உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/22 பக். 14-16
  • மாலியில் முதன்முதலில் நிகழ்ந்தது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மாலியில் முதன்முதலில் நிகழ்ந்தது
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உண்மையில் ஒரு சவால்
  • மும்முரமான செயல்
  • நெகிழவைத்த ஒரு பிரதிஷ்டை
  • மீண்டும் அனலான கூட்டுறவு
  • ராஜ்ய மன்ற கதவுகள் யாவருக்காகவும் திறந்தே இருக்கின்றன
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • வணக்கத்துக்காக ஒன்றுகூடி வரும் இடங்கள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • உங்கள் ராஜ்ய மன்றத்தை நீங்கள் மதிக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • சபை புத்தகப் படிப்பு
    நம் ராஜ்ய ஊழியம்—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/22 பக். 14-16

மாலியில் முதன்முதலில் நிகழ்ந்தது

மேற்கத்திய ஆப்பிரிக்காவில், மக்கள்தொகை குறைவாக இருக்கும் நாடு மாலி, அங்கிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பயணக் கண்காணியாக என் கணவர் சேவை புரிகிறார். அதன் வடக்குப் பகுதி சஹாரா பாலைவனத்தால் சூழப்பட்டிருக்கிறது, நாட்டின் மீதமுள்ள பகுதி பெரும்பாலும் எல்லையில்லா வளம் கொழிக்கும் புல்வெளிகளால் ஆனது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகியவற்றின் ஒட்டுமொத்தமான பரப்பைவிட மாலியே மிகப் பெரியது. இந்த நாடுகளில் 14 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் இருந்தபோதிலும், மாலியில் சுமார் ஒரு கோடி மக்கள்தொகை மாத்திரம் உள்ளது—அவர்களில் சுமார் 150 பேர் யெகோவாவின் சாட்சிகள்.

பக்கத்திலுள்ள செனிகலிலிருக்கும் சிறிய நகரமாகிய ஸீகாங்ஷாயரில் எங்களுடைய வசிப்பிடம் உள்ளது. நவம்பர் 1994-ல், நாங்கள் அங்கிருந்து டகருவிற்கும், பிறகு மாலியின் தலைநகர் பமகோவிற்கும் பறந்துசென்றோம். இது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான குடிமக்களை உடைய பெரிய நகரமாகும். நாங்கள் பமகோவிலிருந்து சேகூ, சான், பண்டைய நகரமாகிய மாப்டீ போன்ற சிறு நகரங்களுக்கு குறுங்காடுகளில் செல்லும் டாக்ஸியிலோ, பஸ்ஸிலோ, இரயிலிலோ பயணம் செய்தோம். அங்கிருக்கும் சொற்ப எண்ணிக்கையான சாட்சிகளுடன், கிறிஸ்தவ ஊழியத்தில் பங்கேற்பதற்காக இந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் நாங்கள் சுமார் ஒரு வாரம் தங்கினோம்.

மாவட்ட மாநாட்டை அனுபவிப்பதற்காக டிசம்பரில் பமகோவிற்குத் திரும்பிவந்தோம், அதற்கு வந்திருந்தோரின் உச்ச எண்ணிக்கை 273. புதிதாக முழுக்காட்டப்பட்ட 14 பேரை காண்பதில் எங்களுக்கு என்னே மகிழ்ச்சி! மாநாடு முடிந்த அடுத்தநாள், சிகாஸ்சோ என்னும் சிறிய நகரத்திற்கு பஸ்ஸில் புறப்பட்டோம், அங்கு மாலியிலேயே முதன் முதலில் யெகோவாவின் சாட்சிகளால் கட்டப்பட்ட ராஜ்ய மன்றம், தொடர்ந்துவந்த வார இறுதியில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தது.

