உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • uw அதி. 23 பக். 176-183
  • யெகோவாவின் நாளை மனதில் அண்மையில் வையுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் நாளை மனதில் அண்மையில் வையுங்கள்
  • ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அடையாளத்தை நிறைவேற்றும் சம்பவங்களுக்கு விழிப்புடனிருங்கள்
  • ஜனங்கள் பிரிக்கப்படுதல்
  • எதிரில் இருப்பதென்ன?
  • யெகோவாவின் நாளை மனதில் மிக அண்மையில் வையுங்கள்
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
  • முன்னறிவிக்கப்பட்ட உலக அழிவு எப்பொழுது வரும்?
    உண்மையான சமாதானம்
  • தற்போதைய ஒழுங்குமுறை எவ்வளவு காலம்நீடித்திருக்கும்?
    புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்
  • “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”
    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
மேலும் பார்க்க
ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
uw அதி. 23 பக். 176-183

அதிகாரம் 23

யெகோவாவின் நாளை மனதில் அண்மையில் வையுங்கள்

தற்போதைய காரிய ஒழுங்குமுறையில் அனுபவிக்கும் வாழ்க்கையின் மனவேதனைகளிலிருந்து விடுதலை நெருங்கிவிட்டதென்பதே சந்தேகமில்லாமல் நீங்கள் பைபிள் படிப்பிலிருந்து கற்றுக்கொண்ட முதல் காரியங்களில் ஒன்றாகும். (லூக்கா 21:28) பூமி முழுவதும் பரதீஸாக இருக்கவேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமென நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். குற்றச்செயல், போர், நோய், மரணம், ஆகியவை இனிமேலிரா, மரித்த அன்பானவர்களும் திரும்ப உயிர்வாழ்வர். இருதயத்துக்கு மகிழ்ச்சியூட்டும் எப்பேர்பட்ட எதிர்பார்ப்பு! ஆளும் அரசராகக் கிறிஸ்துவின் காணக்கூடாத வந்திருக்கை பொ.ச. 1914-ல் தொடங்கினதென்றும் அப்பொழுது முதற்கொண்டு நாம் இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்றும் நிரூபிக்கும் அத்தாட்சியால் இதெல்லாம் அருகில் நெருங்கியிருப்பது அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டுபண்ணியிருக்கிறதா? “யெகோவாவின் நாள்” நெருங்கிவிட்டதென்ற நம்பிக்கையை உங்கள் வாழ்க்கை முறை உண்மையில் மெய்ப்பித்துக் காட்டுகிறதா?

2 கிறிஸ்துவின் வந்திருக்கையின் தொடக்கத்தைக் கண்ட அந்தச் “சந்ததி,” அநீதியைப் பழக்கமாய்ச் செய்துவருகிற எல்லாருக்கும் எதிராக யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் “யெகோவாவின் மகத்தான நாளை”யும் காண்பார்களென்று வேத எழுத்துக்கள் தெளிவாகக் காட்டுகின்றன. (மத். 24:34; செப். 1:14-2:3, தி.மொ.) இந்தச் “சந்ததி” முதுமை ஆண்டுகளை எட்டியிருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்து சாத்தானின் பூமிக்குரிய காரிய ஒழுங்குமுறைக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவராய் எப்பொழுது வருவார் என்ற திட்டமான தேதி பைபிளில் நுட்பமாய்க் குறிப்பிட்டில்லை. “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்,” என்று இயேசு சொன்னார். (மாற்கு 13:32) இது மிகுந்த நன்மைக்கேதுவாய் நிரூபித்திருக்கிறது. எவ்வகையில்? ஆட்களின் இருதயத்தில் இருப்பதை வெளிப்படுத்திக் காட்ட உதவி செய்திருக்கிறது. எவராவது யெகோவாவை உண்மையில் நேசிக்கிறதில்லையென்றால் அவர்கள் தங்கள் மனதில் அவருடைய “நாளைத்” தொலைவில் தள்ளி வைத்து, தங்கள் இருதயம் விரும்பும் உலகப்பிரகாரமான காரியங்களைப் பின்தொடருவதில் மனஞ்சாய்வார்கள். யெகோவாவை உண்மையில் நேசித்து, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு எப்பொழுது வருமென்பதைப் பொருட்படுத்தாமல் அவரை முழு ஆத்துமாவோடும் சேவிப்பதன் மூலம் அந்த அன்பைக் காட்டுகிறவர்களை மாத்திரமே யெகோவா தம்முடைய ஊழியராக அங்கீகரிக்கிறார். அரைகுறை ஆர்வமுடையவர்களை அல்லது இருமனமுள்ளவர்களைக் கடவுளும் அவருடைய குமாரனும் அங்கீகரிக்கிறதில்லை.—வெளி. 3:16; சங். 37:4; 1 யோவான் 5:3.

