உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 6/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வன்முறை அதிக தரக்குறைவான அளவுகளுக்குச் செல்கிறது
  • பெண்களுக்குக் கூடுதலான வேலைப் பளு
  • ‘சைபர்ஸ்பேஸில்’ மதம்
  • நிஜமாகவே பெரிய, நிஜமாகவே நாற்றமுள்ள ஒரு மலர்
  • ஓர் இத்தாலிய லுயர்ட்ஸா?
  • பிரேஸிலின் “புனித போர்”
  • நிலவர அமைதிக் காப்புக்குழு உறுப்பினர் கொலைகள்
  • வளரிளமை பருவ கழுகுகளுடன் தொந்தரவு
  • சுரங்க இரகசியத்தைப் பற்றிய கோட்பாடு
  • உலகிலேயே மிக நீளமான குகை பாதை
    விழித்தெழு!—2002
  • சுரங்கப்பாதைக்காக போராட்டம்
    விழித்தெழு!—1994
  • டென்மார்க் கிரேட் பெல்ட்டின் குறுக்கே
    விழித்தெழு!—1999
  • பைபிள் காலங்களில் எருசலேம்—புதைபொருள் ஆய்வு எதை வெளிப்படுத்துகிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 6/8 பக். 28-29

உலகை கவனித்தல்

வன்முறை அதிக தரக்குறைவான அளவுகளுக்குச் செல்கிறது

குத்துச் சண்டை போட்டிகள் அல்லது தற்காப்பு கலை போட்டிகள் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் போதியளவு வன்முறையற்றவை என நினைப்பவர்களுக்கு, ஐக்கிய மாகாணங்களிலிருக்கும் நிதியுதவியளித்து முன்னேற்றுவிப்பவர்கள், “மட்டுமீறிய சண்டையிடுதல்,” அல்லது “இறுதிநிலையான சண்டையிடுதல்” என்றழைக்கப்படும் புதிய மாற்றுவகை போட்டியை உருவாக்கியிருக்கின்றனர். தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை ஒன்றின்படி, அந்தக் கருத்து மிகவும் எளியது: “இரண்டு ஆண்களில் ஒருவர் சரணடையும் வரை அல்லது உணர்விழந்தவராகத் தள்ளப்படும்வரை அவர்கள் ஒருவரையொருவர் குத்திக்கொண்டே இருக்கிறார்கள்.” அவர்கள் தங்கள் குத்துகளை மெதுவாக்குவதற்காக கை உறைகளை அணிவதில்லை; ஆட்டத்தில் சுற்றுகளோ இடைவேளைகளோ கிடையாது; கடித்தல் அல்லது கண்ணை தோண்டியெடுத்தலுக்கு எதிரான தடைகளைத் தவிர வேறு ஒருசில விதிமுறைகளே இருக்கின்றன. குத்துச் சண்டை, ஜூடோ, கராத்தே, மற்போர், அல்லது தெருச் சண்டை ஆகியவற்றிலிருந்து உத்திகளை எதிராட்டக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள்—பெரும்பாலும் இரத்தம் சிந்தும் விளைவுகளே ஏற்படுகின்றன. டிக்கெட்டுகளுக்காக $200 அளவு வரையாக பணம் செலுத்துகிற கட்டுப்பாடற்ற கிளர்ச்சி ஆரவாரம் செய்யும் விசிறி கும்பல்களுக்கு முன்பாக அந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன; கேபிள் டிவியிலும் வாடகைக்குக் கிடைக்கும் வீடியோ கேஸட்டுகளாகவும் அந்தச் சண்டைகள் பிரபலமாக இருக்கின்றன. என்றாலும், அநேக மாகாணங்கள் ஏற்கெனவே இந்த நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதித்திருக்கின்றன.

பெண்களுக்குக் கூடுதலான வேலைப் பளு

வீட்டினுள் இங்குமங்குமாகச் செய்யப்படும் வேலையில் ஆண்களும் பெண்களும் சமமாகப் பங்கெடுக்கிறார்களா? இல்லை என்பதாக ஜெர்மானிய கூட்டரசு புள்ளிவிவர அலுவலகம் நடத்திய சுற்றாய்வு ஒன்று காண்பிக்கிறது. வீட்டினுள் இங்குமங்குமாக வேலை செய்வதற்குச் செலவிடப்படும் நேரத்தை ஆராய்ந்து, பதிவு செய்துவைக்கும்படியாக பொருளியலாளர்கள் நார்பெர்ட் ஷ்வார்ட்ஸும் டிடர் ஷாஃபரும் 7,200 குடும்பங்களைக் கேட்டுக்கொண்டனர். பாத்திரங்களைக் கழுவுதல், கடைக்குச் செல்லுதல், நோயுற்ற உறவினரைக் கவனித்தல், காரைப் பழுதுபார்த்தல் போன்ற வேலைகளை அந்தச் சுற்றாய்வு உட்படுத்தியது. “உலகப்பிரகாரமான ஒரு வேலை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஊதியமற்ற வேலை செய்வதில் ஆண்களைவிட பெண்கள் இருமடங்கு அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்,” என்பதாக ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் அறிக்கை செய்கிறது.

