‘ஓர் சமவாய்ப்பு துயரம்’
“விஷயத்தை பருவ வயதடைந்தப் பெண்கள் தெளிவாகப் புரிந்துகொள்வதில்லை,” என்பதாக தி டோரன்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது. என்ன விஷயத்தை? புகைபிடிப்பது சாவுக்கேதுவான ஒரு பழக்கம் என்பதை. 15-க்கும் 19-க்கும் இடைப்பட்ட வயதுடைய கனடா நாட்டுப் பெண்கள், அதே வயதுடைய 19 சதவீத பையன்களுடன் ஒப்பிடுகையில், 25 சதவீதத்தினர் புகைபிடிப்பவர்களாக இருந்தார்கள் என்பதாக 1991 ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. வயதுவந்த ஆட்களின் மத்தியிலும்கூட, புகைபிடிக்கும் பெண்கள் புகைபிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கையை விஞ்சிவிடுகிறார்கள். “பெண்கள் மத்தியில் புகையிலையைப் பயன்படுத்துவது, ஓர் சமவாய்ப்பு துயரமாக ஆகியிருக்கிறது” என்பதாக ஸ்மோக்-ஃப்ரீ கேனடாவை ஆதரித்த மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
பருவ வயதுப் பெண்கள் புகைபிடிப்பதேன்? அறிய வேண்டுமென்ற ஆர்வம், சகாக்களின் அழுத்தம், கலகம் ஆகியவை பங்கு வகிக்கின்றன. என்றபோதிலும், விளம்பர நிறுவனத்தை அசட்டை செய்துவிடக்கூடாது, அது புகைபிடிக்கும் பெண்களைக் கவர்ச்சியுடன் மெலிந்த உடற்கட்டுள்ளவர்களாக சித்தரித்துக் காட்டுகிறது. ஆம், அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க முயற்சி செய்வதற்கு அநேகர் புகைபிடிக்கிறார்கள், அவர்கள் நிறுத்தினால், அதிகமாக எடைகூடிவிடுவதைக் குறித்து பயப்படுகிறார்கள். துக்ககரமாக, இப்படிப்பட்ட பெண்கள், புற்றுநோயின் அச்சுறுத்தலைப் பற்றி கவலைகொள்வதைவிட எடைகூடிவிடும் அச்சுறுத்தலைப் பற்றி அதிக கவலைகொள்ளக்கூடும். டோரன்டோ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியராகிய ராபர்ட் கோயம்ஸ், அவர்களுடைய மனநிலையை இவ்வாறு சுருக்கியுரைத்தார்: “நுரையீரல் புற்றுநோயைக் குறித்து 20 ஆண்டுகளுக்குப் பின்பு கவலைப்பட வேண்டும். எடைகூடிவிடுவதைக் குறித்து இப்பொழுதே கவலைப்பட வேண்டும்.”
சிகரெட் குடிப்பதை சுதந்திரத்துடன் இணைப்பதன் மூலமும் புகையிலை நிறுவனம் பெண்களைக் குறிவைக்கிறது. என்றபோதிலும், இரண்டு ஐ.மா. தலைமை அறுவை மருத்துவர்களுக்கு முன்னாள் ஆலோசகராக இருந்த ஜீன் கில்பார்ன் ஞானமாக இவ்வாறு குறிப்பிட்டார்: “சாவை இறுதியான சுதந்திரமாக ஒருவர் கருதினால் மட்டுமே, சிகரெட் குடித்தலை விடுவிப்பைத் தருவதாய் அவரால் சிந்தித்துப்பார்க்க முடியும்.”