உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 7/09 பக். 3
  • விழிபிதுங்கும் மாணவர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விழிபிதுங்கும் மாணவர்கள்
  • விழித்தெழு!—2009
  • இதே தகவல்
  • இளைஞர்களே—உங்கள் செயலை யெகோவா மறக்க மாட்டார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • பெற்றோர் எப்படி உதவலாம்?
    விழித்தெழு!—2009
  • ‘மூச்சுவிடக்கூட நேரமில்லை!’
    விழித்தெழு!—2009
  • மனச்சோர்வைச் சமாளிப்பது எப்படி?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—2009
g 7/09 பக். 3

விழிபிதுங்கும் மாணவர்கள்

ஜெனிஃபருக்குப் பதினேழு வயது. அவள் படிப்பில் புலி. அதுமட்டுமா, விளையாட்டு, பாட்டு என எல்லாவற்றிலும் கெட்டிக்காரி. அதனால் அவளுடைய டீச்சர்கள் அவளைத் தலையில் தூக்கிவைத்திருந்தார்கள். ஆனால், பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முந்தின வருஷம், அவளுக்கு மண்டையைப் பிளக்கும் தலைவலி வரத் தொடங்கியது, அடிக்கடி வயிற்றைக் குமட்ட ஆரம்பித்தது. ஸ்கூலில் படிப்பது போதாமல் வீட்டிலும் ராத்திரி ரொம்ப நேரம்வரை விழுந்து விழுந்து படித்ததால் தூக்கம் கெட்டதோடு உடம்பும் கெட்டுப்போனதாக அவள் சொல்கிறாள்.

எத்தனையோ ஜெனிஃபர்கள் இதுபோல் கஷ்டப்படுகிறார்கள். பள்ளிப் பாடத்தோடு மல்லுக்கட்ட முடியாமல் விழிபிதுங்கி நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவதாகத் தெரிகிறது; இவர்களில் சிலர் மனநோய் மருத்துவரிடம் சிகிச்சை பெறுமளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. ஆகவே, பள்ளியில் சக்கையாய்ப் பிழிந்தெடுக்கப்படுகிற பிள்ளைகளை நிம்மதிப் பெருமூச்சுவிட வைப்பதற்கு அமெரிக்காவில் சில ஆசிரியர்களும் பள்ளி அதிகாரிகளும் சேர்ந்து ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தத் திட்டம் “வாழ்வில் வெற்றிகாண” (Challenge Success) என்றழைக்கப்படுகிறது.

நீங்கள் ஒரு மாணவரா? அப்படியென்றால், நீங்களும் ஜெனிஃபரைப் போல் ஓயாமல் படித்து ஓய்ந்து போயிருக்கலாம். நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியென்றால், பாடச் சுமையால் உங்கள் பிள்ளை எந்நேரமும் திணறுவதைப் பார்த்து நொந்து போயிருக்கலாம். பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் நம்பகமான வழிகாட்டி ஏதாவது இருக்கிறதா? (g 4/09)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்