‘சைபர்ஸ்பேஸில்’ மதம்

ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் டாட்டா பேஸ்களின் வலைப்பின்னல்களாகிய ‘சைபர்ஸ்பேஸை’ ஆராய்வதற்காகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறவர்கள், தேர்வுசெய்வதற்கு அதிக மதசம்பந்தமான தெரிவுகள் இந்தக் காலத்தில் இருக்கின்றன. உலகளாவிய வலைப்பின்னல் (World Wide Web) தற்போது தி மேரி பேஜ் என்பதைக் கொண்டிருக்கிறது; அதில், அறியும் ஆர்வமுள்ளவர்கள், கன்னி மரியாள் எப்போதும் இள நீல உடையை அணிந்திருப்பதாய் சித்தரிக்கப்படுவதேன் என்பது போன்ற பெரும்பாலும் கேட்கப்படுகிற பத்துக் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிக்கலாம். மின்சாரம் போன்ற தொழில்நுட்பத்தை வெறுத்தொதுக்குகிறவர்களாகிய அமிஷ், அமிஷைக் கேளுங்கள் (Ask the Amish) என்றழைக்கப்படும் ஓர் அம்சத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றனர். கேள்விகள் அச்சிடப்பட்ட ஒரு பிரதி அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது, அவர்கள் கையெழுத்தில் பதில் எழுதுகிறார்கள்; அந்தப் பதில்கள் ஒரு மத்தியஸ்தர் மூலமாக கம்ப்யூட்டரால் அனுப்பப்படுகின்றன. கிறிஸ்தவ நூற்றாண்டு (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது என்னவென்றால், இன்டர்நெட்டில் தற்போது பாவ அறிக்கை சாவடி என்றழைக்கப்படும் ஓர் “இடம்” இருக்கிறது; அங்கு டிஜிட்டல் பாதிரி கேட்கிறார், “நீங்கள் பாவ அறிக்கை செய்ய விரும்பும் விஷயம் என்ன?” அடுத்த வரியானது, பலவற்றிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்யும் பதில். “நான் பின்வரும் பாவத்தைச் செய்தேன்: (கொலை) (விபசாரம்) (சோம்பேறித்தனம்) (காமம்) (பேராசை) (ஏமாற்றுதல்) (பெருந்தீனி கொள்ளுதல்) (பெருமை) (கோபம்) (பொருளாசை) (தவறாக வைக்கப்பட்ட முன்னுரிமைகள்).”

நிஜமாகவே பெரிய, நிஜமாகவே நாற்றமுள்ள ஒரு மலர்

உலகிலேயே மிகப் பெரிய மலர் உண்மையிலேயே ஒரு விநோதமான படைப்பாக இருக்கிறது. ராஃப்லிஷியா என்று அழைக்கப்பட்டதாய், அது சுமார் ஒரு பேருந்தின் டையர் அளவானதாகவும் கருத்தரிப்பிலிருந்து பிறப்பு வரையாக வளர்வதற்கு ஒரு மனிதன் எடுத்துக்கொள்ளும் அளவு காலத்தை அது மலர்வதற்கு எடுத்துக்கொள்வதாகவும் இருக்கிறது. ஒரு பூச்செண்டிற்கு ஏற்றதாக இந்த மலர் இல்லை என்பதற்கு அதன் அளவு மட்டுமே காரணமாக இல்லை. அது நாற்றமெடுக்கிறது. அதன் மகரந்த சேர்க்கைக்கு அவசியமான ஈக்களைக் கவர்வதற்காக, ராஃப்லிஷியா, அழுகுகிற இறைச்சியைப் போல நாற்றமெடுக்கிறது. கடந்தகாலத்தில், ராஃப்லிஷியா வளர்கிற மழைக் காடுகளில் வாழ்ந்த மலேசிய கிராமவாசிகள் அதற்கு பிசாசின் கோப்பை என்பதாகப் பெயரிட்டு அழைத்து, அதைக் கண்டவுடன் வெட்டிப்போட்டிருக்கிறார்கள். என்றபோதிலும், சௌத் சைனா மார்னிங் போஸ்ட் சொல்லுகிறபடி, அறிவியலாளர்கள் அந்த மலரைப் பற்றி மேலுமாக ஆய்வு செய்வதற்கேதுவாக கின்னாபாலூவின் மலேசிய நாட்டு பூங்கா அந்த அரிய மலரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. ராஃப்லிஷியாக்களைப் படமெடுப்பதற்காக காட்டுக்குள் சுற்றுலாப் பயணிகளை வழிகாட்டிச் செல்வதன்மூலம் உள்ளூர் கிராமவாசிகள் தற்போது கூடுதலான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். சந்தேகமின்றி, பெரும்பாலானோர், அவற்றிலிருந்து ஜாக்கிரதையான தூரத்தில் தள்ளியே நிற்கின்றனர்.

