உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g01 7/8 பக். 22
  • சிள்வண்டின் காதல் கானம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிள்வண்டின் காதல் கானம்
  • விழித்தெழு!—2001
  • இதே தகவல்
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • புதிய பாடல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • குட்டிக் காதின் இரகசியம் அம்பலம்
    விழித்தெழு!—2003
  • புதுப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—2001
g01 7/8 பக். 22

சிள்வண்டின் காதல் கானம்

ஐம்பது மில்லிமீட்டர் அல்லது அதற்கும் குறைவான நீளமுடைய சிள்வண்டு ஒருவேளை உங்களை சொக்கவைக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த சிள்வண்டின் கானம் உலகிலுள்ள கோடா கோடி மக்களை சுண்டியிழுக்கிறது. இந்தச் சிறிய உயிரி எவ்வாறு பாட்டிசைக்கிறது, எதற்காக?

சுமார் 2,400 சிள்வண்டு வகைகளில், ஆண் சிள்வண்டுகள் மட்டுமே பாடுகின்றன, அல்லது ரீங்காரமிடுகின்றன. ஆனால் குரல்வளையிலிருந்து குரல் வருவதில்லை, அவை தன்னுடைய இறக்கைகளால் இசை அமைக்கின்றன. முன்பக்க சிறகுகளில் ஒன்றிலுள்ள ஒரு பகுதியால் மற்றொன்றில் உள்ள சுமார் 50 முதல் 250 பற்கள் போன்ற பாகங்களை (projections) உரசுவதன் மூலம் ஆண் சிள்வண்டுகள் உச்சஸ்தாயியில் பாடுகின்றன. ஒரு வினாடிக்கு எத்தனை பற்களை உரசுகிறது என்பதை பொறுத்து தொனியின் அதிர்வெண் (frequency) இருக்கும் என்பதாக ஓர் என்ஸைக்ளோப்பீடியா விளக்குகிறது. இந்த அதிர்வுகள் சிள்வண்டின் தனித்தன்மைமிக்க கீதமாக காற்றில் ஒலிக்கின்றன.

ஆனால் இந்த ஆண் சிள்வண்டு நமக்காக கச்சேரி நடத்துவதாக எண்ணிவிடாதீர்கள்! வருங்கால துணையை மயக்குவதே இந்த இசைக் கலைஞனுடைய நோக்கம். இயற்கையின் இரகசியத்தை ஆராய்தல் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “துணையை தேடுவதில் இந்த ஆண் சிள்வண்டு கைதேர்ந்து விளங்குகிறது. வித்தியாசமான மூன்று பாடல்களை பாடுகிறது: ஒன்று தான் இருப்பதை விளம்பரப்படுத்துவதற்கு, மற்றொன்று இணை சேர்வதற்கு, இன்னொன்று போட்டியாளர்களை விரட்டியடிப்பதற்கு.” பெண் சிள்வண்டின் ஆசையை தூண்டும்வரை, தான் காத்திருப்பதை விளம்பரப்படுத்த சில சிள்வண்டுகள் சதா பாடிக்கொண்டே இருக்கின்றன. முன்னங்கால்களில் இருக்கும் “காதுகளால்” பெண் சிள்வண்டு அந்தப் பாடலை கேட்கிறது, ஆனால் இந்தத் தொலை தூர காதலோடு அது திருப்தியடைவதில்லை. கானம் எங்கிருந்து பிறக்கிறது என்பதை அறிய ஓடோடி வருகிறது, அப்போது அந்த ஆண் சிள்வண்டு இனிய கீதமாகிய காதல் கானத்தில் தொடர்ந்து பாட்டிசைக்கிறது. இது காதலன்பால் பெண் சிள்வண்டை கவர்கிறது, இப்பொழுது அந்தச் சிள்வண்டுகள் இணைசேர்கின்றன.

கிழக்கு ஆசியாவில், ஆண் சிள்வண்டுகளின் பாடலை கேட்டு மகிழ்வதற்காக சிலர் அவற்றை செல்லப்பிராணியாக வைத்துக்கொள்கிறார்கள். வேறு சிலரோ சிள்வண்டின் இயற்கை வாழிடத்திலேயே அவற்றின் இன்னிசையை அனுபவிக்க விரும்புகிறார்கள். எந்த சூழலில் இருந்தாலும், இந்தச் சின்னஞ்சிறு சிள்வண்டின் இன்னிசை உலகெங்கும் வாழும் மனிதரை கவர்கிறது, அதன் படைப்பாளருக்கு துதிசேர்க்கிறது.(g01 6/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்