உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 11/8 பக். 31
  • அனைவருக்கும் போதுமான உணவு!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அனைவருக்கும் போதுமான உணவு!
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அனைவருக்கும் மிகுதியான உணவு
  • ஆவிக்குரியப் பிரகாரமாய் நீங்கள் நன்றாய்ச் சாப்பிடுகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • உங்கள் உணவு எவ்வளவு ஊட்டச்சத்துள்ளது?
    விழித்தெழு!—1995
  • பேரழிவுகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி
    விழித்தெழு!—1995
  • “மெளன அபாயம்” முடிவு விரைவில்!
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 11/8 பக். 31

அனைவருக்கும் போதுமான உணவு!

பிரேஸிலிலுள்ள விழித்தெழு! நிருபர்

மிகுதியான, மிகச் சிறந்த உணவை அனுபவிப்பதோடுகூட, மகிழ்ச்சியற்று இருப்பதும் சாத்தியம். உண்மையான, நிலைத்திருக்கும் மகிழ்ச்சியை அடைய, வேறொன்று தேவையாக இருக்கிறது, அதுதான் ஆவிக்குரிய உணவு. இயேசு குறிப்பிட்டார்: “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”—மத்தேயு 4:4.

மறுபட்சத்தில், கடவுளுடைய வார்த்தையைப் புறக்கணிப்பது, ஆமோஸ் 8:11-ல் முன்னுரைத்ததைப்போல் ஆவிக்குரிய பசிதாகத்திடமாக வழிநடத்துகிறது: ‘நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்புவேன்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம்.’ ஆயினும் ஆவிக்குரிய சத்துணவுக்குறைவைத் தவிர்க்க முடியும். இயேசு அறிவித்தார்: “ஆவிக்குரிய தேவையைக்குறித்து உணர்வுடையோர் மகிழ்ச்சியுள்ளவர்கள் . . . நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள், ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள்.” (மத்தேயு 5:3, 6, NW) சரியான அளவு ஊட்டச்சத்து உணவானது நம் உடலைத் திருப்தி செய்வதைப்போல், ஆரோக்கியமான ஆவிக்குரிய உணவு, நம் எதிர்கால நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பலப்படுத்துகிறது. எப்படிப்பட்ட உலகை நாம் எதிர்பார்க்கலாம்?

அனைவருக்கும் மிகுதியான உணவு

சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு நிறைந்திருக்கும் ஓர் உலகைக் கற்பனைசெய்து பாருங்கள். மக்களை பலவீனமடைய அல்லது மனச்சோர்வடையச் செய்யும் பட்டினியையும் சத்துணவுக் குறைவையும் விளைவிக்கும் போர்கள், பேரழிவுகள் அல்லது கெட்ட நிகழ்வுகள் இல்லாத ஓர் உலகம். அளவு சூப்பு, ரொட்டியை அல்லது படியளக்கப்படுவதை சார்ந்திருக்கும், வீடில்லாத அல்லது வேலையில்லாத மக்கள் இனிமேலும் இரார். உயர்ந்துகொண்டே செல்லும் உணவின் விலைவாசி, வெறுமனே எதையாவது தின்று வயிற்றை நிரப்ப மக்களைத் தள்ளும் நிலை இனியும் இராது. “பூமியில் ஏராளமான தானியம் உண்டாயிருக்கும்; மலைகளின் உச்சியில் நிறைந்து வழியும்.” (சங்கீதம் 72:16, NW) ஆனால், இது எப்படி நிகழும்? சத்துணவுக் குறைவு பிரச்சினையைத் தீர்ப்பவர் யார்?

போதுமான உணவுக்கான மனிதனின் தேவையின்பேரில் நம் சிருஷ்டிகர், அன்பான கவனத்தைச் செலுத்துவார். பூமியின் சீதோஷ்ணம்கூட கட்டுப்பாட்டிலிருக்கும், இவ்வாறு விளைச்சல் தவறிப்போதல் எதுவும் இனிமேலும் இருக்காது என்பதை உறுதியளிக்கிறது. “கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.” (சங்கீதம் 85:12) மேலுமாக, பூமி போதுமான உணவை உற்பத்தி செய்யத் திறனுடையதாக இருந்தபோதிலும், தேவைக்குக் குறைந்த விநியோகம், சத்துணவுக் குறைவு, துயரம் முதலியவற்றிற்கு வழிவகுக்கும் பேராசையையும் ஒடுக்குதலையும் கடவுளுடைய ராஜ்யம் மாத்திரம் முடிவுக்குக் கொண்டுவரும்.

ஆம், கிடைக்கக்கூடிய வேளாண்மை மற்றும் போக்குவரத்து துறைகள்மூலம் ஆரோக்கியமான உணவு எங்கு தேவைப்படுகிறதோ அங்கு வழங்கப்படும்படி யெகோவாவின் பரலோக அரசாங்கம் உறுதிசெய்யும். ராஜ்ய நிர்வாகம் சிலரை மட்டும் செழிக்கச்செய்து, பலரை ஜீவனத்திற்காக கஷ்டப்பட்டு தேடும்படி விட்டுவிடாது. மனமுறிவையும் நம்பிக்கையற்ற தன்மையையும் கொடுப்பதற்கு மாறாக, ஏசாயா 25:6-ல் முன்னுரைக்கப்பட்ட, நல்ல பொருட்களடங்கிய பெரும் விருந்தில் வெளிக்காட்டப்பட்டிருக்கும் மகிழ்ச்சியை ராஜ்ய ஆசீர்வாதங்கள் கொண்டுவரும்: “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.”

இப்போது, மனக்கண்ணால் கற்பனைசெய்து பாருங்கள், போட்டி மனப்பான்மையோடும் அழுத்தம் நிறைந்தும், உணர்ச்சியே அற்றும் இருக்கும் இன்றைய வாழ்க்கை முறையானது நிரந்தரமாக ஒழிக்கப்பட்டிருக்கும். ஊட்டச் சத்துணவு குறைந்தவராகவோ வியாதியுற்றவராகவோ எவரும் இரார். ஆகவே, அந்தப் புதிய உலகில் வாழ்க்கையை அனுபவிக்க ஒருவேளை நீங்கள் விரும்பினால், இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்: “அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்.”—யோவான் 6:27.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்