உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 2 பக். 10-11
  • 3. நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 3. நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?
  • விழித்தெழு!—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்?
  • சிந்திக்க...
  • பைபிள் சொல்வது...
  • 4. கஷ்டப்பட வேண்டும் என்றுதான் கடவுள் நம்மை படைத்தாரா?
    விழித்தெழு!—2020
  • நாம கஷ்டப்படுறதை பத்தி பைபிள் என்ன சொல்லுது
    விழித்தெழு!—2015
  • பைபிள் என்ன சொல்கிறது?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2020
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 2 பக். 10-11
ஓர் அப்பா-அம்மா, பாதி கையை இழந்து மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கும் தங்கள் மகனை வேதனையோடு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

3. நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?

ஏன் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்?

நல்லவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது நமக்கு அது அநியாயமாகத் தெரிகிறது. அதோடு, எப்படியும் கஷ்டப்பட போகிறோம் என்றால் நாம் ஏன் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

சிந்திக்க...

வாழ்க்கையே இறப்பு-மறுபிறப்பு என்ற சக்கரத்தில்தான் சுழன்றுகொண்டிருக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். போன ஜென்மத்தில் நல்லது செய்தவர்கள் இப்போது நல்ல வாழ்க்கையையும், கெட்டது செய்தவர்கள் கஷ்டம் நிறைந்த வாழ்க்கையையும் அனுபவிப்பார்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கையின்படி, நல்லவராக இருக்கிற ஒருவர்கூட முன்ஜென்மத்தில் பாவங்கள் செய்திருந்தால் இப்போது கஷ்டங்களை அனுபவிப்பார். ஆனால் . . .

  • மறுபிறவி எடுத்த ஒரு நபருக்கு தன்னுடைய முன்ஜென்ம வாழ்க்கை ஞாபகம் இல்லாத பட்சத்தில் அவர் கஷ்டப்படுவதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

  • நம்முடைய பெரும்பாலான வாழ்க்கை முன்ஜென்மத்தை பொருத்துதான் இருக்கிறது என்றால், ஆரோக்கியமாக வாழ்வதற்காகவும் விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும் நாம் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?

    அதிகம் தெரிந்துகொள்ள...

    கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தைத் தீர்க்காமல் இருக்கிறார்? என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.

பைபிள் சொல்வது...

கஷ்டங்கள் கடவுள் கொடுக்கும் தண்டனை கிடையாது.

அதற்குப் பதிலாக நிறைய கஷ்டங்கள் தற்செயலாக வருபவைதான். பெரும்பாலும், ஒரு நபர் தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருப்பதால் வரும் விளைவுகள்தான்.

“வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, பலசாலிகள் எல்லா சமயத்திலும் போரில் ஜெயிப்பதில்லை, ஞானமுள்ளவர்களிடம் எல்லா சமயத்திலும் உணவு இருப்பதில்லை, புத்திசாலிகளிடம் எல்லா சமயத்திலும் சொத்து குவிந்திருப்பதில்லை, அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை. ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன.”—பிரசங்கி 9:11.

நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் நமக்குக் கஷ்டங்கள் வருகின்றன.

“பாவம்” என்ற வார்த்தையை ஒரு மோசமான செயலைக் குறிப்பதற்காக மக்கள் பொதுவாகப் பயன்படுத்துகிறார்கள். பைபிளும்கூட அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஆனால் மனிதர்கள், அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, வழிவழியாக பெற்றுக்கொண்ட ஒரு நிலைமையை குறிப்பதற்காக அது பயன்படுத்துகிறது.

“நான் குற்றம் குறையோடு பிறந்தேன். என் தாயின் வயிற்றில் உருவான நொடியிலிருந்தே நான் பாவிதான்.”—சங்கீதம் 51:5, அடிக்குறிப்பு.

வழிவழியாகப் பெற்றுக்கொண்ட பாவம் மனிதர்களைப் பயங்கரமான விதங்களில் பாதித்திருக்கிறது.

படைப்பாளரோடு மட்டுமல்ல, அவர் படைத்த மற்ற படைப்புகளோடு நமக்கு இருக்கும் பந்தத்தையும் பாவம் கெடுத்துவிட்டது. இதனால் தனி மனிதர்களும் சரி, ஒட்டுமொத்தமாக எல்லா மனிதர்களும் சரி, படுபயங்கரமான பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள்.

“நல்லது செய்ய விரும்புகிற எனக்குள் கெட்டது இருக்கிறது.”—ரோமர் 7:21.

“எல்லா படைப்புகளும் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன.”—ரோமர் 8:22.

நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?

நிறைய பிரச்சினைகளுக்கு நம்மிடம் இருக்கும் பாவ இயல்புதான் காரணம். நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, எல்லாருமே அதை வழிவழியாகப் பெற்றிருக்கிறார்கள். அந்தப் பாவ இயல்பினால் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் நிறைய குறைபாடுகளை அனுபவிக்கிறார்கள். மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிற சுபாவத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

இப்படி நடக்கவேண்டும் என்றுதான் கடவுள் ஆசைப்பட்டாரா? கஷ்டப்பட வேண்டும் என்றுதான் கடவுள் நம்மை படைத்தாரா?

கேள்வி 4-ஐப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்