உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g22 எண் 1 பக். 7-9
  • 2 | வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2 | வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள்
  • விழித்தெழு!-2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் முக்கியம்?
  • இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்
  • இதைச் செய்துபாருங்கள்
  • குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?
    வேறுசில தலைப்புகள்
  • கடனில்லாமல் இருக்க வழி
    விழித்தெழு!—1996
  • பணத்தை நிர்வகிப்பது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • வரவுசெலவை சமாளிப்பது எப்படி?
    மணவாழ்வில் மகிழ்ச்சி மலர
மேலும் பார்க்க
விழித்தெழு!-2022
g22 எண் 1 பக். 7-9
மர வேலை செய்பவர் ஒரு மர துண்டில் ஆணியடிக்கிறார்.

தத்தளிக்கும் உலகம்

2 | வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள்

ஏன் முக்கியம்?

அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கே நிறைய பேர் தினம்தினம் போராடுகிறார்கள். அதுவும், உலகம் நெருக்கடியில் இருக்கும்போது சொல்லவே வேண்டாம்!

  • நெருக்கடியான காலகட்டத்தில் விலைவாசி அதிகமாகிவிடுகிறது. சாப்பாட்டு செலவும் வீட்டு வாடகையும் ரொம்பவே அதிகமாக ஆகிவிடுகின்றன.

  • நெருக்கடி வரும்போது சம்பளம் கம்மியாகிவிடுகிறது அல்லது வேலை போய்விடுகிறது.

  • பேரழிவுகள் வரும்போது மக்களுடைய வீடு, உடமைகள், வியாபாரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன அல்லது அழிந்துவிடுகின்றன. அதனால், வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள்.

இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்

  • பணத்தை ஞானமாகச் செலவு செய்தால் நெருக்கடியான காலத்தைச் சுலபமாகச் சமாளிக்க முடியும்.

  • வருமானம், சேமிப்பு, சொத்து ஆகியவை நிரந்தரம் கிடையாது. அவற்றின் மதிப்பும் குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

  • பணத்தால் வாங்க முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சந்தோஷம், குடும்பத்தில் ஒற்றுமை ஆகியவற்றைச் சொல்லலாம்!

இதைச் செய்துபாருங்கள்

பைபிள் சொல்கிறது: “நமக்கு உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.”—1 தீமோத்தேயு 6:8.

திருப்தியாக இருப்பது என்றால், ஆசைப்பட்ட எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்று நினைக்காமல் அத்தியாவசிய தேவைகள் கிடைத்தாலே போதும் என்று இருப்பதுதான்! வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற சமயத்தில் இப்படி இருப்பது ரொம்பவே முக்கியம்.

திருப்தியாக இருப்பதற்கு கம்மியாக செலவு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். வரவுக்கு மீறி செலவு செய்தால் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்!

எப்படிச் சமாளிக்கலாம்?—இதோ சில டிப்ஸ்

நெருக்கடியான காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யுங்கள்

செலவுகளைக் குறையுங்கள்

  • வீட்டு தோட்டத்தில் ஒரு வயதான பெண் கேரட் அறுவடை செய்கிறார்.

    செலவுகளைக் குறையுங்கள்

    புது துணிமணி வாங்குவதையோ பழைய பொருள்களை மாற்றுவதையோ தள்ளிப்போட முடியுமா என்று பாருங்கள். ‘வண்டிய எடுக்காம நடந்தோ பஸ்லயோ போக முடியுமா? வீட்டுலயே ஒரு சின்ன காய்கறி தோட்டம் போட முடியுமா?’ என்று யோசியுங்கள்.

  • எதையாவது வாங்குவதற்கு முன்பு, ‘இது எனக்கு உண்மைலயே தேவையா? இத என்னால வாங்க முடியுமா?’ என்றெல்லாம் கேட்டுக்கொள்ளுங்கள்.

  • அரசாங்கச் சலுகைகள் அல்லது சமூக சேவை செய்கிற நிறுவனங்களின் உதவி கிடைத்தால், அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.

“நாங்க குடும்பமா எங்க செலவுகள பத்தி யோசிச்சோம். பொழுதுபோக்குக்கு ஆகுற செலவ குறைச்சோம், சிலத வேண்டாம்னு முடிவு பண்ணோம். சாப்பாடுக்கு ஆகுற செலவையும் குறைச்சுக்கிட்டோம்.”—அஷ்வின்.

