உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 10/10 பக். 32
  • வெற்றி நிச்சயம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெற்றி நிச்சயம்!
  • விழித்தெழு!—2010
  • இதே தகவல்
  • நீங்கள் எப்படி நிறுத்தலாம்?
    விழித்தெழு!—2000
  • புகைப்பதை ஏன் நிறுத்த வேண்டும்?
    விழித்தெழு!—2000
  • “எங்களால் முடிந்ததே, உங்களால் முடியாதா என்ன?”
    விழித்தெழு!—1998
  • தடைகளைத் தாண்டத் தயாராக இருங்கள்
    விழித்தெழு!—2010
மேலும் பார்க்க
விழித்தெழு!—2010
g 10/10 பக். 32

வெற்றி நிச்சயம்!

நீங்கள் ‘தைரியமாகச் செயல்படுவதற்கான’ நேரம் இதுவே. (1 நாளாகமம் 28:10, NW) வெற்றிக் கனியைப் பறிக்க நீங்கள் கடைசியாகச் செய்ய வேண்டியவை யாவை?

ஒரு தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்த பிறகு, இரண்டு வாரங்களுக்குள்ளாக ஒரு தேதியைக் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும் என்று ஐ.மா. சுகாதார மற்றும் மனித சேவை இலாகா சிபாரிசு செய்கிறது. அப்படிச் செய்தால்தான் உங்கள் தீர்மானத்தில் உறுதியாயிருக்க முடியும். எனவே, உங்கள் காலண்டரில் அந்தத் தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்; நண்பர்களிடம் அதைப் பற்றிச் சொல்லுங்கள்; சூழ்நிலை மாறினாலும் தேதியை மாற்றாதீர்கள்.

தகவல் அட்டை ஒன்றைத் தயாரியுங்கள். உங்கள் தீர்மானத்தில் உறுதியாயிருக்க உதவுகிற தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும் அதில் எழுதி வைக்கலாம்:

● நீங்கள் புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கான காரணங்கள்

● புகைப்பிடிப்பதற்கான ஆசை வரும்போது நீங்கள் போனில் பேச விரும்புகிற நபர்களின் போன் நம்பர்கள்

● உங்கள் தீர்மானத்தைப் பலப்படுத்த உதவும் சில கருத்துகள்; அதாவது கலாத்தியர் 5:22, 23-ஐப் போன்ற வசனங்கள்

இந்த அட்டையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்; ஒரு நாளில் அதைப் பல முறை வாசித்துப் பாருங்கள். புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகும்கூட எப்போதெல்லாம் அந்த ஆசை எட்டிப் பார்க்கிறதோ அப்போதெல்லாம் அதை எடுத்து வாசியுங்கள்.

புகைப்பிடிப்பதோடு சம்பந்தப்பட்ட பழக்கங்களை மாற்றுங்கள். நிறுத்தும் தேதிக்கு முன்பே, புகைப்பிடிப்பதோடு சம்பந்தப்பட்ட பழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். உதாரணமாக, காலை எழுந்தவுடன் புகைப்பிடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், புகைப்பதை ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ தள்ளிப்போடுங்கள். சாப்பிடும்போது அல்லது சாப்பிட்ட பிறகு புகைக்கும் பழக்கம் இருந்தால் அந்தப் பழக்கத்தை மாற்றுங்கள். மற்றவர்கள் புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் இடங்களைத் தவிருங்கள். “சாரி, நான் சிகரெட்டை விட்டுவிட்டேன்” என்று தனிமையில் சத்தமாகச் சொல்லிப் பழகுங்கள். அப்போதுதான், யாராவது வற்புறுத்தினால் சிகரெட்டை மறுக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் செய்வது, அந்த நாளுக்காக உங்களைத் தயார்படுத்துவது மட்டுமல்லாமல் சீக்கிரத்தில் நீங்கள் புகைப்பழக்கத்திலிருந்து மீண்டவராக இருப்பீர்கள் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்தும்.

தயாராகுங்கள். நீங்கள் குறித்த தேதி நெருங்கி வருகையில் கேரட் ஸ்டிக்ஸ், சூயிங்கம், கொட்டைகள் போன்ற பொருள்களைக் கைவசம் வைத்திருங்கள். குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அந்தத் தேதியை ஞாபகப்படுத்துங்கள்; அவர்கள் எப்படி உதவலாம் என்பதைப் பற்றியும் சொல்லுங்கள். புகைப்பிடிக்க வேண்டுமென்ற ஆசை வந்தால் உங்கள் நண்பரிடம் ஒரு சிகரெட்டைக் கேட்பதைவிட அல்லது கடைக்குச் சென்று ஒரு சிகரெட் பாக்கெட்டை வாங்குவதைவிட மேஜை டிராயரிலிருந்து எடுத்துவிடுவது சுலபம். எனவே, ஒரு நாளுக்கு முன்பே உங்கள் வீட்டில், காரில், பாக்கெட்டுகளில் அல்லது வேலை செய்கிற இடத்தில் இருக்கும் சிகரெட்டுகளையெல்லாம் அகற்றிவிடுங்கள்; ஆஷ்ட்ரே, லைட்டர் போன்றவற்றையும் தூக்கி எறிந்துவிடுங்கள். முக்கியமாக, உதவி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்; அதுவும் கடைசி சிகரெட்டைப் புகைத்த பின்பு கடவுளின் உதவிக்காக இன்னும் ஊக்கமாய் ஜெபம் செய்யுங்கள்.—லூக்கா 11:13.

தங்களுடைய இந்த முன்னாள் நண்பனுடன், கொடிய நண்பனுடன் வைத்திருந்த தீய நட்பை நிறையப் பேர் முறித்துவிட்டிருக்கிறார்கள். உங்களாலும் முறிக்க முடியும். அப்போதுதான், நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள்; சிகரெட்டின் அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவீர்கள். (g10-E 05)

[பக்கம் 32-ன் படம்]

தகவல் அட்டையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்; ஒரு நாளில் அதைப் பல முறை வாசித்துப் பாருங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்