உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 5/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • கம்ப்யூட்டர் அல்லது வீடியோ விளையாட்டுகளில் நான் பங்குகொள்ள வேண்டுமா?
    விழித்தெழு!—1996
  • விளையாடினால் ஆபத்தா?
    விழித்தெழு!—2003
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 5/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

கம்ப்யூட்டர் விளையாட்டுகள் எனக்கு 15 வயதாகிறது, “இளைஞர் கேட்கின்றனர் . . . கம்ப்யூட்டர் அல்லது வீடியோ விளையாட்டுகளில் நான் பங்குகொள்ள வேண்டுமா?” (ஆகஸ்ட் 22, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அப்படிப்பட்ட விளையாட்டுகளின் இருண்ட மறுபக்கத்தை அக்கட்டுரை உண்மையிலேயே காண்பித்தது. அவற்றை விளையாடுவதினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் மதிப்பிட்டுப்பார்க்க அது கிறிஸ்தவர்களுக்கு உதவும்.

எஃப். ஆர்., இந்தோனீஷியா

எனக்கு 17 வயதாகிறது, வன்முறை நிறைந்த கம்ப்யூட்டர் விளையாட்டுகள் என்றால் எனக்கு உயிர். அவை என்னைப் பாதிக்கவில்லை என நினைத்தேன்; ஆனால் இந்த விளையாட்டுகளுக்கு—விசேஷமாக நீங்கள் விவரித்திருந்த வன்முறை விளையாட்டுகளுக்கு—நான் அடிமையாகியிருந்தேன். வன்முறை, இரத்தம்சிந்துதல் போன்றவற்றோடு தொடர்புடைய எல்லா கம்ப்யூட்டர் டிஸ்குகளையும் நான் இப்போது ஒழித்துக்கட்டிவிட்டேன். விளைவு என்ன தெரியுமா? மனசு எவ்வளவோ நிம்மதியாய் இருக்கிறது; யெகோவா தேவனைப் பற்றி படிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் பேசுவதற்கும் என்னால் அதிக நேரம் செலவழிக்கவும் முடிகிறது.

எஸ். ஏ., கிரீஸ்

கன்னித்தன்மை “கன்னித்தன்மை—ஏன்?” (ஆகஸ்டு 22, 1996) என்ற சுருக்கமான, அதே சமயம் அருமையான கட்டுரைக்காக நன்றி. கன்னியாக இருப்போரை விரோதமாய்ப் பார்க்கும் இந்த உலகில், அழகான இளைஞர்கள் யெகோவாவின் தராதரங்களைப் பின்பற்றுவதைப் பார்த்தது உண்மையிலேயே உற்சாகமளிப்பதாய் இருந்தது. மறுபடியும் நன்றி!

ஆர். டி., ஐக்கிய மாகாணங்கள்

அமெரிக்க இந்தியர்கள் “அமெரிக்க இந்தியர்கள்—அவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?” (செப்டம்பர் 8, 1996) என்ற தொடர்கட்டுரைக்கு போற்றுதல் தெரிவிக்க விரும்புகிறேன். அந்தக் கட்டுரைகளை நான் மிகவும் ரசித்துப் படித்தேன், மறுபடியும் படிக்கப்போகிறேன். உயிர்த்தெழுதலைப் பற்றிய பகுதி முக்கியமாக என்னை மிகவும் கவர்ந்தது.

எஸ். பி., இத்தாலி

மற்ற எந்தக் கட்டுரையையும்விட இவை என் மனதை மிகவும் கவர்ந்தன. இந்தியர்களை நான் கருதிய விதம் தெய்வீக நியமங்களோடு ஒத்திசைவாய் இல்லாமல் ஒருசார்பாய் இருந்தது என்பதை நான் உணருவதற்கு அவை எனக்கு உதவின. எனது பள்ளி நாட்கள் முதற்கொண்டே, இந்தியர்கள் வெறுமனே கொடிய காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். எங்களைச் சுற்றியிருந்த உலகைப் பற்றிய ஒரு தெளிவான கருத்தை சரித்திர புத்தகங்கள் அளிக்கவில்லை. உங்களது கட்டுரைகள், பூர்வீக அமெரிக்கர்களது சோக நிலையைப் பார்க்க எனக்கு உதவின; ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக இருக்கிறது.—பிரசங்கி 8:9.

