உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 7/22 பக். 28-29
  • உலகைகவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகைகவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிரேஸிலில் அடிமை வியாபாரம்
  • ஐரோப்பிய புகைபிடிப்பவர்கள்
  • சப்தத்தினால் கேடா?
  • பூச்சிக்கொல்லி அபாயங்கள்
  • டீனேஜர்கள் முன்மாதிரியான பெற்றோரை வர்ணிக்கின்றனர்
  • இரத்தமில்லா மருத்துவம்
  • “கற்கால”த்திலிருந்து வேட்டைத் துப்பாக்கிகள் வரை
  • நீலத்திமிங்கலம் எண்ணிக்கையில் அதிகரிக்கிறது
  • டைவோர்ஸ் வகுப்புகளா?
  • சிறைக்கைதிகளின் உச்ச விகிதம்
  • மறுஉபயோகம் செய்வது பிரயோஜனமானது
  • இரைச்சல்—இதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்
    விழித்தெழு!—1997
  • இரைச்சல்—நவீனகால தொல்லை
    விழித்தெழு!—1997
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 7/22 பக். 28-29

உலகைகவனித்தல்

பிரேஸிலில் அடிமை வியாபாரம்

உலக சர்ச்சுகளின் பேரவையின் (WCC) ENI புல்லட்டீன் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “ஐக்கிய மாகாணங்களை விட பிரேஸிலுக்கு பத்து மடங்கு அதிகமான அடிமைகள் கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டனர்—என்றபோதிலும், பிரேஸிலுக்கு செல்லவிருந்த அடிமைகளின் மரண விகிதமானது அவ்வளவு அதிகமாக இருந்ததால், 1860-ல் பிரேஸிலிலுள்ள கறுப்பர் ஜனத்தொகையானது ஐக்கிய மாகாணங்களில் இருந்ததைப்போல பாதியாக இருந்தது.” ஆப்பிரிக்க அடிமைகளில் 40 சதவிகிதத்தினர் கப்பல்களின் அடித்தளங்களிலேயே மரித்துவிட்டனர் என்று கணிக்கப்படுகிறது. அவர்களுடைய விலையை அதிகரிப்பதற்காக, ஆப்பிரிக்க அடிமைகள் மொத்தமாக முழுக்காட்டப்பட்டனர். அது பாதிரிமார்கள் “முழுக்காட்டுதலின் வார்த்தைகளை” சொன்னபோது அவர்கள் மீது தண்ணீர் தெளிப்பதன் மூலம் செய்யப்பட்டது. பிரேஸிலிலுள்ள சால்வடாரில் நடந்த “நினைவுகூருதல், மனந்திரும்புதல் மற்றும் சமரசமாத”லின் ஆராதனையில் பேசிய காமரூனைச் சேர்ந்த WCC தலைவர் ஆரன் டோலன் பேசுகையில்: “நம்மை இங்கு கொண்டுவந்தவர்கள் மட்டுமே இந்த சோக நிகழ்ச்சிக்கு காரணமல்ல. ஆப்பிரிக்கர்களாகிய நமக்கும் இதில் பங்கு இருக்கிறது. நம்முடைய சகோதரர்களையும் சகோதரிகளையும் பொருட்களைப்போல விற்பதன் மூலம் நம்மை நாமே கீழ்த்தரமாக்கிக் கொண்டோம்” என்று சொன்னார்.

