உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ll பகுதி 8 பக். 18-19
  • இயேசு இறந்ததால் உங்களுக்கு என்ன நன்மை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு இறந்ததால் உங்களுக்கு என்ன நன்மை?
  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • இதே தகவல்
  • பாகம் 8
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
  • கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • இயேசு கிறிஸ்து—கடவுளால் அனுப்பப்பட்டாரா?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
ll பகுதி 8 பக். 18-19

பாகம் 8

இயேசு இறந்ததால் உங்களுக்கு என்ன நன்மை?

நாம் என்றென்றும் உயிரோடு வாழ்வதற்காக இயேசு அவருடைய உயிரையே கொடுத்தார். யோவான் 3:16

இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை காலியாக இருப்பதை பெண்கள் பார்க்கிறார்கள்

இயேசு இறந்து மூன்று நாள் கழித்து, சில பெண்கள் அவருடைய கல்லறைக்குப் போனார்கள். ஆனால், கல்லறை காலியாக இருந்தது. ஏனென்றால், இயேசுவை யெகோவா உயிரோடு எழுப்பியிருந்தார்.

தன்னுடைய அப்போஸ்தலர்கள் முன் இயேசு தோன்றுகிறார், பிறகு பரலோகத்துக்குப் போகிறார்

பிறகு, இயேசு தன்னுடைய நண்பர்களுக்கு முன், அதாவது அப்போஸ்தலர்களுக்கு முன் தோன்றினார்.

இயேசுவுக்கு மறுபடியும் ஒரு மனித உடலை யெகோவா கொடுக்கவில்லை, தேவதூதர்களுக்கு இருப்பதைப் போன்ற உடலைக் கொடுத்தார். அவருக்குச் சாவே கிடையாது. அவர் பரலோகத்துக்குப் போனதை சீஷர்கள் பார்த்தார்கள்.

  • பாவத்துக்குக் கிடைக்கிற “சம்பளம்” என்ன?—ரோமர் 6:23.

  • நாம் சாகாமல் என்றென்றும் வாழ இயேசு வழி செய்தார்.—ரோமர் 5:21.

இயேசுவைக் கடவுள் உயிரோடு எழுப்பினார், பிறகு அவரைக் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக்கினார். தானியேல் 7:13, 14

பரலோகத்தில் இருக்கும் சிம்மாசனத்தில் இயேசு உட்கார்ந்திருக்கிறார், பூஞ்சோலை பூமியில் வாழ்கிற மக்களை அவர் ஆட்சி செய்கிறார்

மனிதர்களுக்காக இயேசு தன்னுடைய உயிரையே மீட்புவிலையாகக் கொடுத்தார். (மத்தேயு 20:28) அதனால்தான் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. யெகோவாதான் இந்த வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

பூமியை ஆட்சி செய்கிற அதிகாரத்தை இயேசுவிடம் யெகோவா கொடுத்திருக்கிறார். அவருக்கு உண்மையாக இருக்கும் 1,44,000 பேரை பூமியிலிருந்து பரலோகத்துக்கு உயிரோடு எழுப்புவார். இயேசுவும் இந்த 1,44,000 பேரும் சேர்ந்து நீதி நியாயத்தோடு ஆட்சி செய்வார்கள். இந்தப் பரலோக அரசாங்கத்தைத்தான் கடவுளுடைய அரசாங்கம் என்று சொல்கிறோம்.—வெளிப்படுத்துதல் 14:1-3.

அந்த அரசாங்கம் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றும். போர், கொலை, கொள்ளை, பசி பட்டினி இருக்காது. யாருமே ஏழையாக இருக்க மாட்டார்கள். எல்லாரும் சந்தோஷமாக இருப்பார்கள். —சங்கீதம் 145:16.

  • கடவுளுடைய அரசாங்கத்தில் என்னென்ன நல்லது நடக்கும்?—சங்கீதம் 72.

  • கடவுளுடைய அரசாங்கம் வரவேண்டும் என்று நாம் ஜெபம் செய்ய வேண்டும்.—மத்தேயு 6:10.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்