பாகம் 14
கடவுளுக்கு உண்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
கடவுள் பக்கம் இருங்கள். 1 பேதுரு 5:6-9
கடவுளுக்குப் பிடிக்காத சடங்குகளில் கலந்துகொள்ளாதீர்கள். இதற்குத் தைரியம் தேவை.
அரசியல் விஷயங்களில் கலந்துகொள்ளாதீர்கள். கடவுளுடைய ஆட்சிக்கு ஆதரவு காட்டுங்கள்.
சரியான முடிவெடுங்கள், கடவுள் சொல்வதைக் கேளுங்கள். மத்தேயு 7:24, 25
யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போங்கள், கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள அவர்கள் உதவி செய்வார்கள்.
கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதை நிறுத்திவிடாதீர்கள். அவர் சொல்கிறபடி வாழ முயற்சி செய்யுங்கள்.
யெகோவாமீது விசுவாசம் அதிகமாகும்போது, அவருக்காக வாழப்போவதாக ஜெபத்தில் சொல்லுங்கள். பிறகு ஞானஸ்நானம் எடுங்கள். —மத்தேயு 28:19.
கடவுள் சொல்வதைக் கேளுங்கள். பைபிளைப் படியுங்கள். அதைப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் உதவி கேளுங்கள். பைபிள் சொல்கிற மாதிரி நடந்துகொள்ளுங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் என்றென்றும் வாழலாம்.—சங்கீதம் 37:29.