ஓர் இத்தாலிய லுயர்ட்ஸா?

சிவிட்டாவெக்யா என்ற இத்தாலிய நகரில், மடோனாவின் சிலை ஒன்று இரத்தக் கண்ணீர் வடித்ததாக சமீபத்தில் சொல்லப்பட்டது; அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான ஆர்வமுள்ள பார்வையாளர்களும் யாத்ரீகர்களும் திரண்டு வந்திருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக, அவிசுவாசி என்று தன்னைக் கருதும் மேயராகிய பியீட்ரோ டிடேயி, உயர் பதவி வகிக்கும் கத்தோலிக்க குரு ஒருவருடன் சேர்ந்து பிரான்ஸுக்குப் பயணம் செய்தார். லுயர்ட்ஸ் என்ற பிரபல நகரத்தை அவர்கள் விஜயம் செய்தார்கள்; “அற்புதங்கள்” நடப்பதாகக் கருதப்பட்ட அதன் கத்தோலிக்க புனித ஸ்தலத்திற்கு அது புகழ்பெற்றதாக இருக்கிறது. அந்த விஜயம் ஒரு புனித யாத்திரை அல்ல. மாறாக, லுயர்ட்ஸின் ‘பொருளாதார அற்புதத்தை’ ஆராய்வதே அதன் நோக்கமாக இருந்தது; மிகுந்த வருவாயை அளிக்கும் மெக்காவைப் போல் சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் வரும்படி, சிவிட்டாவெக்யாவை எவ்வாறு ஒழுங்கமைத்து நிர்வகிப்பது என்பதைப் பற்றிய கருத்துக்களைப் பெறவே சென்றிருக்க வேண்டும் என்பது தெளிவாக இருந்தது.

பிரேஸிலின் “புனித போர்”

பிரேஸிலில், அந்நாட்டின் செய்தித்துறை ஒரு புனித போர் என்பதாக அழைத்த ஒன்றை பெந்தெகொஸ்தே போதகர் ஒருவர் சமீபத்தில் தொடங்கி வைத்தார். தேசிய டிவி ஒளிபரப்பு ஒன்றில், அந்தப் போதகராகிய ஸெர்ஷியோ ஃபான் ஹெல்டா, கத்தோலிக்க சர்ச்சின் உருவ வழிபாட்டைக் கண்டனம் செய்தார். இந்தக் குறிப்பை வலியுறுத்துவதற்காக அவர், பிரேஸிலின் 11,00,00,000 கத்தோலிக்கர்களுக்கு ஆதரவளிக்கும் புனிதராகச் சேவிக்கும் கன்னி மரியாளின் கறுப்பு உருவ சித்தரிப்பாகிய, அப்பாரெஸீடாவின் தூய கன்னி மேரியுடைய மண் சிலை ஒன்றைக் காட்சியில் வைத்தார். ஃபான் ஹெல்டா அந்தச் சிலையைத் திரும்பத்திரும்ப அடித்துக்கொண்டும் உதைத்துக்கொண்டும் இருந்து, அதை ஒரு “பயங்கரமான, அருவருப்பான பொம்மை” என்பதாக அழைத்தார். தெருக்களினூடே, ஆதரவளிக்கும் அந்த புனிதரின் உருவச் சிலைகளை ஏந்திச் சென்று, ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். யுனிவெர்ஸல் சர்ச் ஆஃப் தி கிங்டம் ஆஃப் காட் என்றழைக்கப்படும் ஃபான் ஹெல்டாவின் பெந்தெகொஸ்தே பிரிவின் சர்ச்சுகளை, கூச்சலிடும், கல்லெறியும் கும்பல்கள் சூழ்ந்திருக்கின்றன. அப்போது முதல் தன்னுடைய அதிகாரப்பூர்வ பதவியிலிருந்து இந்தச் சர்ச்சின் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் ஃபான் ஹெல்டா, தனது தாக்குதலைக் குறித்து மீண்டும்மீண்டும் ஒளிபரப்பியதற்காக மக்கள் தொடர்பு சாதனங்களைக் குற்றஞ்சாட்டுகிறார். “டிவி க்ளோப் [அந்நாட்டின் மிகப் பெரிய தொலைக்காட்சி வலைப்பின்னல் அமைப்பு] என்னை ஓர் அரக்கனாக்கியது,” என்று அந்தப் போதகர் கூறினார்.

