பாட்டு 118
கடவுளுடைய வீட்டை ஆதரித்தல்
1. தேவவீட்டாராக இருக்கிறோம்.
அவர் இடத்தை அசட்டை செய்யோம்.
மகத்துவமான தம் பெயரே.
வீட்டில் இருக்க தீர்மானித்தாரே.
“ஜெபவீட்டில்” மெய்வணக்கத்தையே
நெகேமியா நிலைநாட்டினாரே.
அதுபோல்“ தசமபாகம்” கொடுப்போம்;
நம் இருதய அன்பைக் காட்டிடுவோம்.
(பல்லவி)
2. தேவகுடும்பம், ஐக்கியம் உண்டு.
அதிலே தம் கவனமும் உண்டு.
“உக்கிராணக்காரர்” சேவிக்கிறாரே,
சமாதானம் நிலவுகிறதே.
தேவவீட்டிற்குக் கொண்டு வருவோம்.
“முதற்கனிகள்” மூலம் துதிப்போம்.
தம் வீட்டாரை ஆசீர்வதிக்கிறாரே.
நாள்தோறும் மகிழ்ச்சியாய் சேவிப்போமே.
(பல்லவி)
தேவ வீட்டை ஆதரிப்போம்.
‘வணங்கிடவாரீர்’ என்போம்.
அவர் குடும்பமே வீட்டார்.
நித்தியமாய் வாசமாயிருப்பார்.