உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 19 பக். 50-பக். 51 பாரா. 2
  • முதல் மூன்று தண்டனைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முதல் மூன்று தண்டனைகள்
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • மோசேயும் ஆரோனும் பார்வோனை சந்திக்கிறார்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • அடுத்த ஆறு தண்டனைகள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • யெகோவா யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • மோசேயும் ஆரோனும்—கடவுளுடைய வார்த்தையின் தைரியமுள்ள அறிவிப்பாளர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 19 பக். 50-பக். 51 பாரா. 2
மோசேயும் ஆரோனும் பார்வோனுக்கு முன் நிற்கிறார்கள்

பாடம் 19

முதல் மூன்று தண்டனைகள்

இஸ்ரவேலர்களை பார்வோன் அடிமைகளாக்கி ரொம்ப வேலை வாங்கினான். யெகோவா மோசேயையும் ஆரோனையும் பார்வோனிடம் அனுப்பி, ‘என்னுடைய மக்கள் வனாந்தரத்தில் என்னை வணங்குவதற்காக அவர்களைப் போக விடு’ என்று சொல்லச் சொன்னார். அப்போது பார்வோன் அவர்களிடம், ‘நான் ஏன் யெகோவா பேச்சைக் கேட்க வேண்டும்? நான் இஸ்ரவேலர்களைப் போக விடமாட்டேன்’ என்று திமிராகப் பதில் சொன்னான். பிறகு, இஸ்ரவேலர்களை பார்வோன் இன்னும் அதிகமாக வேலை வாங்கினான். அதனால் யெகோவா பார்வோனுக்குப் பாடம் கற்றுக்கொடுக்க நினைத்தார். எப்படி என்று உனக்கு தெரியுமா? எகிப்துக்கு 10 தண்டனைகளைக் கொடுத்தார். யெகோவா மோசேயிடம், ‘பார்வோன் நான் சொல்வதைக் கேட்கவில்லை. காலையில் அவன் நைல் நதிக்கு வருவான். என்னுடைய மக்களைப் போக விடாததால் நைல் நதியின் தண்ணீர் இரத்தமாக மாறும் என்று அவனிடம் சொல்’ என்றார். யெகோவா சொன்ன மாதிரியே மோசே பார்வோனிடம் போனார். பார்வோனுடைய கண் முன்னால், ஆரோன் தன்னுடைய கோலை எடுத்து நைல் நதியின் தண்ணீரை அடித்தார். உடனே, நதி முழுவதும் இரத்தமாக மாறி நாற்றம் அடிக்க ஆரம்பித்தது. மீன்கள் எல்லாம் செத்துவிட்டன. குடிப்பதற்கு நல்ல தண்ணீரே கிடைக்கவில்லை. ஆனாலும், இஸ்ரவேலர்களை பார்வோன் போக விடவில்லை.

ஏழு நாட்களுக்குப் பிறகு, யெகோவா மோசேயை பார்வோனிடம் அனுப்பினார். ‘நீ என்னுடைய மக்களைப் போக விடவில்லை என்றால், எகிப்து முழுவதும் தவளைகளை வர வைப்பேன்’ என்று சொல்லச் சொன்னார். அப்போதும் பார்வோன் இஸ்ரவேலர்களை விடவில்லை. அதனால், ஆரோன் தன்னுடைய கோலை மேலே தூக்கினார். உடனே எகிப்து முழுவதும் தவளைகள் வர ஆரம்பித்தன. வீடுகளிலும், படுக்கைகளிலும், பாத்திரங்களிலும் தவளைகள் ஏறின. எங்கே பார்த்தாலும் தவளைகள்தான்! அந்தத் தண்டனையை நிறுத்தும்படி கடவுளிடம் கெஞ்சிக் கேள் என்று மோசேயிடம் பார்வோன் சொன்னான். இஸ்ரவேலர்களைப் போக விடுவதாகவும் சத்தியம் செய்தான். உடனே, யெகோவா அந்தத் தண்டனையை நிறுத்தினார். அதற்குப் பிறகு, எகிப்தியர்கள் செத்துபோன தவளைகளைக் குவியல் குவியலாக குவித்து வைத்தார்கள். நாடு முழுவதும் பயங்கர நாற்றம் அடித்தது. இந்தத் தடவையும் பார்வோன் இஸ்ரவேலர்களைப் போக விடவில்லை.

பிறகு யெகோவா மோசேயிடம், ‘ஆரோன் தன்னுடைய கோலை நிலத்தில் அடிக்க வேண்டும். அப்போது, புழுதி கொசுக்களாக மாறும்’ என்று சொன்னார். அப்படி அடித்ததும், எல்லா இடங்களிலும் கொசுக்கள் மொய்க்க ஆரம்பித்தன. உடனே, பார்வோனுடைய ஆட்களில் சிலர், ‘இது கடவுள் கொடுத்த தண்டனை’ என்று சொன்னார்கள். ஆனாலும், பார்வோன் இஸ்ரவேலர்களைப் போக விடவில்லை.

எகிப்துக்கு வந்த பத்துத் தண்டனைகளில் மூன்று: நைல் நதி இரத்தமாக மாறியது, தவளைகள், கொசுக்கள்

“என் சக்தியையும் பலத்தையும் அவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்வேன். என் பெயர் யெகோவா என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”—எரேமியா 16:21

கேள்விகள்: முதல் மூன்று தண்டனைகள் என்ன? யெகோவா ஏன் இந்தத் தண்டனைகளைக் கொடுத்தார்?

யாத்திராகமம் 5:1-18; 7:8–8:19; நெகேமியா 9:9, 10

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்