உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g21 எண் 1 பக். 12-13
  • நம்பிக்கை தரும் போதனைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம்பிக்கை தரும் போதனைகள்
  • விழித்தெழு!-2021
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கெட்டவர்களைக் கடவுள் அழிப்பார்
  • சாத்தானைக் கடவுள் அழிப்பார்
  • நோய்களுக்கும் மரணத்துக்கும் கடவுள் முடிவுகட்டுவார்
  • கடவுள் இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார்
  • இறந்தவர்களைக் கடவுள் மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார்
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • பூமியே ஒரு பூங்காவனம் வெகு விரைவில்
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • என்றும் வாழ்வது வெறும் ஒரு கனவல்ல
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
விழித்தெழு!-2021
g21 எண் 1 பக். 12-13
மக்கள் அழகான இயற்கை சூழலில் மிருகங்களோடு பயமில்லாமல் இருக்கிறார்கள். அங்கே ஏராளமான உணவும் இருக்கிறது.

நம்பிக்கை தரும் போதனைகள்

சீக்கிரத்தில், நல்ல நல்ல மாற்றங்களைச் செய்யப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். மனிதர்களுடைய கஷ்டங்களுக்கு முடிவுகட்டி அவர்களை இந்தப் பூமியில் அவர் சந்தோஷமாக வாழ வைக்கப்போகிறார். (சங்கீதம் 37:11) இந்த வாக்குறுதிகளை நாம் நம்பலாமா? கண்டிப்பாக நம்பலாம். ஏனென்றால், ‘பொய் சொல்ல கடவுள் சாதாரண மனுஷன் கிடையாது.’ (எண்ணாகமம் 23:19) கடவுள் செய்யப்போகிற சில நல்ல விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

கெட்டவர்களைக் கடவுள் அழிப்பார்

“பொல்லாதவர்கள் களைகளை போல முளைக்கும்போதும், அக்கிரமக்காரர்கள் எல்லாரும் செழிக்கும்போதும், அவர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.”​—சங்கீதம் 92:7.

முந்தின கட்டுரையில் பார்த்தது போல, மோசமான காரியங்கள் அதிகமாகிக்கொண்டேதான் போகின்றன. அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், பைபிளில் 2 தீமோத்தேயு 3:1-5 வசனங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளபடி “கடைசி நாட்களில்” மக்கள் படு மோசமானவர்களாக இருப்பார்கள். இந்தக் கடைசி நாட்கள் எதைக் குறிக்கிறது? கடவுள்பயம் இல்லாத மக்கள் வாழ்கிற இந்த உலகத்தின் கடைசி நாட்களைத்தான் அது குறிக்கிறது. கெட்ட வழிகளை விட்டுத் திருந்தாத மக்களைக் கடவுள் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார். அப்போது, நல்ல மக்கள் மட்டும்தான், அதாவது கடவுளுக்குக் கீழ்ப்படிகிற மக்கள் மட்டும்தான், இந்தப் பூமியில் இருப்பார்கள். “நீதிமான்கள் [நல்ல மக்கள்] இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 37:29.

சாத்தானைக் கடவுள் அழிப்பார்

“சமாதானத்தைத் தருகிற கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை . . . நசுக்கிப்போடுவார்.”​—ரோமர் 16:20.

சாத்தானையும் பேய்களையும் கெட்ட மக்களையும் கடவுள் அழித்த பிறகு, இந்தப் பூமி ஒரு சமாதானப் பூங்காவாக ஆகிவிடும். அப்போது, “[உங்களை] பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்” என்று கடவுள் வாக்குக் கொடுக்கிறார்.—மீகா 4:4.

நோய்களுக்கும் மரணத்துக்கும் கடவுள் முடிவுகட்டுவார்

“அவர்களுடைய [மக்களுடைய] கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”​—வெளிப்படுத்துதல் 21:4.