3 யெகோவாவை நேசிக்கிறவர்களுக்கு பின்வரும் எச்சரிக்கையை இயேசு கூறினார்: “[குறிக்கப்பட்ட] அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள் விழித்திருங்கள்.” (மாற்கு 13:33-37, தி.மொ.) சாப்பிடுவதும் பானம்பண்ணுவதும் அல்லது “வாழ்க்கையின் கவலைகள்” காலத்தின் வினைமையான தன்மையைக் கவனிக்க மறந்துவிடும் வண்ணம் நம்முடைய கவனத்தை அவ்வளவு அதிகமாய்க் கவர்ந்து மூழ்கவைக்க அனுமதிக்கக்கூடாதென அவர் நம்மை எச்சரிக்கிறார்.—லூக்கா 21:34-36, NW; மத். 24:37-42.

4 பின்னால் அப்போஸ்தலனாகிய பேதுரு, ‘யெகோவாவின் நாளின் வருகைக்குக் காத்திருந்து அதை மனதில் அண்மையில் வையுங்கள்; அதனூடே வானங்கள் எரிந்து அழிந்துபோம் மூலப்பொருள்கள் கடுமையான வெப்பத்தால் உருகிப்போம்,’ என்று உண்மையான விசுவாசமுள்ள எல்லாருக்கும் அறிவுரை கூறினான். “யெகோவாவின் நாள்” நெருங்கியிருப்பது நம்மில் ஒருவரும் ஒருபோதும் குறைக்கமுடியாத உண்மையாகும். காணக்கூடிய அரசாங்க வானங்களும், பொல்லாத மனித சமுதாயமும் சீக்கிரத்தில் ஒழிக்கப்படும், கடவுள் உண்டுபண்ணும், “புதிய வானங்களும் புதிய பூமியும்” அவற்றினிடத்தை ஏற்கும், மேலும் தற்போதைய உலகப்பிரகாரமான ஒழுங்குமுறையோடும் சேர்ந்து செல்லும் எல்லா “மூலப்பொருள்களும்”—அதாவது, அதன் சுதந்தர மனப்பான்மை, அதன் ஒழுக்கக்கேடான மற்றும் பொருளாசைக்கடுத்த வாழ்க்கை முறை ஆகியவை—“யெகோவாவின் நாளின்” அழிக்கும் வெப்பத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படும். (2 பேதுரு 3:10-13) உலகத்தைத் தகர்த்து அழிக்கும் இந்தச் சம்பவங்கள் எந்த வினாடியிலும் தொடங்கக் கூடுமென்று தெரிந்திருந்து, நாம் இடையறா விழிப்புடன் இருக்க வேண்டும்.—மத். 24:44.

