உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 10/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1999
  • இதே தகவல்
  • கிசுகிசுப்பது தவறா?
    விழித்தெழு!—1999
  • என்னைப் பற்றி யாராவது கிசுகிசுத்தால் என்ன செய்ய வேண்டும்?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • கிசுகிசு—எப்படி நிறுத்துவது?
    விழித்தெழு!—2007
  • புறங்கூறுதல் அதில் என்ன தீங்கு இருக்கிறது?
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 10/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

கடவுள் இருக்கிறார் “உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா?” (பிப்ரவரி 8, 1999) என்ற தொடர் கட்டுரை எனக்கு எந்தளவுக்கு பயனளித்தது என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நான் தேடிக்கொண்டிருந்த கடவுளை கண்டுபிடிக்க அது உதவி செய்தது, இவ்வளவு நாட்களாக அவரைப் பற்றி அநேக விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியாதிருந்தது. என்னைப் போன்றவர்களுக்கு சத்தியத்தின் பாதையை காண்பித்ததற்காக என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கெ. பி., பிரேஸில்

ஒளியிழந்தபோதும் ஒளியாய் பிரகாசித்தல் பிப்ரவரி 8, 1999 இதழில் “ஒளியிழந்த எனக்கு ஒளிமயமான வாழ்க்கை” என்ற கட்டுரையில் பாலிடிமி வெனட்சியானோஸ்-⁠ன் வாழ்க்கை சரிதையை பிரசுரித்ததற்காக என்னுடைய நன்றிகள். அவருடைய தைரியமும் கடவுள்மீது அவருக்கிருந்த உறுதியான விசுவாசமும் என்னை நெகிழ வைத்தன. இந்தப் பெண்மனி தன் வாழ்க்கையில் ஒருபக்கம் இழப்பையும் கஷ்டங்களையுமே சந்தித்திருந்த போதிலும், அவருடைய வாழ்க்கை மதிப்பிடமுடியாத விலையேறப்பெற்ற நன்மைகளால் நிரம்பியிருந்தது. வாழ்க்கை ஓட்டத்தில் ஓடி ஓடி களைத்துப் போயிருப்பவர்களுக்கு, இவருடைய சரிதை பெரும் உதவியாயும் தெம்பூட்டுவதாயும் இருக்கும் என்று நம்புகிறேன்.

எஸ். ஆர்., ரஷ்யா

ஆடை எனக்கு 11 வயது, “எந்த மாதிரி ஆடை அணிகிறோம்​—⁠அது அவ்வளவு முக்கியமா?” (பிப்ரவரி 8, 1999) என்ற கட்டுரையில் நீங்கள் கொடுத்திருந்த அருமையான குறிப்புகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முன்பு என்னுடைய பள்ளி சகாக்கள் உடை உடுத்துவதுபோலவே நானும் உடுத்த வேண்டும் என்றிருந்தேன். ஆனால் இந்த கட்டுரை, அரைகுறையான அல்லது மட்டுக்குமீறிய ஆடைகளை அணியாமல் கண்ணியமான நல்ல உடையை உடுத்த வேண்டும் என்று எனக்கு எடுத்துக் காட்டியது.

எ. எஸ்., எஸ்டோனியா

சில சமயம் மற்றவர்கள் என்னுடைய டிரஸ் பழைய பேஷன் அல்லது ரொம்ப ஃபார்மலா இருக்குது என்றெல்லாம் கேலி செய்யும்போது எனக்கு கவலையாக இருக்கும். ஆனால் உங்களுடைய கட்டுரை எனக்கு உற்சாகத்தை அளித்தது, ஏனென்றால் பைபிள் நியமங்களை பின்பற்றுவதே அதிக பயனுள்ளது என்பதை அது உறுதிப்படுத்தியது.

