மத சம்பந்தமான சுயாதீனத்தை நீங்கள் போற்றுகிறீர்களா?
எஸ்டோனியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
பார்னூ என்பது முன்னாள் சோவியத் யூனியன் குடியரசைச் சேர்ந்த ஒரு சிறிய பால்டிக் நாடான எஸ்டோனியாவின் ஒரு துறைமுக நகராகவும் விடுமுறை வாசஸ்தலமாகவும் உள்ளது. அந்நகரின் ஜனத்தொகை 50,000-க்கும் மேலாகும். அந்த மக்கள் தாங்கள் தெரிவு செய்துள்ள அந்த மதத்தைக் கைக்கொள்வதற்குரிய சுயாதீனத்தை இப்போது அனுபவிக்கின்றனர்—ஒருசில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கொண்டிராத ஒரு சுயாதீனம். ஜூன் 17, 1995-ல், பார்னூ லெட் என்ற உள்ளூர் செய்தித்தாள், பார்னூவில் 11 மதங்கள் இருப்பதாகவும் அவற்றைப்பற்றிய ஒரு தொடர் கட்டுரையை அச் செய்தித்தாள் வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டது.
அந்த முதல் கட்டுரை விவரித்தது: “நம்மெல்லாரையும் கவர்ந்துள்ள தெளிவான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் சபையிலிருந்து—யெகோவாவின் சாட்சிகளிலிருந்து—நாங்கள் ஆரம்பிக்கிறோம். . . . ஒரு மால்ட் பான வடிப்பாலையைச் சேர்ந்த ஹாலில் தங்கள் கூட்டங்களை இப்போது நடத்திவருகிறார்கள். 1931-ல் பைபிள் மாணாக்கர்கள் தங்களை யெகோவாவின் சாட்சிகள் என்று அழைத்துக்கொள்ள ஆரம்பித்தனர், அதே பெயரையே இந்நாள்வரை கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதிலும் 50 லட்சத்திற்கும் மேலான யெகோவாவின் சாட்சிகள் உள்ளனர். எஸ்டோனியாவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகம் டல்லினில் அமைந்துள்ளது.”
அந்தக் கட்டுரை தொடர்ந்தது: “யெகோவாவின் அறிவிப்பாளர்களது சபை பார்னூவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் 25 உறுப்பினர்கள் இருந்தனர்; இப்போது 120-ஆக அது வளர்ச்சியடைந்திருக்கிறது . . .
“அந்த முதல் பதிவு மிகவும் நம்பிக்கையளிப்பதாய் இருக்கிறது. மக்கள்—பெரும்பாலும் இளம் தம்பதிகள்—சிநேகபான்மையானவர்களாயும், நேர்த்தியாக உடையணிந்தவர்களாயும், திறந்த மனமுள்ளவர்களாயும் இருக்கின்றனர். அந்தப் பிள்ளைகள் அவ்வளவு ஒழுங்காக இருந்தது ஆச்சரியமூட்டுவதாய் இருந்தது, ஏனெனில் ஒரே இடத்தில் ஒன்றரை மணிநேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பது ஒரு சிறு பிள்ளைக்கு அவ்வளவு எளிதானதல்ல—ஆனால் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.”
யெகோவாவின் சாட்சிகள் பிற மதத்தவரிலிருந்து எவ்விதம் வேறுபட்டுள்ளனர் என்பதை விவரிப்பதாய், அந்தப் பத்திரிகை விளக்கியது: “முன்னே வரவிருக்கும் அந்தப் பரதீஸுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அந்தச் சபையினர் பைபிளை அவ்வளவு நன்றாகத் தெரிந்திருப்பதும் குறிப்பிடத்தகுந்தது, மேலும் சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது பைபிளில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று அவர்கள் கூறினர்.” முடிவாக அந்தக் கட்டுரை கூறினது: “யெகோவாவின் அறிவிப்பாளர்களாகிய, அந்த 120 பேர், தங்கள் தீர்மானத்தைச் செய்துள்ளனர்; மேலும் அது சரியான ஒன்று என்பதாக அவர்கள் நிச்சயமாயுள்ளனர். அவர்களது விசுவாசமும் அதைப் பற்றி அறிவிப்பதுமே அவர்களது வாழ்க்கையின் இலட்சியமாகும்.”