அடையாளத்தை நிறைவேற்றும் சம்பவங்களுக்கு விழிப்புடனிருங்கள்

5 முக்கியமாய் நாம் வாழும் காலத்தைக் கருதுகையில், “கடைசி நாட்களை” அல்லது “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை” அடையாளங்காட்டும் கூட்டு அடையாளத்தின் நுட்ப விவரங்களை நாம் நன்றாய்த் தெரிந்திருக்கவேண்டும். இந்த அடையாளத்தைத் திருத்தமாய் கண்டறிந்து கொள்ள மத்தேயு 24:3-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தம்முடைய சீஷரின் கேள்விக்கு இயேசு பதிலளித்தப்போது அவர் சொன்னவற்றில் சில முதல் நூற்றாண்டில், யூத ஒழுங்குமுறையின் முடிவுக்குப் பொருந்தினவென்பதையும், ஆனால் பெரும்பகுதி அதற்கு வெகு பின்னால் வரும் காலத்துக்குப் பொருந்துகிறதென்பதையும் நாம் மனதில் வைக்க வேண்டும். 4-ம் வசனத்திலிருந்து 22-ம் வசனம் வரை அவர் விவரித்தவை பொ.ச. 33-க்கும் 70-க்கும் இடைபட்ட காலத்தில் சிறிய அளவான நிறைவேற்றமடைந்தன. ஆனால் அந்தத் தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றம் நம்முடைய நாளில் நடக்கிறது, பொ.ச. 1914 முதற்கொண்டுள்ள காலப் பகுதியைக் கிறிஸ்துவின் “வந்திருக்கைக்கும் இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவுக்கும்” உரிய காலமென அடையாளங் காட்டுகிறது. (மாற்கு 13:5-20-ம் லூக்கா 21:8-24-ம் கூட) மத்தேயு 24:23-28-ம் வசனங்களில் பொ.ச. 70-ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவின் வந்திருக்கைக்குள் செல்லும் காலத்தில் நடந்தேறுபவை சொல்லப்பட்டிருக்கின்றன. (மாற்கு 13:21-23-லுங்கூட) மத்தேயு 24:29-லிருந்து 25-ம் அதிகாரத்தின் முடிவு வரை விவரிக்கப்பட்டுள்ள படிப்படியான சம்பவங்கள், பொ.ச. 1914 முதற்கொண்டுள்ள காலப்பகுதியைக் குறிப்பிடுகின்றன.—மாற்கு 13:24-37-ம் லூக்கா 21:25-36-ங்கூட.

6 இந்த “அடையாளத்தை” நிறைவேற்றுகிற தற்போதைய சம்பவங்களை நாம் ஒவ்வொருவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்தச் சம்பவங்களை பைபிள் தீர்க்கதரிசனத்தோடு நாம் சம்பந்தப்படுத்திப் பார்ப்பது “யெகோவாவின் நாளை மனதில் அண்மையில்” வைக்க நமக்கு உதவி செய்யும். மேலும் “நமது கடவுள் பழிவாங்கும் நாள்” நெருங்கியிருப்பதைப் பற்றி மற்றவர்களை எச்சரிக்கையில் மெய்யெனக் காட்டி நம்பவைக்கவும் இது நமக்கு உதவி செய்யும். (ஏசா. 61:1, 2) இந்த நோக்கங்களை மனதில் கொண்டு, “அடையாளத்தின்” பின்வரும் அம்சங்களைத் திரும்ப ஆராய்ந்து பாருங்கள்.

‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்’ என்று முன்னறிவிக்கப்பட்டது. பொ.ச. 1914-ல் தொடங்கி என்ன அசாதாரண முறையில் நிறைவேற்றமடைந்தது? இந்த நிறைவேற்றத்தோடு கூட்டும் எது சமீப மாதங்களிலும் நடந்திருக்கிறது?

20-ம் நூற்றாண்டின் விஞ்ஞான அறிவின் மத்தியிலும் எந்த அளவுக்கு உணவு குறைபாடுகள் பூமியைப் பாதித்திருக்கின்றன?

பொ.ச. 1914 முதற்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பல இடங்களில் பூமியதிர்ச்சிகள் அடிக்கடி ஏற்படுவதில் உண்மையில் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?

1918-ல் எந்தக் கொள்ளைநோயினால், உலகப்போரில் மாண்டவர்களைப் பார்க்கிலும் மிகுதியானவர்கள் மாண்டார்கள்? மருத்துவ அறிவு இருந்துங்கூட, என்ன நோய்கள் இன்னும் பெருவாரியாகப் பரவியுள்ளன?

லூக்கா 21:26-ல் முன்னறிவிக்கப்பட்டபடி, பயத்தால் மனிதருடைய இருதயம் உண்மையில் சோர்ந்துபோவதன் என்ன அத்தாட்சியை நீங்கள் காண்கிறீர்கள்?

2 தீமோத்தேயு 3:1-5-ல் விவரிக்கப்பட்டுள்ள நிலைமைகள் வெறுமென வாழ்க்கை எப்பொழுதும் இருந்து வந்திருக்கிற முறையல்ல, ஆனால் கடைசி நாட்களின் முடிவை நோக்கி நாம் செல்கையில் அவை திடுக்கிடச் செய்யும் அளவில் கடுமையாகிக் கொண்டிருக்கின்றனவென்று எது உங்களை நம்பவைக்கிறது?

