உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 1 பக். 5-7
  • மன அழுத்தம்​—அப்படியென்றால்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மன அழுத்தம்​—அப்படியென்றால்?
  • விழித்தெழு!—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மன அழுத்தம்​—நன்மையும் தீமையும்
  • நல்ல கவலை, கெட்டகவலை
    விழித்தெழு!—1998
  • கவலையைக் குறைக்க . . .
    விழித்தெழு!—2010
  • அழுத்தத்தை நான் வெல்லமுடியுமா?
    விழித்தெழு!—1988
  • பள்ளிக்கூடத்தில் வரும் தொல்லைகளை எப்படிச் சமாளிப்பது?
    விழித்தெழு!—2008
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 1 பக். 5-7
நகரத்தில் வேலை செய்யும் ஒருவர், அலுவலகத்தை நோக்கி படிக்கட்டில் அரக்கப்பரக்க ஓடுகிறார்.

மன அழுத்தம் மறைந்திட...

மன அழுத்தம்​—அப்படியென்றால்?

சவாலான ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க உங்கள் உடல் தயாராகும் விதம்தான் மன அழுத்தம். எப்படியென்றால், ஒரு சவாலான சூழ்நிலை வரும்போது, உங்கள் மூளை எக்கச்சக்கமான ஹார்மோன்களை உங்கள் உடல் முழுவதும் அனுப்பி வைக்கிறது. இதனால், இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மூச்சின் வேகம் கூடுகிறது. தசைகளும் இறுகிவிடுகின்றன. கண் சிமிட்டும் நேரத்துக்குள் இவை எல்லாம் நடந்துவிடுகின்றன. உங்கள் உடலும் பிரச்சினையைச் சமாளிக்கத் தயாராகிவிடுகிறது. அந்தச் சூழ்நிலை மாறிய பிறகு, உங்கள் உடல் மறுபடியும் அமைதி நிலைக்குத் திரும்புகிறது.

மன அழுத்தம்​—நன்மையும் தீமையும்

சவாலான அல்லது ஆபத்தான சூழ்நிலை வரும்போது இயல்பாகவே மன அழுத்தம் ஏற்படும். அது அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க உங்களைத் தயார்படுத்தும். மன அழுத்தம் மூளையில்தான் அதன் வேலையைத் தொடங்குகிறது. நல்ல விதமான மன அழுத்தம், சட்டென்று செயல்பட உங்களுக்கு உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு மன அழுத்தம் இருந்தால், லட்சியங்களை அடையவும் எக்ஸாம், இன்டர்வியூ, விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் சிறந்து விளங்கவும் உங்களால் முடியும்.

ஆனால், மன அழுத்தம் அதிக அளவு இருந்தாலோ ரொம்ப நாள் நீடித்தாலோ ஆபத்து. உங்கள் உடல் அடிக்கடி அல்லது எப்போதுமே பதற்ற நிலையில் இருந்தால், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் நடந்துகொள்ளும் விதமும் மற்றவர்களை நீங்கள் நடத்தும் விதமும்கூட மாறலாம். தீராத மன அழுத்தமுள்ள நிறைய பேர், அளவுக்கு மீறி மதுபானம் குடிப்பது, போதைப்பொருள் எடுத்துக்கொள்வது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, புகைப்பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். மன அழுத்தம், சிலசமயங்களில் மனச்சோர்வாகவோ, கடும் களைப்பாகவோ, தற்கொலை எண்ணமாகவோ உருமாறலாம்.

மன அழுத்தம் எல்லாரையும் ஒரேமாதிரி பாதிப்பதில்லை என்றாலும் பல விதமான நோய்களுக்கு அது வழிநடத்தலாம். கிட்டத்தட்ட உடலின் எல்லா உறுப்புகளையும் அது பாதித்துவிடலாம்.

மன அழுத்தத்தின் விளைவுகள்

நரம்பு மண்டலம்.

மன அழுத்தத்தால் நெற்றியில் கை வைத்தபடி ஒருவர் நிற்கிறார்.

உங்கள் நரம்பு மண்டலம் அட்ரெனலின் (adrenaline), கார்ட்டிசோல் (cortisol) போன்ற ஹார்மோன்களைச் சுரக்க வைக்கிறது. இதன் விளைவாக இதயத் துடிப்பு வேகமாகிறது, இரத்த அழுத்தமும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. ஏதாவது ஆபத்தென்றால் உடனடியாகச் செயல்பட இவையெல்லாம் உதவுகின்றன. ஆனால், மன அழுத்தம் அதிகமாகும்போது...

  • எரிச்சல், கவலை, மனச்சோர்வு, தலைவலி, தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.

தசை-எலும்பு மண்டலம்.

காயம் ஏற்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாக்க உடலின் தசைகள் இறுகும். ஆனால், மன அழுத்தம் அதிகமாகும்போது...

  • உடம்பு வலி, தலைவலி, தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படலாம்.

சுவாச மண்டலம்.

நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும் என்பதால் எப்போதையும்விட அதிகமாக நீங்கள் மூச்சு விடுவீர்கள். ஆனால், மன அழுத்தம் அதிகமாகும்போது...

  • மூச்சுத் திணறல், மனப்பதற்ற நோய் போன்றவை ஏற்படலாம்.

இரத்த ஓட்ட மண்டலம்.

உடல் முழுவதும் இரத்தத்தைச் செலுத்துவதற்காக உங்கள் இதயம் வேகமாகவும் பலமாகவும் துடிக்கும். உடலின் எந்தப் பாகத்துக்கு அல்லது தசைக்கு இரத்தம் அதிகம் தேவையோ அதற்கு ஏற்றபடி இரத்த நாளங்கள் விரிவடையும். அதேசமயத்தில், மற்ற பாகங்களுக்குப் போகும் இரத்த நாளங்கள் சுருங்கும். ஆனால், மன அழுத்தம் அதிகமாகும்போது...

  • உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படலாம்.

நாளமில்லாச் சுரப்பி மண்டலம்.

உங்களுடைய சுரப்பிகள் அட்ரெனலின், கார்ட்டிசோல் போன்ற ஹார்மோன்களைச் சுரக்கும். மன அழுத்தத்தின்போது இவை உங்கள் உடலைச் செயல்படத் தூண்டும். அதிக தெம்பைக் கொடுப்பதற்காக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை உங்கள் கல்லீரல் அதிகரிக்கும். ஆனால், மன அழுத்தம் அதிகமாகும்போது...

  • சர்க்கரை நோய், மனநிலையில் திடீர் திடீர் மாற்றங்கள், உடல் பருமன், எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் அதனால் விளையும் நோய்கள் போன்றவை ஏற்படலாம்.

செரிமான மண்டலம்.

உணவு ஜீரணமாகும் விதம் பாதிக்கப்படலாம். மன அழுத்தம் அதிகமாகும்போது...

  • குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம்.

இனப்பெருக்க மண்டலம்.

பாலியல் ஆசைகளையும் அதன் செயல்பாட்டையும் மன அழுத்தம் பாதிக்கலாம். மன அழுத்தம் அதிகமாகும்போது...

  • ஆண்மைக்குறைவு, ஒழுங்கற்ற மாதவிலக்கு போன்றவை ஏற்படலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்