எம். எம்., ஐக்கிய மாகாணங்கள்

பூர்வீக அமெரிக்கர்களின் சந்ததியில் வந்தவளாய், மிகுந்த பூரிப்போடு உங்களது கட்டுரைகளை நான் வாசித்தேன். படைப்பிற்கு அந்தளவு அன்பு காண்பிக்கும் மக்கள் அனுபவித்த பாடுகளைப் பற்றி படித்தபோது கண்களில் நீர் வழிந்தது. மனிதவர்க்கத்திற்கு செய்யப்படும் எல்லா அநீதிகளையும் கடவுள் சரிக்கட்டிய பிற்பாடு, நாம் அனைவரும் பரதீஸிய பூமியில் ஒன்றுசேர்ந்து வாழப்போகும் அந்த நாளுக்காக நான் எவ்வளவாய் ஏங்குகிறேன்.

என். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

பாம்ப்பே “பாம்ப்பே—காலம் நகராமல் நின்ற இடம்” (செப்டம்பர் 8, 1996) என்ற உங்களது கட்டுரையை சமீபத்தில் படித்து மகிழ்ந்தேன். கிட்டத்தட்ட அங்கேயே இருப்பதுபோன்று இருந்தது! ஆனால் ஒரு குறிப்பை மாத்திரம் நீங்கள் தெளிவுபடுத்தினால் நன்றியுள்ளவனாய் இருப்பேன். பாம்ப்பேயை பார்க்க வரும் எவரும், “சோளத்தை அரைப்பதற்கான இயந்திரசாலைகளை . . . இன்னும் காணலாம்” என அந்தக் கட்டுரை சொல்கிறது. நான் சொல்வது சரியா என எனக்குத் தெரியவில்லை, ஆனால் சோளம் அமெரிக்க கண்டத்தில் கிடைத்த தானியம் என்பதால் க்ரிஸ்டஃபர் கொலம்பஸின் நாள்வரை ஐரோப்பியர்கள் அதை அறிந்திருக்கவில்லை அல்லவா?

ஆர். டி., ஐக்கிய மாகாணங்கள்

இந்த விஷயம் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மனம் வருந்துகிறோம். “தானியத்தை” அரைப்பதற்கான இயந்திரங்களை அங்கு காணலாம் என சொல்லியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும். ஆனால், அக்கறைக்குரிய விதமாக, “சோளம்” என்பதற்கான ஆங்கில வார்த்தை, கோதுமை, ஓட்ஸ் போன்ற எந்த விதமான “உண்ணும் தானியங்களையும்” குறிப்பிடலாம்.—ED.

சிறுவயது முதற்கொண்டே பூர்வீக வரலாறு என்னைக் கவர்ந்திருக்கிறது. பாம்ப்பே நகரத்தின் வரலாறு குறிப்பாக என்னை எப்போதுமே மிகவும் கவர்ந்திருக்கிறது. நான் அந்தக் கட்டுரையை படித்தபோது, அந்த நகரத்தில் பயணம்செய்துகொண்டிருந்ததுபோல் உணர்ந்தேன். அற்புதமாக இருந்தது! எனக்குப் புதிதாய் இருந்த அநேக விவரங்களைத் தெரிந்துகொண்டேன். நமது நாளின் முடிவுக் காலத்தோடு ஒப்பிட்டுப் பேசியதும் என்னைக் கவர்ந்தது. என்னால் செல்ல முடியாத இடங்களைப் பற்றி நான் தெரிந்துகொள்ள உதவியதற்கு நன்றி.

ஜே. எஸ். ஏ., பிரேஸில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்