உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 12/8 பக். 3-5
  • பிள்ளைக்குச் சிறந்தது எது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிள்ளைக்குச் சிறந்தது எது?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிள்ளை-பராமரிப்பு தெரிவுகள்
  • எதிர்ப்படவேண்டிய கேள்விகள்
  • பிள்ளை பராமரிப்பு—சமநிலையான கருத்து
    விழித்தெழு!—1997
  • பிள்ளை பராமரிப்பு—மதமும் சட்டமும்
    விழித்தெழு!—1997
  • விவாகரத்து பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது?
    குடும்ப ஸ்பெஷல்
  • அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 12/8 பக். 3-5

பிள்ளைக்குச் சிறந்தது எது?

விவாகரத்து செய்ய வேண்டுமா வேண்டாமா? இந்த முக்கிய கேள்வியே, திருமண பந்தத்தில் மகிழ்ச்சி காணாத அநேக நபர்களின் மனங்களில் எழும்புகிறது. ஒரு காலத்தில் விவாகரத்து என்ற சொல்லே முகம் சுளிக்க வைத்தது; தார்மீக காரணங்களுக்காகவும் ஆன்மீக காரணங்களுக்காகவும் அது நேரடியாக கண்டனமும் செய்யப்பட்டது. திருமணத்தில் மகிழ்ச்சி காணாத எவரும், பொதுவாக பிள்ளைகளுக்காகவே சேர்ந்து வாழ்ந்தனர். என்றபோதிலும், சமீப காலங்களில் இந்த உலகின் தராதரங்கள் பெரிதும் மாறியிருக்கின்றன. இன்று விவாகரத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனாலும், விவாகரத்து ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பிள்ளைகள்மீதான அதன் மோசமான பாதிப்புகளைக் குறித்து அநேக பெற்றோர்களும், நீதிபதிகளும், சமூக ஆய்வாளர்களும், மற்றவர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அநேக எச்சரிப்புக் குரல்கள் இப்போது எழுப்பப்படுகின்றன. விவாகரத்து பிள்ளைக்கு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தலாமென அதிகரித்துவரும் அத்தாட்சிகள் காண்பிக்கின்றன. தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் விவாகரத்து எவ்வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என யோசிக்கும்படி பெற்றோர் இப்போது ஊக்குவிக்கப்படுகின்றனர். ப்ரின்ஸ்டன் யூனிவர்ஸிட்டியைச் சேர்ந்த சமூகவியலாளரான சாரா மக்ளானஹன் இப்படிச் சொல்கிறார்: “விவாகரத்து செய்வோரில் மூன்றில் இரண்டு பங்கினரிலிருந்து நான்கில் மூன்று பங்கினர் வரை, தாங்கள் செய்வது சரியான காரியம்தானா என கூடுதலான நேரமெடுத்து இன்னும் ஆழ்ந்து சிந்தித்துப்பார்க்க வேண்டும்.”

விவாகரத்து செய்துகொண்டவர்களின் பிள்ளைகள், பருவ வயதிலேயே கர்ப்பம் அடைவதற்கும் பள்ளிப் படிப்பை நிறுத்துவதற்கும் மனச்சோர்வடைவதற்கும் தங்கள் வாழ்க்கையிலேயே மணவிலக்கு செய்துகொள்வதற்கும் சமூக சேவையின் உதவியைப் பெறுவதற்கும் அதிக சாத்தியம் இருக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. மேற்கத்திய உலகில் ஒவ்வொரு 6 பிள்ளைகளிலும் ஒரு பிள்ளை விவாகரத்தால் பாதிக்கப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் பிள்ளை பராமரிப்பு பற்றிய தன் புத்தகத்தில் சரித்திராசிரியரான மாரி ஆன் மேஸன் இப்படிச் சொன்னார்: “1990-ல் பிறந்த ஒரு பிள்ளைக்கு, அது எங்கே, யாருடன் வாழும் என்ற விஷயத்தின்பேரிலான வழக்கில் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்படும் சாத்தியம் சுமார் 50 சதவீதம் இருந்தது.”

வருத்தமான விஷயமென்னவென்றால், பகைமைகள் எப்போதும் விவாகரத்தில் முடிவடைவதில்லை; அதற்கு மாறாக பராமரிப்பு உரிமைகளுக்காகவும் சந்திப்பு உரிமைகளுக்காகவும் பெற்றோர் தொடர்ந்து நீதிமன்றங்களில் போராடலாம்; இது பிள்ளைகளின் வேதனையை இன்னும் அதிகரிக்கிறது. சச்சரவுமிக்க நீதிமன்ற சூழலில் நிகழும் இப்படிப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்கள், பிள்ளைகள் பெற்றோருக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கிறார்களா என்பதை சோதிக்கின்றன; பெரும்பாலும் பிள்ளைகள், தாங்கள் கையாலாகாதவர்கள் என்ற உணர்வையும் பயத்தையும் பெறும்படி அவை செய்விக்கின்றன.

ஒரு குடும்ப ஆலோசகர் இப்படிச் சொன்னார்: “விவாகரத்து பிள்ளைகளை விடுவிப்பதில்லை. அது சிலசமயம் பெரியவர்களை வேண்டுமானால் விடுவிக்கிறது.” உண்மை என்னவென்றால், விவாகரத்தின் மூலம் பெற்றோர் சிக்கலான தங்களுடைய சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டாலும், தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை அவர்கள் பாழாக்கலாம்; ஏற்பட்டிருக்கும் சேதத்தை சரிக்கட்ட அப்பிள்ளைகள் தங்கள் வாழ்நாட்காலமெல்லாம் முயலலாம்.

