உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 1/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 1/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ஆல்ப்ஸ் மலை பனிமனிதன் “ஆல்ப்ஸ் மலை பனிமனிதனின் மர்மம்,” (மே 8, 1995) என்ற கட்டுரையை இப்பொழுதுதான் படித்துமுடித்தேன். நான் முதலில் அதைப் பெற்றுக்கொண்டபோது, இந்தப் பொருளை விரும்புவேன் என்று உண்மையாகவே நான் நினைத்துப்பார்க்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் அந்தக் கட்டுரை நம்பமுடியாதளவிற்கு சுவாரஸ்யமாயிருந்ததை நான் கண்டேன்! “பண்டைய” மனிதனைப் பற்றிய பாரம்பரியக் கருத்து சரியில்லை என்று அது காண்பித்த விதத்தை நான் போற்றுகிறேன்.

ஜே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

கண்ணைக்கவரும் அந்தத் தலைப்பு, இரயிலில் நான் சந்தித்த ஒரு நபரிடம் அந்தப் பத்திரிகையை அளிக்க உதவியது. அடுத்த வாரம் நான் மறுபடியும் அவரைச் சந்தித்தேன், ‘உயர்ந்த-தரமுள்ளதாகவும்’ நன்கு விளக்கியுரைக்கப்பட்ட ஒன்றாகவும் அந்தக் கட்டுரையை அவர் கண்டதாகச் சொன்னார். அவர் காவற்கோபுரத்தின் சமீபத்திய இதழைப் பெற்றுக்கொண்டார்.

ஜி. சி., ஜப்பான்

மாதவிடாய் முடிவுறும் பருவம் “மாதவிடாய் முடிவுறும் பருவம்—அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்” (பிப்ரவரி 22, 1995) என்ற உங்களுடைய தொடரில், பெண்களுக்குரிய வறட்சியடைதலைக் குணப்படுத்த “தாவர அல்லது பழத்தின் எண்ணெய், வைட்டமின்-ஈ எண்ணெய், லூபிரிகன்ட் ஜெல்ஸ்” ஆகியவற்றை பயன்படுத்துவதைக் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு மேல்நிலை நர்ஸிங் மாணவியாக, எண்ணெயையும் பழத்தையும் முக்கிய பொருளாகக்கொண்டு வழவழப்பாக்குவது கிருமிகளின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைகிறது என்பதைக் குறிப்பிட நான் உந்துவிக்கப்படுகிறேன். ஆகவே தண்ணீரில்-கரைகிற உயவுப்பொருட்கள் அதிக விரும்பத்தகுந்தது.

ஹெச். டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்

காலத்திற்கேற்ப சரிசெய்யப்பட்டிருக்கும் இந்தத் தகவலைப் போற்றுதலோடு பெற்றுக்கொள்கிறோம்.—ED.

45 வயதில், திடீர் உஷ்ண வெளியேறுதல்களினால் நான் அவதிப்பட ஆரம்பித்தேன். பல வருடங்களாக மருந்துகளின்றி அவைகளை நான் சகித்தேன். ஆகவே உங்கள் கட்டுரையில் வெளிப்பட்டிருக்கும் அன்பான அக்கறையை உணர்ந்தபோது நான் அழுதேன். மாதவிடாய் முடிவுறும் பருவத்தை மேம்பட்ட விதத்தில் புரிந்துகொள்ள அது எனக்கு உதவி செய்தது. மேலுமாக என்னுடைய அநேக கேள்விகளுக்கு அது பதிலளித்தது.

எஸ். டி. பி. ஏ., பிரேஸில்

கம்ப்யூட்டர் விளையாட்டுகள் “இந்த விளையாட்டு உங்களுக்கு ஏற்றதுதானா?” (மே 8, 1995) என்ற கட்டுரையைப் பார்த்தபோது நான் கிளர்ச்சியடைந்தேன். ஒரு பெற்றோராக, இந்த விளையாட்டுகளை தீங்கு விளைவிக்காத வேடிக்கைகளாக நினைக்கக்கூடிய சிலருடைய அனுமதிக்கிற மனப்பான்மையைக் குறித்து நான் திகைப்படைகிறேன். கல்வியூட்டும் மற்றும் வன்முறையற்ற விளையாட்டுகள் அநேகம் இருக்கின்றன.