ஆர். எல்., பிரேஸில்

கடந்த அநேக வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பும் அனுதாபமும்தான் வரும். என்னுடைய ஒரு நண்பர் விழித்தெழு! பிப்ரவரி 8, 1999-⁠ன் பிரதி ஒன்றை எனக்கு தந்தார். அந்த பத்திரிகையை வாசித்து அகமகிழ்ந்தேன், அது சாட்சிகள்மீது நான் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிவிட்டது. அதில் முக்கியமாக என்னை மிகவும் கவர்ந்த விஷயம் உடையைப் பற்றிய கட்டுரையே. அது உடை வாங்கும் விஷயத்தில் நான் கொண்டிருந்த அபிப்பிராயத்தையே நன்கு எடுத்துக்காட்டியது. இனிமேல், எப்போதும் டிஸைனர்கள் வடிவமைக்கும் ஆடைகள்மீதே என் கண் இருக்காது. அதோடு வாசிப்பதற்கு உங்களுடைய மற்ற பத்திரிகைகளையும் கொண்டுவரும்படி என் நண்பரிடம் சொல்வேன்!

யூ. பி., ஜெர்மனி

பூச்சிக்கொல்லிகள் “பூச்சிக்கொல்லிகள் ஒழிப்பது பூச்சிகளை மட்டுமா?” (பிப்ரவரி 22, 1999) என்ற கட்டுரையை நானும் என் மனைவியும் வாசித்து மகிழ்ந்தோம். சுற்றுச்சூழலியலாளர்களாக நாங்கள், இந்த பூமியை நட்சுப்படுத்துவதை எதிர்த்து போராட எவ்வளவோ முயற்சித்திருக்கிறோம். அதேசமயத்தில் இந்த பூமியைப் பற்றி அக்கறையுடையவர்கள், ஆக்கபூர்வமான காரியங்களை செய்பவர்கள் பிரேஸில், சீனா உட்பட மற்ற நாடுகளிலும் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது எங்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.

டபிள்யு. ஜீ., கனடா

கிசுகிசு “இளைஞர் கேட்கின்றனர் . . . கிசுகிசுப்பது தவறா?” (பிப்ரவரி 22, 1999) என்ற கட்டுரைக்காக கோடி நன்றிகள். ஒருசில நாட்களுக்கு முன்பு, சபையிலிருந்து அடுத்தது நான்தான் சபைநீக்கம் செய்யப்படப் போகிறேன் என்ற வதந்தியை யாரோ கிளப்பிவிட்டுவிட்டார்கள், அதிலிருந்து கிசுகிசுப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை நானே தனிப்பட்ட விதமாக உணர்ந்தேன். அந்தப் பொய் என்னை மிகவும் புண்படுத்தியது! அந்த வதந்திக்கு காரணமானவர் என்னிடம் பிறகு மன்னிப்பு கேட்டார், ஆனாலும் அவர்மீது வைத்திருந்த என் நம்பிக்கை சுக்குநூறாகிவிட்டது.

ஆர். எம்., ஸ்விட்ஸர்லாந்து

கிசுகிசுப்பு என்ற கொடிய மிருகம் எங்கள் பள்ளியையே கைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறது, அதனால் அந்தக் கட்டுரை என்னை உற்சாகப்படுத்துவதாயும் பலப்படுத்துவதாயும் அமைந்தது. மற்றவர்களுக்கு கெட்ட பேர் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நானே அவ்வாறு கிசுகிசுத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன். அதேபோல மற்றவர்களைப் பற்றி என் நண்பர்கள் பேசும்போதும் சுவாரஸ்யமாய் காதைத் தீட்டிக்கொண்டு கேட்டிருக்கிறேன், சிலசமயம் அப்படிப்பட்ட கிசுகிசுவில் நானும் கலந்துகொண்டேன் என்றுகூட சொல்லலாம். ஆனால் அந்தக் கட்டுரையை வாசித்தபோது, ஏதோ ஷாக் அடித்தது போல இருந்தது. அதிலிருந்த ஒவ்வொரு வாக்கியமும் என் செயலைக் கண்டித்து சொல்லப்பட்டதைப் போலிருந்தது. நான் பரப்பியிருக்கும் எல்லா கிசுகிசுக்களுக்காக வெட்கப்படுகிறேன். அந்த கிசுகிசுப்புகள் என் பள்ளியில் தொடரும் என்று எனக்கு நன்றாகவே தெரியும், ஆனால் நான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.

எம். டபிள்யு., ஜப்பான்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்