பிள்ளை-பராமரிப்பு தெரிவுகள்

மணவிலக்கு அந்தளவு விரோதத்தையும் மன அழுத்தத்தையும் உண்டாக்குவதால், பிள்ளையை யார் பராமரிப்பதென்பதை நிதானமாகவும் நியாயமாகவும் முடிவுசெய்வது மிகவும் கடினம். பெற்றோரின் நேரடி சந்திப்பையும் சட்டப்பூர்வ போராட்டத்தையும் தவிர்ப்பதற்கு சில வட்டாரங்கள், சமரசப் பேச்சுவார்த்தை போன்ற ஏற்பாட்டை, சச்சரவைத் தீர்த்துக்கொள்வதற்கான மாற்று வழியாக அளிக்கின்றன.

பேச்சுவார்த்தை சரியாக நடத்தப்பட்டால், பிள்ளைகளை யார் பராமரிப்பதென்ற தீர்மானத்தை நீதிபதியின் கையிலேயே விட்டுவிடாமல், பெற்றோர் தாங்களாகவே ஒரு ஒப்பந்தத்திற்கு வருவர். பேச்சுவார்த்தை நடத்த முடியாதபோது, ஒருவேளை பெற்றோர் தங்கள் வழக்கறிஞர்களின் மூலம் பராமரிப்பு, சந்திப்பு ஆகிய உரிமைகளுக்காக ஏற்பாடு செய்யலாம். பெற்றோர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து அதை எழுத்தில் தெரிவித்தவுடனேயே, அவர்களது விருப்பங்கள் அடங்கிய ஒரு தீர்ப்பில் நீதிபதி கையெழுத்திடலாம்.

பராமரிப்பு ஏற்பாட்டில் பெற்றோர்களால் ஒத்துப்போக முடியவில்லையென்றால், பெரும்பாலான நாடுகளிலுள்ள சட்ட ஒழுங்கு, பிள்ளைகளுக்கு எவை சிறந்தவையோ அவற்றை வழங்குவதற்கான வழிவகைகளை அளிக்கும். நீதிபதி, பெற்றோரின்மீதல்ல ஆனால் பிள்ளைகளின்மீதே மிக முக்கியமாக அக்கறை செலுத்துவார். பெற்றோரின் விருப்பங்கள், அம்மாவுடனும் அப்பாவுடனும் பிள்ளைக்கிருக்கும் உறவு, பிள்ளையின் விருப்பங்கள், தினசரி தேவைகளை அளிப்பதற்கு பெற்றோர் இருவருக்கும் உள்ள திறன் போன்ற அநேக பொருத்தமான விஷயங்களை நீதிபதி கவனமாக சீர்தூக்கிப்பார்ப்பார். அதன்பின்பே, பிள்ளை எங்கே, யாருடன் வாழும் என்பதையும் பிள்ளையின் எதிர்காலத்தைக் குறித்து பெற்றோர் எவ்வாறு முக்கிய தீர்மானங்கள் எடுப்பர் என்பதையும்கூட நீதிபதி தீர்மானிப்பார்.

தனி பராமரிப்பு ஏற்பாட்டில், தாய் தகப்பனில் ஒருவருக்கு மாத்திரமே தீர்மானங்கள் எடுப்பதற்கான அதிகாரம் இருக்கலாம். கூட்டுப் பராமரிப்பு ஏற்பாட்டில், பிள்ளையின் உடல்நலம், படிப்பு போன்ற முக்கியமான தீர்மானங்களில் பெற்றோர் இருவருமே ஒத்துப்போக வேண்டும்.

எதிர்ப்படவேண்டிய கேள்விகள்

பிள்ளை-பராமரிப்பு வழக்கை எதிர்ப்படுகையில், யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கும் பெற்றோர், பிள்ளைகளின் ஆவிக்குரிய தன்மைக்கு எது சிறந்தது என்பதையும்கூட கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, சாட்சியாய் இல்லாத தாயோ தகப்பனோ, பிள்ளைகள் பைபிள் அடிப்படையில் பயிற்றுவிக்கப்படுவதை எதிர்த்தால் என்ன செய்வது? அல்லது அப்படிப்பட்ட பெற்றோர் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தால் அப்போது என்ன?

இத்தகைய சூழ்நிலைகளில், கிறிஸ்தவ பெற்றோர் தீர்மானம் எடுப்பதை இன்னுமதிக கடினமாகக் காணலாம். அவர்கள் ஞானமாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள விரும்புகின்றனர்; பிள்ளைகளுக்கு எது சிறந்தது என்பதை ஜெபசிந்தையோடு சிந்திக்கையில் யெகோவாவின் முன்பாக நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் இருக்கவும் அவர்கள் விரும்புகின்றனர்.

பின்வரும் கட்டுரைகளில், இப்படிப்பட்ட கேள்விகளை நாம் சிந்திப்போம்: பராமரிப்பு உரிமையை அளிக்கையில் சட்டம் மதத்தை எவ்வாறு கருதுகிறது? பராமரிப்பு வழக்கின் சவாலை நான் எவ்வாறு வெற்றிகரமாய் சமாளிக்கலாம்? பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிமையை இழக்கையில் நான் அதை எப்படி தாங்கிக்கொள்வது? சபைநீக்கம் செய்யப்பட்ட துணையோடு கூட்டுப் பராமரிப்பு ஒப்பந்தம் செய்வதை நான் எப்படி கருதுகிறேன்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்