உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g00 1/8 பக். 3
  • மருத்துவ முன்னோடிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மருத்துவ முன்னோடிகள்
  • விழித்தெழு!—2000
  • இதே தகவல்
  • இரத்தமில்லா சிகிச்சைக்கு அமோக வரவேற்பு
    விழித்தெழு!—2000
  • இரத்தத்தால் உயிரைப் பாதுகாத்தல்—எவ்வாறு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • இரத்தமேற்றாமல் ஆபரேஷன் டாக்டர்களின் புதிய கண்ணோட்டம்
    விழித்தெழு!—1998
  • யெகோவாவின் சாட்சிகள் ஏன் இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—2000
g00 1/8 பக். 3

மருத்துவ முன்னோடிகள்

உப்பாயி என்ற சிறிய நகரிலிருந்துவரும் பெல்ஜிய நாட்டவரான ஜோஸேக்கு வயது 61. இந்த வயதில் அவருக்கு மாற்று ஈரல் பொருத்த வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். “எனக்கு தலையில் இடியே விழுந்ததுபோல் இருந்தது” என்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதைப்பற்றி யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. 1970-களிலும்கூட, மாற்று ஈரல் அறுவை சிகிச்சையில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு சுமார் 30 சதவீதம் மட்டுமே. இன்றோ இது சர்வசாதாரணமாக செய்யப்படுகிறது, வெற்றி வாய்ப்பும் அதிகரித்திருக்கிறது.

இருந்தாலும் இதில் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. இந்த மாற்று ஈரல் அறுவை சிகிச்சையின்போது அளவுக்கு அதிகமாக இரத்தம் வெளியேறுகிறது. இதனால் ஆபரேஷனின்போது பொதுவாக டாக்டர்கள் இரத்தமேற்றுகிறார்கள். மத நம்பிக்கைகளின் காரணமாக ஜோஸே இரத்தமேற்றிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் மாற்று ஈரல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினார். அது எப்படி முடியும்? என சிலர் யோசிக்கலாம். ஆனால் தலைமை அறுவை மருத்துவருக்கு, தானும் தன் குழுவும் சேர்ந்து இரத்தமில்லாமல் இதை வெற்றிகரமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையும் பலித்தது! நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து 25 நாட்களில் ஜோஸே மனைவியோடும் மகளோடும் வீடு திரும்பிவிட்டார். a

இரத்தமில்லாமல் அறுவை சிகிச்சைகளைச் செய்யும் இவர்களை டைம் பத்திரிகை “மருத்துவ ஹீரோக்கள்” என்றழைக்கிறது. இவர்களுடைய உதவியால் இரத்தமில்லா சிகிச்சை இப்போது சர்வ சாதாரணமாகிக் கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு இப்படியொரு வரவேற்பு இருப்பதற்கு காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண இரத்தம் ஏற்றுதலின் சரித்திரத்தில் இருந்துவந்திருக்கும் பிரச்சினைகளை நாம் சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.

[அடிக்குறிப்பு]

a மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்வதா வேண்டாமா என்பதை யெகோவாவின் சாட்சிகள் அவரவரது மனசாட்சிக்கு விட்டுவிடுகின்றனர்.

[பக்கம் 3-ன் படம்]

உலகெங்கும் 90,000-க்கும் அதிகமான டாக்டர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு இரத்தமில்லாமல் சிகிச்சையளிக்க முன்வந்திருக்கிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்