நிலவர அமைதிக் காப்புக்குழு உறுப்பினர் கொலைகள்

தென் ஆப்பிரிக்காவில், வாகனங்களை திசை மாற்றிக் கொண்டு செல்பவர்களாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு தொகுதியினர், கோபாவேசமுள்ள ஒரு கும்பலால் அவர்களுடைய வீடுகளிலிருந்து பிடித்துச் செல்லப்பட்டு, பயங்கரமாக வெட்டிக் கொல்லப்பட்டு, பெயின்ட் பூசப்பட்டார்கள். அப்படிப்பட்ட நிகழ்வுகளின் அதிகரிப்பு, “போலீஸில் அதன் நம்பிக்கையை இழந்ததாயும், குற்றச்செயலால் ஆட்டிப்படைக்கப்பட்டதாயும் அதைக் குறித்து மிகை உணர்ச்சி உள்ளதாயும் இருக்கிற ஒரு சமுதாயத்தின் அறிகுறி” என்பதாக ஸாட்டர்டே ஸ்டார் செய்தித்தாள் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட நடத்தையைப் பொறுத்துக்கொள்ளத்தக்கதாகக் கருதாத போதிலும், பலியாட்களைக் கொன்ற பிறகு அவர்களுக்குப் பெயின்ட் அடிக்கும் செயலை குற்றவியல் நிபுணர்கள் குறிப்பிடத்தக்கதாய் கருதுகின்றனர். குற்றவாளிகளாகும் சாத்தியமுள்ள மற்றவர்களுக்கு அது ஓர் எச்சரிக்கையை அர்த்தப்படுத்தியது. குற்றவியல் நிபுணர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அந்த நிலைமை முழுமையாக கட்டுக்கடங்காததாய் சென்றுவிட்டது என்பதற்கும் பொது மக்கள், குற்றவாளிகளுடைய முற்றுகையின்கீழ் இருக்கிறார்கள் என்ற கருத்தை அவர்களால் இனிமேலும் ஜீரணிக்க முடியாது என்பதற்கும் எல்லா அறிகுறிகளும் இருக்கின்றன.”

வளரிளமை பருவ கழுகுகளுடன் தொந்தரவு

கலிபோர்னியா கழுகு—இந்த நூற்றாண்டில் மெய்யளவில் இனமற்றுப்போயிருக்கிற அழுகிய பிணம் தின்னும் பெரிய பறவை ஒன்று—கூண்டுக்குள் வளர்க்கப்படும் கழுகுகளை இயற்கை சூழலுக்கு விடுவிக்கும்படி முயலும் இயற்கை வள பாதுகாவலர்களுக்கு விசேஷித்த சவால்களை அளிக்கிறது. வளரிளமை பருவத்தில் இருப்பவையாய் வெளியே விடப்பட்ட அந்தப் பறவைகள், “அவற்றின் ஆய்வு செய்கிற பருவத்தில், பருவ வயதில், எதையும் முயன்று பார்க்கும் ஆர்வமுள்ள பருவத்தில்” இருக்கின்றன என்பதாக நியூ ஸயன்டிஸ்ட்டில் மேற்கோள் காட்டப்பட்ட இயற்கை வள பாதுகாவலர் ஒருவர் சொல்லுகிறார். மனிதரைக் குறித்தோ மின்சாரக் கம்பிகளைக் குறித்தோ எவ்வித பயமும் இல்லாமல் இருப்பது, எத்தனையோ கழுகுகள் தங்கள் உயிரை அல்லது சுதந்திரத்தை இழப்பதில் விளைவடைந்திருக்கிறது. ஆகவே கழுகு குஞ்சிகளை வளர்ப்பதற்கு இயற்கை வள பாதுகாவலர்கள் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். மின் கம்பிகளைத் தவிர்க்கும்படி பறவைக்குக் கற்றுக்கொடுப்பதற்காக கடுமையில் குறைந்த மின் அதிர்ச்சிகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். மக்களிடம் வெறுப்புணர்ச்சியைக் கற்றுக்கொடுப்பதற்காக, பல மக்கள் திடீரென்று அந்தப் பறவைமீது வேகமாகப் பாய்ந்து, அதைப் பிடித்து, பின்னர் அதை மல்லாக்க வைத்து பிடித்துக்கொள்கிற சில வேளைகளைத் தவிர மற்றபடி கழுகுகள் அவர்களைக் காணாதபடி பார்த்துக்கொள்கின்றனர். “கழுகுகள் இவ்வாறு செய்யப்படுவதை வெறுக்கின்றன,” என்பதாக நியூ ஸயன்டிஸ்ட் குறிப்பிடுகிறது; இவ்வாறு மக்களைத் தவிர்ப்பதற்கு அவை கற்றுக்கொள்கின்றன. இதுவரையிலுமாக, இந்தச் சூழ்ச்சிமுறை ஓரளவு வெற்றியைக் கண்டிருக்கிறது.

