உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 8/8 பக். 3
  • ஒரு புத்தகம்—உலகை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு புத்தகம்—உலகை
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • பரிணாமம்—ஏன் கருத்து வேறுபாடுகள்?
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • பரிணாமக் கொள்கையின் விளைவுகள்
    விழித்தெழு!—1995
  • தேவபக்தியில்லாத ஓர் உலகில் சத்தியத்தின் சார்பாக பேசுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • பரிணாமம் விசாரணையில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 8/8 பக். 3

ஒரு புத்தகம்—உலகை

மலைக்கவைக்கிறது

அந்தப் புத்தகம்: உயிரின தோற்றம் (ஆங்கிலம்). “பைபிளுக்கு அடுத்தாற்போல், வேறெந்தப் புத்தகமும் இதைப்போல் செல்வாக்கு செலுத்துவதாய் இருந்ததில்லை,” என்று சொன்னார் மானிடவியல் வல்லுனர் ஆஷ்லி மாண்டகு.

அதன் ஆசிரியர்: சார்லஸ் டார்வின். இவர், “இங்கிலாந்தில் உள்ளவர்களிலேயே மிகவும் அபாயகரமான ஆள்,” என்று அப்போது சிலரால் அழைக்கப்பட்டார்.

அதன் பொருள்: பரிணாமக் கொள்கை. “இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு,” “தக்கவை வாழ்தல்,” “பரிணாமம்” போன்ற வார்த்தைகள் தற்போது நன்கு அங்கீகாரத்தோடு ஏற்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தக் கொள்கை உங்களுடைய மொழியில் இந்த வார்த்தைகளைச் சேர்த்தது மட்டுமல்லாமல், வேறு வழிகளிலும் உங்களுடைய வாழ்க்கையை பாதித்திருக்கிறதா?

சார்லஸ் டார்வினால் 1859-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகமாகிய உயிரின தோற்றம், அறிவியல் மற்றும் மத வட்டாரங்களில் காரசாரமான விவாதத்தைப் பற்றவைத்திருக்கிறது. a இந்த விவாதம் பொருளாதார மற்றும் சமூகத் துறைகளையும் பாதித்து, சுமார் 136 வருடங்களுக்குப் பிறகு, இதுநாள் வரைக்கும் தொடர்ந்திருக்கிறது.

எ ஸ்டோரி அவுட்லைன் ஆஃப் எவலூஷன் என்ற தனது புத்தகத்தில், சி. டபிள்யூ. க்ரைம்ஸ், டார்வினின் உயிரின தோற்றம் என்ற புத்தகத்தைப் பற்றி எழுதியதாவது: “இதுவரை அச்சடிக்கப்பட்ட புத்தகங்களிலேயே எந்தப் புத்தகமும் சிந்திக்கும் ஆட்கள் மத்தியில் இந்தளவு கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது கிடையாது. மனித வரலாற்றில் பரிணாமத்தைப்போல வேறெந்த விஷயமும், பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு சவால்விட்டது கிடையாது, இயற்கையின் உலகில் புரட்சி ஏற்படுத்தியது கிடையாது, மற்றும் மனித எண்ணங்களை உருவாக்கி உறுதிப்படுத்தியது கிடையாது.”

பரிணாமக் கொள்கையை டார்வின் தோற்றுவிக்கவில்லை என்பது உண்மையே; இந்தக் கருத்து பூர்வீக கிரீஸில் தோன்றியதைக் காணலாம். டார்வினுக்கு 18-ம் நூற்றாண்டு முன்னோடிகளும் அநேகர் இருந்திருக்கின்றனர். இவர்கள் உயிரின தோற்றம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு வழிவகுத்து வைத்தனர்.

இருந்தபோதிலும், நவீன நாளைய பரிணாம கருத்துக்கு அடித்தளமாக விளங்கியது டார்வினுடைய புத்தகமே ஆகும். இது உலகை மலைக்கவைத்தது, உண்மையில் அதிர்ச்சியுறச் செய்தது. ஏனென்றால், அவருடைய பரிணாமக் கொள்கை உயிரியலில் ஒரு திடீர் புரட்சியையே ஏற்படுத்தியது. சமுதாயத்தின்—மதம், அறிவியல், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கை, வரலாறு, எதிர்காலத்தைப் பற்றிய நோக்குநிலை ஆகிய அனைத்தின்—அடித்தளங்களையே ஒரு புயலைப்போல் தாக்கிற்று.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இப்போது இந்தக் கொள்கை உலகை எப்படி பாதித்திருக்கிறது? இது உங்களுடைய வாழ்க்கையை எப்படி பாதித்திருக்கிறது? இது விட்டுச் சென்றிருக்கும் சொத்துதான் என்ன? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளைத் துருவி ஆராயும்.

[அடிக்குறிப்புகள்]

a இயற்கை வழித்தேர்ந்தெடுப்பின்மூலம் உயிரின தோற்றம், அல்லது வாழ்வுப் போராட்டத்தில் விருப்பப்பட்ட இனங்களின் பாதுகாப்பு என்பதே டார்வின் எழுதிய ஆங்கில புத்தகத்தின் முழு தலைப்பாகும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்