ஐரோப்பிய புகைபிடிப்பவர்கள்

ஒரு நபருக்கு எவ்வளவு என்ற வீதத்தில், உலகத்திலேயே மிகவும் அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்கள் ஐரோப்பிய மற்றும் சீன குடிமக்கள்தான் என்று ஃப்ராங்க்ஃபர்ட், ஜெர்மனியைச் சேர்ந்த நாசாயுஷ நாய ப்ரெஸெ அறிக்கை செய்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் 42 சதவிகித ஆண்களும் 28 சதவிகித பெண்களும் புகைபிடிக்கின்றனர். என்றபோதிலும், 25 முதல் 39 வயதுள்ளவர்கள் மத்தியில் இந்த சதவிகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றன. புகைப்பது ஜெர்மனியில் 1,00,000 பேரையும் பிரிட்டனில் மற்றொரு 1,00,000 பேரையும் ஒவ்வொரு வருடமும் கொல்லுகிறது. செக் குடியரசின் ஜனாதிபதி ஹாவெல், பல வருடங்களாக மிகவும் அதிகமாக புகைபிடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு சமீபத்தில் நுரையீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. புகைத்தலா ஆரோக்கியமா என்ற ஐரோப்பிய அமைப்பிற்கு அவர் எழுதும்போது புகைப்பதை நிறுத்திவிடக்கூடிய எவரையும் அவர் மெச்சுவதாக ஜனாதிபதி எழுதினார் என்று ஸீயெடோய்ச்ச ட்ஸைடுங் அறிக்கை செய்கிறது.

சப்தத்தினால் கேடா?

பிரிட்டனின் நியூ ஸையன்டிஸ்ட் என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சிகளின்படி, மிகவும் குறைந்த அளவுகளிலும்கூட சப்தமானது கேடுண்டாக்குவதாக இருக்கலாம். இந்தக் கண்டுபிடிப்புகளைக் கருத்தில்கொண்டு உலக சுகாதார நிலையமானது பாதுகாப்பான இரவுநேர சப்த அளவுகளை பற்றிய தன் வழிகாட்டுக் குறிப்புகளை மாற்றியமைத்திருக்கிறது. குறிப்பாக, சிறுபிள்ளைகள் அதிக அபாயத்தில் இருக்கிறார்கள் என்று காட்டும் அத்தாட்சிகள் அதிக கவலையை ஏற்படுத்துகின்றன. ம்யூனிச் சர்வதேச விமானநிலையத்தின் அருகில் வாழும் பிள்ளைகள் அதிக ரத்த அழுத்தத்தையும் அதிகமான அளவு அட்ரீனல் இயக்குநீரையும் கொண்டிருந்தனர் என்று ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பிள்ளைகள் அவர்களுடைய வாசிக்கும் திறனும், நீண்டகால நினைவாற்றலும் சேதப்படுத்தப்பட்டதால் துன்புற்றனர் என்றும்கூட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். சப்தத்திற்கு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொண்டதாக காணப்படுகிறவர்கள் “எப்போதும் தங்கள் சரீரத்திற்கு கேடு விளைவித்துக் கொண்டே” அவ்வாறு செய்கிறார்கள். “சப்தமானது மன அழுத்தத்தை கொடுக்கிறது; ஆகவே முடிவாக ஒருசமயம் உடலுக்கு நிச்சயம் கேடு விளைவிக்கும்” என்று சப்தவியல் நிபுணரான ஆர்லீன் பிரான்சாஃட் கூறுகிறார்.

பூச்சிக்கொல்லி அபாயங்கள்

பிலிப்பைன்ஸிலுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தின்படி விவசாயிகள் எந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் உபயோகிக்காவிட்டாலும் அரிசி உற்பத்தி அதே அளவில்தான் இருக்கும். அரிசி நிலையத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி, பிலிப்பைன்ஸில் நடத்தப்பட்ட உலக உணவு உச்சமாநாட்டில், பயிர்களுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதானது தேவையற்றதும் வீணானதுமாக இருக்கிறது என்று தெரிவித்தார். நியூ ஸையன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறபடி, விவசாயிகள் வருடத்தின் தவறான சமயத்தில் தெளிப்பது மட்டுமல்ல ஆனால் உண்மையில் அவர்கள் தவறான பூச்சிகளையும் கொன்று விடுகின்றனர். அதுமட்டுமல்ல, அநேக விவசாயிகள் பாதுகாப்பு அறிவுரைகளை அசட்டைசெய்து, ரசாயனங்களை தெளிக்கும் போது எளிதில் சுவாசித்துவிடக் கூடிய மிகச் சிறிய துளைகளைக் கொண்ட தெளிப்பான்களை பயன்படுத்துகின்றனர் அல்லது களைக்கொல்லிகளை மண்ணோடு கலந்து, கையால் தூவுகின்றனர். தற்போது உலகமுழுவதிலும் ஒவ்வொரு வருடமும் பூச்சிக்கொல்லிகள் 2,20,000 மரணங்களையும் 30 லட்சம் பேருக்கு மிக மோசமான நச்சு விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்று உலக சுகாதார நிலையம் அறிக்கை செய்கிறது.

