உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 3 பக். 8-9
  • மற்றவர்களிடம் நல்லதைப் பாருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மற்றவர்களிடம் நல்லதைப் பாருங்கள்
  • விழித்தெழு!—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிரச்சினைக்கு ஆணிவேர்
  • பைபிள் ஆலோசனை
  • நீங்கள் என்ன செய்யலாம்?
  • தப்பெண்ணமே தலைதூக்காத ஒரு காலம்
    விழித்தெழு!—2004
  • பாகுபாடு​—⁠உங்களைத் தொற்றியிருக்கிறதா?
    விழித்தெழு!—2020
  • இனவேற்றுமை உணர்வுகள் சார்ந்த தப்பெண்ணங்களை நான் எவ்விதம் மேற்கொள்ளலாம்?
    விழித்தெழு!—1989
  • பாரபட்சமும் பாகுபாடும் ஆணிவேரை அடையாளங்காணுதல்
    விழித்தெழு!—2010
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 3 பக். 8-9
படத்தொகுப்பு: 1. தெருவில் வேகமாக வந்துகொண்டிருந்த தம்பதியின் குறுக்கே கண் தெரியாத ஒரு பெண் வந்ததால் அவர்கள் எரிச்சலடைகிறார்கள். 2. பிறகு, கண் தெரியாத அந்தப் பெண் ஒரு இசைக் கச்சேரியில் செலோ வாசிப்பதை அந்தத் தம்பதி பார்த்து ரசிக்கிறார்கள்.

மற்றவர்களிடம் நல்லதைப் பாருங்கள்

பிரச்சினைக்கு ஆணிவேர்

தற்பெருமை இருந்தால் பாகுபாடு நமக்குள் சுலபமாக வேர்விடும். தற்பெருமை உள்ளவர்கள் தங்களைப் பெரிய ஆளாக நினைத்துக்கொள்வார்கள். மற்றவர்களை மட்டமாக பார்ப்பார்கள். இப்படிப்பட்ட எண்ணம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இப்படிச் சொல்கிறது: “பெரும்பாலான கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள், மற்ற கலாச்சாரத்தைவிட தங்களுடைய வாழ்க்கை முறை, உணவு, உடை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள்தான் ரொம்பவே உயர்ந்தவை என்று நினைக்கிறார்கள்.” இந்தத் தவறான எண்ணத்தை நாம் எப்படித் தவிர்க்கலாம்?

பைபிள் ஆலோசனை

“மனத்தாழ்மையினால் . . . மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்.”—பிலிப்பியர் 2:3.

இதன் அர்த்தம் என்ன? தற்பெருமையை விட்டொழிக்க வேண்டுமென்றால் மனத்தாழ்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு மனத்தாழ்மை இருந்தால், மற்றவர்கள் சில விஷயங்களில் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்வோம். எந்தவொரு பிரிவினராலும் தங்களுக்குத்தான் எல்லா நல்ல குணங்களும் திறமைகளும் இருக்கிறது என்று சொல்ல முடியாது.

ஷ்டெஃபான் என்பவரின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் ஒரு கம்யூனிஸ்ட் நாட்டில் வளர்ந்தவர். கம்யூனிஸ்ட் அல்லாத மற்ற நாட்டு மக்கள்மேல் இருந்த பாகுபாட்டை அவர் தூக்கியெறிந்தார். “நம்மளவிட மத்தவங்கள உயர்வா நெனச்சா பாகுபாட்ட தவிர்க்க முடியும்னு நான் நம்புறேன். எனக்கு எல்லாமே தெரியும்னு சொல்ல முடியாது. ஒவ்வொருத்தர் கிட்டயிருந்தும் என்னால சில விஷயங்கள கத்துக்க முடியும்” என்று அவர் சொல்கிறார்.

நீங்கள் என்ன செய்யலாம்?

உங்களைப் பற்றி எதார்த்தமாக யோசிக்க முயற்சி செய்யுங்கள். நீங்களும் தவறு செய்கிறவர்கள்தான் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். உங்களால் செய்ய முடியாத சில விஷயங்களை மற்றவர்களால் நன்றாகச் செய்ய முடியும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பற்றி மக்களுக்கு இருக்கிற தவறான கருத்தை வைத்து, அந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லாருமே அப்படிப்பட்டவர்கள்தான் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது.

ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி தவறாக யோசிப்பதற்குப் பதிலாக உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

உங்களால் செய்ய முடியாததை மற்றவர்களால் நன்றாகச் செய்ய முடியும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்

  • ‘எனக்குப் பிடிக்காத ஒரு குணம் அவர்கிட்ட இருக்குறதுனால, அத மோசமான குணம்னு சொல்வேனா, இல்லன்னா அத என்கிட்ட இல்லாத ஒரு வித்தியாசமான குணம்னு நினைப்பேனா?’

  • ‘என்கிட்ட இருக்குற குறைகள அவர் பாத்தா எப்படியிருக்கும்?’

  • ‘எந்தெந்த விஷயங்கள்ல அவர் என்னைவிட திறமைசாலியா இருக்குறாரு?’

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் நேர்மையாக பதில் சொன்னால், அவர்மேல் உங்களுக்கு இருக்கிற பாகுபாட்டை விரட்டியடிக்க முடியும். அதோடு, அவரிடம் இருக்கிற அருமையான குணங்களையும் திறமைகளையும் கண்டுபிடிக்க முடியும்.

நிஜ அனுபவம்: நெல்சன் (அமெரிக்கா)

“ஒரே இனத்தயும் பின்னணியயும் சேந்த மக்கள் இருக்குற இடத்துலதான் நான் வளந்தேன். ஆனா, 19 வயசுல வேலைக்காக ஒரு பெரிய நகரத்துக்கு குடிமாறி போனப்போ, வித்தியாசமான இனம், பின்னணி, கலாச்சாரத்த சேந்தவங்க இருக்குற இடத்துல வாழ வேண்டியிருந்துச்சு. அந்த மாதிரி ஆட்களோடதான் வேலையும் செய்ய வேண்டியிருந்துச்சு.

நான் அவங்ககிட்ட நல்லா பழகி, அவங்களோட ஃப்ரெண்ட்டானப்போ ஒரு விஷயத்த நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். மக்களோட நிறம், மொழி, நாடு இதெல்லாம் வெச்சு, அவங்க எந்தளவு கடினமா வேலை செய்வாங்க, அவங்கள எந்தளவு நம்பலாம், சில விஷயங்கள பத்தி அவங்க எப்படி உணருவாங்கனெல்லாம் புரிஞ்சுக்க முடியாதுனு தெரிஞ்சுக்கிட்டேன்.

கொஞ்ச வருஷம் கழிச்சு, வேற நாட்டையும் இனத்தையும் சேந்த ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வித்தியாசமான உணவுகள, பாடல்கள பத்தி தெரிஞ்சுக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. முன்னல்லாம் இதபத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. எல்லார்கிட்டயும் நல்லது கெட்டது இருக்குங்கிறத வாழ்க்க எனக்கு புரியவெச்சுது. உண்மைய சொல்லணும்னா, வித்தியாசமான இனத்தயும் கலாச்சாரத்தயும் சேந்தவங்ககிட்ட இருக்குற நல்ல விஷயங்கள உயர்வா மதிச்சு அதன்படி நடந்துகிட்டதால இப்போ ஒரு நல்ல மனுஷனா மாறியிருக்கேன்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்