உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 8/8 பக். 15
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இந்த வினாடிவினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; முழு விடை பட்டியல், பக்கம் 21-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—2002
  • உங்களுக்குத் தெரியுமா?
    விழித்தெழு!—2003
விழித்தெழு!—1996
g96 8/8 பக். 15

உங்களுக்குத் தெரியுமா?

இந்த வினாடிவினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம்; முழு விடை பட்டியல், பக்கம் 21-ல் அச்சிடப்பட்டிருக்கிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. பிரசங்கிக்கையில், முதலில் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று சொல்லி, பின்னர் எடுத்துச் செல்லும்படி இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொல்லியிருந்தது எது? (லூக்கா 9:3; 22:35, 36; NW)

2. இரத்தத்தைப் போலின்றி, சாப்பிடக்கூடாதென்று இஸ்ரவேல் தேசத்தாருக்கு மட்டுமே தடைவிதிக்கப்பட்டிருந்தது எது? (லேவியராகமம் 3:17)

3. இஸ்ரவேலுக்கு ஓர் இரட்சகனாக இருக்கும்படி யெகோவாவின் தூதன் கிதியோனைக் கட்டளையிட்டபோது கிதியோன் எங்கு இருந்தார்? (நியாயாதிபதிகள் 6:11-14)

4. சீரியர்களுக்கு எதிராகச் செல்லவிருந்த அரசனாகிய ஆகாபின் போர் நடவடிக்கைகளைக் குறித்ததில், அவனிடம் பேசிய சுமார் 400 பேரில் எந்தத் தீர்க்கதரிசி மட்டுமே உண்மை பேசினார்? (1 இராஜாக்கள் 22:13)

5. இஸ்ரவேலரின் 40-வருட வனாந்தர பயணத்தின்போது ஒவ்வொரு இஸ்ரவேலனுக்கும் எபிரெய உலர் அளவையில் எவ்வளவு மன்னா தினசரி வரையறுக்கப்பட்டது? (யாத்திராகமம் 16:16)

6. பெரிய நகரமாகிய நினிவே என்னவாகும் என்பதாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது? (செப்பனியா 2:13)

7. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பார்த்தப் பிறகு மோசே எந்த மலையில் இறந்தார்? (உபாகமம் 32:49, 50)

8. தங்கள் முந்தைய வாழ்க்கை பாணிக்குத் திரும்பிய கிறிஸ்தவர்களை, கழுவப்பட்ட பின்னர் சேற்றில் புரளும்படி திரும்புகிற எந்த விலங்குடன் பேதுரு ஒப்பிட்டார்? (2 பேதுரு 2:22)

9. பைபிளில் 1 நாளாகமம், நெகேமியா, எஸ்தர், மற்றும் தானியேல் ஆகிய புத்தகங்களில் மட்டும் எந்த வகையான கட்டடம் குறிப்பிடப்பட்டுள்ளது? (தானியேல் 8:2)

10. நீதிமொழிகள் 23:27, ஒரு வேசியை எதற்கு ஒப்பிடுகிறது?

11. இராயனாகிய நீரோவைப் பற்றி குறிப்பிடுகையில் பெஸ்து என்ன பதவிப்பெயரை பயன்படுத்தினார்? (அப்போஸ்தலர் 25:21, NW)

12. தெசலோனிக்கேயாவிலுள்ள சபைக்கு வாழ்த்துக்களும் உற்சாகமும் அனுப்பப்பட்டபோது, எந்த இரண்டு பயணக் கண்காணிகள் கொரிந்துவில் தீமோத்தேயுவுடன் இருந்தார்கள்? (1 தெசலோனிக்கேயர் 1:1)

13. ஒருவர் தன்னை ‘உலகத்தால் கறைபடாமல்’ வைத்துக்கொண்டால் மட்டுமே ‘மாசில்லாததாயும் சுத்தமானதாயும்’ கடவுள் ஏற்றுக்கொள்கிறது என்னவென்று யாக்கோபு சொன்னார்? (யாக்கோபு 1:27, NW)

14. இஸ்ரவேலின் ஆண்மக்கள் எல்லாரும் ஒவ்வொரு வருடத்திலும் எத்தனை முறை, எருசலேமில் ‘யெகோவாவுக்கு முன்பாக’ வரவேண்டும்? (உபாகமம் 16:16, NW)

15. இயேசு தமது உயிர்த்தெழுதலுக்குப் பின் தம்முடைய அப்போஸ்தலருக்குக் காணப்பட்டபோது, அவர்கள் ஒரு ஆவியைக் கண்டுகொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவர் என்ன சாப்பிட்டார்? (லூக்கா 24:36-43)

16. மனிதர், இரட்சிப்புக்கு காரணமாக இல்லாதிருப்பதால், நீங்கள் என்ன செய்யக்கூடாதென சங்கீதம் 146:3 சொல்லுகிறது?

17. குழந்தை மோசே, பார்வோனால் கொல்லப்படுவதிலிருந்து காக்கப்படும் முயற்சியில் என்ன வகையான தாவரங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டார்? (யாத்திராகமம் 2:3)

18. எந்தப் பெலிஸ்திய தெய்வம் யெகோவாவின் உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாக மதிப்பிழக்கும்படி செய்விக்கப்பட்டது? (1 சாமுவேல் 5:2-7)

19. கடவுள் எதைத் தம்முடைய “பாதபடி” என்கிறார்? (அப்போஸ்தலர் 7:49)

20. ஆலயத்தையும் இசைக்கருவிகளையும் உண்டாக்குவதில் எந்த அரிய மற்றும் விலையுயர்ந்த மரம் பயன்படுத்தப்பட்டது? (1 இராஜாக்கள் 10:12, கிங் ஜேம்ஸ் வர்ஷன்)

21. அரசனாகிய யோசியா செவிகொடுக்காமல், அதனால் கொல்லப்பட்ட, ‘தேவனுடைய வாயின்’ அந்த வார்த்தைகளைச் சொன்ன எகிப்திய பார்வோன் யார்? (2 நாளாகமம் 35:22)

22. தன் கணவனுடைய மரணத்திற்குப் பின் ஒரு பெண் எதிலிருந்து விடுதலையாக்கப்படுகிறாள்? (ரோமர் 7:3, NW)

வினாடிவினாவுக்கான விடைகள்

1. உணவுப் பை

2. கொழுப்பு

3. ஒப்ராவில்

4. மிகாயா

5. ஒரு ஓமர்

6. பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலம்

7. நேபோ பர்வதம்

8. பன்றி

9. அரமனை

10. படுகுழி

11. மாண்புமிக்கவர்

12. பவுலும் சில்வானும்

13. வழிபாட்டு மாதிரி

14. மூன்று

15. பொரித்த மீன்கண்டம்

16. பிரபுக்களையோ மனுபுத்திரனையோ நம்புவது

17. நாணல்

18. தாகோன்

19. பூமி

20. அகில்

21. நேகோ

22. அவனுடைய பிரமாணம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்