ஜனங்கள் பிரிக்கப்படுதல்

7 இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவோடு முனைப்பாய்த் தோன்றும் வண்ணம் இயேசு சம்பந்தப்படுத்திய தனிக் கவனிப்புக்குரிய மற்றச் சம்பவங்களும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று, “ராஜ்யத்தின் புத்திரரைப்” “பொல்லாங்கனுடைய புத்திரரி”லிருந்து பிரித்தலாகும். சத்துரு, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுச் சென்ற கோதுமை வயலைப் பற்றிய தம்முடைய உவமையில் இயேசு இதைப் பற்றிப் பேசினார். அவருடைய உவமையில் “கோதுமை” அபிஷேகஞ்செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. “களைகள்” போலிக் கிறிஸ்தவர்கள். இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவில் “களைகள்”—கிறிஸ்தவர்களென உரிமை பாராட்டுகிறவர்கள் ஆனால் பிசாசு அதிபதியாயிருக்கும் உலகத்தைப் பற்றிக்கொண்டிருப்பதால் “பொல்லாங்கனுடைய புத்திர”ராகத் தங்களை நிருபிக்கிறவர்கள்—“[கடவுளுடைய] ராஜ்யத்தின் புத்திர”ரிலிருந்து பிரிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். (மத். 13:36-43) இது உண்மையில் நடந்தேறிவிட்டதா?

8 முதல் உலகப் போருக்குப் பின், நிச்சயமாகவே ஒரு பெரிய பிரித்தல் நடந்தது, கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டின எல்லா ஆட்களும் பின்வரும் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டனர்: (1) தங்கள் நாட்டுப்பற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு அதே சமயத்தில் சர்வதேச சங்கத்தின் (இப்பொழுது ஐக்கிய நாட்டு சங்கத்தின்) சார்பாக உறுதியான ஆதரவு தந்த கிறிஸ்தவ மண்டல பாதிரிகளும் அவர்களைப் பின்பற்றினவர்களும், (2) அவர்களோடு ஒப்பிட ஒரு சிலரான, கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்துக்குத் தங்கள் முழு ஆதரவையுங் கொடுத்த, போருக்குப் பின்னான சகாப்தத்தின் அபிஷேகஞ்செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்கள். சமாதானத்தையும் பாதுகாப்பையும் அடைவதற்கு வழிவகை இவ்வுலக அரசாங்கங்களேயென அவற்றிற்கு வெளிப்படையாய் ஆதரவளித்த அந்த முதல் வகுப்பார் தாங்கள் உண்மையான கிறிஸ்தவர்களல்லவென்று தெளிவாக்கினார்கள். (யோவான் 17:16) இதற்கு எதிர்மாறாக, யெகோவாவின் ஊழியர், சர்வதேச சங்கத்தை, மத்தேயு 24:15-ல் குறிப்பிடப்பட்டுள்ள தற்கால “பாழாக்குகிற அருவருப்பு” என்று திருத்தமாய் அடையாளங் காட்டினர். உண்மையான “[கடவுளுடைய] ராஜ்யத்தின் புத்திரராகத்” தங்களைக் காட்டி, “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி . . . குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும்” பிரசங்கிக்கும் பொறுப்பை மேற்கொண்டார்கள். (மத். 24:14) இதன் பலன்கள் யாவை?

9 “தெரிந்துகொள்ளப்பட்டவர்களின்” மீதிபேரான, ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் முதல் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள். “நாலு திசைகளிலும்” என்பதாக தேசங்களுக்குள் விரிவாய்ச் சிதறியிருந்த போதிலும், தேவதூதர்களின் வழிநடத்துதலின் கீழ் அவர்கள் அமைப்புக்கடுத்த ஒற்றுமைக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.—மத். 24:31.

