பெண் கும்பல்கள்—பீதியுண்டாக்கும் ஒரு போக்கு
கனடாவின் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள இளம்பெண்களின் கும்பல்களை விவரிப்பதற்கு, “இரக்கமின்மை, வன்செயல் மற்றும் முரட்டுத்தனம்” ஆகிய வார்த்தைகளை தி குளோப் அண்ட் மெயில் செய்தித்தாள் பயன்படுத்தியது. ஆண் கும்பல்களின் பாகமாக இருந்து சலித்துப்போனவர்களாய், அதிகரிக்கும் எண்ணிக்கையான இளம்பெண்கள் தங்களது சுயாதீனத்தை வற்புறுத்திக் கேட்கின்றனர். இளைஞர் கும்பல்களை விசேஷமாக துப்பறியும் டோரன்டோ போலீஸ் ஒருவர், இளம்பெண்கள் “மிக வன்முறையான விதத்தில் தங்கள் உரிமையை வற்புறுத்துவதாக” கண்டார். அவர்கள் “ஆயுதங்களையும் ‘தீவிர’ பலத்தையும் பயன்படுத்த” விரும்புகின்றனர், மேலும் “தங்களது சரிபாதியான ஆண்களைக் காட்டிலும் அடிக்கடி அதிக இரக்கமற்றும் ஆக்கிரமிப்புள்ளவர்களாகவும்” இருக்கின்றனர் என்பதாக குளோப்-ல் டாக்டர் ஃபரெட் மாத்யூஸ் சொன்னார். ஏன்? ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின்படி, இளம்பெண்கள் “பிடிக்கப்பட்டால் குறைவான காலம் சிறையில் வைக்கப்படுவதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது” என்ற பிரபலமான உணர்வு, சட்டத்தை மீறும் இளைஞர்களுக்கிடையே உள்ளது. போலீஸின் சார்புப்பேச்சாளர் குளோப்-பிடம் இவ்வாறு சொன்னார்: “11 வயதே ஆன சிறுமிகள் அற்பமான குற்றச்செயலிலும் மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை வியாபாரம் செய்வதிலும் ஈடுபடுகின்றனர்.”
அப்படிப்பட்ட வன்செயலின்பேரிலான மனநிலை மருத்துவரும் நிபுணருமான டாக்டர் மாத்யூஸ், பத்து வருடங்களுக்கும் அதிகமாக பெண் கும்பலின் அங்கத்தினர்களாயிருப்போரை பேட்டிகண்டு, அவர்கள் “பெரும்பாலும், துர்ப்பிரயோகம் செய்த குடும்பத்தின் காரணமாகவோ சரிவர செயல்படாத குடும்பத்தின் காரணமாகவோ கோபமும் கலகத்தனமும்” நிறைந்தவர்களாய் இருப்பதாக கண்டார். அப்படிப்பட்ட இளைஞர் ஏன் கும்பல்களில் சேருகின்றனர்? ஒரு முன்னாளைய அங்கத்தினள் சொல்வதாவது: கும்பல்கள், “குழுவில் இருக்கும் உணர்ச்சியையும் பாதுகாப்பான உணர்ச்சியையும்” அளிக்கின்றன. எனினும், ஒரு செய்தித்தாளால் பேட்டிகாணப்பட்டபோது, அந்தக் கும்பலிலிருந்து தப்பிப்பதற்கு இரண்டு முறை தற்கொலைமுயற்சி செய்ததாக ஒப்புக்கொண்டு, இவ்வாறு கூடுதலாக சொன்னாள்: “சுற்றுவட்டாரங்களில் நடைபெறும் தற்செயலான மரணங்கள் மற்றும் தற்கொலைகள் என்பதாக சொல்லப்படுகிறவற்றில் அநேகம் உண்மையில் கும்பலால் செய்யப்பட்ட கொலைகள்தான். நீங்கள் ஒரு கும்பலில் இருக்கும்போது மற்ற கும்பல்களிலிருந்து ஒருவரையொருவர் பாதுகாக்கிறீர்கள். பிரச்சினை என்னவென்றால் கும்பலினுள் ஒருவரிலிருந்து ஒருவரைப் பாதுகாக்க முடியாது.”
கவலையடைந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் கையாளும், வன்செயலில் ஈடுபடும் இளம்பெண்கள் என்ன செய்வார்கள் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. அவர்கள் கோபமாய் இருக்கும்போது, என்ன தாக்குதலை செய்யப்போகிறார்கள் என உங்களுக்கு தெரியாது. நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால், அது பேரச்சத்திற்குரியது.” ஜனங்கள், இளைஞர்களும் உட்பட, ‘இச்சையடக்கமில்லாதவர்களாயும் கொடுமையுள்ளவர்களாயும்’ இருப்பதன் காரணமாக, காலங்கள் ‘கையாளுவதற்கு கடினமாயிருக்கும்’ என்பதாக ‘கடைசி காலங்களைப்’ பற்றி சொல்லுகையில் பைபிள் முன்னறிவித்தது.—2 தீமோத்தேயு 3:1-5, NW.