உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 10/12 பக். 7
  • 4. ஹோட்டல் சாப்பாடு—கவனம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 4. ஹோட்டல் சாப்பாடு—கவனம்!
  • விழித்தெழு!—2012
  • இதே தகவல்
  • எல்லாருக்கும் ஆரோக்கியமான உணவு விரைவில்!
    விழித்தெழு!—2012
  • 3. சமைப்பதில்... பாதுகாப்பதில்... கவனமாயிருங்கள்
    விழித்தெழு!—2012
  • உங்கள் உணவு எந்தளவுக்குப் பாதுகாப்பாக உள்ளது?
    விழித்தெழு!—1990
  • உணவில் கிருமிகள்—ஜாக்கிரதை!
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
விழித்தெழு!—2012
g 10/12 பக். 7

4. ஹோட்டல் சாப்பாடு​—⁠கவனம்!

அமெரிக்காவில், பென்ஸில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்கில் வாழ்ந்த ஜெஃப் என்பவருக்கு 38 வயதுதான், ஆரோக்கியமானவர், வாட்டசாட்டமானவர். ஒருநாள் குடும்பத்தோடு ரெஸ்டாரன்ட்டுக்கு சாப்பிட போனார். ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் இறந்துபோனார். என்ன காரணம்? அவர் சாப்பிட்ட வெங்காயத்தாளில் ஹெப்படைடிஸ்-A வைரஸ் இருந்திருக்கிறது.

மேற்கத்திய நாடு ஒன்றில் உணவிற்கென்று செலவிடப்பட்ட மொத்த பணத்தில் கிட்டத்தட்ட பாதி பணம் ரெஸ்டாரன்ட்டில்தான் கொட்டப்பட்டிருக்கிறது. அங்கு உணவினால் பரவும் நோய்க்கு ஆளானவர்களில் பாதிக்குப் பாதி பேர் ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட்டவர்களே.

உண்மைதான், ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட நினைத்தால் சமையலுக்கு வேண்டிய சாமான்களை வாங்குவது, சமையலறையைச் சுத்தம் செய்வது, சமைப்பது எல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள், வேறொருவர்தான் செய்வார். ஆனால், எங்கே சாப்பிடுவது, எதைச் சாப்பிடுவது, மீதமிருந்தால் அதை எப்படி எடுத்து செல்வது என்று உங்களால் தீர்மானிக்க முடியும்.

● சுற்றிமுற்றி பாருங்கள்.

பிரேசிலில் வசிக்கும் டியா சொல்கிறாள்: “ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு முதல் முறை போகும்போது சுத்தி நோட்டம் விடுவோம். மேஜை, மேஜை விரிப்பு, பாத்திரம் எல்லாம் சுத்தபத்தமா இருக்கா, பரிமாறுகிறவங்க சுத்தமா இருக்காங்களானு பார்ப்போம். சரியில்லனா, வேற ரெஸ்டாரன்ட்டுக்கு போயிடுவோம்.” சில நாடுகளில் சுகாதார அதிகாரிகள் அடிக்கடி ரெஸ்டாரன்டுகளைச் சோதனையிடுவார்கள். அவை, எந்தளவு சுத்தமானதென தரம் பிரித்து, அதைப் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக எழுதிப் போடுவார்கள்.

● மீதியானதை எடுத்துச் செல்லும்போது ஜாக்கிரதை.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சொல்கிறது: ஓட்டலில் சாப்பிட்ட உணவில் மீதியானதை “வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு இரண்டு மணிநேரங்களுக்கு மேல் ஆகிவிடும் என்றால் எடுத்துச் செல்லாதீர்கள்.” அப்படி எடுத்துச் செல்ல விரும்பினால் உடனடியாக வீட்டிற்குச் சென்று ஃப்ரிட்ஜில் வையுங்கள், அதுவும் சீதோஷ்ணநிலை 32 டிகிரி செல்ஷியஸுக்கும்மேல் இருந்தால் இன்னும் சீக்கிரமாக எடுத்துச் செல்லுங்கள்.”

இந்தத் தொடர் கட்டுரைகளில் சொல்லப்பட்டுள்ள நான்கு குறிப்புகளிலும் கவனமாக இருந்தால், உங்கள் உணவு பாதுகாப்பான உணவுதான். (g12-E 06)

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்: “வெளியில உள்ள சாப்பாடு நல்லதா இல்லன்னா சாப்பிடாதீங்கனு எங்க பிள்ளைங்ககிட்ட சொல்வோம்.”​—⁠நயோமி, பிலிப்பைன்ஸ்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்