10 பின்பு, இயேசு முன்னறிவித்தபடி, “மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல,” சகல தேசங்களின் ஜனங்களையும் அவர் பிரிக்கத் தொடங்கினார். இந்த வேலை, தம்முடைய பரலோக சிங்காசனத்திலிருந்து கிறிஸ்துவால் வழிநடத்தப்பட்டு, தற்போது வரையில் தொடர்ந்து செய்யப்படுகிறது, நீங்கள் தாமே அதால் பாதிக்கப்படுகிறீர்கள். மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் கடவுளுடைய ராஜ்யத்தையும் ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்ட அதன் “புத்திரரையும்” ஏளன வெறுப்புடன் நடத்துகிறார்கள், ஆகவே மரணத்தில் “நித்திய அறுப்புண்டுபோதலுக்கு” ஒப்படைக்கப்படுவார்கள். என்றாலும், மற்றவர்களுக்கு, நித்திய ஜீவனை எதிர்நோக்காகக் கொண்டு, தம்முடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியைச் சுதந்தரிக்கும்படி கர்த்தர் அழைப்பு கொடுக்கிறார். அபிஷேகஞ்செய்யப்பட்ட “ராஜ்யத்தின் புத்திரர்” குரூர துன்புறுத்தலுக்கு இலக்காகியிருக்கிற போதிலும் செம்மறியாட்டைப் போன்ற இத்தகையோர் அவர்களோடு தங்களை நட்புடன் இணைத்துக் கொண்டிருக்கின்றனர். (மத். 25:31-46) ராஜ்யத்தின் இன்றியமையாத செய்தியை யாவரறிய அறிவிக்க இவர்கள் உண்மைபற்றுடன் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இலட்சக் கணக்கான எண்ணிக்கையுள்ள ஒரு திரள் கூட்டம் இந்த வேலையில் பங்குகொள்ளுகிறது. ராஜ்ய செய்தி பூமியின் கடைசி முனைகள் வரையிலும் கேட்கப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் எதைக் குறிக்கின்றன? நாம் இந்தக் “கடைசி நாட்களின்” முடிவுக்கு வெகு அருகில் இருப்பதையும் “யெகோவாவின் நாள்” வெகு அண்மையில் இருப்பதையும் குறித்துக் காட்டுகின்றன.

எதிரில் இருப்பதென்ன?

11 யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் தொடங்குவதற்கு முன்பாக நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்கள் இன்னும் இருக்கின்றனவா? ஆம்! ராஜ்ய விவாதத்தின் பேரில் ஜனங்கள் பிரிக்கப்படுதல் இன்னும் முடிவடையவில்லை. பல ஆண்டுகளாக கடுமையான எதிர்ப்பை அனுபவித்த சில பகுதிகளில், இப்பொழுது புதிய சீஷர்கள் திரளாய் அறுவடை செய்யப்படுகிறார்கள். நற்செய்தியை ஜனங்கள் ஏற்க மறுக்கும் இடங்களிலும், நாம் சாட்சி கொடுப்பதால் யெகோவாவின் நீதியும் இரக்கமும் உயர்த்தப்படுகின்றன. ஆகவே, வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள்! அது செய்து முடிக்கப்படுகையில், “முடிவு வரும்,” என்று இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்.—மத். 24:14.

12 வெகுவாய்த் தனிக் கவனிப்புக்குரிய, பைபிளின் மற்றொரு தீர்க்கதரிசனத்தில் பின்வருமாறு முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது: “சமாதானமும் சவுக்கியமும் [பாதுகாப்பும்] உண்டென்று அவர்கள் சொல்லும்போது; கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடுதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப் போவதில்லை.” (1 தெச. 5:2, 3) “சமாதானமும் பாதுகாப்பும்” என்ற அறிவிப்பு என்னவகையில் வரும் என்பது காத்திருந்து பார்க்க வேண்டியதே. ஆனால் உலகத் தலைவர்கள் மனிதவர்க்கத்தின் பிரச்னைகளை உண்மையில் தீர்த்துவிட்டனரென்று அது நிச்சயமாய் அர்த்தங்கொள்ளாது. யெகோவாவின் நாளை “மனதில் அண்மையில் வைத்திருக்”கிறவர்கள் அந்த அறிவிப்பால் மோசம்போக்கப்படுவதில்லை. அதை உடனடியாகத் தொடர்ந்து “அழிவு சடுதியாய் வரும்” என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

