உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • bh பக். 212-பக். 213 பாரா. 4
  • ஷியோல் மற்றும் ஹேடீஸ் என்றால் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஷியோல் மற்றும் ஹேடீஸ் என்றால் என்ன?
  • பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • இதே தகவல்
  • யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • ஹேடீஸ்
    சொல் பட்டியல்
  • நரகம் எப்படிப்பட்ட இடம்?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • நரகம் வெப்பமுள்ளதா?
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
bh பக். 212-பக். 213 பாரா. 4

பிற்சேர்க்கை

ஷியோல் மற்றும் ஹேடீஸ் என்றால் என்ன?

ஷியோல் என்ற எபிரெய வார்த்தையையும் அதற்கு இணையான ஹேடீஸ் என்ற கிரேக்க வார்த்தையையும் மூல மொழி பைபிள் 70 தடவைக்கும் மேல் பயன்படுத்துகிறது. இவ்விரண்டு வார்த்தைகளுமே மரணத்தோடு சம்பந்தப்பட்டவை. சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் இவ்வார்த்தைகள் “பாதாளம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான மொழிகளில் அந்த எபிரெய, கிரேக்க வார்த்தைகளின் அர்த்தத்தைத் துல்லியமாக வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. எனவே புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளானது “ஷியோல்,” “ஹேடீஸ்” என்ற வார்த்தைகளையே பயன்படுத்துகிறது. இந்த வார்த்தைகள் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகின்றன? வெவ்வேறு பைபிள் வசனங்களில் அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? அதை இப்போது நாம் கவனிக்கலாம்.

“நீ போகிற பாதாளத்திலே [“ஷியோலிலே,” NW] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே” என பிரசங்கி 9:10 சொல்கிறது. அப்படியென்றால் ஷியோல் என்பது, இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கும் தனித்தனி கல்லறைகளை அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. ஏனெனில் அத்தகைய கல்லறைகளைப் பற்றி பைபிள் குறிப்பிடும்போது ஷியோல், ஹேடீஸ் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை; அதற்குப் பதிலாக எபிரெய மற்றும் கிரேக்க மொழிகளில் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. (ஆதியாகமம் 23:7-9; மத்தேயு 28:1) அதோடு, ஏராளமானோர் புதைக்கப்படுகிற ஒரு குடும்பக் கல்லறைக்கு அல்லது ஒரு பெரிய கல்லறைக்கு “ஷியோல்” என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துவதில்லை.—ஆதியாகமம் 49:30, 31.

அப்படியானால், “ஷியோல்” என்பது எந்த இடத்தைத்தான் குறிக்கிறது? “ஷியோல்” அல்லது “ஹேடீஸ்” என்பது மிகப் பெரிய கல்லறையைவிடப் பெரிதான ஒன்றைக் குறிப்பதாகக் கடவுளுடைய வார்த்தை சுட்டிக்காட்டுகிறது. உதாரணத்திற்கு, “பாதாளம் [“ஷியோல்,” NW] தன் வாயை அளவுகடந்து பிளந்துள்ளது” என ஏசாயா 5:14 (பொ.மொ.) குறிப்பிடுகிறது. எண்ணற்ற இறந்தோரை ஷியோல் ஏற்கெனவே விழுங்கிவிட்டிருந்தாலும், இன்னும் ஏராளமான ஆட்கள் தன்னிடத்திற்கு வர வேண்டுமென்று அது ஏங்குவது போல் கூறப்பட்டிருக்கிறது. (நீதிமொழிகள் 30:15, 16) சொல்லர்த்தமான கல்லறைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையானோருடன் நிரம்பிவிடுகின்றன, ஆனால் ‘பாதாளம் திருப்தியாகிறதில்லை.’ (நீதிமொழிகள் 27:20) அதாவது, ஷியோல் ஒருபோதும் நிரம்புவதில்லை. அதற்கு எல்லைகளே கிடையாது. எனவே, ஷியோல் அல்லது ஹேடீஸ் என்பது குறிப்பிட்ட பகுதியிலுள்ள சொல்லர்த்தமான ஓர் இடமல்ல. மாறாக, அது அடையாள அர்த்தமான ஓர் இடத்தைக் குறிக்கிறது; அங்கே மனிதகுலத்தில் பெரும்பாலோர் மரணத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதாளம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ள “ஷியோல்,” “ஹேடீஸ்” ஆகிய வார்த்தைகளின் அர்த்தத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உயிர்த்தெழுதல் பற்றிய பைபிள் போதனை உதவுகிறது. ஷியோல், ஹேடீஸ் ஆகிய வார்த்தைகளை, உயிர்த்தெழும் வாய்ப்புள்ளவர்களின் மரணத்துடன் பைபிள் சம்பந்தப்படுத்திப் பேசுகிறது.a (யோபு 14:13; அப்போஸ்தலர் 2:31; வெளிப்படுத்துதல் 20:13) யெகோவாவுக்குச் சேவை செய்தவர்கள் மாத்திரமல்ல, ஆனால் அவருக்குச் சேவை செய்திராத ஏராளமானோர்கூட ஷியோலில், அல்லது ஹேடீஸில் இருக்கிறார்கள் என்றும் கடவுளுடைய வார்த்தை காண்பிக்கிறது. (ஆதியாகமம் 37:35; சங்கீதம் 55:15) அதனால்தான், ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்’ என்று பைபிள் கற்பிக்கிறது.—அப்போஸ்தலர் 24:15.

a இதற்கு நேர்மாறாக, உயிர்த்தெழுப்பப்படாதவர்கள் ஷியோலில், அல்லது ஹேடீஸில் அல்ல, ஆனால் ‘கெஹென்னாவில்’ (தமிழ் பைபிளில் நரகம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) இருப்பதாக விவரிக்கப்படுகிறார்கள். (மத்தேயு 5:30; 10:28; 23:33) ஷியோல் மற்றும் ஹேடீஸைப் போல கெஹென்னா என்பதும் சொல்லர்த்தமான ஓர் இடமல்ல.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்