உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g00 7/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—2000
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2000
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—2000
g00 7/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

உலக வாணிபம்  “உலக வாணிபம்—உங்களை எப்படி பாதிக்கிறது” (செப்டம்பர் 8, 1999) கட்டுரையில் பளிச்சென்று நீங்கள் எழுதியிருந்த தகவலுக்கு நன்றி. பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே பெருத்த இடைவெளி இருப்பதற்கு காரணம் என்ன என்பது இப்போது நன்றாக புரிகிறது.

எம்.ஸெட்., இத்தாலி

நான் கல்லூரியில் பொருளாதாரம் படிக்கிறேன். இப்போதுதான் சர்வதேச வாணிபம் பற்றி படித்து முடித்தேன். வகுப்பில் எங்களுக்கு கற்றுக்கொடுக்காத பல விஷயங்களை நான் உங்கள் கட்டுரையில் படித்தேன். அடுத்த மாதம் நடைபெறும் தேர்வில் இவற்றையும் நான் எழுதப் போகிறேன்.

ஹெச்.என்., சிம்பாப்வே

தவறான லேசர்?  “உலகை கவனித்தல்” என்ற தலைப்பில் “வலியின்றி பல்லைத் தொடும் டாக்டர்களா?” (அக்டோபர் 22, 1999) என்ற செய்திக்குறிப்பு பல் அறுவை சிகிச்சைக்கு எர்பியம்:யாக் லேசர் கருவி பயன்படுத்துவது பற்றி குறிப்பிட்டது. இதை நியோடிமியம்:யாக் என்று சொல்ல வேண்டுமா என்று எனக்கு ஒரு சந்தேகம்.

டி.பி., கனடா

நியோடிமியம்:யாக் லேசரை “பல் மருத்துவத்தில் மிகவும் சாதாரணமாக பயன்படுத்தப்படும் அலைவரிசை” என்று லேசர் பல்மருத்துவ அகாதெமி விளக்கினாலும், “அமெரிக்கன் பல் மருத்துவ கழக பத்திரிகை”யில் வெளியான ஒரு கட்டுரை (ஆகஸ்ட் 1997, புத்தகம் 128, பக்கம் 1080-7) எர்பியம்:யாக் லேசரை “FDA கன்சூமர்” என்று குறிப்பிடுவதாக விவரித்தது.—ED.

பில்லிசூனியம்  எனக்கு 13 வயதாகிறது. பில்லிசூனியத்தை நம்பும் ஒரு மாணவியை நான் பள்ளியில் சந்தித்தேன். பில்லிசூனியத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று ஒருநாள் என்னிடம் கேட்டாள். நான் ஒரு யெகோவாவின் சாட்சி, கண்களுக்குப் புலப்படாத தீய சக்திகளோடு தொடர்பு வைப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது என்று சொன்னேன். அவள் அப்செட் ஆகிவிட்டாள். அதற்குப்பின் பல முறை இதைப் பற்றி என்னிடம் பேசியிருக்கிறாள். நான் உதவிக்காக யெகோவாவிடம் ஜெபித்தேன். “பைபிளின் கருத்து: பில்லிசூனியத்தின் திரைக்குப் பின்னால்” (நவம்பர் 8, 1999) என்ற கட்டுரையில் எனக்கு விடை கிடைத்தது. அந்தக் கட்டுரையை அவளிடம் கொடுத்தேன். அதை வாசித்தப்பின் இந்த விஷயத்தைப் பற்றி அவள் என்னிடம் வாயே திறப்பதில்லை.

கே.இ., ஐக்கிய மாகாணங்கள்

அழுகிய மணம் பரப்பும் அருஞ்சுவை உணவு  “சூர்ஸ்ட்ரோமிங்—அழுகிய மணம் பரப்பும் அருஞ்சுவை உணவு” (ஜூலை 8, 1999) கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. இதற்கு முன்னால் நாங்கள் இதைப்பற்றி கேள்விப்பட்டதே இல்லை. ஆகவே ஸ்வீடனிலிருந்து வந்த ஒரு சகோதரியிடம் நாங்கள் இதைப் பற்றி கேட்டோம். எங்கள் நாக்கில் நீர் ஊறும்படியாக இந்த உணவைப் பற்றி ஆஹா ஓஹோவென அவர் விவரித்தார். கொஞ்ச நாட்கள் கழித்து எங்களுக்கு இரண்டு டின்கள் தந்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டாள். உள்ளூர் சபையில் பலர் ஒன்றாக சேர்ந்து இதைப் பகிர்ந்து சாப்பிட முடிவு செய்தோம். கட்டுரையில் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. ஆகவே இந்த டின்களை வெளியே தோட்டத்தில் வைத்து திறந்தோம். நல்ல வேளை, தோட்டத்தில் அதைத் திறந்ததால் தப்பினோம். நாங்கள் கனவில்கூட எதிர்பார்க்காத நாற்றம் அது! இதனால் அதன் சுவை உண்மையில் எப்படித்தான் இருந்தது என்பதை எங்களால் எடைபோடவே முடியவில்லை. ஆனால் இந்தக் கட்டுரையை மட்டும் நாங்கள் வாசித்திராவிட்டால் நெஞ்சை விட்டு நீங்காத இந்த அனுபவம் எங்களுக்கு கிடைக்காமலே போயிருக்கும்.

சி.பி., ஜெர்மனி

ஆர்எஸ்டி  “ஆர்எஸ்டி—குழப்பமூட்டும் வலி மிகுந்த ஒரு நோய்” (செப்டம்பர் 8, 1997) கட்டுரைக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு எழுத எனக்கு இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன. எனக்கு இடது கையில் இந்தப் பிரச்சினை இருப்பதை கண்டுபிடிக்கும் வரை இந்த நோய் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. பிஸியோதெரபிஸ்ட் ஒருவர் எனக்கு சிகிச்சை அளித்தார், தான் கல்லூரியில் இந்த நோயைப் பற்றி படித்து தெரிந்துகொண்டதைவிட இந்தக் கட்டுரையைப் படித்து அதிகம் தெரிந்துகொண்டதாக சொன்னார். கட்டுரைக்கு நன்றி. இந்நோயை சமாளிக்க பெரிய உதவியாக இருந்தது.

எல்.எம்.கே., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்