டீனேஜர்கள் முன்மாதிரியான பெற்றோரை வர்ணிக்கின்றனர்

முன்மாதிரியான பெற்றோரை டீனேஜர்கள் எவ்வாறு வர்ணிப்பர்? இதை கண்டுபிடிக்க பள்ளி ஆலோசகரும் உளவியல் நிபுணருமான ஸ்காட் வுட்டிங் 600-க்கும் மேற்பட்ட டீனேஜர்களை ஆய்வு செய்தார். வாலிபர்கள் தன்னிச்சையாக விடப்படுவதையே போற்றுவார்கள் என வுட்டிங் எதிர்பார்த்ததால், அவர்களுடைய பதில்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் அறிவிக்கிறபடி, ஒட்டுமொத்தமாக இவ்வாலிபர்கள் தங்களுக்கு “பட்சபாதமற்ற தன்மை, அன்பு காட்டுதல் (‘ “நான் உன்னை நேசிக்கிறேன்” என்ற வார்த்தைகளை அவர்கள் கேட்க விரும்புகின்றனர்’) நகைச்சுவை உணர்வு, [மேலும்] ஒரு நல்ல முன்மாதிரி வைத்தல்” போன்றவை தேவைபடுகின்றன என்று கூறினார்கள். பொறுப்புணர்ச்சியை வளர்த்துக்கொள்ள தங்கள் பெற்றோர் தங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் வுட்டிங் கண்டார். ஏதாவது தவறு செய்து விட்டால், அதற்காக சிட்சையை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மிகவும் முக்கியமாக, தங்கள் பெற்றோர் தங்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிட தாங்கள் ஏங்குவதாக வாலிபர்கள் கூறினர்.

இரத்தமில்லா மருத்துவம்

“இரத்தத்தால் பரவும் நோய்களின் பயமும், தானம் செய்யப்பட்ட இரத்தத்தின் கடும் தட்டுப்பாடும், எப்போதெல்லாம் சாத்தியமோ அப்போதெல்லாம் இரத்தமேற்றுதலை தவிர்ப்பதற்கான ஒரு மிகப்பெரிய முயற்சியை தூண்டிவிட்டிருக்கின்றன” என்று த குளோப் அண்டு மெயில் என்ற செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. இரத்தமில்லா மருத்துவமும் அறுவை சிகிச்சையும், இரத்தம் வீணாவதை மிகவும் உன்னிப்பாக கட்டுப்படுத்துவதில் சார்ந்திருக்கின்றன; மேலும் “அநேக புதிய வழிமுறைகள் முதன்முதலில் யெகோவாவின் சாட்சிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டன” என்று குளோப் சொல்கிறது. இரத்தமில்லா அறுவை சிகிச்சைகளை செய்யும் அநேக மருத்துவமனைகளில் ஒன்றான ஒட்டாவா பல்கலைக்கழக இருதய நிறுவனத்தின் மயக்கமருந்து நிபுணரான டாக்டர் ஜேம்ஸ் ஏ. ராப்லி இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “இந்த முறையைப் பற்றிய நம்முடைய விழிப்புணர்வை அவர்கள் [யெகோவாவின் சாட்சிகள்] மிகவும் அதிகமாக அதிகரித்திருக்கின்றனர் என நான் உண்மையில் நினைக்கிறேன்”.

