உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g05 6/8 பக். 3
  • இந்த வருஷ புது ரிலீஸ் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இந்த வருஷ புது ரிலீஸ் என்ன?
  • விழித்தெழு!—2005
  • இதே தகவல்
  • ஸ்கிரிப்ட் டு ஸ்கிரீன்
    விழித்தெழு!—2005
  • எப்படிப்பட்ட படங்களை நீங்கள் பார்ப்பீர்கள்?
    விழித்தெழு!—2005
  • சாட்சிகொடுப்பதற்கான வாய்ப்புகளை ஆவலுடன் பற்றிக்கொள்ளுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • மழைக்கால மாதங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—2005
g05 6/8 பக். 3

இந்த வருஷ புது ரிலீஸ் என்ன?

கோடையில் எப்படிப் பொழுதைப் போக்க விரும்புகிறீர்கள்? விடுமுறை காலத்தில் வெளியே செல்வது​—⁠ஒருவேளை கடற்கரைக்கோ பூங்காவிற்கோ செல்வது​—⁠உங்களுக்கு உல்லாசமாக இருக்கலாம்.

ஆனால் திரைப்பட துறையினரோ, கோடையில் வெளியே எங்கும் போகாமல் சினிமா படங்களைப் பார்ப்பதில் பொழுதைப் போக்கும் கோடானு கோடி மக்களை நம்பியிருக்கிறார்கள். வட அமெரிக்காவில் மட்டுமே குறைந்தபட்சம் 35,000 வெள்ளித்திரைகள் இருக்கின்றன. சமீப ஆண்டுகளில், பாக்ஸ் ஆபிஸ் (டிக்கெட் விற்பனை) வருமானத்தில் சுமார் 40 சதவீதம் கோடையில் வசூலாகிறது.a “இது, கிறிஸ்மஸ் சீஸனில் லாபம் கிடைப்பது மாதிரி இருக்கிறது” என கூறுகிறார் மூவிலைன் பத்திரிகை பதிப்பாசிரியை ஹைடீ பார்க்கர்.

ஆனால் எப்போதுமே இப்படி லாபம் கிடைக்கவில்லை. கோடை காலத்தில் அமெரிக்க தியேட்டர்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. அதனால் பெரும்பாலான தியேட்டர்கள் காட்சிகளைக் குறைத்தன, அல்லது தியேட்டரையே இழுத்து மூடின. ஆனால் 1970-களுக்குள், புழுக்கத்திலிருந்து வெளிவர குளு குளு தியேட்டர்கள் கோடிக்கணக்கானோரைக் கவர்ந்திழுத்தன. பள்ளிக்கூட பிள்ளைகளுக்கும் அந்த சீஸனில் விடுமுறை இருந்தது, இது திரைப்பட தயாரிப்பாளர்களுடைய கவனத்திலிருந்து தப்பவில்லை. விரைவில், “பிளாக்பஸ்டர்”b படங்கள் வெளிவந்தன. இது சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் விதத்தையே தலைகீழாக மாற்றியது, அதைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். (g05 5/8)

[அடிக்குறிப்புகள்]

a அமெரிக்காவில், கோடை சினிமா சீஸன் மே மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை தொடருகிறது.

b பொதுவாக, 450 கோடி அல்லது அதற்கும் அதிகமாக ஈட்டித்தரும் திரைப்படங்களுக்கே “பிளாக்பஸ்டர்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு பணம் குவிந்தாலும்சரி, எந்தவொரு வெற்றிப் படத்திற்கும் சிலசமயங்களில் இந்த முத்திரை குத்தப்படுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்