கே. ஜி., ஐக்கிய மாகாணங்கள்

நான் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரை மதிப்பிடுபவன். சமீபத்தில் டூம் II விளையாட்டின் ஒரு பிரதி மதிப்பிடுவதற்காக என்னிடம் கொடுக்கப்பட்டது. இந்த விளையாட்டு, தலைகீழான சிலுவைகள் மற்றும் நட்சத்திர உருவமுள்ள சக்கரம் போன்ற பேய்ச் சின்னங்களை உபயோகிப்பதைக் கண்டேன். இந்த விளையாட்டுகள் எவ்வளவு மோசமானவை என்பதை ஜனங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.

ஆர். பி., ஐக்கிய மாகாணங்கள்

இளவயது திருமணம் “இளைஞர் கேட்கின்றனர் . . . வெகு சீக்கிரத்தில் மணம் செய்துகொண்டோம்—நாங்கள் வெற்றிபெற முடியுமா?” (ஏப்ரல் 22, 1995) என்ற கட்டுரைக்கு நன்றி. சபையின் கண்காணிகளாக, விவாக சம்பந்தமான நெருக்கடியிலிருந்த ஒரு இளம் தம்பதியோடு மேய்ப்புச் சந்திப்பு செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தோம். இந்த இதழ் கையில் கிடைத்தபோது எனக்கு என்னே ஒரு ஆச்சரியம்! அந்த இளம்தம்பதிக்கு உதவி செய்ய எங்களுக்குத் தேவைப்பட்டது சரியாகவே இதுதான். நாங்கள் அந்த முழு கட்டுரையையும் அதோடுகூட அங்கே குறிப்பிடப்பட்டிருந்த எல்லா பைபிள் வசனங்களையும் ஆலோசித்தோம்.

எம். சி., பிரேஸில்

கடலுக்கடியில் ஆராய்ச்சி “அலைகளுக்கு அடியிலுள்ள உலகை பாதுகாப்பாக ஆராய்தல்” (மே 8, 1995) என்ற கட்டுரையைப் பெரிதும் போற்றுகிறோம். இப்பொழுதுதான் செங்கடலுக்கு நாங்கள் சென்ற பயணத்திலிருந்து வீடு திரும்பினோம். உங்களுடைய ஆலோசனை மிகவும் பிரயோஜனமாயிருந்ததைக் கண்டோம். ஒரு மிக அழகான கடல் தரையை ஆராய்ந்தது மாத்திரமில்லாமல் அதிகப் பணத்தையும் மிச்சப்படுத்தினோம்!

வி. சி. மற்றும் கே. பி., இத்தாலி

நானும் என்னுடைய கணவரும் எங்களுடைய இரு மகன்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளைக் குறித்ததில் அவ்வப்போது பிரச்சினைகளை எதிர்ப்படுகிறோம். என்னுடைய கணவர் ஸ்க்யூபா முக்குளிப்பில் ஆர்வமுள்ளவர், மேலுமாக எங்களுடைய வட்டாரத்தில் ஒரு புதிய முக்குளிப்பு பள்ளி சமீபத்தில் திறந்துவைக்கப்பட்டது. உங்களுடைய கட்டுரையை வாசித்தபிறகு, அவர்கள் அதில் பங்குகொள்ளும்போது நான் ஒரு நல்ல மனசாட்சியைக் கொண்டிருப்பேன் என்பதில் சந்தோஷப்படுகிறேன்.

சி. பி., ஜெர்மனி

கம்யூனிஸத்திலிருந்து தப்பிப்பிழைத்தல் “கம்யூனிஸ்ட் தடையுத்தரவின்கீழ் 40 ஆண்டுகளுக்கும் மேல்” (ஏப்ரல் 22, 1995) என்ற கட்டுரைக்கு உங்களுக்கு மிக்க நன்றி. நான் அதை வாசித்தபோது என் இருதயம் நெகிழ்ந்தது. ஒரு நபர் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும்படியாக யெகோவா எவ்வாறு தேவையான ஆதரவை சரியான நேரத்தில் கொடுக்கிறார் என்பதை அது எனக்குக் காண்பித்தது.

எஸ். ஏ. ஏ., கானா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்