“கற்கால”த்திலிருந்து வேட்டைத் துப்பாக்கிகள் வரை

பிரேஸிலுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையில் இருக்கும் ஒரு மிகப்பெரிய மழைகாட்டுப் பகுதிதான் யாநோமாமி இந்தியர்கள் வசிக்கும் இடமாகும். முதன்முதலாக 1960-களில் “கண்டுபிடிக்கப்பட்ட” யாநோமாமி நவீன கண்டுபிடிப்புகளாகிய தூண்டில் முட்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், தீப்பெட்டிகள், ரேடியோக்கள் ஆகியவற்றோடு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்யப்பட்டனர். என்றபோதிலும், அவர்களுக்கு கடைசியாக கிடைத்த நவீன கருவியாகிய வேட்டைத் துப்பாக்கிகள், “அமெரிக்காக்களில் உள்ள கடைசி கற்கால இனத்திற்கு” ஒரு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று வெனிசுவேலாவைச் சேர்ந்த காரகாஸ்ஸின் த டெய்லி ஜர்னல் அறிக்கையிடுகிறது. பண்டமாற்று மற்றும் வியாபாரம் மூலம் தங்க சுரங்கம் வெட்டுபவர்கள், வன வியாபாரிகள் மற்றும் மிஷனரிகள் யாநோமாமியின் பண்டைய கலாச்சாரத்தில் துப்பாக்கிகளை அறிமுகம் செய்தனர். ஆனால் ஒரே வாரத்தில் மூன்று யாநோமாமிகள் தற்செயலாக சுட்டுக்கொல்லப்பட்டது, நவீன கலாச்சாரத்துடன் தொடர்பு எத்தகைய மிகமோசமான விளைவுகளை கொண்டுவரக்கூடும் என்பதை அதிர்ச்சியூட்டும் விதத்தில் நினைவுபடுத்துகிறது. யாநோமாமி ஆதரிப்பு கமிஷனின் தலைவரான க்ளௌதியா அன்தூஜார் “விஷ அம்புகளையும் கற்களையும் தடிகளையும் வைத்து சண்டையிடக்கூடிய தங்களுடைய திறமையை குறித்து பெருமைபாராட்டும் ஒரு இனத்திற்கு, திடீரென்று துப்பாக்கிகளையும் வெடிமருந்துகளையும் கொடுத்தால் எப்படிப்பட்ட ஆபத்துகளைக் கொண்டுவரக்கூடும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறுகிறார்.

நீலத்திமிங்கலம் எண்ணிக்கையில் அதிகரிக்கிறது

1946-லிருந்து நீலத்திமிங்கலங்களை வேட்டையாடுவது கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த சமயம்வரை இந்த 30-மீட்டர், 150-டன் எடையுள்ள மிகப்பெரிய பாலூட்டிகள் முற்றிலும் இல்லாமற்போகும் நிலைக்கு வேட்டையாடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஐ.மா. கடற்படை ஒலிகண்காணிப்பு முறையின் உதவியால், வட அட்லாண்டிக்கில் அதிக எண்ணிக்கையான திமிங்கலங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றுள், ஃபின்பாக், ஹம்ப்பாக், மிங்க் மற்றும் அரிய நீலத்திமிங்கலங்கள் அடங்கும். “முன்பு இருந்ததாக நினைத்ததைவிட அதிகமான திமிங்கலங்கள் பிரிட்டனின் கடற்கரைக்கப்பால் இருக்கின்றன” என்று லண்டனின் த ஸண்டே டெலிகிராப் கூறுகிறது. 3,000 மீட்டர் ஆழத்தில் கடலின் தரைமட்டத்தில் வைக்கப்பட்ட நீரொலிமாணிகள் (hydrophones), ஆரம்பத்தில் நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிப்பதற்காக தயாரிக்கப்பட்டன. என்றாலும், திமிங்கலங்களின் குறைவான ஒலி அலைகளை வாங்குவதிலும் அவை சிறந்திருக்கின்றன என்று கண்டறியப்பட்டிருக்கிறது. நீலத்திமிங்கலத்தின் சப்தம் நீருக்கடியில் 3,000 கிலோமீட்டர் வரை செல்லும் என்று சொல்லப்படுகிறது.

