உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 10/22 பக். 10-11
  • நீங்கள் எவ்வாறு என்றென்றும் வாழலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் எவ்வாறு என்றென்றும் வாழலாம்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளின் நோக்கம்
  • எவ்வாறு என்றென்றும் வாழலாம்
  • நித்திய ஜீவன் உண்மையிலேயே சாத்தியமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • என்றும் வாழ்வது வெறும் ஒரு கனவல்ல
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • வாழ்க்கைக்கு மகத்தானஒரு நோக்கமுண்டு
    வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 10/22 பக். 10-11

நீங்கள் எவ்வாறு என்றென்றும் வாழலாம்

இன்று மனிதர்கள் அனுபவிப்பதைக்காட்டிலும், இன்னுமதிக நீடித்த வாழ்நாளுக்கான திறனை மனித உடல் தெளிவாகவே கொண்டிருப்பதால், நாம் எவ்வாறு என்றென்றும் வாழலாம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அறிவியலில் சிலர் நம்பிக்கை வைக்கிறார்கள். “உடலின் இரசாயனப் பொருள்கள் மற்றும் அவை எவ்வாறு ஒன்றோடு ஒன்று செயல்படுகின்றன என்பதைப்பற்றிய இன்னும் அதிக முழுமையான அறிவை நாம் பெற்றுக்கொள்கையில், உயிரின் உட்பொருளாகிய புதிரை நாம் தீர்ப்போம். ஒரு நபர் எவ்வாறு மூப்படைகிறார் . . . என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்,” என்று டாக்டர் ஆல்வான் சில்வர்ஸ்டைன் எழுதினார்.

என்ன விளைவோடு? “மனித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்திற்கு” இது வழிநடத்தும் என்று சில்வர்ஸ்டைன் கூறினார். “அங்கு ‘வயதான’ ஆட்கள் இனிமேலும் இருக்கமாட்டார்கள், ஏனென்றால் மரணத்தை வெல்வதற்கான வாய்ப்பைப் பற்றிய அறிவும்கூட நித்திய இளமையைக் கொண்டுவரும்.”

மனிதர்கள் இதை சாதிப்பார்களா? “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்,” என்று பைபிள் ஊக்குவிக்கிறது. (சங்கீதம் 146:3, 4) நாம் உள்ளதை உள்ளவாறே பார்த்தபடி, மூப்பிலும் மரணத்திலும் உள்ளடங்கியிருக்கும் குறைபாட்டை மனிதர்கள் சரியாக நிர்ணயிக்க இயலவில்லை, அதை சிறிதாகிலும் சரிசெய்யவும் முடியவில்லை. நம் சிருஷ்டிகர் மட்டுமே அதைச் செய்யமுடியும்.

ஆயினும், மனிதர்கள் என்றென்றும் பூமியில் வாழவேண்டும் என்பது உண்மையிலேயே கடவுளின் நோக்கமா?

கடவுளின் நோக்கம்

முதல் மனித ஜோடியை வாழ்வதற்காக யெகோவா தேவன் எங்கே வைத்தார்? பூமிக்குரிய ஒரு பரதீஸில். அவர்கள் ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்த’ கட்டளை கொடுக்கப்பட்டனர். (ஆதியாகமம் 1:28) ஆம், கடவுளின் நோக்கமானது, காலம் செல்லச் செல்ல, பூமி முழுவதிலும் நீதியான மானிட குடும்பங்கள் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் ஒன்றாக வாழவேண்டும் என்பதே.—ஏசாயா 45:18.

ஆதாமின் கீழ்ப்படியாமையின் காரணமாக, அவன் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், பூமியில் பரதீஸில் மனிதர்கள் என்றென்றும் வாழவேண்டும் என்னும் கடவுளின் ஆதி நோக்கம் மாறவில்லை. (ஆதியாகமம் 3:17-19) “அதைச் சொன்னேன்,” “அதைச் செய்து முடிப்பேன்,” என்பதாக கடவுள் கூறுகிறார். (ஏசாயா 46:11; 55:11) “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றென்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்,” என்று கடவுள் கூறியபோது, பூமிக்குரிய தமது நோக்கத்தை மாற்றவில்லை என்பதை அவர் காண்பித்தார்.—சங்கீதம் 37:29.

நம் சிருஷ்டிகராகிய கடவுள், மனிதருக்கு மூப்பையும் மரணத்தையும் விளைவிக்கக்கூடிய குறைபாட்டை சரிசெய்யும் ஸ்தானத்தில் இருக்கிறார். அவர் எதன் அடிப்படையில் இதைச் செய்கிறார்? முதல் மனிதனாகிய ஆதாமிடத்திலிருந்து இந்தக் குறைபாடு சுதந்தரிக்கப்பட்டதால், தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பரிபூரண மனித உயிரை, ‘அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடைவதற்காக’ மீட்கும் பலியாக கடவுள் கொடுத்தார்.—யோவான் 3:16; மத்தேயு 20:28.