உண்மையில் ஒரு சவால்

வெறும் 13 சாட்சிகளால் ஆனது சிகாஸ்சோவிலிருந்த சபை, அவர்களில் 5 பேர் பயனியர்களாக அல்லது முழுநேர ஊழியர்களாக இருக்கிறார்கள். திங்கட்கிழமையன்று நாங்கள் வந்துசேர்ந்ததும், பிரதிஷ்டைக்குரிய அவர்களின் திட்டங்கள் யாவை என்பதைக் கேட்பதற்காக ஆவலாக இருக்கிறோம். அதை ஏற்பாடு செய்ய என் கணவர் மைக்கை அவர்கள் சார்ந்திருப்பதற்காக எங்களிடம் கூறுகிறார்கள்! ஆகவே எங்களுடைய மூட்டைமுடிச்சுகளை எல்லாம் எடுத்துவைத்துவிட்டு, ராஜ்ய மன்றத்தைப் பார்க்க விரைகிறோம். அதைப் பார்க்கையில், அத்தகைய ஒரு கட்டிடத்தை இந்த வெகு சொற்ப எண்ணிக்கையுள்ள சாட்சிகளால் கட்டமுடிந்திருக்கிறதே என்று மெய்சிலிர்த்துப் போகிறோம். ஆயினும், இன்னும் செய்யவேண்டியவை அதிகம் இருந்தன. திரைச்சீலைகள் இல்லை, வெளிப்புறத்தில் வண்ணம் அடிக்கப்படவில்லை, “யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்,” என்ற பெயர்ப் பலகையும் இல்லை.

இன்னும் சில தினங்களில், பமகோவிலிருந்து குறைந்தது 50 பேர்களாவது பிரதிஷ்டைக்கு வரவிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். உள்ளூர் ஆட்கள்கூட அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்தச் சபை பியர் சாடியோ என்ற ஒரே ஒரு மூப்பரை மாத்திரம் கொண்டிருக்கிறது. பிரதிஷ்டை செய்யவிருக்கும் நாளாகிய சனிக்கிழமைக்கு முன்பே, எவ்வாறு மன்றத்தை முடித்துவிட எதிர்பார்க்கிறார் என்று நாங்கள் அவரை கேட்கிறோம், அவரின் பதிலை கேட்பதற்கு நண்பர்களெல்லாம் கிட்டே நெருங்கிவருகிறார்கள். “போதிய காலத்திற்குள் முடிப்பதற்கு யெகோவா நமக்கு உதவுவார் என நான் நினைக்கிறேன்,” என்று அவர் பதிலளிக்கிறார்.

இவ்வளவு குறுகிய காலத்திற்குள், செய்வதற்குத் தலைக்கு மேலிருக்கிறதே! திரைச்சீலைகளை ஏற்பாடுசெய்வதில் நான் உதவலாமா என்று தயக்கத்துடன் கேட்கிறேன். பாரம் நீங்கிவிட்ட பெரும் சிரிப்பு என்னை சுற்றியிருந்தவர்களின் முகங்களில் தவழுகிறது. பிறகு, மன்றத்திற்கு முன்வைப்பதற்குரிய பெயர்ப் பலகையை நாங்கள் ஏற்பாடுசெய்வதாக மைக் ஆலோசனைக் கொடுக்கிறார். விரைவில் நாங்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் மிகவும் குஷியாக இருந்தார்கள். ஏற்றசமயத்திற்குள்ளாக மன்றத்திற்கு கடைசியாகச் செய்யவிருந்த அனைத்தும் செய்துமுடிப்பது உண்மையில் ஒரு சவாலாக இருக்கும்!

மும்முரமான செயல்

கிறிஸ்தவ சகோதரிகளாகிய நாங்கள், திரைச்சீலை துணியைத் தேர்ந்தெடுப்பதற்காக மார்க்கெட்டுக்கு விரைகிறோம். பிறகு திரைச்சீலைகளைத் தைப்பதற்கு ஒரு தையல்காரரைக் கண்டுபிடிக்கிறோம். “அவற்றை முடிப்பதற்கு உங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கின்றன,” என்று நாங்கள் அவரிடத்தில் சொல்கிறோம். அலங்காரப்பொருளாக எதையாகிலும் வைக்கவேண்டும் என்பதற்காக, அழகான மெக்ரமீ செடிகளைத் தொங்கவிடும் உறிகளைச் செய்துகொடுக்க மைக் முன்வருகிறார். ஆகவே, இம்முறை உறிகளுக்குத் தேவையான கயிற்றையும் கூடவே பூந்தொட்டியையும் தேடி மீண்டும் மார்க்கெட்டுக்கு நாங்கள் விரைகிறோம்.

ராஜ்ய மன்ற பெயர்ப் பலகையைத் தருவிப்பதற்கும் ஒருவரிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மன்றத்திற்கு உள்ளும் புறமும் மும்முரமான செயல் நடந்துகொண்டிருக்கிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒரு கூட்டம் வேடிக்கை பார்ப்பதற்காகக் கூடுகிறது. செய்வதற்கு அவ்வளவதிகம் இருக்கிறதே! 50 விருந்தினருக்கு எப்படி உணவு அளிக்கப்போகிறோம்? அவர்கள் எங்குத் தூங்குவார்கள்? ஏற்பாடுசெய்வதற்காக வாரம் முழுவதும் ஓட்டமும் நடையுமாக விரைகிறோம், ஆனால் எதுவும் சுலபமாக நடப்பதாகத் தோன்றவில்லை.

