உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 6/8 பக். 27
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 6/8 பக். 27

எமது வாசகரிடமிருந்து

ஊனமுற்ற முழுநேர ஊழியர் வருடங்களினூடே அநேக கட்டுரைகள் என் நெஞ்சைத் தொட்டிருக்கின்றன—ஆனால் “ஒரு துப்பாக்கிக் குண்டு என் வாழ்க்கையை மாற்றினது,” (அக்டோபர் 22, 1995) என்ற குளோரியா உவில்லியம்ஸின் அனுபவத்தைப் போல வேறு எதுவும் என்னை அவ்வளவு ஆழமாக நெகிழ்விக்கவில்லை. அவர்களுடையதுடன் ஒப்பிடுகையில் என்னுடைய பிரச்சினைகள் அற்பமானவையாகிவிடுகின்றன! அவ்வளவு வளமான ஆவிக்குரிய உணவையும் உற்சாகத்தையும் எங்களுக்குத் தந்ததற்காக உங்களுக்கு நன்றி.

இ. எல்., கனடா

நாம் எவ்விதமான சூழ்நிலைகளை எதிர்ப்பட்டாலும், அவை எவ்வளவு மோசமானவையாய் இருந்தாலும் சரி, யெகோவாவிடம் ஜெபம் செய்து உதவிக்காகக் கேட்கலாம் என்று இந்த அனுபவம் எனக்கு நினைவூட்டியது. நான் தற்போது பள்ளியில் மோசமான நிலைமையை அனுபவிக்கிறேன்; சோர்ந்துபோய் விடுகிறேன். ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்தது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.

எம். எஸ்., ஜப்பான்

குளோரியா உவில்லியம்ஸின் கதையை வாசித்தபோது, என் கண்களில் கண்ணீர் நிரம்பியது. மதரீதியில் பிளவுபட்ட குடும்பத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற போதிலும், வெளி ஊழியத்தில் தொடர்ந்து என்னுடைய மிகச் சிறந்ததைச் செய்ய உற்சாகமளித்தது.

எஃப். சி., இத்தாலி

முழு நேரமாகப் பிரசங்கிப்பதற்கான என்னுடைய இலக்கில் விடாமுயற்சியுடன் தொடருவதற்கு இந்தக் கட்டுரை எனக்கு உற்சாகமளித்திருக்கிறது. குளோரியா உவில்லியம்ஸால் அவ்வாறு செய்ய முடிந்தால்—என்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தும் ஊனமின்றி இருக்கையில்—என்னால் ஏன் செய்ய முடியாது?

ஐ. ஓ. ஏ., நைஜீரியா

மரம் எனக்கு வயது 11; “மரத்தால் ஏன் கட்டவேண்டும்?” (அக்டோபர் 22, 1995) என்ற கட்டுரையை நான் நிஜமாகவே அனுபவித்தேன். யெகோவாவின் வல்லமையையும் திறமையையும் போற்றுவதற்கு அது எனக்கு உதவியது. அவரோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் என்னை நெருங்கிவரவும் வைத்தது, ஏனென்றால் அவர்கள் இருவரும் எவ்வளவு அறிவும் ஞானமும் உள்ளவர்கள் என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன்.

ஏ. பி., ஐக்கிய மாகாணங்கள்

ஏன் இன்னும் மணமாகாதவராக இருக்கிறேன்? “இளைஞர் கேட்கின்றனர் . . . ஏன் என்னைத் தவிர எல்லாரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்?” (அக்டோபர் 22, 1995) என்ற கட்டுரைக்கு மிகவும் நன்றி. மிகவும் இளமையான வயதிலிருக்கும் அநேகர் திருமணம் செய்வதால், திருமணங்களில் ஓர் திடீர் அதிகரிப்பு இந்தப் பகுதிகளில் காணப்பட்டிருக்கிறது. எனக்கு 18 வயதாகியும் ஒரு ஆண் நண்பன் இல்லை என்பதால், சிலர் என்னைக் குறித்துக் கவலைப்படுகிறார்கள். சமநிலையான மனப்பான்மையைக் காத்துக்கொள்ள எனக்கு உதவுவதற்குச் சரியான நேரத்தில் இந்தக் கட்டுரை வெளிவந்தது.

எஸ். ஸெட்., ஜெர்மனி

19 வயதாகவும் மணமாகாமலும் இருக்கும் நான், யாரும் என்னிடம் அக்கறை காண்பிக்காமல் இருக்கும் வகையில் என்னிடத்தில் என்ன குறை இருக்கிறது என்று அடிக்கடி யோசிக்கிறேன். அவிசுவாசிகள் சிலர் என்னிடம் அக்கறை காட்டியிருக்கிறார்கள், ஆனால் அந்த விதமான கவனத்தை நான் விரும்பவில்லை. பொறுமை அவசியம் என்றும், நான் யெகோவாவைப் பிரியப்படுத்துவதே உண்மையில் முக்கியமான காரியம் என்றும் புரிந்துகொள்வதற்கு அந்தக் கட்டுரை எனக்கு உதவியது.

ஜே. ஜி., ஐக்கிய மாகாணங்கள்

38 வயதுள்ள, மணமாகாத ஒருவனாக, அந்தக் கட்டுரை தலைப்பில் கேட்கப்பட்ட கேள்வியை என்னை நானே கேட்டிருக்கிறேன். மணமாகாத கிறிஸ்தவ சகோதரிகளால் எண்ணற்ற நிராகரிப்புகளைச் சகித்திருக்கிற நான், “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல்” ஏற்படுத்தும் வேதனையை நன்றாகவே அறிந்திருக்கிறேன். (நீதிமொழிகள் 13:12) இவ்விதமான நிலைமையில் இருக்கும் மணமாகாத கிறிஸ்தவர்களின் உணர்வுகளை யெகோவா நியாயமானவையாகக் கருதுகிறார் என்றும் நாம் உண்மையுடன் சகித்திருப்பதை அவர் மதித்துணருகிறார் என்றும் அறிவது நம்பிக்கை அளிப்பதாய் இருக்கிறது.

டி. டி., ஐக்கிய மாகாணங்கள்

தலைசிறந்த கலைஞர் “தலைசிறந்த கலைஞரைத் தேடி” (நவம்பர் 8, 1995) என்ற தொடர் கட்டுரைகளை வாசித்த பிறகு, என்னுடைய போற்றுதலைத் தெரிவிக்கும்படி தூண்டப்பட்டேன். மகத்தான திட்டமைப்பாளருக்கு உரிய பாராட்டை அளிக்க தவறுகிற இயற்கை பற்றிய எத்தனையோ அதிகமான நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டிருக்கிறேன். என்றபோதிலும், விழித்தெழு! நிலையாக நம்முடைய மகத்தான கடவுளாகிய யெகோவாவுக்குப் பாராட்டை அளிக்கிறது.

இ. ஸெட்., ஐக்கிய மாகாணங்கள்

யெகோவாவை மதிப்புடன் நோக்குவதற்கு என்னே ஓர் அருமையான புதிய வழி! அவருடைய வேலைப்பாட்டின் அளவு ஒப்பிடப்பட முடியாததாய் இருப்பதைப் போலவே அவருடைய கலையின் தரமும் உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. மக்களை யெகோவா தேவனிடமாகக் கவர்ந்திழுப்பதற்காக, விழித்தெழு!-வை கவரத்தக்கதாக்கும் அநேக திறம்படைத்த கலைஞர்களுக்கும் சபாஷ் என்றும் நான் கூற விரும்புகிறேன்.

எம். க்யூ., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்