இவ்வாறாக, முதல் ஆதாமை இயேசு கிறிஸ்து நமது தந்தையாக அல்லது உயிரளிப்பவராக உண்மையிலேயே மாற்றீடு செய்கிறார். அதனால்தான் இயேசு கிறிஸ்து பைபிளில் “பிந்தின ஆதாம்” என்று அழைக்கப்படுகிறார். (1 கொரிந்தியர் 15:45) ஆகவே, பாவியாகிய ஆதாமின் பிள்ளைகளாக சாகவேண்டும் என்று கண்டனம் செய்வதற்கு மாறாக, கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் தங்கள் “நித்திய பிதா,” இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக நித்திய ஜீவனைப் பெறுவதற்கு தகுதியானவர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படலாம்.—ஏசாயா 9:6.

நிச்சயமாக, யெகோவா தேவன்தாமே ‘நித்திய ராஜா’ மற்றும் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா.” (1 தீமோத்தேயு 1:17; வெளிப்படுத்துதல் 15:3; கொலோசெயர் 1:5) ஆயினும் இயேசு கிறிஸ்து நமது ‘நித்திய பிதாவாகவும்’ ‘இரட்சகராகவும்’ மட்டும் அமர்த்தப்படவில்லை, அவர் “சமாதானப்பிரபு” ஆகவும் அமர்த்தப்பட்டுள்ளார். (லூக்கா 2:11) தமது பிதாவின் பிரதிநிதியாக கிறிஸ்து, ராஜ குமாரனுக்குரிய அதிகாரத்தை பூமிக்கு சமாதானத்தைக் கொண்டுவர உபயோகிப்பார்.—சங்கீதம் 72:1-8; 110:1, 2; எபிரெயர் 1:3, 4.

இயேசு கிறிஸ்துவின் ஆட்சியின் கீழ், இழந்துபோன பூமிக்குரிய பரதீஸ் மீண்டும் பெறப்படும். “மறு-சிருஷ்டிப்பிலே, மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது,” இது நிகழும் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 19:28, NW) இயேசுவை உண்மையாக பின்பற்றுகிற 1,44,000 பேர் அனைவரும் அவருடன்கூட பரதீஸான பூமியை ஆட்சிசெய்வார்கள். (2 தீமோத்தேயு 2:11, 12; வெளிப்படுத்துதல் 5:10; 14:1, 3) கோடிக்கணக்கானோர் பூமியில் பரதீஸில் வாழ்க்கையை அனுபவிப்பதன்மூலம் அந்த நீதியான ஆட்சியிலிருந்து பயனடைவர். இயேசு கிறிஸ்துவின் பக்கத்தில் மரித்த அந்தக் குற்றவாளியும் அவர்களுடன் சேர்க்கப்பட்டிருப்பார், அவரிடத்தில் இயேசு வாக்களித்தார்: “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.”—லூக்கா 23:43.

இவ்வாறாக, மரித்த அநீதிமான்களும்கூட உயிர்த்தெழுப்பப்பட்டு, பூமியில் நித்திய ஜீவனுக்காகத் தகுதியடையும் வாய்ப்பு அளிக்கப்படுவார்கள். (அப்போஸ்தலர் 24:15) ‘தேவன்தாமே அவர்களோடேகூட இருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின,’ என்று வியாதி, மூப்பு மற்றும் மரணம் ஆகியவை ஒழிந்துபோவதை பைபிள் அழகாக விவரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:3, 4.

எவ்வாறு என்றென்றும் வாழலாம்

நிச்சயமாகவே இந்தப் பூமியை சுதந்தரித்துக்கொண்டு, அதிலே என்றென்றும் குடியிருப்போரின் மத்தியில் நீங்களும் இருக்க விரும்புவீர்கள். அப்படியானால், பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்கான தேவைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்,” என்று தம்முடைய பரலோக பிதாவுக்கு ஏறெடுத்த ஜெபத்தில், அடிப்படையான தேவையை இயேசு கிறிஸ்து அறிவித்தார்.—யோவான் 17:3.

இந்த உயிரை-அளிக்கும் அறிவை அடைவதற்கு, யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைவார்கள். வெறுமனே அவர்களிடம் கேளுங்கள், உங்களுடன் இலவசமாக, உங்களுக்கு வசதியான நேரத்தில், மனிதவர்க்கத்தை ஆவிக்குரிய மற்றும் சரீரத்துக்குரிய பரிபூரணத்துக்கு உயர்த்த எவ்வாறு கடவுள் நோக்கமுடையவராய் இருக்கிறார் என்பதைக் கலந்தாலோசிப்பார்கள். மூப்பையும் மரணத்தையும் விளைவிக்கும் சுதந்தரிக்கப்பட்ட குறைபாட்டை சரிசெய்ய நம் சர்வவல்ல சிருஷ்டிகர் முழுவதுமாக வல்லவர் என்று நிச்சயமாயிருங்கள். காலம் வருகிறது, அது மிக அருகில் இருக்கிறது, அப்போது, வாழ்நாள் அவ்வளவு குறுகியதாக இனியும் இருப்பதில்லை. யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு ‘என்றென்றைக்கும் ஜீவனை’ கொடுத்து ஆசீர்வதிப்பார்.—சங்கீதம் 133:3.

[பக்கம் 10-ன் படம்]

கிறிஸ்துவின் ராஜ குமாரனுக்குரிய ஆளுகையின் கீழ் மூப்பும் மரணமும் வெல்லப்பட்டிருக்கும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்