பட்ஜெட் போடுங்கள்

ஒரு பெண் கால்குலேட்டரைப் பயன்படுத்தி பில்களைக் கணக்குப்போடுகிறாள்.

பட்ஜெட் போடுங்கள்

பைபிள் சொல்கிறது: “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.” (நீதிமொழிகள் 21:5) பட்ஜெட் போட்டால் வரவுக்கு மீறி செலவு ஆகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

  • முதலில், உங்கள் மாத வருமானத்தை எழுதுங்கள்.

  • அடுத்து, இந்த மாதத்தில் என்னென்ன செலவுகள் இருக்கின்றன என்று எழுதுங்கள்.

  • பிறகு, வரவையும் செலவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். செலவுகள் வரவை மிஞ்சி போகின்றன என்றால், எதையாவது குறைக்க முடியுமா என்று பாருங்கள்.

“ஒவ்வொரு மாசமும் வரவு எவ்ளோ செலவு எவ்ளோனு லிஸ்ட் போடுவோம். அவசர ஆத்திரத்துக்காகவும், எதிர்காலத்துல வரப்போற செலவுக்காகவும் எடுத்து வெக்குறோம். சம்பளத்த எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்னு முன்னாடியே திட்டம் போடுறதுனால கவலை இல்லாம இருக்க முடியுது.”—ஆல்பர்ட்.

கடன் வாங்காதீர்கள் / பணத்தைச் சேர்த்து வையுங்கள்

  • பணத்தை ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் போட ஒரு அம்மா தன் சின்ன வயது மகளுக்கு உதவுகிறார்.

    கடன் வாங்காதீர்கள் / பணத்தைச் சேமியுங்கள்

    கடன் வாங்குவதைக் குறைக்க என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். முடிந்தால் கடனே வாங்காதீர்கள். அதற்குப் பதிலாக, தேவையானதை வாங்க பணம் சேர்த்து வையுங்கள்.

  • ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் பணம் சேர்த்து வையுங்கள். எதிர்காலத் திட்டங்களுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் அது கைகொடுக்கும்.

கடினமாக உழையுங்கள் / வேலையைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்

பைபிள் சொல்கிறது: “எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்.”—நீதிமொழிகள் 14:23.

  • மர வேலை செய்பவர் ஒரு மர துண்டில் ஆணியடிக்கிறார்.

    கடினமாக உழையுங்கள் / வேலையைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்

    வேலையைச் சந்தோஷமாகச் செய்யுங்கள். ஆசைப்பட்ட வேலையாக அது இல்லை என்றாலும், அதிலிருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது!

  • சுறுசுறுப்பாக இருங்கள், நம்பிக்கையானவர்களாக இருங்கள். இப்படி இருந்தால், வேலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். வேலை போய்விட்டால்கூட ஈஸியாக இன்னொரு வேலையைக் கண்டுபிடிக்க முடியும்.

“பிடிச்சிருக்கோ இல்லையோ, எதிர்பாக்குற சம்பளம் கிடைக்குதோ இல்லையோ, கிடைக்குற வேலைய செய்வேன். நானே ஒரு கம்பெனிய நடத்துனா எந்தளவு நல்லா உழைப்பனோ அதேமாதிரி உழைக்கிறேன்.”—வருன்.

வேலை தேடுகிறீர்களா?

  • முதல்படியை நீங்களே எடுங்கள். வேலை இருக்கிறதா என்று கம்பெனிகளுக்கு ஃபோன் செய்து கேளுங்கள்; அவர்கள் விளம்பரம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. வேலை தேடுகிறீர்கள் என்பதை நண்பர்களிடமும் சொந்தக்காரர்களிடமும் சொல்லி வையுங்கள்.

  • எந்த வேலை கிடைத்தாலும் செய்வதற்கு ரெடியாக இருங்கள். பொதுவாக, நாம் எதிர்பார்க்கும் எல்லாமே ஒரு வேலையில் இருப்பது கஷ்டம்தான்!

பெற்றோர் தங்கள் வரவு செலவுகளைப் பற்றி பேசுகிறார்கள். பின்னால் அவர்களுடைய பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிகம் தெரிந்துகொள்ள: “குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்