உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 7/8 பக். 31
  • சாவு என்றால் சாவுதான்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சாவு என்றால் சாவுதான்
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • அவர்களுடைய நினைவு மறக்கப்பட்டுவிட்டதா?
    விழித்தெழு!—1990
  • இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது?
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?
    மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?
  • இறந்தவர்கள் திரும்பவும் உயிரோடு வருவார்களா?
    கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 7/8 பக். 31

சாவு என்றால் சாவுதான்

“செத்த சிங்கத்திலும் உயிருள்ள நாயே சிறந்தது. உயிரோடிருப்பவர்கள் மரிப்போமென்று அறிவார்களே, மரித்தவரோ ஒன்றும் அறியார்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை. அவர்கள் பேர்தானும் மறக்கப்படுகிறது.”—பிரசங்கி 9:4, 5, தி.மொ.

சாவுக்குப் பிறகு ஆத்துமா உயிர் வாழ்கிறது அல்லது மறுஜென்மம் எடுக்கிறது என்னும் புரியாத, புதிரான நம்பிக்கை நிறைய மக்களிடையே இருக்கிறது. ஒருவர் செத்தப் பிறகும் பிழைத்துவர முடியும் என்கிற நம்பிக்கை ஒருசில மக்களிடையே இருக்கிறது. சவ அடக்கத் தொழிலை செய்யும் (mortician) தாமஸ் லின்ச் என்பவரை சமீபத்தில் அணுகி, செத்தப் பிறகு என்ன ஆகிறது என்று அவரது அபிப்பிராயத்தை கேட்டார்கள். அதற்கு அவர் தந்த பதில்: “சாகும் நிலையில் இருந்தவர்கள் ஏதோ பிரகாசமான ஒளி வீசும் குகைகளையும், வேறு எதையெல்லாமோ பார்த்ததாகச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் செத்துப்போய், பிறகு உயிர் பிழைத்து வரவில்லை. அவர்கள் சலனமின்றி இருந்ததால் செத்துவிட்டதாக நாம் நினைக்கிறோம். ‘சாவு’ என்று சொன்னால், மறுபடியும் உயிரோடு திரும்ப முடியாது. அப்படி இல்லையென்றால் ‘சாவு’ என்று சொல்ல மாட்டோமே.”—த நியூ யார்க் டைம்ஸ் மெகஸின்.

இந்த உண்மையை பல ஆயிர வருடங்களாகவே பைபிள் அறிவித்து வருகிறது. “செத்த சிங்கத்திலும் உயிருள்ள நாயே சிறந்தது. உயிரோடிருப்பவர்கள் மரிப்போமென்று அறிவார்களே, மரித்தவரோ ஒன்றும் அறியார்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை. அவர்கள் பேர்தானும் மறக்கப்படுகிறது.” (பிரசங்கி 9:4, 5, திருத்திய மொழிபெயர்ப்பு) ஏதாவது ஒரு பழங்காலத்து கல்லறையை நாம் சும்மா ஒரு சுற்று சுற்றிவந்தாலே போதும், இந்த உண்மை தெரிந்துவிடும்.

அப்படியென்றால், செத்துப்போனவர்களின் கதி அவ்வளவுதானா? இறந்தப்பின், உடலைவிட்டு வெளியேறி, சாகாவரம் பெற்று ஆத்துமா திகழ்கிறது என்பதற்கு பைபிளில் எந்தவொரு ஆதாரமும் கிடையாது. (ஆதியாகமம் 2:7; எசேக்கியல் 18:4, 20) ஆனால், எதிர்காலத்தில், இந்தப் பூமி பூங்காவனம்போல் (பரதீஸாக) மீண்டும் மாற்றப்படும் என்றும், செத்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்றும் இயேசு பிரச்சாரம் செய்தது உண்மை. யூத குலத்தை சேர்ந்த இயேசுவின் சிஷ்யையாக இருந்தவர் மார்த்தாள் என்ற பெண். அவருடைய சகோதரன் லாசரு இறந்துபோய் ஒருசில தினங்களே ஆகியிருந்தன. ஆனாலும் உயிர்த்தெழுதலில், அதாவது செத்தவர்கள் மறுபடியும் உயிர்பெற்று வருவார்கள் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. எனவேதான் லாசருவைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்.” (யோவான் 11:24) அதற்கு இயேசு: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.” (யோவான் 11:25, 26) இந்தச் சம்பவத்திற்கு முன்பு, ஏற்கெனவே ஒருமுறை இயேசு இவ்வாறு சொல்லியிருந்தார்: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” இயேசு அழியாத ஆத்துமாவைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்!—யோவான் 5:28, 29; லூக்கா 23:43.

[பக்கம் 31-ன் சிறு குறிப்பு]

“‘சாவு’ என்று சொன்னால், மறுபடியும் உயிரோடு திரும்ப முடியாது.” சவ அடக்கத் தொழிலை செய்யும் தாமஸ் லின்ச்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்