பிரதிஷ்டை நாளுக்கு முந்திய நாள், வெள்ளிக்கிழமை விடியற்காலையிலேயே நாங்கள் எழுந்துவிட்டோம். பமகோவிலிருந்து விருந்தினர்கள் வரவிருக்கின்ற காரணத்தால், சூழ்நிலை குதூகலத்தால் நிறைந்திருக்கிறது. மதியவேளையிருக்கும், ராஜ்ய மன்றத்தின் பெயர்ப் பலகை வந்திறங்குகிறது. மைக் அதை அவிழ்த்தபோது, சகோதரர்கள் வியப்பில் பெருமூச்சுவிடுகிறார்கள். ஆர்வமுள்ள பார்வையாளரும்கூட மதித்துணர்வோடு பார்க்கிறார்கள். முன்பக்க சுவற்றில் பொருத்தப்படுகையில், பொறுமையின்றி காத்திருக்கிறோம் நாங்கள். அது வெறும் ஒரு சாதாரணமான கட்டிடமில்லை என்பது இப்போது ஊர்ஜிதமாகிறது. இது “யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்.”

அருகாமையிலிருக்கும் ஒரு பயனியர் வீட்டில், சகோதரிகள் சமையலில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். ஒரு பெரிய கருத்த கொப்பரையில் உணவு பொங்கிக்கொண்டிருக்கிறது. மன்றத்தின் பக்கத்திலிருந்து இப்போதுதான் பெயின்ட் வாளிகளையும் துடைப்பங்களையும் அகற்றினோம், அப்போது, “இதோ அவர்கள்! இதோ அவர்கள்!” என்ற சத்தம் ரீங்காரமிடுகிறது. மன்றத்திலிருந்து நண்பர்கள் ஓடோடி வருகிறார்கள், மற்றவர்கள் வீட்டிலிருந்து வருகிறார்கள். இவற்றால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வியப்படைகிறார்கள். சகோதரர்கள் குஷியில் இங்கும் அங்கும் செல்கிறார்கள். நண்பர்கள் பஸ்ஸை விட்டு இறங்கியதும் என்னே ஒரு வரவேற்பைப் பெற்றுக்கொள்கிறார்கள்! யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்!

வந்திருந்த விருந்தினர்களை—உள்ளூர் குடும்பங்களிலிருந்தும் கூடவே பர்கின ஃபாஸோவிலிருந்தும் டோகோவிலிருந்தும் வந்திருந்த நண்பர்களை நான் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். அமெரிக்கர்கள், கனடா நாட்டவர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் ஆகியோரும்கூட வந்திருக்கிறார்கள். அன்றிரவு ஒரு பெரும் விருந்தைக் கொண்டிருக்கிறோம். முற்றத்தில் வெளிச்சமூட்டுவதற்காகப் பெரிய தீயை மூட்டினோம். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் சிலாக்கியத்தை நான் பெற்றது கனவா நனவா என்று என்னை நானே கிள்ளிப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. நேரம் செல்லச்செல்ல, விட்டுச்செல்ல மனமின்றி அவரவர் இருப்பிடங்களுக்குப் பிரிந்துசெல்ல துவங்குகிறோம்.

அவர்களில் 20 பேர் வரை ஒரு குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டனர். சிலருக்கு இது கஷ்டமாக இருந்தது என்று என்னால் சொல்லமுடியும். திறந்தவெளியில் காலைக்கடனை முடிப்பதற்கு, பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த விருந்தினர் ஒருவருக்கு உள்ளூர் சகோதரி ஒருவர் உதவிசெய்வதைக் காண்கிறேன். ஒரு மிஷனரியின் உறவினராக அந்தப் பிரான்ஸ் நாட்டு விருந்தினர் இருந்தார், ஆனால் அவர்தாமே ஒரு சாட்சியாக இல்லை. அவர்கள் திரும்பி வருகையில், அவர் கூறுகிறார்: “நீங்கள் எவ்வளவு ஏழையாக இருக்கிறீர்கள், ஆனால் உண்மையில் மிகவும் அன்பாகவும், கனிவாகவும் இருக்கிறீர்கள்.” எனக்கு இவ்வாறு சொல்லவேண்டும் போலிருக்கிறது: “இல்லை, அவர்கள் ஒன்றும் ஏழைகள் அல்ல. யெகோவாவின் ஜனங்கள் அனைவரும் செல்வந்தர்களே!” உண்மையில், இத்தகைய பல்வேறு மக்கள் தொகுதியினர் ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் வாழ்வதை வேறெங்குத்தான் நீங்கள் பார்க்க முடியும்?

