உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g18 எண் 2 பக். 14
  • 11 கடின உழைப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 11 கடின உழைப்பு
  • விழித்தெழு!—2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இதன் அர்த்தம் என்ன?
  • இது ஏன் முக்கியம்?
  • நீங்கள் என்ன செய்யலாம்?
  • கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • உங்கள் வேலையைச் சந்தோஷமாகச் செய்யுங்கள்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • வேலை பற்றி சமநிலையான நோக்கை வளர்ப்பது எப்படி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • வீட்டில் வேலை செய்ய பிள்ளைகளைப் பழக்குங்கள்
    விழித்தெழு!—2017
மேலும் பார்க்க
விழித்தெழு!—2018
g18 எண் 2 பக். 14
ஓர் இளம் பெண் ஓடுகிறாள்

கடினமாக வேலை செய்ய கற்றுக்கொள்வதை உடற்பயிற்சி செய்வதற்கு ஒப்பிடலாம்; அது இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி, நன்மையைத் தரும்

இளைஞர்களுக்கு

11 கடின உழைப்பு

இதன் அர்த்தம் என்ன?

கடின உழைப்பாளிகள் வேலை செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, தங்கள் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் கஷ்டப்பட்டு வேலை செய்வார்கள். மற்றவர்கள் உயர்வாக மதிக்காத வேலையைச் செய்ய வேண்டியிருந்தாலும், அதைச் சந்தோஷமாகச் செய்வார்கள்.

இது ஏன் முக்கியம்?

வாழ்க்கை என்றாலே பொறுப்புகள் நிறைந்திருக்கும் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். கடின உழைப்பை விரும்பாத நிறைய பேர் இருக்கிற இந்த உலகத்தில், நீங்கள் கடினமாக உழைக்கும்போது கண்டிப்பாக நிறைய பலன்களைப் பெறுவீர்கள்.—பிரசங்கி 3:13.

“நாம கடினமா வேலை செய்யும்போது, அதை நினைச்சு பெருமைப்படுவோங்கறதயும் நமக்கு மனத்திருப்தி கிடைக்குங்கறதயும் நான் புரிஞ்சுக்கிட்டேன். அந்த மனத்திருப்திதான், வேலைய விரும்பி செய்றதுக்கு என்னை தூண்டுச்சு. நல்லா வேலை செய்றவங்களா இருந்தோம்னா நமக்கு நல்ல பேர் கிடைக்கும்.”—ரெயான்.

பைபிள் நியமம்: “எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்.”—நீதிமொழிகள் 14:23.

நீங்கள் என்ன செய்யலாம்?

வேலையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்:

வேலையை நன்றாகச் செய்ய கற்றுக்கொள்வதை நினைத்துப் பெருமைப்படுங்கள். வீட்டு வேலைகளைச் செய்வது, ஆஃபீஸ் வேலைகளைச் செய்வது, ஹோம்வர்க் செய்வது என எதுவாக இருந்தாலும், அதை ஆர்வத்தோடு செய்யுங்கள். ஒரு வேலையை நன்றாகச் செய்ய கற்றுக்கொண்ட பிறகு, அந்த வேலையை எப்படி வேகமாகச் செய்வதென்று அல்லது எப்படி இன்னும் நன்றாகச் செய்வதென்று யோசியுங்கள். எந்தளவு உங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்கிறீர்களோ அந்தளவு உங்கள் வேலையைச் சந்தோஷமாகச் செய்வீர்கள்.

பைபிள் நியமம்: “திறமையாக வேலை செய்கிறவனைப் பார்த்திருக்கிறாயா? அவன் சாதாரண ஆட்கள் முன்னால் அல்ல, ராஜாக்கள் முன்னால் நிற்பான்.”—நீதிமொழிகள் 22:29.

மற்றொரு பலனையும் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய பொறுப்புகளை நீங்கள் நல்லபடியாகச் செய்யும்போது மற்றவர்கள் நன்மையடைவார்கள். உதாரணத்துக்கு, வீட்டு வேலைகளைச் செய்வதில் கடினமாக உழைத்தால் குடும்பத்தில் இருப்பவர்களின் பாரத்தை நீங்கள் குறைப்பீர்கள்.

பைபிள் நியமம்: “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35.

எதிர்பார்க்கப்படுவதைவிட அதிகமாகச் செய்யுங்கள். உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதை மட்டுமே செய்யாமல் அதைவிட அதிகமாகச் செய்ய முயற்சி செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது, உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அப்போது, எதிர்பார்க்கப்படுவதற்கும் அதிகமாகச் செய்வீர்கள்; அதைக் கட்டாயத்தினால் அல்ல, மனப்பூர்வமாகச் செய்வீர்கள்.—மத்தேயு 5:41.

பைபிள் நியமம்: “நீங்கள் இந்த உதவியைக் கட்டாயத்தால் செய்யாமல் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.”—பிலேமோன் 14.

சமநிலையோடு இருங்கள். கடின உழைப்பாளிகள் சோம்பேறிகளாக இருக்க மாட்டார்கள்; அதற்காக, வேலையே கதி என்றும் கிடக்க மாட்டார்கள். சமநிலையோடு இருக்க அவர்கள் முயற்சி செய்வார்கள்; கடின உழைப்பையும் ஓய்வு நேரத்தையும் சந்தோஷமாக அனுபவிப்பார்கள்.

பைபிள் நியமம்: “ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்.”—பிரசங்கி 4:6.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்