சாலையிலுள்ள 17-ம் நம்பர் பக்கப்பாதையைக் கடந்து சென்றது எனக்கு நினைவிருக்கும், பின்பு 21-ம் நம்பர் பக்கப்பாதைக்கான அடையாளங்களைப் பார்ப்பேன். இடைப்பட்ட பக்கப்பாதைகளைக் கடந்தபோது நான் எங்கிருந்தேன்? என்பதாக நான் நினைப்பேன். நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்தது ஒரு அற்புதம் என்பதாக உணருகிறீர்கள்,” என்று டிரைவர் ஒருவர் விவரிக்கிறார்.
ஓட்டும்போது ஏற்படும் அசதியை எதிர்த்துப் போராடுவதற்கு மிகச் சிறந்த வழி, நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பதேயாகும். தேவைப்படுவதெல்லாம், பத்திரமான இடத்தில் 10 முதல் 20 நிமிடம் சிறுதூக்கம் போடுவதேயாகும். என்றபோதிலும் ஒரு பயணத்திற்காக திட்டமிடும்போது நடைமுறையில் ஆகிறகாரியத்தை சிந்தித்துப்பார்ப்பது நல்லது. நீங்கள் சமாளிக்கக்கூடியதையும்விட அதிகமான தூரம் ஓட்ட முயற்சி செய்யாதேயுங்கள். அதோடு, இரவுநேரத்தில் நெடுந்தூரம் ஓட்டுவதைத் தவிர்ப்பதன் மூலமும் ஒரு பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக தாராளமாக ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலமும் உங்களுடைய உடலின் உட்புற கடிகாரத்திற்கு மதிப்பு கொடுங்கள். இவையனைத்தையும்விட, தூங்கிவழியும்போது ஓட்டும் ஆபத்தைக் குறைவாக மதிப்பிடாதேயுங்கள். நியூ யார்க் போக்குவரவு பாதுகாப்பு மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த மார்க் ஹேமர் சொல்கிறார்: “ஐந்து முறை குடித்துவிட்டு கார் ஓட்டுவது எந்தளவுக்கு கேடோ அந்தளவுக்கு [அது] கேடானது.”