தத்தளிக்கும் உலகம்
4 | நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்
ஏன் அவசியம்?
கஷ்டங்களால் நிறைந்திருக்கும் இந்த உலகத்தைப் பார்க்கும்போது நிறைய பேர் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்; நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். அதனால் என்ன செய்கிறார்கள்?
சிலர் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவே கூடாது என்று இருக்கிறார்கள்.
வேறு சிலர் கவலைகளை மறக்க குடிக்கிறார்கள் அல்லது போதைப்பொருள்களை எடுத்துக்கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் வாழ்வதற்குப் பதிலாக சாவதே மேல் என்று யோசிக்கிறார்கள். ‘வாழ்ந்து என்னத்த சாதிக்கப்போறோம்’ என்று கேட்கிறார்கள்.
இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்
இன்றைக்கு நீங்கள் அனுபவிக்கிற கஷ்டங்கள் இப்படியே தொடரும் என்று சொல்லிவிட முடியாது. வாழ்க்கை நல்லபடியாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
உங்கள் சூழ்நிலை மாறவில்லை என்றாலும் பிரச்சினைகளைச் சமாளிக்க கண்டிப்பாகச் சில வழிகள் இருக்கும்.
பைபிள் நம்பிக்கை கொடுக்கிறது. மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்வு வரப்போகிறது என்று சொல்கிறது.
இதைச் செய்துபாருங்கள்
பைபிள் சொல்கிறது: “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்.”—மத்தேயு 6:34.
இன்றைய நாளைப் பற்றி மட்டுமே யோசியுங்கள். நாளைக்கு என்ன செய்யப்போகிறோம் என்றே கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் இன்றைக்கு செய்ய வேண்டிய விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுவீர்கள்.
‘இப்படி நடந்துவிடுமோ! அப்படி நடந்துவிடுமோ!’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மன அழுத்தம்தான் அதிகமாகும், நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கையும் குறைந்துவிடும்.
பைபிள் நம்பிக்கை தருகிறது
ஒரு கவிஞர் கடவுளிடம் வேண்டும்போது இப்படிச் சொன்னார்: “உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.” (சங்கீதம் 119:105) பைபிள், அவர் சொல்வதுபோல் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்:
கும்மிருட்டான ஒரு ராத்திரியில் தடுமாறாமல் நடந்து போவதற்கு விளக்கு உதவும். அதேமாதிரி, நாம் குழப்பத்தில் இருக்கும்போது நல்ல முடிவுகளை எடுக்க பைபிள் உதவும்.
நாம் போகும் பாதையில் வெளிச்சம் இருந்தால் தூரத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். வாழ்க்கைப் பாதையில் தூரத்தில், அதாவது எதிர்காலத்தில், என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்துகொள்ள பைபிள் உதவும்.