உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • rk பாகம் 1 பக். 3
  • இறைவனுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இறைவனுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறதா?
  • உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
  • இதே தகவல்
  • “நான் உன்னை மறப்பதில்லை”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • உண்மையான இறைநம்பிக்கை என்றால் என்ன?
    உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
  • குழந்தைகள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவது எப்படி?
    மணவாழ்வில் மகிழ்ச்சி மலர
  • ஆண்டவனின் அன்பு அம்மாவின் அன்பில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
rk பாகம் 1 பக். 3

பாகம் 1

இறைவனுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறதா?

இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் பிரச்சினை... பிரச்சினை... பிரச்சினை. போர்கள், இயற்கை பேரழிவுகள், வியாதிகள், பஞ்சங்கள், ஊழல்கள்... இப்படிப் பல விஷயங்கள் கோடிக்கணக்கான மக்களை வாட்டி வதைக்கின்றன. நீங்களும்கூட தினம் தினம் பல பிரச்சினைகளால் தவிக்கலாம். இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற யார் நமக்கு உதவி செய்ய முடியும்? யாருக்காவது நம்மேல் அக்கறை இருக்கிறதா?

ஒரு தாய் தன் குழந்தையை வைத்திருக்கிறார்

தாய்க்குத் தன் குழந்தைமீது இருக்கும் அன்பைவிட இறைவனுக்கு நம்மீது இருக்கும் அன்பு பன்மடங்கு உயர்ந்தது

கவலைப்படாதீர்கள்! இறைவனுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது. பரிசுத்த வேதத்தில் அவர் இவ்வாறு சொல்கிறார்: “பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு பெண்ணால் மறக்க முடியுமா? தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை அவளால் மறக்க முடியுமா? இவர்களே மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்.”a

கேட்கவே எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! சாதாரணமாக ஒரு தாய்க்குத் தன் பச்சிளம் குழந்தைமீது அன்பும் பாசமும் பொங்கிவழியும். மனித உறவுகளிலேயே தாய்க்கும் சேய்க்கும் உள்ள பந்தம்தான் உன்னதமான பந்தம்! ஆனால், இறைவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பும் பாசமும் அதைவிட பன்மடங்கு உயர்ந்தது. அவர் நம்மை ஒருநாளும் கைவிட மாட்டார்! சொல்லப்போனால், அவர் ஏற்கெனவே நமக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார், அதுவும் அற்புதமான வகையில்! எப்படி? சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிகாட்டியிருப்பதன் மூலம். ஆம், உண்மையான இறைநம்பிக்கையே சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி.

உண்மையான இறைநம்பிக்கை இருந்தால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பூத்துக்குலுங்கும்; பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும், தவிர்க்க முடியாத பிரச்சினைகளை வெற்றிகரமாய்ச் சமாளிக்க முடியும்; இறைவனிடம் நெருங்கிவர முடியும், மனநிம்மதியும் பெற முடியும். அதுமட்டுமல்ல, ஒளிமயமான எதிர்காலத்தை, ஆம் இன்பவனத்தில் முடிவில்லா வாழ்வை, பெற முடியும்!

சரி... உண்மையான இறைநம்பிக்கை என்றால் என்ன? அதை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

a பரிசுத்த வேதத்தில் ஏசாயா 49:15-ஐ (NW) காண்க.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்