சுரங்க இரகசியத்தைப் பற்றிய கோட்பாடு

அசீரிய சேனையால் முற்றுகையிடப்படும்போது, எருசலேமுக்குத் தண்ணீர் கிடைப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக, பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் தோண்டி உருவாக்கப்பட்ட எசேக்கியாவின் சுரங்கம் ஏன் அப்பேர்ப்பட்ட தற்செயலான, வளைந்து நெளிந்து செல்லும் போக்கைத் தொடர்கிறது என்பதைப் பற்றி தொல்பொருள் ஆய்வாளர்கள் நெடுங்காலமாக யோசித்திருக்கிறார்கள். அந்தச் சுரங்கத்திற்காக 533 மீட்டர் தோண்டப்பட்டிருப்பதற்குப் பதிலாக, நேரான, அதிக பயனுள்ள பாதை ஒன்றிற்காக 320 மீட்டர் மட்டுமே தோண்டுவது போதுமானதாக இருந்திருக்கும். பண்டைய எபிரெயுவில் எழுதப்பட்ட எழுத்துப் பொறிப்பு ஒன்று, 1880-ல் சுரங்கச் சுவரில் காணப்பட்டது. எவ்வாறு இரு தொகுதியான பணியாட்கள் பாறையில் குடையப்பட்ட சுரங்கத்தின் எதிர்எதிர்முனைகளிலிருந்து வேலையைத் தொடங்கி மத்தியில் சந்தித்தார்கள் என்று அது விளக்கியது. அந்தச் சுரங்கத்தின் வளைந்து நெளிந்து செல்லும் பாதையைக் கருதுகையில், அவர்களால் எப்படி அவ்வாறு சந்திக்க முடிந்தது என்ற மேலுமான கேள்வியை இது எழுப்பியது. புவியியலாளர்கள் அதற்கான விடையைக் கொண்டிருப்பதாக இப்போது நினைக்கிறார்கள். இஸ்ரேலின் நில இயல் அளக்கைத் துறையைச் சேர்ந்த டான் கில்லின்படி, நிலநடுக்க அழுத்தங்களால் அல்லது வித்தியாசப்பட்ட பாறை அடுக்குகள் சந்திக்கையில், கீறல்கள் ஏற்பட்ட இடங்களில் பாறைகளினூடே தண்ணீர் வளைந்து நெளிந்து சென்ற இயற்கையான வாய்க்கால்களின் போக்கைப் பணியாட்கள் பின்பற்றி, அவற்றை அகலமாக்கினார்கள். காலம் கடந்து சென்றபின், இவை சில இடங்களில் மிகவும் அகலமாகி இருக்கலாம்; சுரங்கத்தின் உயரம் 1.7 மீட்டரிலிருந்து 5 மீட்டர் அளவு வரையாக ஏன் இருந்தது என்பதையும், எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்திய அந்தப் பணியாட்களுக்குப் போதிய காற்று எப்படி கிடைத்தது என்பதையும் இது விளக்கக்கூடும். அந்தப் பணியாட்கள் திறமை வாய்ந்தவர்களாகவும் இருந்தார்கள்; ஏனென்றால், முழு ஓட்டப் போக்கிலும் லேசான இறக்கச் சரிவை, வெறும் 31.75 சென்டிமீட்டர் சரிவை, கொண்டிருந்ததிலேயே அந்தச் சுரங்கத்தின் வெற்றி சார்ந்திருந்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்