நெகிழவைத்த ஒரு பிரதிஷ்டை

இரவு குறுகியிருப்பதால், பிரதிஷ்டை நாள் விரைவில் புலர்ந்துவிட்டது. வெளி ஊழிய கூட்டத்திற்காக ராஜ்ய மன்றத்தில் கூடியபின்னர், சாட்சிகள் வெளியே சென்று நகரவாசிகளைப் பிரதிஷ்டைக்கு அழைக்கிறார்கள். பூக்களையும் செடிகளையும் ஒழுங்குபடுத்துவதற்காக நான் அங்கேயே இருந்துவிட்டேன். மாலைக்காகச் சமைப்பதில் உள்ளூர் சகோதரிகள் மும்முரமாக இருக்கிறார்கள்.

இறுதியாக, பிரதிஷ்டைக்கான நேரம், நான்கு மணி வந்துவிட்டது. மொத்தம் 92 பேர் வருகைத்தந்திருந்தார்கள், ஆயினும் மன்றம் நிரம்பி வழியவில்லை. நான் அவ்வளவு குஷியாக இருந்ததால் அமைதியாக உட்காருவது கடினமாக இருந்தது. சிகாஸ்சோவில் நடைபெற்ற ஊழியத்தின் வரலாற்றை பியர் சாடியோ கொடுக்கிறார். அவரை இங்கு நியமித்தபோது, அவரும் அவரின் மனைவியும் அவர்களுடைய இரண்டு பிள்ளைகள் மாத்திரம் இருந்தார்கள். வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவர்களுடைய சேவையை யெகோவா காலாகாலத்தில் ஆசீர்வதித்தார். சிகாஸ்சோவில் முதன்முதலில் சாட்சியாக ஆனவர், இப்போது ஒரு விசேஷ பயனியராக இருக்கிறார். பிறகு எவ்வாறு சொற்ப எண்ணிக்கையான சாட்சிகளால் மன்றத்தைக் கட்டமுடிந்தது என்பதை பியர் விளக்குகிறார். அவர்கள் ஒரு கொத்தனாரை வேலைக்கு அமர்த்தினார்கள், முழு சபையும் கட்டுமானப்பணியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாள் முழுக்க வேலைசெய்தார்கள்.

இப்போது மைக் மன்றத்திற்காகப் பணியாற்றிய நண்பர்களைப் பேட்டி காண்கிறார். அவர் ஒவ்வொருவரிடமும், இந்நாள் வருமென அவர்கள் எதிர்பார்த்தார்களா என்றும், ஆட்கள் நிறைந்திருக்கும் ராஜ்ய மன்றத்தை காண்கையில் எவ்வாறு உணருகிறார்கள் என்றும் கேட்கிறார். அநேகருக்கு நா தழுதழுத்ததால், தங்களுடைய குறிப்புகளைச் சொல்லி முடிக்க இயலவில்லை. அங்கு வந்திருந்த சாட்சிகளில் கண்ணீர் பெருக்கெடுக்காதவர் எவருமில்லை.

அதையடுத்து, செனிகலிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளைக் காரியாலயத்திலிருந்து வருகைத்தந்த டெட் பெட்ரஸ் அவர்களால் பிரதிஷ்டை பேச்சுக் கொடுக்கப்படுகிறது. பிரதிஷ்டை ஜெபம் செய்யப்பட்டது, சகோதரர்கள் நீண்டநேரம் கை தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதன்பிறகு, மன்றத்தைக் கட்டிமுடிப்பதற்கு உதவிய ஒவ்வொருவரையும் முன்னுக்கு வரும்படி மைக் அழைக்கிறார். அதோ அவர்கள் தங்கள் முகங்கள் ஒளிவீச, ஆனந்தக்கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட, அங்கே நிற்கிறார்கள். நாங்கள் முடிவான பாட்டை பாடிக்கொண்டிருக்கையில், மிகவும் மகிழ்ச்சியாக நான் உணருகிறேன். மிஷனரியாக இருப்பதன் காரணமாக, இத்தகைய அருமையான அனுபவங்களில் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறேன். எங்கள் தேசமாகிய ஐக்கிய மாகாணங்களில் நாங்கள் தங்கிவிட்டிருந்தால், எவ்வளவாகத் தவறவிட்டிருப்போம்.