சாத்தானாலும், ஆதாம்-ஏவாளினாலும், நமக்கு இருக்கிற தவறு செய்யும் இயல்பினாலும் ஏற்பட்டிருக்கிற பாதிப்புகளைக் கடவுள் சரிசெய்வார். அதனால், கஷ்டங்களும் நோய்நொடிகளும் முடிவுக்கு வந்துவிடும். ‘மரணம்கூட இருக்காது.’ படைப்பாளரை நேசிக்கிற... அவருடைய பேச்சைக் கேட்டு நடக்கிற... மக்கள் என்றென்றும் வாழ்வார்கள். அவர்கள் எங்கே வாழ்வார்கள்?

கடவுள் இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார்

“வனாந்தரமும் வறண்ட நிலமும் பூரிப்படையும். பாலைநிலம் பூ பூத்து, களைகட்டும்.”​—ஏசாயா 35:1.

கெட்டவர்களைக் கடவுள் அழித்த பிறகு இந்தப் பூமி பசுமையாக ஆகிவிடும். அப்போது பூமி முழுக்க அழகான பூங்காக்களும், தோட்டங்களும் இருக்கும். (சங்கீதம் 72:16) பூமியில் ஏராளமான விளைச்சல் இருக்கும். கடல், ஆறு, ஏரி, குளம் என எல்லாம் ரொம்ப சுத்தமாக இருக்கும். அவற்றில் ஏராளமான உயிரினங்கள் வாழும். மக்கள் தங்களுடைய வீட்டைத் தாங்களே கட்டி அதில் குடியிருப்பார்கள். அங்கே யாருமே வீடு இல்லாமலோ, சாப்பாட்டுக்கு வழியில்லாமலோ வறுமையிலோ கஷ்டப்பட மாட்டார்கள்.—ஏசாயா 65:21, 22.

இறந்தவர்களைக் கடவுள் மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார்

“[இறந்தவர்கள்] உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”​—அப்போஸ்தலர் 24:15.

இறந்துபோன உங்களுடைய அன்பானவர்களை மறுபடியும் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அவர்களை சர்வசக்தியுள்ள கடவுள் பூஞ்சோலை பூமியில் உயிரோடு கொண்டுவருவார். உங்களால் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அவர்களாலும் உங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அந்தச் சமயத்தில், நீங்கள் சந்தோஷத்தில் எப்படிப் பூரித்துப்போவீர்கள் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். இது கண்டிப்பாக நடக்குமென்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்? இறந்துபோன பெரியவர்களையும் சிறியவர்களையும் உயிரோடு எழுப்பி, அவர்களுடைய குடும்பத்தோடு அவர்களை ஒன்றுசேர்த்த பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இயேசு பெரும்பாலும், மற்றவர்களுக்கு முன்னால்தான் இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார்.—லூக்கா 8:49-56; யோவான் 11:11-14, 38-44.

இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்

“கஷ்டம், நோய், சாவு இதெல்லாம் இல்லாத ஒரு பூஞ்சோல பூமிய பத்தி மொத தடவ கேள்விப்பட்டது எனக்கு ஞாபகம் இருக்கு. அப்போ, இதெல்லாம் நடக்கிற காரியமானு மனசுக்குள்ள சிரிச்சேன். ஆனா, பைபிளை ஆழமா படிச்சப்போ, இந்த அருமையான புத்தகத்தையும், இதுல இருக்குற வாக்குறுதிகளையும் ஏன் நம்பலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். பைபிள் கடவுள் தந்த புத்தகம்தான்னு இப்போ முழுசா நம்புறேன். முன்னல்லாம் ரொம்ப சோகமா இருப்பேன். ஆனா, இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இப்போ நான் எவ்ளோ மாறியிருக்கேன்னு என் குடும்பத்தில இருக்குறவங்களாலயும், என் நண்பர்களாலயும் நல்லா பார்க்க முடியுது.”—ரவி.

ரவி.

அதிகமாகத் தெரிந்துகொள்ள:

பூஞ்சோலை பூமியில் மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்ற கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில் பைபிள் போதனைகள் > பைபிள் கேள்விகளுக்கான பதில்கள் > வாழ்க்கையும் மரணமும் என்ற தலைப்பில் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்