அந்நகரிலுள்ள மதங்களைக் குறித்த, திட்டமிடப்பட்டுள்ள ஒரு தொடர்கட்டுரையின் இந்த முதல் கட்டுரையால் பார்னூவிலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாய் இல்லை. ஜூலை 8, 1995-ல், அந்த பார்னூ லெட் அறிக்கை செய்தது: “ஒரு புதிய பத்தியை ஆரம்பித்ததன் தொடர்பாக, நான்கு சர்ச்சுகளிலிருந்து நாங்கள் பெற்றுள்ள ஒரு மனுவை வெளியிட விரும்புகிறோம்.” இந்த மனு, அல்லது கடிதம் எஸ்டோனியாவிலுள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச், எஸ்டோனியன் எவாஞ்செலிக்கல் லூத்தரன் சர்ச், எஸ்டோனியன் யூனியன் ஆஃப் எவாஞ்செலிக்கல் கிறிஸ்டியன்ஸ் அண்ட் பாப்டிஸ்ட்ஸ், எஸ்டோனியன் மெத்தடிஸ்ட் சர்ச் ஆசிய சர்ச்சுகளின் பிரதிநிதிகளால் ஒப்பமிடப்பட்டு அச் செய்தித்தாளுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இந்நான்கு மதப் பிரதிநிதிகளும் பின்வருமாறு புகார் செய்தனர்: “யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய கட்டுரையை முதலாவதாகக் கொண்டு அத்தொடர் கட்டுரையை நீங்கள் ஆரம்பித்திருப்பது எங்களுக்கு அளவுக்கு மிஞ்சி வினோதமாய்த் தோன்றுகிறது.” மேலுமாக, அவர்கள் கூறினர்: “இத் தொடர் கட்டுரையின் சம்பந்தமாக, பார்னூ லெட் செய்தித்தாளிடம் ஒரு பேட்டி கொடுக்க முடியாதென்று நாங்கள் கருதுகிறோம் என்பதை இத்துடன் குறிப்பிட விரும்புகிறோம்.”
அந்த மத பிரதிநிதிகள் முடிவாகக் கூறினர்: “‘ஆன்மீகத்தைப்’ பிரச்சாரம் செய்யும் பல்வேறு வகையான புதுப்புது மதங்களிடமிருந்தும் மதப்பிரிவுகளிடமிருந்தும் சுமத்தப்படும் அழுத்தங்களால் பலர் குழப்பமடைந்துள்ள ஒரு சமுதாயத்தில், உள்ளூரிலிருக்கும் மத சூழ்நிலையை கவனத்தில் எடுத்துக்கொள்ளுவதோடு, மதப்பிரிவுகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களிலிருந்து வரலாற்றுச் சிறப்புடைய சர்ச்சுகளைப் பிரித்துக் காட்டும் திறனுடைய பிரசுரங்களுக்கான தேவையை நாங்கள் காண்கிறோம். உலகளவில் ஒத்துழைப்பை அனுபவிக்கும் கிறிஸ்தவ சர்ச்சுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் எஸ்டோனியன் கவுன்ஸில் ஆஃப் சர்ச்சுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், இதுபற்றி போதியளவு தெளிவான வழிகாட்டும் ஒளியை அளிக்க வேண்டும்.”
என்றபோதிலும், இக் கடிதத்தைத் தொடர்ந்து, பார்னூ லெட் செய்தித்தாளின் எழுத்தாளர் பின்வரும் நிதானமான கருத்துக்களை அளித்தார்: “சரியானதாக நாம் கருதும் எல்லாமே சரியானதாய் இராமல் இருக்கலாம். பல்வேறு வகையான சபைகளைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையும் எண்ணங்களும் இந்நான்கு கனம்பொருந்திய சர்ச்சுகளின் நோக்குநிலைகளைப் போன்றதாகவே இராமல் இருக்கலாம், மேலும் இவர்களுடைய நோக்குநிலைகளும் எண்ணங்களும் கடவுளுடையதைப் போன்றதாய் இராமலும் இருக்கலாம். நம்மில் எவருமே தவறிழைக்காதவர்கள் அல்லர், நூற்றாண்டுகளளவு பழமையான பாரம்பரியங்களை உடைய சர்ச்சுகளும்கூட தவறிழைக்காதவை அல்ல.”
சோவியத் யூனியனைச் சேர்ந்த முன்னாள் குடியரசில் மதத்தைக் குறித்து மாறிய மனப்பான்மையைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? எங்குமுள்ள சத்தியத்தைத் தேடும் மக்கள் அங்கு அனுபவிக்கப்பட்டு வரும் மத சுயாதீனத்தைப் போற்றுவர் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
[பக்கம் 23-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பின்லாந்து
ஹெல்சிங்கி
செ. பீட்டர்ஸ்பர்க்
பால்டிக் கடல்
டல்லின்
எஸ்டோனியா
பார்னூ
ரஷ்யா
மாஸ்கோ
ரிகா
லாட்வியா
லிதுவேனியா
பெலாரூஸ்
வில்னியஸ்
மின்ஸ்க்
[பக்கம் 24-ன் படங்கள்]
பார்னூவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபை