உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g18 எண் 2 பக். 4
  • 1 கடமையுணர்ச்சி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1 கடமையுணர்ச்சி
  • விழித்தெழு!—2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இதன் அர்த்தம் என்ன?
  • இது ஏன் முக்கியம்?
  • நீங்கள் என்ன செய்யலாம்?
  • வழி 2 உறுதிமொழி காத்தல்
    விழித்தெழு!—2010
  • மனம் மாறாமல் மணவாழ்க்கை தொடர...
    விழித்தெழு!—2015
  • உங்கள் மணவாழ்வை பலப்படுத்துவது எப்படி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • திருமண பந்தத்தைப் பாதுகாத்திடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
விழித்தெழு!—2018
g18 எண் 2 பக். 4
புயலில் தத்தளிக்கிற ஒரு படகு மூழ்கிவிடாமல் இருக்க நங்கூரம் உதவுகிறது

புயல்போன்ற பிரச்சினைகளிலும் உங்கள் திருமணக் கப்பல் மூழ்கிவிடாமல் இருக்க கடமையுணர்ச்சி என்ற நங்கூரம் உங்களுக்கு உதவும்

தம்பதிகளுக்கு

1 கடமையுணர்ச்சி

இதன் அர்த்தம் என்ன?

திருமண பந்தத்தைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற கடமையுணர்ச்சியுள்ள கணவர்களும் மனைவிகளும் அந்தப் பந்தத்தை நிரந்தர பந்தமாகக் கருதுகிறார்கள்; அதனால், அந்தப் பந்தத்தில் அவர்கள் பாதுகாப்பாக உணருகிறார்கள். கஷ்டமான சூழ்நிலைகளிலும் இணைபிரியாமல் இருக்க உறுதியாக இருக்கிறார்கள்.

சில தம்பதிகள், தங்களுடைய குடும்பத்தாருக்கும் இந்தச் சமுதாயத்துக்கும் பயந்து ஒன்றுசேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால், திருமண பந்தத்தைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற கடமையுணர்ச்சியோடு ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் காட்டி ஒற்றுமையாக வாழ்வதுதான் சிறந்தது.

பைபிள் நியமம்: ‘கணவன் தன்னுடைய மனைவியைவிட்டுப் பிரிந்துபோகக் கூடாது.’—1 கொரிந்தியர் 7:11.

“திருமண பந்தத்த கட்டிக்காக்கணுங்கற கடமையுணர்ச்சி இருந்தா, நீங்க சட்டுனு கோபப்பட மாட்டீங்க. அதுக்கு பதிலா, உடனே மன்னிப்பீங்க, உடனே மன்னிப்பும் கேட்பீங்க. பிரச்சினைகள் வரும்போது அதயெல்லாம் தடைகற்களாதான் பார்ப்பீங்க, விவாகரத்துக்கான படிக்கற்களா பார்க்க மாட்டீங்க.”—மைக்கா.

இது ஏன் முக்கியம்?

திருமண பந்தத்தைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற கடமையுணர்ச்சி இல்லாத தம்பதிகள், பிரச்சினைகளை எதிர்ப்படும்போது, ‘எங்க ரெண்டு பேருக்கும் ஒத்தே வராது’ என்று சொல்லி, அந்தப் பந்தத்தை முறித்துக்கொள்ள வழிதேட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

“எப்போ வேணும்னாலும் விவாகரத்து செஞ்சுக்கலாங்கற எண்ணத்துலதான் நிறைய பேர் கல்யாண வாழ்க்கையில காலெடுத்து வைக்குறாங்க. இதனால, திருமண பந்தத்த கட்டிக்காக்கணுங்கற கடமையுணர்ச்சி அவங்களுக்கு ஆரம்பத்துல இருந்தே இருக்குறதில்ல.”—ஜீன்.

நீங்கள் என்ன செய்யலாம்?

உங்களையே சோதித்துப்பாருங்கள்

வாக்குவாதம் நடக்கும்போது . . .

  • ‘ஏன்தான் இவர/ள கல்யாணம் செஞ்சமோ’ என்று நினைத்து வருத்தப்படுகிறீர்களா?

  • உங்கள் மணத்துணை அல்லாத ஒருவரோடு இருப்பதுபோல் பகல்கனவு காண்கிறீர்களா?

  • “இனி உன்கூட என்னால வாழ முடியாது,” “நீயெல்லாம் எனக்கு ஸெட்டே ஆக மாட்ட” என்றெல்லாம் சொல்கிறீர்களா?

இவற்றில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் ஆம் என்று பதில் சொல்லியிருந்தீர்கள் என்றால், திருமண பந்தத்தைக் கட்டிக்காப்பதற்கான உங்கள் கடமையுணர்ச்சியை அதிகரிக்க இதுவே சரியான நேரம்.

உங்கள் துணையிடம் கலந்துபேசுங்கள்

  • திருமண பந்தத்தைக் கட்டிக்காப்பதற்கான கடமையுணர்ச்சி நமக்குக் குறைந்துவிட்டதா? உங்கள் பதில் ஆம் என்றால், ஏன்?

  • நம்முடைய கடமையுணர்ச்சியை அதிகரிக்க இப்போதே நாம் என்னென்ன செய்யலாம்?

டிப்ஸ்

  • அவ்வப்போது உங்கள் துணைக்கு ஒரு கார்டில் சில காதல் வரிகளை எழுதிக் கொடுங்கள்

  • வேலை செய்யும் இடத்தில் உங்கள் துணையின் ஃபோட்டோவை வையுங்கள்

  • வேலை செய்யும் இடத்தில் இருந்தாலும் சரி, வேறு இடத்தில் இருந்தாலும் சரி, உங்கள் துணைக்குத் தினமும் ஃபோன் செய்யுங்கள்

பைபிள் நியமம்: “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்.”—மத்தேயு 19:6.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்