டைவோர்ஸ் வகுப்புகளா?

அ.ஐ.மா., அரிஜோனாவிலுள்ள பிமா மாவட்டத்தில், டைவோர்ஸ் பெற விரும்பும் பெற்றோர்கள், அது தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும் என்று புரிந்துகொள்ள நான்கரை மணிநேர கருத்தரங்கு ஒன்றில் கண்டிப்பாக பங்குகொள்ள வேண்டும் என்று த டல்லாஸ் மார்னிங் நியூஸ் அறிக்கை செய்கிறது. “சந்திப்பு அட்டவணைகளை எவ்வாறு ஒழுங்கமைப்பது” என்றும் “பாதுகாப்பு பொறுப்பு கொடுக்கப்படாத பெற்றோருடன் கோடைகாலத்தில் வாழ, எந்த வயதில் குழந்தை தயாராக இருக்கும்” என்பதையும் பற்றி அறிந்துகொள்ள பெற்றோருக்கு உதவுவதற்காக இந்த வகுப்புகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக, ஒரு குழந்தையின் நோக்குநிலையிலிருந்து டைவோர்ஸை புரிந்துக் கொள்ள பெற்றோர் உதவப்படுகின்றனர் என்று வகுப்பு இயக்குநரான பிராங்க் வில்லியம்ஸ் கூறுகிறார். குடும்பச் சட்ட நிபுணரான ஆலஸ் பென்னிங்டன், “இந்த கடைசி தருணத்தில் இப்படிப்பட்ட கட்டாய கல்வி அவசியமா என நான் நினைக்கிறேன். திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே இப்படிப்பட்ட ஒரு வகுப்பை அவர்கள் ஏன் கொண்டிருக்கக் கூடாது?” என்று கூறுகிறார்.

சிறைக்கைதிகளின் உச்ச விகிதம்

1995-ல் ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு 1,00,000 குடிமக்களுக்கும் 615 பேர் சிறையில் இருந்தனர் என்று ஐ.மா. நீதித்துறை கூறுகிறது. இது 1985-ல் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் வீதத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்ததனால், உலகிலேயே மிகவும் அதிகமானதாகும் என்று த வால் ஸ்டிரீட் ஜர்னல் அறிக்கையிடுகிறது. மிக சமீபத்திய தகவலின்படி (1994) 1,00,000 பேருக்கு 590 என்ற வீதத்தில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மறுஉபயோகம் செய்வது பிரயோஜனமானது

வெனிசுவேலாவின் காரகாஸைச் சேர்ந்த எல் யுனிவர்சல் செய்தித்தாளின்படி, பழைய அலுமினியக் குவளைகளை மறுஉபயோகம் செய்வது புதியவைகளை தயாரிக்க செலவாகும் ஆற்றலில் 90 சதவிகிதத்தை மிச்சப்படுத்துகிறது. பேப்பரை மறுஉபயோகம் செய்வதும் சுற்றுச்சூழியலுக்கு பிரயோஜனமானது. புதிய பேப்பரை தயாரிக்க செலவாகும் ஆற்றலில் ஐம்பது சதவிகிதம் குறைவானதே பேப்பரை மறுஉபயோகம் செய்வதில் செலவாகிறது. மேலும், தண்ணீர் தூய்மைக்கேடு 58 சதவிகிதமும், காற்றுத் தூய்மைக்கேடு 74 சதவிகிதமும் குறைக்கப்படுகிறது. கண்ணாடி மறுபடியும் மறுபடியுமாக, முழுமையாக மறுஉபயோகம் செய்யமுடியுமாதலால் அது எல்லாவற்றையும்விட சிறந்து விளங்குகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்