உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 2/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1999
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • “இந்த விழித்தெழு! எங்களுக்கென்றே எழுதப்பட்டது”!
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 2/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

வானிலை மாற நாமா காரணம்? எனக்கு 17 வயது. நான் டிப்ளோமா படிப்புக்காக படித்துக் கொண்டிருக்கிறேன். பரீட்சையில் புவியியல் பாடமும் இருக்கிறது. “வானிலை மாற நாமா காரணம்?” (மே 22, 1998) என்ற தொடர் கட்டுரைகள் எனக்கு பேருதவி புரிந்தன. பரீட்சை முடிந்தபின், வானிலை சம்பந்தமான இத்தகவல் எங்கிருந்து கிடைத்தது என என்னுடைய வகுப்புத் தோழர்கள் கேட்டார்கள், அவர்களில் பாதிப்பேர் இந்தப் பிரதிகளை கேட்டார்கள்.

ஏ. ஜி., ஸ்விட்ஸர்லாந்து

இந்த விழித்தெழு! இதழில் கண்ணாடி அறை விளைவு (greenhouse effect) பற்றி ஆராய்ந்திருந்ததைக் கண்டவுடன் எனக்கு சந்தோஷ ஆச்சரியம். சூழியலில் எனக்கு தீவிர ஈடுபாடு உண்டு, நானும் ஒரு கிறிஸ்தவன். யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி செய்தித் துறைகளால் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால் உங்களுடைய பத்திரிகையிலுள்ள தகவல்கள் சிந்தனைக்குத் தகுதிவாய்ந்தவை. சூழியலும் மதபக்தியும் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. கடைசியில் பார்த்தால், கடவுளுடைய படைப்பில் அக்கறைகொள்ளும் மதப்பற்றுள்ளவர்கள் இருக்கிறார்களே!

எம். சி., பிரான்ஸ்

எனக்கு 14 வயது. இந்தக் கட்டுரைகளுக்கு என்னுடைய நன்றி. வானிலையைக் குறித்து நான் ஒருக்காலும் அதிகம் சிந்தித்ததில்லை. நம்முடைய கிரகத்திற்கு நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி முதல் தடவையாக இப்பொழுது நான் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கிறேன். இந்தக் கட்டுரைகள் அநேக மக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்ட வேண்டும். ஏனென்றால் நம்முடைய சுற்றுப்புற சூழலை சீர்கெடுக்க யார்தான் விரும்புவார்? கடவுளிடமிருந்து வந்த ஒரு பரிசை சும்மா தூக்கியெறியும் பொருளாக கருதக் கூடாது.

எஸ். கியூ., ஜெர்மனி

மதப் பத்திரிகை என்று மக்கள் கருதும் ஒரு பத்திரிகையில் வானிலையைப் பற்றி வாசிப்பது வித்தியாசமாக இருந்தது. மக்கள்மீது விழித்தெழு! எவ்வளவு அக்கறைகொள்கிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது​—⁠ஆன்மீக ரீதியில் மட்டுமல்லாமல், இயற்கையைப் பற்றிய விஷயங்களையும் கூறுகிறது. நாம் கண்டுகொள்ளாவிட்டாலும், வானிலை உண்மையிலேயே நம்முடைய வாழ்க்கையை பாதிக்கிறது.

எம். எஃப். எம்., ஜெர்மனி

நகத்தை பராமரித்தல் கொஞ்சகாலம் தவிர, ஏறக்குறைய 52 வருடங்களாக நான் நகம் கடித்திருக்கிறேன் என்பது வியப்பூட்டுகிறது. “உங்கள் நகங்கள்​—⁠அவற்றைப் பராமரிக்கிறீர்களா?” என்ற மே 22, 1998 விழித்தெழு!-வை வாசித்த பிற்பாடு, நகம் கடிப்பதை நிறுத்திவிட்டேன். ஏன்? ஏனென்றால் அதை வடிவமைத்தவர் யெகோவா தேவன். மற்ற உறுப்புக்களைப் போலவே, அதையும் நாம் பராமரிக்கும்படி அவர் விரும்புகிறார். உங்களுடைய அன்பான நினைப்பூட்டுதலுக்கு நன்றி.

டி. எச்., இங்கிலாந்து

வீட்டையும் தோட்டத்தையும், அதோடு நடக்க முடியாத என்னுடைய மாமியாரையும் நான் கவனித்துக்கொள்வதால், என்னுடைய கைகளை பராமரிக்க நேரமே கிடைப்பதில்லை. சிலசமயங்களில் என்னுடைய நகங்களைப் பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது, ஏனெனில் அவை உடைந்தும் சிதைந்தும் இருக்கின்றன. எனவே, இந்தக் கட்டுரை சரியான சமயத்தில் வந்து கைகொடுத்தது.

டபிள்யூ. பி., ஜெர்மனி

நான் சிறுமியாக இருந்தது முதற்கொண்டே, நகம் கடிப்பது என்னுடைய பழக்கம். கோணல்மாணலான அதன் வடிவத்தை வெளியே காட்டவே வெட்கமாக இருக்கும். அந்தக் கட்டுரையை நான் வாசித்தபோது, மனித உடம்பில் நகங்களும் அற்புதமானவையே என்ற போற்றுதல் ஆழமானது. என்னுடைய பழக்கத்தைத் திருத்துவதற்கு என்னை உற்சாகப்படுத்தியது.

கே. ஒய்., ஜப்பான்

லட்சிய மாதிரி மே 22, 1998 விழித்தெழு! இதழில், “இளைஞர் கேட்கின்றனர் . . . யார் என்னுடைய லட்சிய மாதிரி?” என்ற கட்டுரையை வாசித்தேன். இதுபோன்ற கட்டுரைகள் என்னுடைய வாழ்க்கைக்கு வளமூட்டியதை யோசித்துப் பார்த்திருக்கிறேன். என்னுடைய குடும்பம் சின்னாபின்னமானதற்குப் பிறகு, இயல்பாகவே என்னுடைய பிராயத்திலுள்ள நண்பர்களிடம் கவரப்பட்டேன். ஆனால் பின்பு, என்னுடைய வாழ்க்கைமீது ஆக்கப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்திய முதிர்ந்த கிறிஸ்தவ சகோதரிகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். பவுலையும் தீமோத்தேயுவையும் போன்ற அல்லது ரூத்தையும் நெகோமியையும் போன்ற உறவை நான் இப்பொழுது தேடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய மிகச் சிறந்த தோழிக்கு சுமார் 50 வயது; சந்தோஷம், அன்பு, இரக்கம், தயவு, தயாளம் போன்ற குணங்களைப் பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார். நாங்கள் ஒற்றுமையுடன் வேலைசெய்கிறோம்​—⁠நாங்கள் ஒரே அறையில் வசிக்கும் தோழிகள், முழுநேர ஊழியத்தை ஆரம்பித்திருக்கிறோம். உங்களுடைய சிறந்த வழிநடத்துதலுக்கும் அறிவுரைக்கும் நன்றி.

சி. எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்