13 வேத எழுத்துக்களில் காட்டியிருக்கிறபடி, முதலாவது, பூகோள முழுவதிலும் அரசியல் அதிபதிகள், பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனுக்கு எதிராக எழும்பி அதை அழித்துப்போடுவார்கள். (வெளி. 17:15, 16) இப்பொழுதேயும் பகைமையான எதிர்ப்பு மனப்பான்மைகள் முக்கியமாய் கிறிஸ்தவ மண்டல மதங்களினிடம் வெளிப்படுத்திக் காட்டப்படுவது நிச்சயமாகவே கவனிக்கத்தக்கது. கடுமையான மத எதிர்ப்பு அரசியல் கலைகளைக் கொண்ட அரசாங்கங்கள் ஏற்கெனவே ஐக்கியநாட்டு சங்கத்தில் வல்லமைவாய்ந்த செல்வாக்கு செலுத்துகின்றன? மேலும் பாரம்பரியமாய் மதப்பற்றுள்ள நாடுகளில் பொதுமக்கள் தாமே பெரும் எண்ணிக்கையில் தங்கள் முற்பிதாக்களின் மதங்களைப் புறக்கனித்துவிடுகின்றனர். இதெல்லாம் எதைக் குறிக்கிறது? பொய் மதம் முழுவதின் பாழ்க்கடிப்பு நெருங்கியிருக்கிறதெனக் குறிக்கிறது. அதன்பின், தேசங்கள், யெகோவாவின் பேரரசாட்சியை உறுதியாய்க் கடைபிடிக்கிறவர்களுக்கு எதிராகப் பகைமையுடன் திரும்பி முழு வலிமையுடன் அவர்களைத் தாக்குகையில், தெய்வீக உக்கிரகோபம் அரசாங்கங்களுக்கும் அவர்களை ஆதரிக்கிறவர்களுக்கும் விரோதமாகக் கட்டவிழ்த்து விடப்படும், இதன் விளைவாக அவர்களெல்லாரும் மொத்தமாய் அழிக்கப்பட்டுப்போவர். கடைசியாகச் சாத்தான்தானே தன்னுடைய பேய்களுடன் அபிஸ்ஸூக்குள் தள்ளப்படுவான், மனிதவர்க்கத்தின்மீது செல்வாக்கு செலுத்துவதிலிருந்து முழுமையாய்க் கட்டுப்படுத்தப்பட்டிருப்பான். இது நிச்சயமாகவே “யெகோவாவின் நாளா”யிருக்கும், அவருடைய பெயர் உயர்வில் வைக்கப்படும் நாள்.—எசேக். 38:18, 22, 23; வெளி. 19:11-20:3.

14 இது, கடவுளுடைய கால அட்டவணையில் குறித்துள்ள அதற்குரிய சரியான நேரத்தில் வரும். இது தாமதிக்காது. (ஆபகூக் 2:3) பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவு, யூதர்கள் எதிர்பாராதபோது, அபாயம் கடந்துவிட்டதென்று அவர்கள் எண்ணினபோது விரைவில் வந்ததை நினைவுகூருங்கள். பூர்வ பாபிலோனைப் பற்றியதென்ன? அது வல்லமைவாய்ந்ததாயிருந்தது, நம்பிக்கைக்குரியதாயிருந்தது, மிகக் கனமான மதில்களால் அரண்காப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒரே இரவில் வீழ்ந்தது. அவ்வாறே, தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் மீது “அழிவு சடுதியாய்” வரும். இது வருகையில், யெகோவாவின் நாளை “மனதில் அண்மையில்” வைத்து, உண்மையான வணக்கத்தில் ஒன்றுபட்டிருப்பவர்களாய் நாம் காணப்படுவோமாக.

மறு கலந்தாலோசிப்பு

● யெகோவாவின் நாளை “மனதில் அண்மையில்” வைத்திருப்பது ஏன் இன்றியமையாதது? இதை நாம் எப்படிச் செய்யலாம்?

● ஜனங்களைப் பிரித்தல் ஆகிய இப்பொழுது நடந்தேறும் சம்பவம் நம் ஒவ்வொருவரையும் தனியே எவ்வாறு பாதிக்கிறது?