மீண்டும் அனலான கூட்டுறவு

பிரதிஷ்டை நடந்தேறிய பின்னர், சிற்றுண்டி வழங்கப்பட்டன. பெரிய தட்டுகள் நிறைய தர்ப்பூசணியை, தங்கள் தலைமீது வைத்துக்கொண்டு சகோதரிகள் ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். நிகழ்ச்சிக்கென்றே சமையற்காரர் தொப்பிகளை அணிந்துகொண்டு, தாம்பாள தட்டுகளில் கேக்குகளைத் தூக்கிக்கொண்டு சகோதரர்கள் இருவர் அவர்களைப் பின்தொடருகிறார்கள். அந்தத் தட்டையான கேக்குகள், ஆரஞ்சுப்பழத்தின் சுளைகளாலும், எலுமிச்சைப்பழத்தின் துண்டுகளாலும் வண்ண வனப்புடன் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த முழு சூழ்நிலையும் பெரும் விழாக்கோளம் பூண்டுள்ளது.

விருந்தினர்கள் விருந்து படைக்கப்பட்ட பின்னர் புறப்படுகிறார்கள். அதன்பின், சாட்சிகளெல்லாம், இரவு உணவுக்காக, அருகிலிருந்த ஒரு வீட்டை நோக்கிச் செல்கின்றனர். தகதகவென்று எரியும் நெருப்பு முற்றத்தை ஒளியூட்ட, நிலவொளியில் வெளியே நாங்களெல்லாம் உட்காருகிறோம். முழு நாளின் நடவடிக்கைகளினால் நான் ரொம்ப குஷியாக இருந்ததாலும் சோர்வாக இருந்ததாலும் என் சாப்பாட்டை முடிக்க முடியவில்லை. பாதி சாப்பிட்ட கோழிக்காலை, ஒரு சிறுமிக்குக் கொடுக்கிறேன். உள்ளூர் பயனியர்கள் எங்களுடைய தட்டுகளைப் பார்க்கிறார்கள், ஏதேனும் மீதமிருந்தால், அவர்கள் சாப்பிட்டு தீர்த்துவிடுகிறார்கள். இங்கு எதுவும் மீதமிருப்பதில்லை. ஐக்கிய மாகாணங்களில் நாங்கள் எவ்வளவாய் செல்லம்கொடுத்து கெடுக்கப்பட்டுள்ளோம்.

எங்களுடைய அந்த இரவு நிகழ்ச்சி முடிந்துகொண்டிருக்கையில், காலை 9:15-க்கு அந்தப் பஸ் வந்து பமகோவிலிருந்து வந்தவர்களை ஏற்றிச்செல்லும் என்று சகோதரர் ஒருவர் நினைவுபடுத்துகிறார். மறுநாள் காலையில், சகோதரரெல்லாம் முற்றம் முழுவதிலும் உட்கார்ந்துகொண்டு, பஸ்ஸின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். பிறகு “யெகோவாவே, உமக்கு நன்றி” என்ற பாடலை இறுதியாகப் பாடுகிறோம். கண்ணீர் பெருக்கெடுக்கிறது, நாங்கள் முடித்துக்கொண்டிருக்கையில், பஸ் கண்ணில் தென்படுகிறது. சகோதரர்கள் சகோதரிகள் எல்லாரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொள்கிறார்கள்.

பஸ் மெல்ல புறப்படுகையில், நாங்கள் கைகளை அசைத்துக்கொண்டு அங்கே நிற்கிறோம். பஸ்ஸிலிருப்போர், பஸ் பார்வையிலிருந்து மறையும் வரை, கைகளை அசைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின், அங்கே நின்றுகொண்டிருந்த நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அது ஒரு அருமையான பிரதிஷ்டையாக இருந்தது, ஒரு அருமையான வார இறுதியாகவும் இருந்தது.—அளிக்கப்பட்டது.

[பக்கம் 15-ன் படம்]

மாலியில் யெகோவாவின் சாட்சிகளால் கட்டப்பட்ட முதல் ராஜ்ய மன்றம்

[பக்கம் 16-ன் படம்]

இந்த மகிழ்ச்சியான குழுவினர் பஸ்ஸில் பிரயாணம் செய்தார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்