உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 7/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1999
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 7/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

மிருகங்களை வதைப்பது “பைபிளின் கருத்து: மிருகங்களை வதைப்பது தவறா?” (நவம்பர் 8, 1998) என்ற கட்டுரையில் நீங்கள் அளித்திருக்கும் அருமையான குறிப்புகளை பாராட்டவே இதை எழுதுகிறேன். மிருகங்கள் வதைக்கப்படுவதை, அதிலும் முக்கியமாக கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டிக்கொள்பவர்கள் அவ்வாறு செய்வதை கடவுள் அங்கீகரிப்பதில்லை என்பதை அருமையாக எடுத்துரைத்தமைக்கு என் பாராட்டுக்கள்!

ஜே. எல். கே., ஐக்கிய மாகாணங்கள்

பெற்றோர் இல்லா இளைஞர் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் அப்பா அம்மா இல்லாமல் வாழணும்?” (நவம்பர் 22, 1998) என்ற கட்டுரைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இப்பொழுது எனக்கு வயது 39. ஆனால் நான் 11 வயதாயிருக்கையில் என் அம்மா இறந்து விட்டார், என் அப்பாவும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். நானும், என் அண்ணனும், என் தம்பியும் வாழ்ந்து வந்த கொடுமையான வாழ்க்கையை நான் என்னதான் விளக்கினாலும் இன்றுவரை மற்றவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. ஆனால், இப்பொழுது மற்றவர்கள் எங்களை புரிந்து கொள்கிறார்கள் என்று உணருகிறேன். நன்றி.

கே. வொய்., ஜப்பான்

நான் வெறும் ஒன்பது மாத குழந்தையாக இருக்கும் போதே என் அப்பா இறந்து விட்டார், நான் 12 வயது ஆவதற்குள்ளாகவே என் அம்மாவும் இறந்து விட்டார். அனாதை குழந்தைகள் எவ்வாறு உணருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய உங்களுடைய கட்டுரை ஆறுதல் அளிப்பதாய் இருந்தது. யெகோவா நம்முடைய இறந்த அன்பானவர்களையும் திரும்ப உயிருக்கு கொண்டு வருவார் என்பதை தெரிந்து கொண்டதில் எவ்வளவு சந்தோஷம்!

எம். எஸ். எஸ்., பிரேஸில்

எனக்கு 40 வயது, இந்தக் கட்டுரையை ஒருமுறை அல்ல பல முறை வாசித்தேன். நான் இரண்டு வயதாயிருக்கையிலேயே அனாதையானதால், இந்த கட்டுரையின் துவக்கம் முதல் வாசித்து முடிக்கும்வரை என் கண்கள் குளமாகி இருந்தன. இன்று வரையிலும் என் அம்மா அப்பாவின் படத்தை பார்க்கும்போதெல்லாம் என் கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதை என்னால் தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுவதற்கு நன்றி!

ஜே. சி. வி., பிரான்ஸ்

என் பெற்றோர் உயிருடன் தான் இருக்கிறார்கள். நான் சற்று சித்தம் கலங்கிய நிலையுள்ளவள் (பைபோலார்), ஆகவே கடினமான நிலைமைகளை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி வரும் எந்த கட்டுரையையும் ஆர்வத்துடன் வாசிப்பேன். “இளைஞர் கேட்கும் கேள்விகள்” பகுதியில் காணப்படும் உண்மை வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் பைபிள் சார்ந்த குறிப்புகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

எஸ். ஹெச்., கனடா

மரவேலை நான் இந்த பத்திரிக்கையை அநேக ஆண்டுகளாக படித்து வருகிறேன், இந்த பத்திரிக்கை அதன் பொருளிலும், எழுத்து நடையிலும், கலந்தாராயப்பட தேர்ந்தெடுக்கப்படும் விஷயங்களிலும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. இருப்பினும், “மரத்தின் பழம்பெரும் மேன்மை​—⁠ஓர் அலசல்” (நவம்பர் 8, 1998) என்ற கட்டுரையைப் பற்றி ஒரு குறிப்பு சொல்ல விரும்புகிறேன். இந்த மரவேலையை செய்து பார்க்க விரும்பும் வாசகர்களுக்கு, இந்த வாய்ச்சு எனும் கருவி மிக மிக ஆபத்தான ஒன்று என்று எச்சரிக்கவும். நான் 1920-களில் வளர்ந்து வந்த போது, கால் வாய்ச்சு எனப்பட்ட இந்த கருவி அப்போதும் புழக்கத்தில் இருந்தது. உங்கள் படத்தில் காண்பித்திருக்கும் பிரகாரம், அந்த மரத்தை இரு கால்களுக்கு இடையிலும் பிடித்துக் கொள்வர், இந்த கருவி மிக கூர்மையானது. இருப்பினும், இந்த கருவியை பயன்படுத்திய அநேகருடைய கால்கள் காயமடைந்திருக்கின்றன, ஆகவேதான் அது காலின் காதகன் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு பழக்கமில்லாதவர் இதைப் பயன்படுத்தினால் மிக ஆபத்தானது என்று நினைக்கிறேன்.

டபிள்யு. ஜி., ஐக்கிய மாகாணங்கள்

எச்சரிக்கையாயிருக்க நினைப்பூட்டியமைக்கு நன்றி.​—⁠ED.

புத்திசாலி அரசி காத்தரீன் பாரைப் பற்றிய உங்கள் அருமையான கட்டுரை (“சதிகார பிஷப்பை வென்ற புத்திசாலி அரசி,” நவம்பர் 8, 1998) எனக்கு பைபிள் பதிவிலுள்ள எஸ்தர் ராணியை ஞாபகப்படுத்தியது. இந்த பெண்கள் என்னே ஞானமாய் நடந்திருக்கிறார்கள்! நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இல்லாத போதிலும், விழித்தெழு! இதழில் ஒன்றையும் வாசிக்க தவறியதில்லை. நான் உங்கள் பிரசுரங்களை உயர்வாய் மதிப்பதுபோல், ஏன் மற்றவர்கள் மதிப்பதில்லை என்று பலமுறை யோசிப்பதுண்டு.

எம். டி. எஸ். எஃப்., பிரேஸில்

எனக்கு, எட்டாம் ஹென்றி மற்றும் அவருடைய மனைவியாகிய காத்தரீன் பாரைப் பற்றிய வரலாற்றுப் பதிவு அதிக ஆர்வத்தை தூண்டும் ஒன்றாய் இருந்தது. என்னுடைய வாழ்த்துக்கள். அது நன்கு ஆராயப்பட்ட, தெளிவான, சுருக்கமான ஒரு கட்டுரையாக இருந்தது.

கே. ஜி., இத்தாலி

இந்தக் கதை சொல்லப்பட்ட விதம், ஒவ்வொரு காட்சியின் போதும் காத்தரீன் ராணியோடு கூடவே இருந்தது போன்று எங்களை உணரச்செய்தது. உலகத்தின் இந்த முனையில் வாழும் நாங்கள் வெகுதொலைவில் நடந்த சம்பவங்களையும் கலாச்சாரங்களையும் பற்றி தெரிந்து கொள்ள உதவிய இப்படிப்பட்ட கட்டுரைகளை பிரசுரித்ததற்கு மிக்க நன்றி.

எல். ஜி. மற்றும் எல். ஜி., வெனிசுவேலா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்