● யெகோவாவின் நாள் தொடங்குவதற்கு முன்னால் இன்னும் என்ன எதிரில் இருக்கிறது? ஆகவே நாம் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்க வேண்டும்?

[கேள்விகள்]

1. (எ) இந்தப் பழைய ஒழுங்கு முறையின் மனவேதனைகளிலிருந்து விடுதலை நெருங்கிவிட்டதென்று நீங்கள் முதல் கற்றறிந்தபோது, எப்படிப் பிரதிபலித்தீர்கள்? (பி) இதைப் பற்றிய என்ன கேள்விகளை நாம் கருத்துடன் ஆழ்ந்து ஆராய வேண்டும்?

2. (எ) “யெகோவாவின் நாள்” எப்பொழுது வரும்? (பி) அந்த ‘நாளை அல்லது நாழிகையை’ யெகோவா வெளிப்படுத்தாத இந்தக் காரியம் எவ்வாறு நன்மைக் கேதுவாய் நிரூபித்திருக்கிறது?

3. இந்தக் காரியத்தின் பேரில் நமக்கு எச்சரிக்கையாக இயேசு என்ன சொன்னார்?

4. பேதுரு விளக்கினபடி, “யெகோவாவின் நாள்” எதைக் கொண்டுவரும்?

5. (எ) மத்தேயு 24:3-ல் பதிவு செய்யப்பட்டுள்ள கேள்விக்கு இயேசு கொடுத்த பதில் எந்த அளவுக்கு யூத ஒழுங்குமுறையின் முடிவுக்குப் பொருந்தினது? (பி) அவருடைய பதிலின் எந்தப் பகுதிகள் பொ.ச. 1914 முதற்கொண்டு நடக்கும் சம்பவங்களின் பேரில் கவனத்தை ஊன்ற வைக்கின்றன?

6. (எ) தற்போது நடக்கும் சம்பவங்கள் எப்படி “அடையாளத்தை” நிறைவேற்றுகின்றன என்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்? (பி) 1914 முதற்கொண்டு இந்த “அடையாளம்” எவ்வாறு நிறைவேறினதென்று காட்டுவதற்கு இந்தப் பத்தியின் முடிவிலுள்ள கேள்விகளுக்குப் பதில் கொடுங்கள்.

7. (எ) மத்தேயு 13:36-43-ல் விவரிக்கப்பட்டுள்ள வேறு என்ன சம்பவத்தை இயேசு இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவோடு சம்பந்தப்படுத்தினார்? (பி) இந்த உவமை குறித்துக் காட்டுவதென்ன?

8. (எ) முதல் உலகப் போருக்குப் பின், கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டின எல்லாருக்குள்ளும் என்ன பெரும் பிரித்தல் நடந்தேறிற்று? (பி) அபிஷேகஞ்செய்யப்பட்ட உண்மையான கிறிஸ்தவர்களென தாங்கள் உண்மையில் “ராஜ்யத்தின் புத்திரர்” என்பதற்கு எவ்வகையில் அத்தாட்சியைக் கொடுத்தார்கள்?

9. இந்த ராஜ்ய-பிரசங்க வேலையின் முதல் பலன் என்ன?

10. (எ) இன்னுமொரு பிரித்தல் வேலை எப்படிச் செய்யப்பட்டு வருகிறது, எந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக? (பி) இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் குறிப்பதென்ன?

11. “யெகோவாவின் நாள்” வருவதற்கு முன்பாக மேலுமதிக பிரசங்கவேலை செய்யப்பட வேண்டியிருக்கிறதா?

12. (எ) 1 தெசலோனிக்கேயர் 5:2, 3-ல் காட்டியிருக்கிறபடி என்ன கவனிக்கத்தக்க சம்பவம் இன்னும் நடந்தேறவிருக்கிறது? (பி) இது நமக்கு எதைக் குறிக்கும்?

13. “சமாதானமும் பாதுகாப்பும்” என்ற அறிவிப்பை உடனடியாகப் பின் தொடர்ந்து என்ன சம்பவங்கள் நடக்கும், ஒன்றன்பின் ஒன்றாக எந்த ஒழுங்கில் நடைபெறும்?

14. யெகோவாவின் நாள்வர இன்னும் வெகுகாலம் செல்லுமென்று சிந்திப்பது ஏன் ஞானமல்ல?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்